கிரகங்களின் பிடியிலிருந்து தப்பிக்க என்ன வழிகள்

ஒருவர் ஜாதகத்தில் நவ கிரகத்தின் ஆதிக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் இந்த நவ கிரகங்கள் தாங்கள் அடைந்த துன்பத்தை அதன்  திசா புத்தியில் ஜாதகக்காரர்களுக்கு பலனாக வழங்குகிறது

 இந்த பிடியிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் நமது திசா புத்தியை ஆராய வேண்டும் இந்த திசா புத்தியில்  நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த தவறுகள் அனைத்தும் சுட்டிக்காட்டப்படும் 

இந்த திசா புக்தி நடத்தும் கிரகங்களின் அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அந்த கிரகத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அந்த கிரகத்தின் தன்மையை பொறுத்து நாம் புண்ணியங்களை செய்ய வேண்டும் 

உதாரணமாக ஒரு சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டால் சனியின் தன்மையான உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் ,இயற்கையில் உடல் நிலையில் குறைகள் உள்ளவர் ஆகியோர்களுக்கு நீங்கள் முடிந்த அளவு உதவிகளை செய்தால் உங்களுக்கு சனீஸ்வரன் பிடியிலிருந்து சிறிது தப்பித்துக் கொள்ளலாம்

 அதுபோல ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு தன்மையை கொண்டிருக்கும் குரு பகவானை பொறுத்தவரை தன்னைவிட வயதில் மூத்தவர்கள் ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் உள்ளவர்கள் அதாவது நமக்கு சொல்லிக் கொடுக்கும் குரு ஸ்தானத்தில் உள்ளார்கள் நமக்கு போதனைகளை வழங்குவது போன்றவர்களுக்கு நாம் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்

 அதேபோல் சூரியனைப் பொறுத்தவரை தந்தை ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு அதாவது அந்த வயதில் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்

 சந்திரனை பொறுத்தவரை அம்மா ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் 

சகோதர ஸ்தானத்தை குறிக்கக்கூடிய செவ்வாய் பகவான் பிடியில் இருந்தால் நீங்கள் உங்கள் சகோதரஸ்தானத்தில் உள்ளவர்களுக்கும் அதுபோல்  பழகுபவர்களுக்கும் அல்லது இயற்கையில் உழைக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் 

இதேபோல் ராகு என்பது வயதானவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளும்

 கேது   பொருத்தவரை நீங்கள் உங்களால் முடிந்த உதவியை அனைவருக்கும் செய்யலாம்

இதேபோல் மற்ற கிரகங்கள் குறிக்கக்கூடிய காரகத்தை பொறுத்து அது அமைந்துள்ள பாவத்தை பொறுத்து பரிகாரமாக உதவி செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் கிரகங்கள் பிடியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்

ஜாதகத்தில் 12, பாவ ரகசியம்.....

ஒரு ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவம் என்பது மிகவும் முக்கியமான ஒரு ஸ்தானம் ஆகும்

 இது மறைவு ஸ்தானம் அப்படியென்றால் ஒரு ஜாதகத்தில் ஜாதகம் எது மறைந்தார் அதை எப்படி மறுப்பார் என்பதை பற்றி சொல்லக்கூடிய பாவம்

 இந்த பன்னிரண்டாம் பாவம் இந்தப் பாவ அதிபதி எந்த பாவத்தில் உள்ளார் இந்த பாவ அதிபதி விழுந்த லட்சத்திர அதிபதி எந்த பாவத்தில் உள்ளார் என்பதை பொறுத்து அவர் எப்படிப்பட்ட பொருளை மறைப்பார் அதை எவ்வாறு மறைப்பார் என்பதை அறியலாம்

பன்னிரணடாம் அதிபதி
 ஒன்றாம் பாவத்தில் இருந்தால் தன்னைப் பற்றிய ரகசியத்தை அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார் தன்னிடம் எப்பொழுதும் ஒரு ரகசியத்தை உடன் வைத்திருப்பார் அல்லது ஒரு ரகசிய பொருளை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பார்

பன்னிரெண்டாம் பாவ அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால் அவரிடம் உள்ள பணத்தை மறைத்து வைப்பார் தனது குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் பொருட்களை கொடுத்து மறைத்து வைப்பார்..

  மூன்றாம் பாவத்தில் 12 ம் பாவம் அதிபதி இருப்பதாக எடுத்துக் கொண்டால் அவர் தனது இளைய சகோதரர்களிடம் ஒரு விஷயத்தை சொல்லி அதை யாரிடம் சொல்ல கூடாது என சொல்லி வைப்பார்

இதேபோல் 12ம் வீட்டு அதிபதி நான்காம் பாவத்தில் இருப்பதாக எடுத்துக் கொண்டார் அவர் தனது வண்டி வாகனத்தில் ஏதாவது ஒன்றை மறைத்து வைப்பார் அல்லது படிக்கும் வயதில் இருந்தால் தனது புத்தகத்தில் இதனை மறைத்து வைப்பார் 

இதேபோல் 12ஆம் பாத அதிபதி ஐந்தாம் பாத அதிபதியுடன் ஐந்தாம் பாவத்தில் இருந்தால் தனது குழந்தைகளிடம் ஏதாவது ஒன்றை கொடுத்து மறைத்து வைக்கும்படி கூறுவார் 

இதேபோல் 12 ஆம் பாவ அதிபதி ஆறாம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அல்லது ஆறாம் பாவத்தில் இருந்தாலோ அல்லது 12 ஆம் பாவம் அதிபதி விழுந்த நட்சத்திர அதிபதி ஆறாம் பாவத்தில் இருந்தாலும் அவர்கள் கடனை வாங்குவர் அந்த கடனை வாங்குபது யாருக்கும் தெரியாமல் வாங்குவது...

இதேபோல் பனிரெண்டாம் பாவ அதிபதி ஏழாம் பாவத்தில் இருந்தால் தனது மனைவியிடம் ரகசியத்தை கூறி மறைத்து வைக்கும்படி சொல்வார் 

இதேபோல் பனிரெண்டாம் பாவ அதிபதி எட்டாம் பாவத்தில் இருந்தால் அவர் தனது பெயரில் ஒரு இன்சூரன்ஸ் எடுத்து வைப்பார் தனது கஷ்டங்களை யாரிடமும் சொல்ல மாட்டார் 

இதேபோல் பனிரெண்டாம் பாவ அதிபதி ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் தந்து தந்தையிடம் ரகசியத்தை கூறி அதனை மறைத்து வைக்கும் படி சொல்வார் 

இதேபோல் பனிரெண்டாம் பாவ அதிபதி பத்தாம் பாவத்தில் இருந்தால் தொழில் அதாவது வேலை செய்யும் இடத்தில் குறிப்பிட்ட பொருளை அவர் மறைத்து வைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் 

அதேபோல் 12 ஆம் போவதற்கு 11 இருந்தால் தனது மூத்த சகோதரர்கள் கொடுத்து அதனை மறைத்து வைக்கும் படி கூறுவார் 

இதேபோல் 12ஆம் பாவம் அதிபதி பனிரெண்டாம் பாவத்தில் இருந்தால் அவர் தூங்கும் இடத்தில் ஒரு பொருளை மறைத்து வைப்பார் அதாவது தலையணை அடியில் அல்லது பெட்டில் அடியில் ஏதாவது ஒன்றை மறைத்து வைத்திருப்பார்.....

ஆலயம் ஏன்‌செல்ல வேண்டும்.....கடவுள்‌ ஆலயத்தில் மட்டும் உள்ளாரா அல்லது எல்லா இடத்திலும் உள்ளாரா......sivs nithi blog.

நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் தெய்வம் ஆலயத்தில் மட்டும்தான் இருக்கிறாரா அல்லது எல்லா இடத்திலும் இருக்கிறாரா அப்படி எல்லா இடத்திலும் ஆண்டவன் இருப்பது உண்மை என்றால் நான் என் ஆலயம் செய்கிறேன் அதற்கான காரணம் என்ன மனிதனுடைய வாழ்க்கையில் அதிக பங்கு வைப்பது அவனது சுற்றுச்சூழலை ஒரு மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்வது அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒருத்தன் அமையுங்கள் ஒருவன் அமைதியாக இருக்க வேண்டும் என்றாலும் அல்லது அவனே கோபமாக இருக்க வேண்டும் என்றாலும் அல்லது அவனே சந்தோசமாக இருக்க வேண்டும் என்றாலும் அதனை தீர்மானிப்பது ஆவணி சுற்றியுள்ள சுற்றுப்புறம் இந்தச் சுற்றுப்புறத்தை நாம் பஞ்ச பூதங்களாக குறிப்பிடுகின்றோம் அவ்வாறு குறிப்பிடுகின்ற இந்த பஞ்சபூதங்களே மனிதனின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது நமது வீட்டில் 4  அறைகள் உள்ளதாக எடுத்துக் கொண்டால் ஒன்று சமையல் ஆரை மற்றொன்று பெட்ரூம் மற்றொன்று ஹால் மற்றொன்று ஸ்டோர் ரூம் என வைத்துக் கொள்ளுங்கள் இதில் பெட்ரூம் என்பது நீங்கள் தூங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கக்கூடிய சுற்று சூழலாகும் ஏனென்றால் அதில் வைக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் உங்களை உறங்க வைப்பதற்கான ஒன்று இதேபோல் சமையல் அறை என்பது நீங்கள் சமையல் செய்வதற்கான ஆற்றை ஆகும் ஏனென்றால் அதனுடைய சுற்றுச்சூழல் அனைத்தும் நீங்கள் சமைக்கும் தன்மையை வலியுறுத்தும் அப்படி பார்க்கும் பொழுது உங்களால் கிச்சனில் தூங்க முடியாது அதேபோல் பெட்ரூமில் சமைக்க முடியாது காரணம் அதனுடைய சூட்ட சொல்ல அதேபோலதான் மனிதனின் சுற்றுச்சூழலை மனிதனை தீர்மானிக்கிறது மனிதன் சுற்றுச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அவனால்  மனதை ஒருநிலைப்படுத்த முடியாது அவர் ஒருநிலை படுத்த வேண்டும் என்றால் அவனுக்கு சுற்றுச்சூழல் சரியாக அமைய வேண்டும் அவ்வாறு அமையக்கூடிய ஒன்றுதான் பூஜை அறை இந்த பூஜை அறையில் மனிதன் செல்லும் பொழுது அவனது மனது அதில் உள்ள சுற்று சூழலுக்கு தகுந்தார் போல் மனது ஒருநிலைப்படுகிறது. இதே போல்தான் ஆலயமும் ஆலயம் நீங்கள் செல்லும் பொழுது உங்களுக்கு மனதானது ஒருநிலைப்படுகிறது அவர் ஒருநிலைப்படும் பொழுது நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அதாவது உங்களுடைய கஷ்டம் அல்லது லாபத்தை நீங்கள் நன்கு மனதில் நிறுத்தி அதனை வேண்டும்பொழுது உங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும் காரணம் நமக்கு மேலே உள்ள சக்தி அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டாகிறது இப்படி உங்களது நலனை ஒருநிலைப்படுத்தவே ஆலயம் என்பது அமைக்கப்பட்டுள்ளது நீங்கள் ஆலயம் சென்று ஒருநிலைப்படுத்தி உங்களது காரியத்தை நீங்கள் செய்யும் பொழுது அதில் வெற்றியை காணலாம் மனது ஒருநிலைப்படுத்தியவர்கள் ஆலயம் செல்வதில்லை அவர்கள் தன் உடலை ஆலயமாக மாற்றி தனது உள்ளத்தை கருவறையாக வைத்துக் கொள்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் தான் சித்தர்கள் அவர்கள் ஆலயம் செல்வதை விடுத்து தனது உடலை ஆலயமாக மாற்றி தனது உள்ளத்தை கருவறையாக உருவாக்கி அதில் தெய்வத்தை நிலை நிறுத்துகிறார்கள் யாரெல்லாம் இவ்வாறு செய்ய முடிகிறதோ அவர்கள் எல்லாம் ஆலயம் என்பதற்கு செல்லத் தேவையில்லை ஆனால் ஒருநிலைப்படுத்த முடியாத மனதை விட அனைவரும் ஆலயம் சென்று தங்களது மனதை ஒருநிலைப் படுத்தி கொள்ளுங்கள்.....

ஜாதகத்தில் பலன் காணும் முறை.......tamil astrology

ஜாதகத்தில் எது முக்கியம் ஜாதகத்தை பொருத்தவரை ராசி லக்னம் ஆகிய இரண்டும் மிக முக்கியமாக உள்ளது

 இதில் மிக மிக முக்கியமான ஒன்று உள்ளது அது எண்ணவென்றால் அதுதான் நட்சத்திரம் ஜோதிடத்தில் 12 பாவத்தை நாம் நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே குறித்துள்ளோம்

 நட்சத்திரம் எந்த அளவு பரவி உள்ளதோ அதை பொறுத்து நான் பாவத்தை கணக்கிடுகின்றோம் ஆதலால் இந்த நட்சத்திரமே ஒரு ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்று நட்சத்திரத்தை வைத்து பலன் சொல்லும் பொழுது நமக்கு சரியான பலன்கள் கிடைக்கின்றது

ஒரு பாவத்தை பொருத்தவரை ஒன்பது பாதங்கள் உள்ளன இந்த ஒன்பது பாதங்களில் ஒரு கிரகம் எந்த பாவத்தில் உள்ளது அதைப் பொறுத்து அதனுடைய நவ அம்ச அதிபதி அமைவார். இதை மையமாக வைத்து பலன் சொல்லும் பொழுது சரியான பலன்கள் நமக்கு கிடைக்கும்..

ஒரு பாவ அதிபதி எந்த நட்சத்திரத்தில் உள்ளார் என்பதை பொறுத்து அவருடைய பலன்கள் மாறும் பலன் சொல்லும் பொழுது நமக்கு முக்கியமான ஒன்று பாவத்தை ஆளக்கூடிய கிரகம் அதற்கு முன் பாவத்தின் இருக்கக்கூடிய கிரகம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகமே அந்த பாவத்தின் பலன்களை முழுமையாக தரக்கூடிய கிரகமாகும்

 அவ்வாறு கிரகங்கள் ஏதும் பாவத்தில் இல்லை எனறால் அந்தப் பாவத்தின் அதிபதியே மிகவும் பலம் வாய்ந்தவர் ஆவார் இதில் விதிவிலக்கு ஒன்று உள்ளது அது என்னவென்றால் ராகு கேது ஆகிய இரண்டு கிரகங்கள் இந்த இரண்டு கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் விழுகின்றதோ அந்த நட்சத்திர அதிபதியே அவர் ஆட்சி செய்வார்.

 அதேபோல் அவர் எந்த பாவத்தில் இருக்கின்றாரோ அதற்கு தகுந்தார் போல் பலன்களை வழங்குவார் முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு ஜாதகத்தை ஆராயும் பொழுது நாம் நட்சத்திரத்தை கருத்தில் கொள்ள வேண்டும்

 நட்சத்திரத்தின் அமைப்பு ஜாதகத்தில் அடிப்படை காரணம் நட்சத்திரத்தைக் கொண்டு ஜாதகத்தில் ராசி கட்டம் உருவாக்கப்படுகிறது அதைப்போல் நவ அம்ச கட்டமும் உருவாக்கப்படுகிறது 

ஒரு நேரத்தில் ஜாதகத்தில் முதல் பாவத்தில் விழுகின்ற பாவமானது இரண்டாம் பாகம் வரை பரவி இருக்கும் அதே போல் இரண்டாம் பாகத்தில் ஆரம்பிக்கும் பாவம் இரண்டாம் பாவத்திலேயே முடிவடைந்து விடுகிறது சில நேரங்களில் இவ்வொன்றாம் பாவம் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டும் ஒரே பாவத்தில் விழுந்து விடுகிறது அப்படி என்றால் இதை எவ்வாறு வேறுபடுத்தி காட்ட முடியும் என்று யோசித்துப் பார்த்தால் அந்த நேரத்தில் தான் நட்சத்திரம் முக்கியமான இடத்தை பெறுகின்றது

 இந்த நட்சத்திரங்கள் 360 பாகை வரை பரவி உள்ளது அவ்வாறு பதவிற்கும் நட்சத்திரத்தை பாதம் வாரியாக பிரித்து 108 பாதங்களாக மாற்றி உள்ளனர் பாவம் எந்த இடத்தில் விழுகிறதோ அந்த பாதத்தை பொறுத்து நான் நவ அம்சாதிபதியே அறியலாம் அவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு சரியான பலனை அது தருகிறது ஆதலால் ஒரு ஜாதகத்தை பொறுத்தவரை அதன் பலனை நாம் அறிய வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நட்சத்திரத்தை பயன்படுத்த வேண்டும்........

சகுனியின் சூழ்ச்சி பாண்டவர்களை கொல்வதற்காக அல்லது கௌரவர்களை கொல்வதற்காக...

. மகாபாரத இதிகாசங்களில் மிக முக்கியமாக கருதப்படுபவர்கள் கிருஷ்ணர், சகுனி ஆகிய இருவரும் இவர்கள் இருவரும் தனது சூழ்ச்சியினால் வெற்றிகளை கண்டவர் ஆம் உண்மையில் சகுனியும் தனது சூழ்ச்சியால் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார்......

அவர் உண்மையில் அழிக்க நினைத்தது கௌரவர்களை தானே தவிர பாண்டவர்களை அல்ல.......

ஏன் அவ்வாறு நினைத்தார் அதற்கான காரணம் என்ன?

திருதராஷ்டிரனின் மனைவி  காந்தாரியின் சகோதரரே இந்த சகுனியாவார் பீஷ்மர் காந்தாரியை திருதராஷ்டிரனனுக்கு மனம் முடிக்க விரும்பினார் ஆனால் இதை சகுனியின் பெற்றோர்கள் ஏற்கவில்லை இருந்தாலும் பீஷ்மரை எதிர்க்க முடியாது என்பதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர் 

ஆனால் காந்தாரியின் ஜாதகத்தில் முதற்கனவர் இறக்க நேரிடும் என்ற அமைப்பு இருந்ததால் அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை முதலாவதாக திருமணம் செய்ய வைத்து அதை பலி கொடுத்து விட்டனர்

 இதை சற்றும் அறியாத பீஷ்மர் திருமணத்திற்கு பிறகு தெரிந்து கொண்டார் இதனால் கடங் கோபம் கொண்ட பீஷ்மர் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பரதநாட்டின் மானம் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்து அவர்களை சிறையில் அடைக்கிறார்

   அவர்கள் உண்மையை யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக அனைவரையும் சிறையில் அடைத்து அவர்கள் உண்பதற்காக ஒரு வேலை உணவை மட்டும் வழங்குகிறார்

 இதை பார்த்த சகுனியின் தந்தை சகுனியிடம் சில வார்த்தைகளை உரைக்கிறார் அதில் முக்கியமானது நீ உன்னுடைய பலத்தால் பீஷ்மரை வெல்வது என்பது இயலாத காரியம் அவர்கள் எப்படி நம் குலத்தை அழித்தார்களோ அதுபோல் நீயும் அவர்களது குலத்தை அழிக்க வேண்டும்

 அதற்கு நீ உனது புத்தியை பயன்படுத்த வேண்டும் உனது புத்தி மூலமாகவே நீ அவர்களை அழிக்க நேரிடும் ஆதலால் நாங்கள் அனைவரும் எங்களது உணவை உனக்குத் தருகிறோம் நீ உணவை உண்டு உயிர் வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்

 இதை காரணமாக கொண்டு தனது தந்தையின் விரல்கள் மூலமாக தாயக்கட்டைகளை உருவாக்கிக் கொள்கிறார் அதன் பிறகு நீ எப்போதும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற‌என்னம் உன் மனதில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கால் உணம் ஆக்கப்படுகிறது 

காலை பார்க்கும் போதெல்லாம் நீ அவர்களை அழிக்கும் எண்ணமே உனக்கு மேலோக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு செய்கிறேன் என்று அவர் தந்தை கூறுகிறார்

சகுனியின் சூழ்ச்சி எவ்வாறு அமைந்தது என்றார் பாண்டவர்களை கௌரவர்களுக்கு பகையாக மாற்றி பாண்டவர்களை அழிக்க வேண்டும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கௌரவர்களுக்கு ஊட்டி அவர் பாண்டவர்கள் மூலம் கவுரவர்களை அழித்தார்

இவ்வாறு கௌரவர்கள் மூலமாக பாண்டவர்கள் குலத்தையும
 பாண்டவர்கள் மூலம் அந்த கௌரவ குலம் முழுவதையும் அளித்தார்.

பீஷ்மர் எந்த குலத்தை காக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டு இக்காரியத்தை செய்தாரோ
அவர் கண் முன்னாலே அக்குலம் முழுவதும் அழிந்து போனது

 நாம் செய்யும் பாவத்தின் தண்டனை எதற்காக அந்த பாவத்தை செய்கிறோமோ அதற்காக அதுவே அழிந்து போகும்......