சந்திரன்
நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகங்களில் ஒருவரான சந்திரனை பற்றியும் அவரின் காரகத்துவங்கள் பற்றியும் அவர் ஓவ்வொரு பாவகத்திலும் அமரும் பொழுது என்ன விதமான பலன்களை கொடுப்பார் என்பதை பற்றி பார்ப்போம் .
ஒரு மனிதனுக்கு ஜாதகம் கணிக்கும் பொழுது அவன் எந்த ராசியில் பிறந்திருக்கின்றான் என்பதை தெரிந்து கொள்ள அன்றைய தினம் சந்திரன் எந்த ராசியில் எங்கு நிற்கின்றாரோ அதுவே அவனின் அவனின் ஜென்ம ராசியாகும் ,
அது போல சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றாரோ அதுவே அவனின் ஜென்ம நச்சத்திரம் ஆகும் . பொதுவாக வேத ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு நல்ல நாட்கள் ,விழா ,பண்டிகை ,போன்றவைகள் குறிக்கப்படுகின்றது.
சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் இருப்பார் .பொதுவாக சந்திரன் சூரியன் உடன் நேர் கோட்டில் இருக்கும் பொழுது அம்மாவாசை ஆகும் .
,அவர் சூரியனிடம் இருந்து சுமார் பனிரெண்டு டிகிரி நகர்ந்து செல்வார் ,அப்படி நகரும் பொழுது சூரியனை விடுத்து விலகும் முதல் நாள் அன்று பிரதமை திதியாகும் ,
அதன் பின்னர் மறு நாள் பனிரெண்டு டிகிரி விலகும் பொழுது துதியை திதி ஆகும் .இப்படி ஒவ்வொரு நாளும் விலகி பதினைந்தாவது நாள் அன்று சூரியன் நின்ற ராசியில் இருந்து 180 டிகிரியை அடையும் பொழுது சூரியன் நின்ற ராசியில் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார் அப்படி ஏழாவது ராசியில் சந்திரன் நிற்கும் பொழுது ஏற்படும் திதி பெளர்ணமியாகும் ஆகும் .
ஒரு மணிதனின் ஜாதகத்தில் அவனின் பிறப்பு ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாவது ராசியை தாண்டி சந்திரன் நிற்கும் பொழுது அந்த ஜாதகன் தேய் பிறையில் பிறந்தவன் என்றும் சூரியன் நின்ற ராசியில் இருந்து ஏழு ராசிக்குள் சந்திரன் நிற்கும் பொழுது அந்த மனிதன் வளர் பிறையில் பிறந்தவன் என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஒரு மணிதனின் ஜென்மராசியை அதாவது ஜாதகன் பிறந்த ராசியை கோச்சரா சந்திரன் கடப்பதையே ராசிக்குள் சந்திரன் என்று சொல்கிறோம் .
அது போல ஒரு ஜாதகன் பிறந்த ராசியில் இருந்து எட்டாவது ராசியை சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலமே சந்திராஷ்டமம் என்று அலைகின்றோம் .
பொதுவாக சந்திரன் சுயமாக தன்னிடம் இருந்து எந்த விதமான ஒளியையும் பூமிக்கு தருவதில்லை ,ஆனால் சூரியன் மற்றும் இதர நட்சத்திரங்களின் ஒளியை சந்திரன் தனக்குள் உள் வாங்கி இரவில் ஒளியை பிரதி பளிக்கின்றது .
வளர் பிறை சந்திரன் நல்லவர் ,தேய்பிறை சந்திரன் கெட்டவர் , சந்திரனின் காரத்துவங்கள் என்று பார்க்கும் பொழுது , சலன புத்தி , கற்பனை ,ஏரி ,குளம் ,குட்டை ,புகழ் ,மன சஞ்சலம் ,சாந்தம் ,பொறுமை ,சகிப்புத்தன்மை .நிதானம் கலை உணர்வு,திருட்டுத்தனம் , இவர் உருவத்தில் குட்டையானவர் ,இவரின் நிறம் வெண்மை ,
இவரின் தானியம் நெல் ,நவரெத்தினம் முத்து ,இவரின் சம்பத்து முருங்கை இவரின் அதி தேவதை பார்வதி .சுவை இனிப்பு ,ஸ்தலம் திங்களூர் ,இவரின் வாகனம் வெள்ளை குதிரை .வஸ்திரம் வெண்மை நிறம் .
மனித உறவுகளில் இவர் தாய் ,மாமியார் ,ஆவார் ,மனித உடல் உறுப்புக்களில் இடது கண் ஆகும் .
சந்திரன் மனிதருக்கு மனோ பலத்தை, மனதிடத்தை கொடுப்பவர் ஆவார். இவரை மாத்ருகாரகன் என்று அழைப்பர் உணவு , பயணம் ,வெளிநாடு இவையெல்லாம் சந்திரனின் கார்கங்கள் ஆகும் .இவரின் திசை தென் கிழக்கு ஆகும் .
இவரின் வேறு அம்புலி .சோமன் ,மதி ,தன சுடர் ,திங்கள் ஆகியவைகள் ஆகும் .இவர் கால புருஷ தத்துவப்படி நான்காம் இடமான கடகத்தில் ஆட்சியும் ,ரிஷபத்தில் உச்சமும் ,விருச்சிகத்தில் நீசமும் பெறுகிறார் ,இவரன் தசா வருடம் பத்து ஆண்டுகள் ஆகும் .வாரத்தில் இவரின் கிழமை திங்கள் ஆகும் .
இப்படிப்பட்ட குணமுடைய சந்திரன்ஜாதகத்தில் உச்சம் அடையும் பொழுது தாய் ,வீடு ,வாகனம் ,மனோதிடம் அதிகமாகும் .
அதே நேரம் நீசம் அடையும் பொழுது மனோ திடம் குறையும் நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.
வளர்பிறை சந்திரனின் பார்வை நல்ல பலனை கொடுக்கும் .
இப்படிப்பட்ட குணங்களை கொண்ட சந்திரன் லக்கனத்தில் இருந்து ஒவ்வொரு பாவகத்தில் இருந்தால் என்ன விதமான பலன்களை கொடுப்பார் என்று பார்ப்போம் .
@
லக்கனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகர் கற்பனை வளம் நிரம்பியவராகவும் ,அழகான தோற்றம் உடையவராகவும் ,மன சஞ்சலம் உடடையவராவும் இருப்பார் .அடிக்கடி சளி பிடிக்கும் ,குளிர்ச்சியை விரும்புபராகவும் .தாய் அன்பு நிரம்பியவராகவும் ,புகழுடையவனாகவும் ,பிரயாணத்தில் விருப்பம் உடையவனாகவும் இருப்பார் . சந்திரன் பலம் குறைந்தால் பலன் மாறுபடும் .
@
இலக்கணத்திற்கு இரண்டில் சந்திரன் இருந்தால் பிரயாணங்களால் வருமானத்தை ஈட்டுபவனாகவும் ,நீர் ,உணவு ,சந்திரன் தொடர்புடைய துறைகளில் அவருக்கு வருவாய் இருக்கும் .தாயன்பு ஒழுக அனுசரணையாக பேசுவார் .ஆதரவாக பேசுவார் ,பேச்சில் இரக்கம் இருக்கும் ,தாய் வழி வருவாய் இருக்கும் ,உணவு பிரியனாக இருப்பார் .
@
லக்கனத்திற்கு மூன்றில் சந்திரன் இருந்தால் மன சஞ்சலம் உடையவனாக ஜாதகன் இருப்பார் அடிக்கடி சிறு பயணம் செய்பவராக இருப்பார் .சொந்த இடத்தில் வசிக்க முடியாமல் இருப்பார் .ஜாதகனின் இளைய சகோதரம் நல்ல புகழ் உடையவனாக இருப்பான் .
@
இலக்கணத்திற்கு நான்கில் சந்திரன் இருந்தால் ஜாதனுக்கு வீடு வண்டி வாகன் அமைப்பு உண்டு ,நல்ல உயர் கல்வி உண்டு காரணம் சந்திரன் ஆகப்பட்டவர் லக்னத்தில் இருந்து நான்காம் இடத்தில் திக் பலம் பெறுகிறார் .தாய் வழி சொத்து ஜாதகனுக்கு கிடைக்கும் .ஜாதகனுக்கு தாய் வழி சொத்து கிடைக்கும் ,நல்ல தாய் ஜாகனுக்கு அமைவார் .ஜாதகனின் தாயார் நல்ல உயர்ந்த நிலையில் இருப்பார் .
@
லக்னத்திற்கு ஐந்தில் சந்திரன் நின்றால் ஜாதகன் அதிஷ்டம் நிரம்பியவனாகவும் , நல்ல கற்பனை வளம் நிரம்பியவனாகவும் ,குழந்தை பாக்கியம் உண்டு ஆனால் பெண் குழந்தை அமையும் வாய்ப்பு உண்டு .கலை ஈடுபாடு நிறைந்திருக்கும் ,ஜாதகனின் குழந்தை மீது ஜாதகரின் தாயார் பாசம் வைத்திருப்பார் .
@
இலக்கணத்திற்கு ஆறாம் பாவகத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் நீர் சம்மந்தமான நோய் தாக்கம் இருக்கும். ஜாதகனின் தாய் ஜாதகனுக்கு எதிராக செயல் படுவார் ,தாயன்பு இருக்காது ,பெண்களால் வம்பு ,விரோதம் ஏற்படும் ,வீடு ,வாகனம் ,நிலம் ,போன்றவற்றில் பிரச்சனை இருக்கும் ,காரணம் கால புருஷ தத்துவப்படி நான்காம் பாவகத்திற்கு சந்திரனே அதிபதி ,அவர் ஆறாம் வீடு என்னும் மறைவு இடம் செல்வது நன்மை இல்லை .மனோ பலம் குறையும் .
@
இலக்கணத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரன் அமர்ந்தால் அழகான மனைவி அல்லது கணவன் அமைவார் ,அதே நேரம் அந்த மனைவி மனசஞ்சலம் உடையவராக இருப்பார் .அடிக்கடி ஜாதகன் உல்லாசப்பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு .ஜாதகருக்கு வரும் கணவன் அல்லது மனைவி தாயன்பு உடையவராக இருப்பார் .
@
லக்கனத்திற்கு எட்டில் சந்திரன் நின்றால் ஜாதகனின் தாயால் ஜாதகனுக்கு அவமானம் உண்டு , மனம் குழப்பம் நிறைந்து இருக்கும் .ஜாதகருக்கு நீரில் கண்டம் இருக்கும் .ஜாதகர் எதிர் மறையான சிந்தனை உள்ளவர் .ஜாதகனுக்கு மரணம் பற்றிய சிந்தனை இருக்கும் .அடிக்கடி நோய் வாய் படும் நிலை உண்டு .
@
லக்கனத்திற்கு ஒன்பதில் சந்திரன் நின்றால் ஜாதகன் நீண்ட தூர பயணம் செய்பவராக இருப்பார் .தந்தை புகழோடு இருப்பார் .ஒன்பதாம் பாவகம் தந்தையை குறிப்பதால் ,ஜாதகனின் தாய் ஜாதகனின் தந்தை மீது பியம் உடய்வராக் இருப்பார் .ஜாதகன் நீண்ட தூர தீர்க்கயாத்திரை செல்லும் பாக்கியம் உண்டு .வெயில் நாடு அமைப்பு இருக்கும் காரணம் ஒன்பதாம் பாவகம் நீண்ட தூர பயணத்தை குறிக்கும் இடம் என்பதால் .
@
இலக்கனத்திற்கு பத்தில் சந்திரன் நின்றால் உணவு சம்மந்தமான ,நீர் சம்மந்தமான துறை மற்றும் பயணம் மூலம் வருமானம் ஈட்டுபவனாக இருப்பான் தொழில் சார்ந்த பயணம் உண்டு .தலைமை பண்பு இருக்கும் .
@
இலக்கனத்திற்கு பதினொன்றில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மூத்த சகோரம் மூலம் ஆதாயம் இருக்கும் .பெண் நண்பர்கள் அதிகம் இருக்கும் .பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் .பெண்களால் லாபம் உண்டு .ஜாதகனுக்கு தாய் வழி ஆதாயம் உண்டு .ஜாதகனின் மூத்த சகோதரம் அமிதியானவராக இருப்பார் .
@
பனிரெண்டில் சந்திரன் நின்றால் தாயால் விரயம் உண்டு ,கண் பார்வை கோளாறு ஏற்படும் .மனதில் நிம்மதி இருக்காது .பெண்கள் மூலம் விரயம் இருக்கும் .
இப்படிப்பட்ட குணமுடைய சந்திரன்ஜாதகத்தில் உச்சம் அடையும் பொழுது தாய் ,வீடு ,வாகனம் ,மனோதிடம் அதிகமாகும் .
அதே நேரம் நீசம் அடையும் பொழுது மனோ திடம் குறையும் நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.
வளர்பிறை சந்திரனின் பார்வை நல்ல பலனை கொடுக்கும் .ரிஷபத்தில் முதல் மூன்று பாகை பரம உச்சம்,மீதமுள்ள 27 பாகை மூல த்ரிகோண பலமும் பெறுகிறது. விருச்சிக ராசியில் முதல் 3 பாகை பரம நீசம்.ஆகும் .