பொதுவாக ஒருவருக்கு திருமணம் என்பது பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்டு நடப்பது அல்லது காதலித்து திருமணம் செய்வது
ஒருவர் ஜாதகத்தில் காதல் என்பது அவர்களது ஐந்தாம் பாவத்தைக் கொண்டு நாம் முடிவு செய்ய வேண்டும் காதல் உணர்வை தூண்டக்கூடிய சுக்கிரன் எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பொருத்து இந்த காதல் என்பதை தீர்மானிக்க வேண்டும்
ஐந்துக்கு மூன்றாம் பாவம் என்பது ஏழாம் பாவமாக வரும் இந்த ஏழாம் பாவம் என்பது காதலின் வெற்றியை தீர்மானிக்க கூடிய பாவமாகும்
ஒருவர் செய்யும் காதல் திருமணத்தில் சென்று முடியுமா அல்லது முடியாத என்பதை இந்த ஐந்துக்கு மூன்றாம் இடத்தை பார்க்க வேண்டும்
சரி ஒருவர் காதலை அவரது வீட்டில் சொல்வாரா சொல்ல மாட்டாரா என்பதை ஏழாம் பாவத்தை கொண்டு பார்க்க வேண்டும்
ஏழாம் பாவத்தில் செவ்வாய் மற்றும் சூரியன் கிரகங்கள் இருக்குமேயானால் அவர் நிச்சயமாக தனது காதலை வீட்டில் சொல்வார் அல்லது ஏழாம் பாவ அதிபதி நீச்சம் அடைந்தால் தனது காதலியை அவர் வீட்டில் சொல்ல மாட்டார் இப்பொழுது ஐந்தாம் பாவத்திற்கும் ஏழாம் பாவம் சம்பந்தப்பட்டால் காதலித்து திருமணம் செய்து கொள்வார்.
ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாகம் நன்றாக இருந்து அவர்களுக்கு ஏழாம் பாவம் தொடர்பில்லாமல் ஆறாம் பாகம் ஏற்படுமேயானால் அவர்களது காதல் திருமணத்தில் முடியாமல் போகும்..
ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் பாவம் அதனுடைய அதிபதி பலமாக அமைந்து விட்டால் அவர்களுக்கு நிச்சயமாக காதலித்தாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும்
அவர்கள் பெற்றோர் சம்பந்தமில்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் ஒருவேலை ஏழாம் பாவம் வலு விழுந்து காணப்பட்டாள் அவர்கள் நிச்சயமாக காதலித்து பெற்றோர்கள் சம்பந்தமில்லாமல் திருமணம் செய்து கொள்வார்கள்
இப்படி ஒரு ஜாதகத்தில் ஏழாம் பாவ அதிபதியை வைத்து அவருடைய கணவன் அல்லது அவருடைய மனைவி பற்றி முழுவதும் சொல்லாம் ஒருவருக்கு.
ஏழாம் பாவத்திற்கு மூன்றாம் பாவத்தை வைத்து உங்களது திருமணம் முயற்சி வெற்றி அடையுமா அடையாதா என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் நன்றாக அமைந்தால் அவர் அவரின் திருமண முயற்சி வெற்றி அடையும் ஐந்து ஏழு ஒன்பது போன்ற பாவங்களில் தொடர்பு ஏற்பட்டால் ஒருவர் காதலித்து அந்த காதலை வீட்டில் தெரிவித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வார் நிச்சயமாக இவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும்