காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா...astro nithiyandran


sidhdhar

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா 
மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா
வெளுத்த நரம்பும் சதையும் பூட்டிவைத்த கூடடா 

இது ஒரு சித்தர் வாக்கு காற்றடைத்த பையடா காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா மனித உடலானது ஒரு மனிதன் தான் உடுத்தும் ஆடையை போன்றது அதன் ஆன்மாவானது சிவனை தஞ்சம் அடையக்கூடியது. ஆதலால் ஒரு மனிதன் தனது உடலை அலங்கார படுத்திக்கொள்ள என்ன என்ன  செய்கின்றார். ஆனால் உண்மையில் இந்த உடல் ஒரு நாள் அழியும் மனிதனின் உயிர் ஆன்மாவானது இவ்வுலகை விட்டு
செல்லும்பொழுது இந்த உடலானது அழிக்கப்படுகிறது ஒரு மனிதனுக்கு உடலுக்கு என்று ஒரு ஆயுளும் உயிருக்கு என்று ஒரு ஆயுளும் உள்ளது.உயிர் மனிதனை விட்டு எப்பொழுது பிரிகிறது அப்பொழுது உடல் இவ்வுலகில் அளிக்கப்படுகிறது. கர்ம வினையின் பல நாள் இவ்வுலகில் பூதவுடல் அளிக்கப்பட்ட பின்பும் உயிரானது இவ்வுலகில் ஆத்மாவாக நடமாடுகிறது. இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதை உணர்த்துவதற்காகவே இந்தப்பாடல் காயமே இது பொய்யடா அப்படி என்றால் காயம் என்பது உடலைக் குறிக்கிறது உடல் என்பது ஒரு பொய்யான விஷயம் இது வெறும் காற்றடைத்த பையடா என்றால் மூச்சுக்காற்று இருக்கும் வரைக்கும் தான் இந்த உடலானது செயல்படும் மூச்சுக்காற்று நின்று விட்டாள் உடலானது செயல்படாது அதை பொருட்டு உடல் ஒரு பொய் அது வெறும் காற்றடைத்த பை என்று சித்தர் வாக்கு சொல்கிறார். இந்த உடலை நாம் பேணிக் காப்பதற்காக பல பேரை துன்பப்படுகிறோம் அதை தவறு என்பதை சுட்டிக்காட்ட தான் இந்தப் பாடலை சித்தர் பாடுகிறார் உடல் மட்டுமல்ல இவ்வுலகில் எதுமே நிரந்தரம் அல்ல என்றுமே மாறக்கூடிய ஒன்றுதான். மனிதன் அறியக்கூடிய அனைத்தும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு பல தவறுகளை செய்து கொண்டு வருகிறான் ஆனால் இவ்வுலகில் நிரந்தரம் என்று ஒன்று இல்லை அது நிரந்தரம் என்றால் அது ஈசனின் பாதம் மட்டும் தான் அதை உணர்த்துவதற்காகவே இப்பாடலை பாடியுள்ளார் இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று உணருங்கள் ஈசன் ஒருவனே நிரந்தரம் என்று உணருங்கள்

No comments:

Post a Comment

thanks for reading