sanyasam in english and tamil

sanyasam in tamil
sanyasam  in tamil

                                         



sanyasam in tamil


மனிதனின் சன்யாச வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கைக்கு பின்பு தான்  செல்ல வேண்டும்.இல்லறம் இல்லாமல் துறவரமில்லை.

பக்தியில் இல்லறம் மற்றும் துறவரம் இரண்டுமே ஒன்றுதான்.மனிதன் கடவுளை நோக்கி செல்ல கூடாது மாறாக கடவுள் மனிதனை நோக்கி வர வேண்டும்.

மனிதனின் மனது என்ன நினைக்கிறதோ அதுவே அவனது வாழ்க்கை.

நீங்கள் நல்லது நினைத்தாலே போதும் உங்களது வாழ்க்கை நல் வாழ்க்கையாக மலரும்.

உங்களது மனதை ஆலயமாக மாற்றி அதில் கடவுளை அமர வைத்தாலே போதும் அதுவே சன்னியாச வாழ்க்கை.

யார் மனதில் கடவுள் உள்ளரோ அவர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பது இல்லை.

தனக்கு மட்டும் வைத்து கொள்ளாமல் பிறர்க்கு கொடுக்கும் பொது உங்களிடம் வாங்குபவர்களுக்கு நீங்கள் தெய்வமாக மாறுவீர்கள்.

நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும் மனதில் கடவுள் இருந்தால் போதும் இதுவே சன்னியாச வாழ்க்கை.



sanyasam in english
sanyasam in english

sanyasam in english

Man's monastic life is to go only after family life.


In devotion, marriage and austerity are one and the same. Man should not go to God but God should come to man.


His life is what the mind of man thinks.


Your life will blossom into a good life even if you think it is good.


It is enough to turn your mind into a temple and put God in it, that is the life of a monk.

Those who have God in mind are others

today raasi palan in tamil

today raasi palan in tamil
Nithiyandran R Jothidam


இன்றைய ராசிபலன்

 அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு,
 
            இன்று பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் இருக்கும், தூரத்திலிருந்து செய்து வருவதல், வீண் அலைச்சல், சாகசம் புரிதல், பிறர் உதவி நாடுதல்,, மனஸ்தாபம்,உஷ்ணம்,காய்ச்சல், முயற்சி பலிக்காமல் போனது பணம் கஷ்டம் இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்.

 பரணி பூரம் பூராடம் ஆகிய நட்சத்திர பிறந்தவர்களுக்கு 

             இந்த நாள் உங்களுக்கு உற்சாகம், நற்காரியம் செய்தல், நல்ல சேர்க்கை உறவினர்கள் வருகை, படுக்கை சுகம், தனலாபம், அரசினர் பேட்டி காரிய அனுகூலம், சுத்தமான உடை அணிவீர்கள் உங்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

 சித்திரை உத்திரம் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு

             வீண் சிரமம், மயக்கம், திருடர் பயம் ,சஞ்சலம், வீண் செலவு ,வீண் பிரசங்கம், வீன் அழைச்கல், தகாத செயல், முயற்சி பலிக்காமல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். 

ரோகிணி ஹஸ்தம் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு

             பிறந்தநாளுக்கான உடல் நலிவு, மனக்கலக்கம், பெண்களுடன் விவாதம், பிறரால் துன்பம், அகால போஜனம், சாதுக்கள் தரிசனம்,புண்ணிய கதை கேட்டல், விசித்திர பொருட்காட்சி, மறைந்த பொருள் கிடைத்தல், கடினமான பேச்சு.

 மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்

             அதிகாரிகளின் பேட்டி, காரிய சாதனை, தூரதேசத்திலிருந்து செய்தி, நண்பர் சேர்க்கை, சுகபோஜனம், மனக்களிப்பு,  இனியது புசித்தல்,பெண்கள் சல்லாபம், முயற்சியில் வெற்றி இன்று உங்களுக்கு நல்ல நாளாக உங்களது

 திருவாதிரை சுவாதி சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள

            சுபச்செய்தி, தனலாபம் ,வியாபாரி நட்பு, சுற்றத்தினர் நண்பர் வருகை ,சினிமா டிராமா முதலித் கேளிக்கைகளில் ஈடுபடுதல், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிதல், கொள்முதல் விற்பனையில் திறமை, லாபச் செயல்களில் ஈடுபடுதல்

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்

             மனகளிப்பு,  சங்கீதம்,புதிய முயர்ச்சி, பஸ் பிரயாணம், தனலாபம் கேளிக்கைகலில் ஈடுபடுதல், பதில் வேற இடத்தில் வசித்தல், இனியது புசித்தல் ஸ்த்ரீ சுகம், மகான்களின் தரிசனம், உறவினர் சேர்க்கை போன்ற நிகழ்வு நடைபெறும்.

 பூசம் அனுஷம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள் 

செலவு, சாப்பாட்டில் வெறுப்பு, தீயவர் சேர்க்கை, சிக்கல்கள், வீன் மனஸ்தாபம், திருட்டு பயம், அழல்ச்சல், காரிய தடை, வியாபாரம் விவகாரம் பிரச்சனை 

ஆயில்யம் கேட்டை ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு

 தலைவலி இருக்கும், மனதுக்கு தாபம் ,வீட்டைவிட்டு வெளியே திரிதல், அதிகாரிகளுடனும்,பகைவர்களுடனும் சச்சரவுகள்,  போஜனம், பேரியோர்களின் பேட்டி, மகான்களின் தரிசனம் முயற்சியில் வெற்றி அதிக,  தனலாபம் இருக்கும்.

கிரகங்களின் காரகத்துவம்










 

guru peyarchi














 

8th house astrology

8th house astrology


எட்டாம் பாவம்

எட்டாம் இடம் ஆயுள், துயரம், மரணம் முதலியவற்றைக் குறிப்பது என அறிவோம்.

மேஷம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நிறைய செல்வம் உடையவனாக இருப்பினும், மிகுதியான துன்பத்தை வாழ்க்கை முழுவதும் சந்திக்க நேரிடுகின்றது. வேறு தேசத்திலேயே இவனுக்கு மரணம் ஏற்படுகிறது.

ரிஷபம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன்தரையில் ஊர்கின்ற அல்லது படுகின்ற ஜந்துக்கள், நாற்கால் பிராணிகள், துஷ்ட ஜனங்கள் மூலம் பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் எய்துகின்றான்.

மிதுனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தனக்கு இளையவனாலோ, மூலம் முதலிய ரோகத்தாலோ, கவனக் குறைவாலோ மரணம் எய்துகின்றான்.

கடகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் புழுவினாலோ, பயங்கரமான விஷ ஜந்துக்கலாலோ, பகைவர்களினாலோ, நீர் நிலைகளில் இறங்கும் போதோ மரணம் ஏற்ப்படுகின்றது. இந்த மரணம் பெரும்பாலும் வேறு தேசத்திலேயே அமைகின்றது.

சிம்மம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பெரும்பாலும் வனத்தில் சாவை சந்திக்கின்றான். அது திருடரின் மூலமாகவோ நாற்கால் பிராணிகளின் மூலமாகவோ, பாம்பினாலோ ஏற்படக் கூடும். குழந்டையினால் கூட இவனுக்கு சாக நேரிடலாம்.

கன்னி எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் விளையாட்டினாலும், பித்த சம்பந்த மான நோய்களினாலும் மரணம் அடையலாம். தனது சொந்த குடும்பத்து பெண்ணாலேயே கூடக் கொல்லப்படலாம்.

துலாம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் மருந்தின் மூலம் அல்லது நாற்கால் பிராணிகளின் மூலம், பெரும்பாலும் இரவு நேரத்தில் மரணம் அடைகின்றான். உபவாசம் அல்லது உண்ணாவிரதம் இருப்பதினால் கூட உயர் பிரியக் கூடும். பிறரது வஞ்சனையினாலும் இந்த ஜாதகருக்கு சாவு நேரிடலாம்.

விருசிகம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் முகத்தில் உண்டான ரோகதினாலோ, புழுக்களால் உண்டான ரோகதினாலோ, தனது குலத்தில் உதித்ததனாலோ மரணம் உண்டாகின்றது.

தனுசு எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் தன்னுடைய இருப்பிடத்தில் தன்னுடன் இருப்பவனால் மரணம் அடையலாம். புளுக்களாலும், நாற்கால் உயிரினங்களாலும் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மகரம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நல்ல கல்விமான். மானம் மிக்கவன். வீரன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். ஆனாலும் பெண் பித்தன். ஆதலால் எதனாலும் இவனுக்கு சாவு வரக்கூடும் என்பதை இயல்பாகவே ஊகித்துக் கொள்ளலாம்.

கும்பம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் நெருப்பினாலோ, தீய பெண்களின் சேர்க்கையினாலோ, பகைவனாலோ புண்பட்டு சாவ நேரிடலாம்.

மீனம் எட்டாம் இடமாக இருக்கப் பிறந்த ஜாதகன் பித்த ஜுரத்தினாலோ, வாயு ஜுரத்தினாலோ அல்லது ஆயுதத்தாலோ சாவ நேரிடலாம்.

எட்டுக்குடையவன் லக்கினம் முதலிய பன்னிரண்டு ராசிகளில் இருப்பதன் மூலம் ஏற்படும் பலன்கள்.

எட்டுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் துஷ்டர்களுடன் நட்புக் கொண்டு அதனால் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்பவன். நிரந்தர நோயாளி ஆனாலும் அரசிடமிருந்து வருமானத்தை அடையக் கூடியவன்.

எட்டுக்குடையவன் இரண்டிலிருந்தால் இவனது ஜீவனம் அதாவது தொழில் நிலை அடிக்கடி மாறிக் கொண்டே போகும். சாஸ்திரங்கள் பல கற்றவராயினும் திருட்டுத்தனம் இவனை விட்டுப் போவதில்லை. பாபக்கிரகங்களுடன்  கூடினால் சுபமற்றவனாகவும், வியாதி உள்ளவனாகவும் நாளைக் கழிக்க வேண்டி உள்ளது. ராஜ தண்டனையும் இவன் அடையக் கூடும்.

எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் இருந்தால் கூடப் பிறந்தவனுடன் ஒத்துப் போகாது. நண்பர்களே நாளடைவில் விரோதிகளாக மாறுவர். இவனுடைய சபல புத்தியும் கடுமையான வார்த்தை பேசும் தன்மையும் துஷ்டத்தனமும், பந்து ஜனங்களிலிருந்து இவனை வெகு தூரம் விலக்கி விடுகிறது.

எட்டுக்குடையவன்  நான்காம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் தன் தந்தை திரட்டி வைத்த பொருள் அனைத்தையும் நாசம் செய்கின்றான். தனது புத்திரனளிடத்திலும் பகையை தேடிக் கொள்கிறான். வியாதி உள்ளவன்.

எட்டுக்குடையவன் ஐந்தாம் இடத்தில் இருக்கப் பிறந்தவனுக்கு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்து போகலாம். தீயவர்களுக்கு தலைவனாகவும்.இருப்பான்.பாபக் கிரகங்கள் சேர்க்கையினாலோ பார்வையினாலோதான் இப்பலன் அமைகின்றது.

எட்டுக்குடையவன் ஆறாம் இடத்தில் இருந்து, சூரியன் செவ்வாய் சேர்க்கையும் அமைந்தால் வீண் சண்டைக்குச் செல்பவன். புதன், சந்திரனுடன் கூடி ஆறிலிருந்தாலும் தானாக விரோதத்தை தேடிக் கொள்வான். சந்திரன், சனி இவர்களோடு கூடியிருந்தால் தீராத நோயாளியாக வாழ்க்கை அமைகின்றது.

எட்டுக்குடையவன் ஏழாம் இடத்தில் இருந்தால் மறைவிடங்களில் ரோகம் உள்ளவன். கஞ்சன், துஷ்டன், கெட்ட நடத்தை உள்ளவன். பாபக் கிரகங்கள் கூடினால் பெண்களுடன் வெகுவாகச் சண்டை போடுவான். செவ்வாயுடன் கூடினால் இந்நிலை மாறி சாந்தமுள்ளவனாகின்றான்.

எட்டுக்குடையவன் எட்டாம் இடத்திலேயே இருந்தால் பயிர் தொழில் செய்யக் கூடியவனாக இருப்பான். நோயாளி. பிறரை வஞ்சித்து கொடுமை செய்வான்.

எட்டுக்குடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் பிறரை இம்சிப்பவன், இவனுக்கு நண்பர்களே அமைய மாட்டார்கள். காலப்போக்கில் எல்லோராலும் விலகப் பட்டவனாகின்றான்.

எட்டுக்குடையவன் பத்தாம் இடத்தில் இருந்தால் அரசாங்கத்தில் வேலை பார்க்கக் கூடும். சோர்வும் துக்கமும் இவனை விட்டு நீங்காது.

எட்டுக்குடையவன் பதினொன்றாம் இடத்தில் இருந்தால் உடல் மெலிந்தவன். பிறரால் தான் சுகமடைவதற்கு வழிகள் தேடிக் கொள்வான்.

எட்டுக்குடையவன் பன்னிரெண்டில் இருந்தால் கொடூரமான வாக்கு உள்ளவன். திருட்டு தொழிலை செய்பவன். வஞ்சகன்.எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய மாட்டான். மாமிசம் உண்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன்.ஆதலால் அதன் மூலமே இவனுக்கு மரணம் சம்பவிக்கும்.

எட்டாம் இடம் சூரியன் முதலிய கிரகங்களால் பார்க்கப்படுவதால் ஏற்படக்கூடிய பலன்கள்

சூரியன் எட்டாம் இடத்தை பார்த்தால் ஜாதகனுக்கு தந்தையின் சொத்து கிடைக்காது. மறைவிடங்களில் ரோகம் உள்ளவன். அரசாங்கதில் தண்டனைக்கு அடிக்கடி ஆளாவான்.

சந்திரன் எட்டாம் இடத்தை பார்த்தால் அடிக்கடி உடல் நலிவு; அதனால் ஒருவித பயம்; தண்ணீரினால் அடிக்கடி கண்டங்கள்; தன தான்ய நஷ்டம்.

செவ்வாயினால் எட்டாம் இடம் பார்க்கப் பட்டால் நீரிழிவு நோயும், தன தான்ய நாசமும், இரும்பு மூலமாக பயமும், பயணங்களில் இடையூறுகளும், திருடர்களால் தன நாசமும் உண்டாகும்.

புதனால் பார்க்கப்பட்டால் ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்; அரசாங்க வேலை அல்லது உழவுத் தொழில் இவை மூலம் வருமானம்; வேறு தேசம் செல்ல வாய்ப்புகள் கிட்டும்.

குருவினால் பார்க்கப் பட்டால் எட்டாவது வயதில் ம-/-ணத்திற்கு ஒப்பான ரோகம் தாக்கும். அரசு மூலமாகவோ அல்லது பிறராலோ பயம் உண்டாவதுடன் செல்வத்தையும் இழக்க நேரிடுகின்றது. புதிக்குறை உள்ளவன்.

சுக்கிரனால் பார்க்கப்பட்டால் மறைவிட வியாதிகள் வரும். பொருளை தேடுவதில் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டி வரும். எதையாவது பேசி வம்புச் சண்டையை இவனே தேடிக் கொள்வான்.

சனியினால் பார்க்கப் பட்டால் நீர் நிலைகளினால் கண்டம், இரும்பினால் கண்டம், பிறந்ததிலிருந்து 20 வயது வரை மரணத்திற்கு ஒப்பான நோய்கள் வந்து தாக்கும்.

astrology 7th house

astrology 7th house
7th house



ஏழாம் பாவம் ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமாகிறது

மேஷ ராசி ஏழாம் இடமானால் அவனது மனைவி சபல புதியுள்ளவளாகவும் பணத்திலேயே நாட்டமுடையவளாகவும் கெட்டவர்களின் நட்பை நாடுபாவளாகவும், கொடுமையாய் நடந்து கொள்ள கூடியவளாகவும் அமைவாள்.

ரிஷப ராசி ஏழாமிடமானால் அவனது மனைவி அடங்கி பேசுபவளாகவும், வணக்கமுள்ளவளாகவும், பதி விரதையாகவும் தெய்வ வழிபாடு உள்ளவளாகவும் விளங்குவான்.

மிதுன ராசி ஏழாமிடம் ஆனால் மனைவி செல்வமும் அழகும் நன்னடத்தையும் உள்ளவளாகவும் இருப்பாள்.

கடகம் ஏழாமிடமாக அமைந்தால் மனைவி கணவனது மனதிற்குப் பிடிதவளாகவும் அவனுடைய சொல்லை தட்டாதவளாகவும் அழகுள்ளவளாகவும் அமைவாள்.

சிம்மம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் தீவிரமானவளாகவும், தைரியமுள்ளவளாகவும் கடுங்குரல் படைத்தவளாகவும் ஓயாமல் பிறரின் வீடு சுற்றுபவளாகவும் இருப்பாள். இளைத்த சரீரமும் ஒரு சில குழந்தைகளும் உடையவள்.

கன்னி ஏழாமிடம் ஆனால் மனைவி அழகுள்ளவள்; அனால் புத்திரன் அற்றவள்; சௌபாக்கியம் நிறைந்தவள்; இன்சொல் பேசுபவள்; சாமர்த்தியசாலி; சத்தியமே லட்சியமாக கொண்டவள்.

துலாம் ஏழாமிடம் ஆனால் மனைவி தோற்றப் பொலிவில்லாதவள்; தர்மம் செய்வதில் நாட்டம் உடையவள்; பெருத்த சரீரம் உள்ளவள்; குழந்தை செல்வம் மிக்கவள்.

விருச்சிகம் ஏழாமிடம் ஆனால் மனைவி தயையும் அன்பும் கொண்டவள்; எதிலுமே தீவிர முயற்சி கொண்டு ஒரே தடவையில் காரியம் சாதிக்க வல்லவள்; கணவனிடத்தில் பிரியம் வைக்காதவள்; துர்பாக்கியமும், தோஷமும் நிறைந்தவள்.

தனுசு ஏழாமிடம் ஆனால் மனைவி பெண்மை தோற்றம் அற்றவள்; அதாவது கடும் குரலும் மிடுக்கான நடையும் கொண்டவள். நளினமும் நாணமும் இல்லாதவள்; ஆணின் குணாதிசியங்கள் அனைத்தும் கொண்டவள். பக்தியோ புத்தியோ இல்லாதவள்.

மகரம் ஏழாமிடம் ஆனால் மனைவி வெளியாருக்கு காருண்யம் மிகுந்தவள் போலக் காட்சியளிப்பவள். உள்ளத்தில் கஞ்சத்தனம் மிக்கவள். இவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை நல்ல பெயரெடுக்கும். தன்னைப் பொறுத்த மட்டில் தனக்கும் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும் இனியவளாய் நடந்து கொள்பவள்; பதிவிரதை.

கும்பம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் உறுதியான உள்ளம் கொண்டவள்; கணவனுக்கு எப்போதும் தொண்டு செய்பவள்; தெய்வங்களிடத்திலும், பிராம்மணரிடத்திலும் முறையே பக்தியும் மரியாதையும் உள்ளவள். எல்லாவித சுகங்களும் அமையப் பெற்றவள்.

மீனம் ஏழாமிடம் ஆனால் மனைவி விகாரமான தோற்றமுடையவள். இவளுக்கு பிறக்கும் குழந்தைகள் கெட்ட புத்தியுடையன; நல்லொழுக்கம் அற்றன; எப்போதும் யாருடனாவது சண்டைக்குப் போய் வம்பை விலைக்கு  வாங்கிக் கொண்டு வருவன்.

ஏழுக்குடையவன் லக்னம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதை பொறுத்து ஏற்படும் பலன்கள்.

ஏழுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகன் துக்கம் அற்றவன்; சுகபோகி; ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவன்; சத்ருக்களை நாசம் செய்பவன்.

ஏழுக்குடையவன் 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனின் மனைவி துஷ்டத்தனம் மிக்கவள்; சுகமற்றவள்; பித்த சம்பந்தபட்ட வியாதிகளால் பீடிக்கப்படுபவள்; எதற்கெடுத்தாலும் கணவனோடு எதிர்வாதமிடுபவள்; கணவனின் சொல்லை மீறி நடப்பவள்; தனக்கென குழந்தை பேறு இல்லாதவள்;

ஏழுக்குடையவன் 3 ஆம் இடத்தில் அமர்ந்தால் ஜாதகன் தன் சொந்த முயற்ச்சியை நம்பி வாழ்பவன்; பந்துகளிடத்தில் அன்பு உள்ளவன்.

ஏழுக்குடையவன் 4 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனை பலமற்றவனாகச் செய்து விடுகின்றான். தகப்பனாருக்கு இவன் விரோதமாகின்றான். எனவே துஷ்டன் என்று சொல்லத் தேவை இல்லை. ஆனால் இவனுக்கு வாய்க்கும் மனைவி நல்ல குணவதியாய், கணவனின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாதவளாய் அழகு பொருந்தியவளாய் அமைகிறாள்.

ஏழுக்குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அழகு அந்தஸ்து, தலைமகன், சுகம் ஆகியவற்றை தருகின்றான். துஷ்டர்களை இந்த ஜாதகன் நாசம் செய்துவிடுவான். தன் பத்தினியை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்ற கூடியவன்.

ஏழுக்குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அற்ப ஆயுள்; அபமிருத்யு பீடைகள்; பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்; அழகிய கட்டுடல் கொண்டவன்; பெண்களிடத்தில் பிரியமுள்ளவன்; பாபக்கிரகங்கள்  அந்தஇடத்தில சேர்ந்திருந்தால் க்ஷயரோகி.

ஏழுக்குடையவன் 7 ஆம் இடத்தில் இருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிட்டுகிறது. நீண்ட ஆயுள்; இன் சொல்லன்; சாந்த சோரூபி; கீர்த்திமான்; ஆனாலும் இவனிடத்தில் ஒரு கெட்டகுனம்-பிற பெண்டிரை மொஹித்தல்.

ஏழுக்குடையவன் 8 ஆம் இடத்தில் இருப்பின் தன் மனைவியோடு ஓயாமல் சண்டை வளர்பவன்; ஆதலால் மனைவிச் சுகமற்றவன்; மனைவியோடு தப்பித்தவறி மகிழ்ச்சியோடு இருக்க முற்பட்டாலும், பாவம் அவளூக்கு விரைவில் ம-/-ணம் வந்து சேர்கிறது.

ஏழுக்குடையவன் 9 ஆம் இடத்தில இருந்தால் ஜாதகன் நல்லொழுக்கம் உடையவன். பாபக்கிரகங்கள் அந்த இடத்தில் செர்கையானால் நபும்சகன்; மனைவியை பகையாளியாக கருதுபவன்; தவத்தில் நாட்டமுடையவானாகி சந்நியாசியாகி போவதும் உண்டு.

ஏழுக்குடையவன் 1௦ ஆம் இடத்தில் அமரும் போது ஜாதகன் ராஜ சம்பந்தமான குற்றத்தை செய்பவன் ஆகின்றான். கெட்ட வார்த்தைகளை பேசுபவனாகவும், கபடியாகவும், சபல புத்தி உடையவனாகவும் ஆகின்றான் மாமனாரை வேலை வாங்குபவன்; வஞ்சகன்; சொந்த ஜனங்களுக்கு உதவி செய்யாதவன். பெண்களுக்கு சந்தோசத்தை தராதவன்.

ஏழுக்குடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் மனைவி எப்பொழுதும் பதிக்குப் பணிவிடை செய்பவனாகவும் பதிவிரதையாகவும் அடக்கமுள்ளவளாகவும் அமைகின்றாள். வித்தையினால் இவளது தந்தை மேம்பட்டு விளங்குவான். ஆதலால் தந்தையிடம் இவள் அளவற்ற வாஞ்சை உடையவன்.

ஏழுக்குடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு வீடு வாசல் இல்லை. உறவு மற்றொருவர் இல்லை; மனைவி சுகம் அற்றவன். இவனின் மனைவி சஞ்சலபுத்தி கொண்டவள். நல்ல செலவாளி. அடாத வார்த்தை பேசுபவள். தன் வீட்டு பொருள்களையே திருடி விற்பவள்.

ஏழாம் இடத்தை  கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்

சூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது.

சந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு.

செவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது.

புதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன்.

குருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான்.

சுக்கிரனால் ஏழாம் பாவம் பார்க்கப்பட்டால், மனைவியால் பல சௌகர்யங்களை ஜாதகன் அடைகின்றான். மக்களும் நல்லவர்களாகவே அமைகின்றனர். குழந்தைகள் சற்றுக் கூடுதலாகவே பிறக்கின்றனர். வியாபார லாபத்தை ஜாதகன் வெகுவாகப் பெறுகின்றான். தெளிவான புத்தி ஜாதகனுக்கு அமைகிறது.

சனியினால் களத்திர ஸ்தானம் பார்க்கப்படும் போது மனைவிக்கு ஆகாது. அவளுடைய அழிவுக்கு காரணமான செயல்கள் நடக்கின்றன. அவளுக்கு கண்டங்கள் தொடர்கின்றன. ஜாதகனை பாண்டு ரோகம் பீடிக்கிறது. காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு நோய்கள் இடைவிடாது தொடர்கின்றன.

ஏழுக்குடையவன் சுபகிரகதுடன் கூடினாலும், பார்க்கப்பட்டாலும், ஜாதகன் சகல சௌபாக்கியங்களையும் அடைவதோடு குணவானாகவும், தனவானாகவும் விளங்குகின்றான். தன் பத்தினியின் மூலம் பாக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றான்.

ஏழுக்குடையவன் ஜாதகத்தில் உச்சமானால், நல்ல குணம் மிக்கவனாய் பலரும் பாராட்டும் பெரு பெறுகின்றான். தனம், தானியம் நிறைந்த குடும்ப தலைவனாக விளங்குகின்றான்.

ஏழுக்குடையவன் சத்ருவாகவோ, நீசனாகவோ ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் பலன் நேர் மாறாக அமைகின்றன.

7 ஆம் இடம் களத்திர பாவமாதலால் மேலே கூறப்பட்ட புருஷ ஜாதகத்திற்க்கு உண்டான பலன்கள் பெண்ணின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போதும் பொருந்துவதேயாகும்.

கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன் என்ற நிலையில் இதுவரை கூறப்பட்ட கருத்துக்களில் ஆண் பெண் ஜாதகதிற்கேற்ப பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணின் ஜாதகத்தை வைத்து அவளுக்கு வாழ்க்கை துணைவியாகப் போகும் கணவனின் நிலை பற்றி சில சிறப்பியல்புகள் இங்கே குறிக்கப் பெறுகின்றன.

சனியின் வீடோ சனியின் நவாம்சமோ பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம்  இடமாக இருந்தால் கணவன் வயதானவனாகவும், மூர்க்கனாகவும் இருப்பான்.

செவ்வாயின் வீடோ, செவ்வாயின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் கோபம் கொண்டவனாகவும் ஸ்திரி லோலனாகவும் இருப்பான்.

சுக்ரனின் வீடோ, சுக்ரனின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் அழகும் அந்தஸ்தும் கொண்டவனாக அமைவான்.

புதனின் வீடோ, புதனின் நாவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் தொழிலைப் பற்றிய அறிவும் சாமர்த்தியமும் உடையவனாக விளங்குகின்றான்.

சந்திரனின் வீடோ அல்லது நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் கோழையாகவும், கா-/-வசப்படவனாகவும் ஆகின்றான்.

குரு சுக்கிரன் இவர்களின் நவாம்சத்தில் 7 ஆம் இடம் அமைந்திருந்தால் இவளுக்கு வாய்க்கும் கணவன் வீரம் உள்ளவனாகவும் குணவானாகவும் திகழ்வான்.

சூரியன் வீடோ, சூரியனின் நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேளையில் ஈடுபட்டவனாகவும் , கடுமையான சுபாவம் உள்ளவனாகவும் இருப்பான்.

6th house in astrology

6th house in astrology


ஆறாம் பாவம்

லக்னத்திற்கு ஆறாம் வீடு ரோகஸ்தானம் அல்லது பகைஸ்தானம் என அழைக்கப் படுவதை நாம் அறிவோம். சத்துரு, நோய், இடையூறு, அடிபடுதல் முதலியவற்றைக் குறிக்கும் இடமாகும்.

மேஷம் ஆறாம் இடமானால் தெளிவான சிந்தனை, பகைவர்களை அழித்தல், செய்யும் காரியங்களில் வெற்றி, கன்று, மாடு, தனம், சேர்கை, செல்வாக்குப் பெறுதல் ஆகிய அமைப்புகளை ஜாதகர் பெறுவார்.

ரிஷபம் ஆறாம் இடமானால் கால் கால்நடைகள் விஷயத்தில் எப்பொழுதும் சண்டை, தன் மக்களாலும், மக்கள் வர்க்கத்தாலும் அடிக்கடி சண்டை ஏற்படும். பெண்களின் செர்கையாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சி உண்டு.

மிதுனம் ஆறாம் இடமானால் எப்பொழுதும் பெண்களால் வம்பு சண்டை விரோதம் இருக்கும்.. பலருடைய பாபத்திற்கு ஆளாக நேரிடும். இருபினும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களாலும், தாழ்ந்த ஜனங்களின் சிநேகிதத்தாலும் நன்மை உண்டு.

கடகம் ஆறாம் இடமானால் சகோதர்களும், புத்திரர்களும் அதிகம் உடையவன்; வைதீகத்தில் சிறந்தவர்களுடன் நட்பு கொண்டவனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விரோதியாக அமைகின்றான்.

சிம்மம் ஆறாம் இடமானால் தனது மகளுடன் தீராத விரோதம் உடையவன், பந்து ஜனங்களுடன் அவ்வாறே சண்டை சச்சரவு உடையவன். பொருள் வரவு நிறைய இருந்தாலும் அவை வந்த வழி தெரியாமல் செல்வதும் இந்த அமைப்பின் பலனாகும். வரவும் செலவும் பெரும்பாலும் பெண்களால் ஏற்படக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி ஆறாம் இடமானால் ஜாதகன் சாதுக்களிடதிலோ தர்ம காரியங்களிலோ ஈடுபாடு கொள்வதில்லை. மாறாக அவற்றில் வெறுப்பு கொள்ளவும்.செய்கின்றான். வீட்டிலும் வெளியிலும் எப்பொழுதும் இவனுக்கு எதிரிகள் இருப்பர்கள்.

துலாம் ஆறாம் இடமானால் தன் முதலாளியோடு முரன்பாடு கொள்பவர்கள். கெட்ட நடத்தையுள்ள பெண்களாலும் சொந்த மனைவியாலும் எப்பொழுதும் தொல்லை இருக்கும்.

#விருசிகம்# ஆறாம் இடமானால் பிராமணர்களுக்கு எதிரியாவான். பலவிதமான பாம்புகளால் இவன் அவதிப்பட நேரிடும். மதம் பிடித்த யானைகளாலும் ஜாதகனுக்கு தொந்தரவு ஏற்படும். திருடர்கள் இவனுடைய பொருளை அபகரித்து செல்வர்.குதிரை முதலிய வாகனங்களால் சில சமயங்களில் பீடை ஏற்ப்படும். பெண்களாலும் தொல்லைகள் உண்டு.

தனுசு ஆறாம் இடமானால் வேடர்கள் வில்லேந்தியவர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் அசையும் பொருள்கள் அசையாப் பொருள்கள் ஆகியவற்றால் தொல்லைகள் இருந்து கொண்டிருக்கும். ஜாதகரை ஏமாற்றிப் பொருளை பறித்து செல்பவரும் உண்டு.

மகரம் ஆறாம் இடமானால் கொடுக்கல் வாங்கல் மூலம் தகராறு, வீட்டு மனைகளின் மேல் தொல்லைகள், ச்நேகிதபகை ஏற்படும். சாதுக்கள் கூட இவனை நல்லவன் என கூற மாட்டார்கள்.

கும்பம் ஆறாம் இடமானால் குளம் ஆறு முதலிய நீர் நிலைகளில் இறங்கி குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனக்கு ஆதரவாக இருக்கும் முதலாளியிடம் பகை ஏற்ப்படலாம்.

மீனம் ஆறாம் இடமானால் தன் மக்களாலும் மனைவி மூலம் பிற உறவினர்களிடமும் பகை ஏற்படும். ஜாதகரும் அவர் தந்தையும் காலம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே வாழ்வர்.

ஆறுக்குடையவன் அந்தந்த ராசிகளில் இருப்பதன் பங்கு

ஆறுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் நல்ல பலமுடையவன். பகைவர்கள் இவனை ஒன்றும் செய்ய முடியாது. மாடு கன்று வசதி உடையவன். ஆனாலும் சொந்தக்காரர்களால் துன்பத்திற்கு ஆளாவான்.

ஆறுக்குடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தால் கெட்டிகாரன். கொடூர வார்த்தைகள் பேசுவான்.செல்வம் சேர்ப்பதில் திறமைசாலி. பலருக்கு மத்தியில் புகழோடு வாழக் கூடியவன். இருப்பினும் மனதை வீணாகக் குழப்பிக் கொள்பவன். அடிகடி வரும் நோயினால் உடல் இளைத்தவன்.

ஆறுக்குடையவன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் வஞ்சனை உள்ளவர்களிடம் கூடியிருபவன். பல தொழில் செய்பவன். தகப்பனார் தேடி வைத்த சொத்துகளை நாசம் செய்பவன். அதிகமான கோபமுடையவன். இருபினும் உடனே கோபம் தணிந்து சாந்த நிலைக்கு வரக்கூடியவன்.

ஆறுக்குடையவன் நான்காம் ராசியில் இருந்தால் தந்தையின் பக்கம் சேர்ந்து கொண்டு குடும்பத்திற்கு கலகம் விளைவிப்பன். தந்தையினாலும் மகனாலும் பொருள் வரவு உடையவன். உடல் வலிமை உள்ளவன். சபல உள்ளம் படைத்தவன்.எப்பொழுதும் சரீரத்தில் நோய் நலிவு உடையவன்.

ஆறுக்குடையவன் 5 ஆம் பாவத்தில் இருந்தால் தந்தையோடும் மக்களோடும் ஓயாமல் சண்டை இடுபவன். பாபக் கிரகங்களின் சேர்கை இருந்தால் இளம் புத்திரர்கள் சுபகிரக யோகமிருந்தால் யாவராலும் பாராட்டத் தகுந்தவனாகவும் செல்வம் மிக்கவனாகவும் திகழ்வான்.

ஆறுக்குடையவன் ஆறாம் பாவத்திலேயே இருந்தால் சொந்த ஊரில் சுகமுடையவன் மக்கட்பேற்றில் பிரியமுடையவன்கஞ்சன் துஷ்டன் சிநேகிதம் உடையவன். அவர்களால் தொல்லையையும் சந்திக்க கூடியவன்.

ஆறுக்குடையவன் 7 ஆம் பாவத்தில் இருந்தால், பாவக் கிரகத்துடன் சேர்ந்திருந்தால் எதற்க்கெடுத்தாலும் வாதம் செய்கிறவன். பெண் பித்தன். பகையினால் விஷத்தையும் தருபவன். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் நல்ல அழகு மிக்க மக்களை உடையவன்.

ஆறுக்குடையவன் எட்டாம் பாவத்தில் இருந்தால் வயிற்றுக் கோளாறினாலோ, விஷத்தினாலோ ம-/-ணம் அடைவான்.

ஆறுக்குடையவன் சூரியனாகி எட்டில் இருந்தால் அரசனாவான்.

ஆறுக்குடையவன் சந்திரனாகி எட்டில் இருந்தால் அற்ப ஆயுள். திடீர் ம-/-ணம் ஏற்படும்.

ஆறுக்குடையவன் குருவாகவோ, சுக்ரனாகவோ அமைந்து எட்டில் இருந்தால் கண் மூலம் ஆபத்து நேரிடும்.

ஆறுக்குடையவன் 9 ஆம் பாவத்தில் பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கால்களுக்குப் பங்கம் ஏற்படும். புத்திரன் இருக்க மாட்டான். செல்வம் சேராது. எந்த விதமான சுகமும் இராது.

ஆறுக்குடையவன் 10 ஆம் பாவத்தில் இருந்தால் பெற்ற தாயுடன் ஓயாமல் வழக்காடுவான். சபல புத்தி உள்ளவன். துஷ்டன், சுபகிரகங்களுடன் கூடினால் தம்மை வைத்து காப்பாற்றக் கூடிய மகனை பெறுவான்.தன் தந்தைக்கு எதிரியாக இருந்தாலும் தாயை காப்பாற்றுவான்..

ஆறுக்குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் துஷ்டர்களின் சேர்கையுடையவன் அரசினாலும் திருடர்களினாலும் இவனுடைய பொருள் பறிபோகும். சத்துருவின் மூலம் மரணம் உண்டாகும். சுபகிரகத்துடன் கூடினால் சுபகாரியங்களையே செய்பவன் ஆகின்றான்.

ஆறுக்குடையவன் 12 ஆம் பாவத்தில் இருந்தால் கன்று மாடு முதலிய கால்நடை செல்வங்களை இழப்பான். தன தான்ய சுகம் இவனுக்கு இல்லை. எப்பொழுதும் ஊர் சுற்றியாகவே இருக்க பிரியப்படுவான். இரவு பகல் பாராமல் தனம் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பான்.

ஆறாம் இடத்தை இதர கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

ஆறாம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் பகைவர்கள் இவனிடம் தலை காட்ட முடியாது. வலது கண்ணில் ரோகம் உடையவன். தாயின் மூலம் இவனுக்கு சுகம் இல்லை.

ஆறாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் பகை மேல் பகை வரும். சுபம் வரும்.

ஆறாம் இடம் செவ்வாயால் பார்க்கப்பட்டால் ஜாதகரின் பகைவர்கள் நாசமாவர்கள். அம்மான் மூலமும் இரும்பு ஆயுதங்களினாலும், அக்னியினாலும் எப்பொழுதும் ஆபத்து உண்டு.

ஆறாம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் எத்தகைய பகையையும் எதிர்த்து அழிப்பான். அம்மான் மூலம் சுகமடைவான். கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பவன். பிறரிடம் குற்றம் சொல்பவன்.

ஆறாம் இடம் குருவினால் பார்க்கப்பட்டால் பகைவர் பெருகுவர். செல்வம் சீரழியும். அம்மானால் தொல்லைகள் ஏற்படும்.

ஆறாம் இடம் சுக்ரனால் பார்க்கப்பட்டால் தாய் மாமனால் நிறைந்த சுகம். பகைவனை நாசம் செய்யக் கூடியவன். மக்களால் போற்றப்படுபவன்.

ஆறாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால்,சத்ருக்களுக்கு நாசத்தை செய்கிறவன். அம்மானுடன் கூடினவன். கண் முகம் கால் இவற்றில் ரணபீடை உள்ளவன். தடிப்பான வார்த்தை பேசுபவன். காய்ச்சல் மயக்கம் இவற்றால் அடிக்கடி பீடிக்கப்படுபவன்.

5th house in astrology


5th house in astrology
ஐந்தாம் பாவம்


ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 ஆம் இடம் புத்திர பாவத்தை குறிப்பதாகும். புத்தி, மந்திரம், நீதியின் நிலை, இருதயம், சக்தி ஆகியவற்றையும் 5 ஆம் இடத்தை கொண்டு அறியலாம்.

ஐந்தாம் இடம் மேஷமானால் பிரியமான புத்திரன் அமைகிறான். தேவதையின் அருள் கிடைக்கிறது. குடும்ப சொத்தை வாரிசாக பெரும் அமைப்பு உண்டு.

ஐந்தாம் இடம் ரிஷபமானால் நல்ல அழகுள்ள பெண்கள் பிறப்பார்கள். இவள் கணவனுக்கு ஏற்ற மனைவியாய் அமைந்தாலும் சந்ததி இருக்காது.

ஐந்தாம் இடம் மிதுனமானால் அழகுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். கலைத்துறையில் வளர்ச்சி பெறுவார்கள். இசைத்துறையில் பரிமளிப்பார்கள்.

ஐந்தாம் இடம் கடகமானால் சாந்த சுபாவமுள்ள குழந்தைகளை ஜாதகர் அடைவார். காமுகனாக ஆண் பிள்ளை அமையவும் கூடும்.

ஐந்தாம் இடம் சிம்மம் ஆனால் குரூர குணம், மாமிச பிரீதி, நேர்மையற்ற போக்கு, அதிகப்பசி, வேற்றுதேசம் போதல் ஆகிய குணங்களையுடைய பிள்ளைகளே பிறப்பார்கள்.

ஐந்தாம் இடம் கன்னியானால் பெண் குழந்தையே பிறக்கும். அப்பெண்ணுக்கு சந்ததி இருக்காது. ஆனாலும் கணவனிடத்தில் அன்பும் புண்ணிய நோக்கும்.ஆபரணங்களில் விருப்பம் உடையவள்.

ஐந்தாம் இடம் துலாம் ராசியானால் ஒழுக்கம்  அழகு கம்பீரமான கவர்ச்சிப் பார்வையுடைய பிள்ளைகள் பிறப்பார்கள்

ஐந்தாம் இடம் விருசிகமானால் தோசமின்மை, நல்ல தோற்றம் தர்மத்தில் பற்று, நல்ல நட்புடைய பிள்ளைகள் வாய்க்கும்.

ஐந்தாம் இடம் தனுசு ஆனால் கெட்டபுத்தி, பாபச்செயல், அதிர் நடை ஆகிய குணங்கள் கொண்ட பிள்ளைகள் பெற வேண்டிய நிலை ஏற்படும்

ஐந்தாம் இடம் மகரமானால் வேட்டையில் பிரியமும், பகைவரை ஒழித்துக் கட்டும் திறமையும், அரச சேவையில் ஈடுபாடும் உள்ள புத்திரர்கள் பிறப்பார்கள்.

ஐந்தாம் இடம் கும்பமானால் கட்டுடல், தன தானிய சேர்கை, வெகு நல்ல குணமுடைய புத்திரன் கிடைக்கும். ஆனால் அவனுக்குப் பிறகும் பையன் இந்த பிள்ளைக்கு கெட்ட பெயரயே பிற்காலத்தில் தேடித் தருவான்.

ஐந்தாம் இடம் மீனமானால் நோயற்ற வாழ்வு, நல்ல ரூபம், எப்பொழுதும் சிரித்த முகம், நகைச்சுவையான பேச்சுடன் கூடிய பிள்ளைகளை அடையும் யோகமுண்டு.

5 ஆம் பாவாதிபதி லக்கினம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதனால் ஏற்படும் பலன்கள்.

5 குடையவன் லக்னத்தில் இருந்தால் புதிரர்களினால் சுகம் பெறுவான். அந்தப் பிள்ளைகளில் யாருக்கேனும் மந்திரசித்தி கிடைக்கிறது. ராஜாங்க சேவை செய்யும் வாய்ப்பும் சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளும் போக்கும் உள்ள பிள்ளைகள் அமைகிறார்கள். விஷ்ணு பக்தி நிறைந்த பிள்ளை கிட்டவும் வாய்ப்பு இருக்கிறது.

5 குடையவன் இரண்டாமிடதில் இருந்தால் பிறக்கும் பிள்ளை குடும்ப விரோதி, தீயோரின் சேர்கை உள்ளவன்.

5 குடையவன் மூன்றாம் இடத்தில இருந்தால் பிறகும் பிள்ளை பராக்கிரமசாலி, வாக்கு சாதூர்யம் நிறைந்தவன். சாந்த குணம். சுகபோகி.

5 குடையவன் நான்காம் இடத்தில இருந்தால் தந்தைக்கு அன்பன்; பெரியோர்களிடம்  ஈடுபாடு. துணிவியாபாரம் லேவாதேவி நடத்தல் ஆகிய தொழிலில் இந்தப் பிள்ளை ஈடுபடுவான்.

5 குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் பிள்ளை புத்திமான்; ஆற்றல் மிக்க பேச்சாளன்; சுருக்கமாக சொன்னால் புருஷ ஸ்ரேஷ்டன்

5 குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் மிகுந்த தோஷமுள்ள பிள்ளை பிறப்பான்

5 குடையவன் ஏழாம் இடத்தில் இருந்தால் ஜாதகருடைய பத்தினி உறவினர்களுடன் அன்பு கொண்டவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், சிறுத்த இடையுள்ளவளாகவும் அமைந்து நல்ல புத்திரர்களை பெறுகின்றான்

5 குடையவன் எட்டாம்மிடதிலிருந்தால் அங்கத்தில் ஈனம் ஏற்படும் பிள்ளை தோன்றுவான். கோபம், கெட்ட பேச்சு, கெட்ட நடத்தை, வஞ்சகம், தரித்திரம் ஆகியவை இவன் கூட பிறந்த குணங்கள்.

5 குடையவன் ஒன்பதாம் இடத்திலிருந்தால் ஜாதகருடைய புத்திரன் சண்டையை தீர்த்து சமாதானப் படுத்தி வைப்பதில் சமர்த்தன். அரசனால் தரப்பட்ட வாகனம் உள்ளவன்; கலை வல்லவன்.

5 குடையவன் பத்தாம் இடத்தில இருந்தால் அரசுப் பணியுடன் பற்பல வகைகளிலும் போருலீடுபவன். பெண்களிடம் பிரியமுள்ளவன்.

5 குடையவன் 11 ஆம் இடத்தில இருந்தால் பிள்ளை சங்கீத வித்வான் ஆகும் பெரு பெற்றவன். அரசர் போற்றும் புகழ் மிக்கவன்.

5 குடையவன் 12 ஆம் இடத்திலிருந்து பபகிரகங்களுடன் சேர்ந்தால் எவ்வளவு செலவு செய்தும் மகப்பேறு வாய்காதவள்; வாய்த்தாலும் ஒரு சுகமும் கிட்டாது. வெளிதேச தொடர்பு கொண்டு போருளீடுவான்.
5 ஆம் கிரகத்தை பிற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

5 ஆம் இடமானது சூரியனால் பார்க்கப்பட்டால் முதலில் பிறந்த சகோதரர்க்கு ஆகாது; வாயு பீடை எப்போதும் இருக்கும்.

5 ஆம் இடமானது சந்திரனால் பார்க்கப்பட்டால் நண்பர்களால் சுகம் உண்டாகிறது. பிறந்த உலகத்துக்கு பெருமை தேடித் தருபவன். வேறு தேசத்தில் வியாபாரம் செய்து ஜீவிக்க கூடியவன்.

5 ஆம் இடமானது செவ்வாயினால் பர்கப்பட்டால் முதலில் பிறந்த பிள்ளை நாசம் ஆகிறது. பி-/-சை எடுக்கும் நிலையம் ஏற்படுகிறது.

5 ஆம் இடமானது புதனால் பார்க்கப்பட்டால் புத்திரி ஜெனனம்; கீர்த்தி ஐஸ்வர்யம் கிட்டும்.

5 ஆம் இடமானது குருவால் பார்க்கப்பட்டால் அதிகமான சந்தான சௌக்கியம், சாஸ்திரங்களில் தேர்ச்சி, நீண்ட ஆயுள், நிறைந்தத செல்வம் உண்டாகிறது.

5 ஆம் இடம் சுகிரனால் பார்கப்பட்டால் முதலில் புத்திரனும் பிறகு பெண்ணும் பிறக்கும்; ஜாதகன் கல்வி, செல்வம் இரண்டையும் பெறுகின்றான்.

5 ஆம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் புத்திர சுகம் இல்லை. குலப் பற்று கொண்டவன். 

4th house in astrology


4th house in astrology

நான்காம் பாகம்

மனதின் நிலை, விவசாய பலிதம், தாய் உறவினர்கள், சரீர விருத்தி, வாஹனம் முதலியவற்றை  பற்றி அறிந்து கொள்ள ஒருவனுடைய ஜாதகத்தில் நான்காம் வீடு உதவுகிறது.

நான்காம் பாவம் மேஷமானால் கால்நடைகளாலும், பெண்களாலும், நல்லுனர்வுகளாலும், பராக்கிரமதால் சம்பாதிக்கப் பெற்ற போகங்களாலும் சுகத்தை அடைகின்றான்

நான்காம் பாவம் ரிஷபமானால் ராஜ சேவையினாலும் நியம நோன்புகளாலும், வெகுமதிகளாலும் சுகத்தை அடைகின்றான்.

நான்காம் பாவம் மிதுனமானால் காடுகள், நீர் நிறைந்த பகுதிகளில் வாழ்க்கை அமையும். பெண்களால் லாபம் அடையக் கூடியவன்; நல்ல பணியாளர் அமைவர்.

நான்காம் பாவம் கடகமானால் அழகன், பாக்கியவான், ஒழுக்க சீலன்; கலைகளில் ஈடுபாடு கொண்டவன்.

நான்காம் பாவம் சிம்மானால் அதிக கோபத்தால் பலரின் நட்பை இழந்தவன். பெண் குழந்தையே பிறக்கும். கெட்டவர்களின் செர்கையுடயவன்.

நான்காம் பாவம் கண்ணியானால் துர்புத்தியுள்ளவன்; திருடன், சண்டைக்காரன், கொள் சொல்லுபவன்; துப்பறியவல்லவன்.

நான்காம் பாவம் துலாராசியானால் சுபகாரியங்களை முன்னின்று நடத்துபவன். கல்வி கலைவல்லோன். தெளிந்த சித்தமும் செல்வமும் வாய்ந்தவன்.

நான்காம் பாவம் விருசிகமானால் கொடுமையான சுபாவமுள்ளவன். கோழை; சாமர்தியமற்றவன்.

நான்காம் பாவம் தனுசானால் ராணுவத்தில் வேலை செய்பவன்; நல்ல சுபாவமுடையவன்; விஷ்னுவை வழிபடுபவன்.

நான்காம் பாவம் மகரமானால் நீர்நிலை பகுதிகளில் வசிப்பவன். பிறருடைய தாகத்தை போக்கவல்ல தண்ணீர்ப் பந்தல் முதலியன வைப்பவன். கா-/-குனம் கொண்டவன்.

நான்காம் பாவம் கும்பமானால் பெண்ணால் செல்வசுகம் அடைபவன். நல்ல உணவுகளை ருசிப்பவன். துஷ்டனுக்கு உதவி செய்பவன்

நான்காம் பாவம் மீனமானால் விசித்திர ஆடைகளை அணிபவன்; செல்வம் உள்ளவன்.

4 குடையவன் லக்கினம் முதல் 12 ராசிகளிலும் இருபதால் விளையும் பலன்கள்

லக்னதிலிருந்தல் வியாதியற்ற, கவர்ச்சி மிக்க தோற்றம். வாகன சுகம். நல்ல பொருள்களின் லாபம். ஆகியன அமைகின்றன

2 ஆம் இடதிலிருந்தால் பாபக் கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் தந்தைக்கு விரோதியாகின்றான். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் தந்தைக்கு நலம். பக்திமான். ஸ்ருதி சாஸ்திர பண்டிதன்.

3 ஆம் இடதிளிருந்தால் தந்தைக்கு ஆதரவாளன். ஆனால் தாயுடன் சண்டையிடுபவன். வேளாண்மையால் விருத்தியடைவான். நண்பர்களை மிகுதியாககொண்டவன்.

4 ஆம் இடத்திலிருந்தால் சுகானுபவத்தில் அரசனுக்கு ஒப்பாவான்; நல்ல புத்திர பாக்கியமுடையவன்; மக்களால் பாராட்டப் பெற்றவன்.

5 ஆம் இடத்தில இருந்தால் நீண்ட ஆயுள்; புத்திமான்; வேதப்பயிற்சி மிக்கவன். கையெழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளலம்.

6 ஆம் இடத்திலிருந்தால் பகைவர்கள் மிகுதி; தாய் மாமனால் வஞ்சிகப்படுவார். சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சுகவாசி.

7 ஆம் இடத்திலிருந்தால் தேவர்களுக்கு ஒப்பான அழகிய வடிவம் அமைந்தவர். பெண்களுக்கு பிடித்தமானவர். பாபகிரகங்கலிருந்தால் மிக வஞ்சகன்; கொடியோன்

8 ஆம் இடத்திலிருந்தால் சுபகிரகங்கள் கூடினால் நோயுள்ளவன். தாய் தந்தையரும் சுகமடையார். பாபக் கிரகங்களிருந்தால் அதிகச் செளவாளி. அதனால் செல்வம் யாவும் தொலைத்து விட்டுத் தெருவில் நிற்பான்.

9 ஆம் இடத்திலிருந்தால் தகப்பனால் சொத்து சுகங்கள் பெறுவான்; உயர்ந்த நண்பனின் உதவி கிடைக்கும். கிணறு குளம் முதலியவற்றை அமைத்து கொடுத்து பொது ஜனங்களிடையே  தர்மவானாகிறான். பொறுமையை விரதமாக மேற்கொள்பவன்; அழகிய விழிகள்; அயல் நாடு சென்று தங்கி சுகம் பெரும் யோகமும் உண்டு.

1௦ ஆம் இடத்திலிருந்தால் மனைவி யோகமுடையவன்; தாய் தந்தையருக்கு நீண்ட ஆயுள் வாய்க்கிறது; அந்த வகையில் லாபமுடையவன்.

11 ஆம் இடத்திலிருந்தால் தகப்பனை ரட்சிப்பவன்; பல வகையில் வருமானம் உள்ளவன். நற்காரியங்களையே செய்பவன்.

12 ஆம் இடத்திலிருந்தால் பாபக்கிரகங்களின் சேர்க்கையினால் தந்தைக்கு ஆகாது. அவன் வெளிநாடு போய் விடுவான். சுபர்கள் இருந்தால் தந்தைக்கு சுகத்தை கொடுப்பவன்.

நான்காம் பாவத்துக்குப் பிற கிரகங்களின் பார்வையால் ஏற்படும் பலன்கள்.

நான்காம் இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் தாய்க்கு பீடை; ஆனால் புண்ணியவான், கீர்த்தி பெறுவான்.

நான்காம் இடம் சந்திரனால் பார்க்கப் பட்டால் ஆயுள் குறைவு. சுகக் குறைவு.

நான்காம் இடம் செவ்வாயினால் பார்க்கப் பட்டால் நான்காவது ஆண்டு தாய்க்கு கண்டம். அரசனாலும் பூமியினாலும் சுகம். ஜாதகனின் பார்வை பட்டாலே பகைவர் ஓடுவர்.

நான்காம் இடம் புதனால் பார்க்கப்பட்டால் தாய்க்கு அதிகமான சௌக்கியமும் அரசு வழியில் ஆதாயமும் செல்வப் பெருக்கும் பிதாவின் தனமும் கா-/-சுகமும் கிடைக்கிறது.

நான்காம் இடம் குருவால் பார்க்கப்பட்டால் பண்டிதனாவான். உறவினர் உதவியும் வாகன சுகமும் கிட்டும்.

நான்காம் இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் மாதாவின் மகிழ்ச்சிக்கு குறைவிராது. வாகன சுகம் உண்டு

நான்காம் இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பிதாவின் தாயாருக்கு (பாட்டிக்கு) மர-/-முன்டாகும். 4, 6 வயதுகளில் கடுமையான கண்டம்

3rd house in astrology

3rd house in astrology
மூன்றாம் அதிபதி


சகோதரர், வேலைகாரர், தைரியம் ஆகியன பற்றி மூன்றாம் இடத்தில அறியகூடும்; மேஷம் மூன்றாம் பாவமானால் படிப்பாளி, பரோபகாரி, சுகசரீரம் உள்ளவன்.

ரிசபம் மூன்றாம் பாவமானால் புகழ் பெற்றவன். வள்ளல். அரச செல்வாக்கு உள்ளவன்.

மிதுனம் மூன்றாம் இடமானால் வாகன சுகம் உள்ளவன். பெண்களிடத்தில் பிரியமாக நடப்பவன். அரசர்களின் நேசம் உடையவன்.

கடகம் மூன்றாம் இடம்மாக அமையும் போழுது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபடுபவனாகவும் அமைகிறான்.

சிம்மம் மூன்றாம் இடம்மாக அமையும் போழுதுபிறரின் பணத்தில் ஆசையுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.

கடகம் மூன்றாம் இடமாகும் போது நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவனாகவுன் அமைகின்றான்.

சிம்மம் மூன்றாம் வீடாகும் போது ஜாதகன் பிறரின் பணத்தில் ஆசைவுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.

கன்னி மூன்றாம் இடமாக அமைந்த ஜாதகன் சாஸ்திரத்தில் பற்று உள்ளவனாகவும், ஒழுக சீலனாகவும் விருந்தோம்பல் பண்பாடு கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகின்றான்.

துலாம் மூன்றாமிடமாக அமைந்தால் வெறுக்கத்தக்க சுபாவம் கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகவும் ஆகின்றான்.

விருச்சிகம் மூன்றாமிடமாக அமைந்தவனுக்கு செய்நன்றி மறந்த பாபர்களும், செலவு செய்வதையே குறியாக கொண்டவர்களும், வம்பிளழுப்பவர்களும் சேர்ந்து விரோதத்தை விளைவிப்பவர்கள்.

தனுசு மூன்றாமிடமாக அமைந்தவன் வீரர்கள், செல்வர்கள், தர்ம மார்க்கத்தில் இருபவர்களின் நட்பை அடைகின்றான்.

மகரம் மூன்றாம் இடமாக அமைந்தவனுக்கு எப்போதும் சுகம் கிடைக்கிறது. தெய்வ வழிபாடு; குருபக்தி; நிறைந்த செல்வம், ஒப்பற்ற பாண்டித்தியம் காரணமாக நல்ல குருமார்கள் அமைகிறார்கள்.

கும்பம் மூன்றாம் இடமாக பிறந்த மனிதன் பொறுமை, கீர்த்தி, சத்தியம் மிக்கவர்களோடு நண்பன் ஆகின்றான். சில சமயம் வஞ்சகர்களோடும் சிநேகம் கொள்ள நேரிடும்.

மீனம் மூன்றாமிடமாகும் போது மிகுந்த செல்வம் நிறைய பிள்ளைகள் உடையவனாகின்றான். புண்ணியவான். அதிதிகளிடம் பிரியம் உள்ளவன். எல்லா ஜனங்களுக்கும் பிடிதவனுமாகின்றான்.

3 ஆம் பாவதிபதி பன்னிரண்டு ராசிகளிலும் இருப்பதன் பலன்

3க்கு உடையவன் லக்னதிலிருன்தால் பந்துகளின் இடையூருளால் இல்லற சுகத்தை அனுபவிக்க இயலாதவனாகின்றான். அடிமைத்தொழில்.

3க்கு உடையவன் இரண்டாம் இடத்தில இருந்தால் பிச்சை எடுக்க நேரிடும்.

3க்கு உடையவன் மூன்றாமிடதிலேயே இருந்தால் பிறரை நண்பனாக்கி கொள்வதில் சமர்த்தன்; குருவிடம் பற்றும் ராஜ சேவையும் மேலான் தனமும் உடையவன்.

3க்கு உடையவன் நான்காம் இடத்தில இருந்தால் உறவினர்கள் இருந்தால் பித்தம்; வயிற்றில் சாஸ்திர சிகிச்சை; தாயுடன் சண்டை; தந்தையினுடைய  பொருளை அழிப்பவன்.

3க்கு உடையவன் 5 ஆம் இடத்திலிருந்தால் உறவினர்கள் அதிகம், சுகவாசி; பிறருக்காக உதவி செய்பவன்; அழகிய சரீரம் உடையவன்; நீண்ட ஆயுள்.

3க்கு உடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் கண்ணில் ஏதாவது கோளாறு; சத்ருக்கள் நிறைந்தவன்; சகோதரர்களாகவும், விளங்குகளாலும், வியாதிகளாலும் சாதுக்களாலும் துன்பத்தை அடைவான்.

3க்கு உடையவன் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்களிடம் சண்டை இடுபவன்; மனைவி நல்ல அழகுடன் அமைந்தவராயினும் வேறு ஸ்திரீயின் பாவம் நிறைந்த வீட்டை நாடிசெல்வான்.

3க்கு உடையவன் எட்டாம் இடத்திலிருந்து பாபகிரகங்களும் சேர்ந்திருந்தாலும் ஜாதகன் மிகுந்த கோபம் உடையவனாகவும் இறந்து போன சகோதரன் பந்துக்களுடைய குடும்பத்தில் பிறந்த்வானாகவும் இருப்பான்

3க்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால் இளமையான தோற்றம்; சோலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழவேண்டும் என்ற விருப்பம் உள்ளவனாகவும், நல்ல விசயங்களில் புத்தியை செலுத்துபாவனாகவும் இருப்பான்.

3க்கு உடையவன் 1௦ ஆம் இடத்தில் இருந்தால் தகப்பன் வழியிலும் அரச வழியிலும் சுகம் உண்டாகும். தூய்மையே விரும்புவான்.

3க்கு உடையவன்  11 ஆம் இடத்தில் இருந்தால் பராகிரமம் உடையவன். பந்துகளின் உதவி எப்போதும் கிட்டும். சிறந்த நிபுணன். சுகவாசி.

3க்கு உடையவன் 12 ல் இருந்தால் செலவாளி, நண்பனே சத்ருவாக மாறுவான்.

2nd house

2nd house, இரண்டாம் பாவம்



மேஷம் 2 ஆம் இடமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாகியவானவாகவும், வித்வானாகவும் விளங்குவார்.

ரிஷபம் 2 ஆம் இடமாக வருமானால் விவசாயத்தில் ஈடுபாடும் ரத்தினங்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்.

மிதுனம் 2 ஆம் இடமாக ஆகுமானால் தனவான். இவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள்ளல் லாபம் உள்ளவர்.

கடகம் 2 ஆம் இடமாக அமைந்தால் நியாயமான மார்கத்தில் சம்பாதிப்பவர். மனைவி மூலம் சுகத்தை அடைபவர். பிள்ளைகளை பேணி காப்பவர்.

சிம்மம் 2 ஆம் இடமானால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார்.

கன்னி 2 ஆம் இடமானால் அரசினால் வருமானம். யானை, குதிரை ரத்தினங்கள் முதலியவற்றை வேகுமானமாகப் பெறுவார்.

துலாம் 2 ஆம் இடமானால் பூமியினாலும, பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார்.

விருசிகம் 2 ஆம் இடமானால் கடமையே கண்ணாக உள்ளவர். பெண்களிடத்தில் பிரியமுள்ளவர். நல்ல பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வங்களிடமும் ஈடுபாடு கொண்டவர்.

தனுசு 2 ஆம் இடமாக அமைந்தால் தீரச் செயல்களால் செல்வம் கிடைக்கும். மாடு கன்றுகள் வீட்டில் நிறைந்து இருக்கும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.

மகரம் 2 ஆம் இடமாக ஆனால் பலவிதமான் யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும்.

கும்பம் 2 ஆம் இடமாக ஆனால் பழம், புஸ்பம் இவை மூலம் அதிகமான தனத்தை பெறுகின்றான். நல்லவர்கள் அனுபாவிக்க கூடிய பெரியோர்கள் மூலம் இவன் அனுபவிக்கின்றான்.

மீனம் 2 ஆம் இடமானால் நெம நிஸ்டைகள், உபவாசம் ஆகியவற்றால் தனம் கிடைக்கிறது. வித்தை மூலமாகவும், தாய் வழியாகவும், அரசு மூலமாகவும் பொருள் சேரும். புதையல் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

2 ஆம் இடததிபன் அந்தந்த இராசிகளில் பலன்.

லக்னத்திற்கு அடுத்த வீடானது இரண்டாவது ராசியாகிறது. அந்த ராசிக்குரிய அதிபதி:

லக்னதிலிருந்தால் பணக்காரன் ஆனால் கருமி. சுயநலம் கொண்டவர். வியாபாரி, சுகஜீவி, அழகான புருஷ அமைப்பு கொண்டவர்.

இரண்டாம் வீட்டில் இருந்தால் அமைச்சராகும் அந்தஸ்து. பெரிய குடும்பம், நவமணிகளை அணிய கூடியவர்.

மூன்றாம் இடதிலிருந்தால் துஷ்டன்; அதே சமயம் பயம் உள்ளவன். சகோதர்களுக்கு எதிரி.

நாலமிடதிலிருந்தால் தாய் தந்தை இடம் தனம் பெறுபவர். ஆத்மா சக்தி உள்ளவர். நீண்ட ஆயுள். (இரண்டாமிடததிபன் இந்த வீட்டில் பாப கிரகமானால் ஏழையாகவும் நோயுள்ளவராகவும் இருப்பார்).

5 ஆம்இடதிலிருந்தால் லோபி. துக்கமுள்ள்ளவர்; (பபகிரகமானால்) துஷ்டர்.

ஆறாம் இடத்தில சுபகிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவரானால் சத்ருவை நாசம் செய்பவர். பணம் சேர்பதில் சமர்த்தர். பபக்ராகங்களுடன் இருந்தால் வஞ்சகர். தரித்திரர்; கெட்ட சகவாசம் உள்ளவர்.

7 ஆம் இடதிலிருந்தால் நல்ல ரூபம் உள்ளவர். மனைவியை அதிகமாக நேசிப்பவர்; நிறைய புத்திரப் பெரு உள்ளவர்.பாப கிரகத்துடன் கூடி இருந்தால் குழந்தை அற்றவர்.

எட்டாம் இடத்திலிருந்தால் வாயு சரீரம்; நல்ல எண்ணமுடையவர்.

ஒன்பதாம் இடதிளிருண்தால் கொடையாளி; பலம் உள்ளவர்; விரத அனுஷ்டானம் உள்ளவர். பாப கிரகத்துடன் கூடினால் தாழ்ந்த்தவர்; தரித்திரர்.

1௦ ஆம் இடதில் இருந்தால்அரசு தொடர்பு, தாய் தந்தையரிடம் பக்தி, சுகஜீவி, அழகன், பாபர் இருந்தால் பெற்றோருக்கு இவரே எதிரி.

11 ஆம் இடதிலிருந்தால்  லட்சமி கடாச்சம் பொருந்தியவர். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.

12 ஆம் வீட்டில் பாபருடன் இருந்தால் துஷ்டன்; தூர தேச தீவுகளில் வாழ நேரிடும்; தன்னைவிட அறிவில் தாழ்ந்தவர்களுடன் சிநேகம் உள்ளவர்.

1st house astrology

1st house astrology
லக்னாதிபதி


லக்னத்திற்கு உரிய அதிபதி ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளான் என்பதை வைத்து பலன் பலன் கண்டுபிடிக்கும் முறையை முதலில் பார்போம்.

லக்னாதிபதி லக்னதிலேயே இருந்தால் நீண்ட ஆயுளுள்ளவர். எப்பொழுதும் சுகமான வாழ்வு அமைகிறது. நல்ல உழைப்பாளியகவும் இவர் விளங்குகின்றான். இவருக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கு இடமிருக்கிறது.

லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் செழிப்பும் உயரமும் கொண்ட தேக அமைப்பு கிடைக்கிறது. தனவான், தர்மம் செய்பவர். ஒழுக்கம் உள்ளவர். மான உணர்வு மிக்கவர்.

லக்னாதிபதி மூன்றான் இடத்தில இருந்தால் சகோதரர்களின் சகாயம் அவருக்கு எப்போதும் உண்டு. சிங்கத்திற்கு ஒப்பான பராகிரமம் உள்ளவர். சகல சௌபாக்கியங்களையும் பெற்றவர்.

லக்னாதிபதி நான்காம் வீட்டிலிருக்கும் அமைப்பு பெற்றவர் அரசரால் போற்றப்படகூடிய அந்தஸ்தை பெறுகிறார். தெய்வ வழிபாடுடையவர். பெற்ற தாய் தந்தையரின் மகிசிக்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுபவர். தர்ம ஸ்தாபனத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்.அதக சகோதர்கள் உள்ளவர். வாகன யோகம் உள்ளவர். தேகசுகம் உள்ளவர்.

லக்னாதிபதி 5 ஆம் இடத்தில இருக்கும் அமைப்பை பெற்றவர் நீண்டகாலம் வாழும் புத்திரர்களை உடையவர். சுபகாரியங்களுகாக பொருளை செலவிடகூடியவர். சங்கீத ஞானத்தில் பற்றுள்ளவர். பணிவும் அடக்கமும் இவரது பண்பு நலன்கள். பூர்வ புண்ணியம் வாய்க்கப்பெற்றவர்.

லக்னாதிபதி 6 ஆம் இடத்தில இருக்கும் அமைப்பு கொண்டவருக்கு எப்போதும் பகைவர்களின் தொல்லை உண்டு.சுப குணம் இவர் உடன் பிறந்தது.தாய் மூலம் சௌகர்யத்தை தேடிகொள்பவர். தாய் மாமனின் உதவியும் இவருக்கு உண்டு. மாடு கன்று வைத்து வாழ்பவர். லக்னாதிபதி 6ஆம் இடத்தில இருபது அவ்வளவு நல்ல பலன்களை உண்டாக்காது.

லக்னாதிபதி களத்திர ராசியான் 7 ஆம் இடத்தில இருந்தால் பெண்கள் மூலம் சுகம், செல்வம் இவற்றை அடைவார். ஒழுக சீலர். அலங்கார பிரியர். ஆனாலும் இவரது மனைவி நெடு நாள் வாழ்வது சந்தேகமே. ஒரு கட்டத்தில் இவர் விரக்தியடைந்து வேறு தேசம் செல்லவும் நேரிடலாம்.

லக்னாதிபதி எட்டாம் இடத்தில இருக்கப்பெற்றவர் பற்பல துன்பத்திற்கு ஆளாகிறார். மரணத்திற்கு ஒப்பான உபாதை ஏற்படுகிறது. எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் இவரிடம் சேராது. எப்பொழுதும் யாரோடும் வாதிட்டு கொண்டே இருபதால் ஒரு சமயத்தில், திருடராகவும், பிறர் மனைவியிடத்தில் நாட்டமுள்ளவராகவும், கொடுமையாளராகவும் மாற வாய்ப்புள்ளது.

லக்னாதிபதி 9 ஆம் இடத்தில் இருந்தால் எல்லோரிடமும் சரளமாக பழகி நல்ல நட்பை தேடிகொள்வார். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பார். பெரும்புகழ் பெறுவார். அரசர்களும் பணியகூடிய அந்தஸ்தை பெறக்கூடியவர். பேச்சாற்றல் மிக்கவர். இல்லறத்தை நல்லறமாக்குபவர். திருமாலை வழிபடுபவர்.

லக்னதிபாதி 1௦ ல் அமர்ந்தால் அரசர்கொப்பான வாழ்க்கை உடையவர். குரு பூஜை செய்பவர். தாயும் தந்தையும் போற்ற வாழ்பவர். சகல சுகமும் பெற்றவர். நோயில்லாமல் நிறை வாழ்வு வாழ்பவர்.

லக்னாதிபதி 11 ஆம் இடத்தில இருந்தால். தெளிவான் சிந்தனையும் நிறைவான் வாழ்வும், அமைப்பான வாகன சுகமும், அரச மரியாதையும் பெறுவார்.

லக்னாதிபதி 12 ஆம் இடத்தில இருந்தால், ஜாதகரின் வாயில் இனிய சொற்களை எதிர்ப்பார்ப்பது அரிது. கடுகடுதவர். குடிகேடுபவர். துஷ்டர் சகவாசமும் கேட்ட நினைப்பும் கொண்டவர். தன் சகோதரனுகே எதிரியாவார். தன் தேசம் விட்டு வேறு தேசம் செல்லும் நிலைக்கு ஆளாவார். நல்ல பெயர் எடுபதற்கு வாய்ப்பு இல்லை.

லக்னத்தை மற்ற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்

சூரியன் லக்னத்தை பார்த்தால் தகப்பன் வழி சொத்து கிடைக்கும். அரசாங்கத்தில் பணியாற்றுவார். பெண்களிததில் முரட்டுதனமாக நடந்து கொள்வார்.

சந்திரன் லக்னத்தை பார்த்தால் அழகுள்ளவர். தாயாள குணம் மிக்கவர். பெண்களுக்கு வசபடுபவர். திரவ சம்பந்தமான பொருள்களை வியாபாரம் செய்பவர்.

செவ்வாய் லக்னத்தை பார்த்தால் எத்தகைய முரடனானாலும் தன்னுடைய சாகஸத்தால் சிநேகிதர் ஆக்கி கொள்பவர். தர்ம சிந்தனை உள்ளவர்.

புதன் லக்னத்தை பார்த்தால் சிற்பகலையில் ஈடுபாடு கொண்டவர். புகழ்மிக்கவர். பல வழிகளில் வெகுமானம் பெறுபவர்.

குரு லக்னத்தை பார்த்தால் யாகம், விரதம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.சதுகளிடமும், ஞானிகளிடமும் ப்ரீதி உள்ளவர்.

சுக்ரன் லக்னத்தை பார்த்தால் வேசிகளின் சேர்கை உள்ளவர். தனலாபம் உள்ளவர்.

சனி லக்னத்தை பார்த்தால் பயங்கர ரோகதால் பீடிகப்பட்டவர். மூர்க்க குணம் உள்ளவர்.

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா...astro nithiyandran


sidhdhar

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா 
மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா
வெளுத்த நரம்பும் சதையும் பூட்டிவைத்த கூடடா 

இது ஒரு சித்தர் வாக்கு காற்றடைத்த பையடா காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா மனித உடலானது ஒரு மனிதன் தான் உடுத்தும் ஆடையை போன்றது அதன் ஆன்மாவானது சிவனை தஞ்சம் அடையக்கூடியது. ஆதலால் ஒரு மனிதன் தனது உடலை அலங்கார படுத்திக்கொள்ள என்ன என்ன  செய்கின்றார். ஆனால் உண்மையில் இந்த உடல் ஒரு நாள் அழியும் மனிதனின் உயிர் ஆன்மாவானது இவ்வுலகை விட்டு
செல்லும்பொழுது இந்த உடலானது அழிக்கப்படுகிறது ஒரு மனிதனுக்கு உடலுக்கு என்று ஒரு ஆயுளும் உயிருக்கு என்று ஒரு ஆயுளும் உள்ளது.உயிர் மனிதனை விட்டு எப்பொழுது பிரிகிறது அப்பொழுது உடல் இவ்வுலகில் அளிக்கப்படுகிறது. கர்ம வினையின் பல நாள் இவ்வுலகில் பூதவுடல் அளிக்கப்பட்ட பின்பும் உயிரானது இவ்வுலகில் ஆத்மாவாக நடமாடுகிறது. இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே இந்தப்பாடல் காயமே இது பொய்யடா அப்படி என்றால் காயம் என்பது உடலைக் குறிக்கிறது உடல் என்பது ஒரு பொய்யான விஷயம் இது வெறும் காற்றடைத்த பையடா என்றால் மூச்சுக்காற்று இருக்கும் வரைக்கும் தான் இந்த உடலானது செயல்படும் மூச்சுக்காற்று நின்று விட்டாள் உடலானது செயல்படாது அதை பொருட்டு உடல் ஒரு பொய் அது வெறும் காற்றடைத்த பை என்று சித்தர் வாக்கு சொல்கிறார். இந்த உடலை நாம் பேணிக் காப்பதற்காக பல பேரை துன்பப்படுகிறோம் அதை தவறு என்பதை சுட்டிக்காட்ட தான் இந்தப் பாடலை சித்தர் பாடுகிறார் உடல் மட்டுமல்ல இவ்வுலகில் எதுமே நிரந்தரம் அல்ல என்றுமே மாறக்கூடிய ஒன்றுதான். மனிதன் அறியக்கூடிய அனைத்தும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு பல தவறுகளை செய்து கொண்டு வருகிறான் ஆனால் இவ்வுலகில் நிரந்தரம் என்று ஒன்று இல்லை அது நிரந்தரம் என்றால் அது ஈசனின் பாதம் மட்டும் தான் அதை உணர்த்துவதற்காகவே இப்பாடலை பாடியுள்ளார் இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணருங்கள் ஈசன் ஒருவனே நிரந்தரம் என்று உணருங்கள்

high court office assistant post cut off mark