திருமணத்தடை

ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது அவருடைய வாழ்க்கை துணையை குறிக்கக்கூடிய இடமாகும் 
ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும் மாறாக ஏழாம் வீட்டு அதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு காதல் திருமணம் ஏற்படும் ஏழாம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டு அதிபதி உடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு சொந்தத்தில் திருமணம் நடைபெறும் ஏழாம் வீட்டில் ஐந்தாம் வீட்டு அதிபதி சேர்ந்திருந்தாலோ அல்லது ஐந்தாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் சேர்ந்திருந்தாலோ அவர்களுக்கு காதல் திருமணம் ஏற்படக்கூடிய அமைப்பு ஏற்படுத்துவார் திருமணம் எப்பொழுது நடைபெறும் என்பதை பார்த்தால் திருமணம் நடைபெறும் காலம் என்பது குருபகவான் கோச்சாரத்தில் தனது பார்வையை ஏழாம் வீட்டிற்கு செலுத்தும் போது அவர்களுக்கு அந்த அமைப்பை ஏற்படுத்துவார் ஒருவரின் தசா புத்தி ஏழாம் பாவத்திற்கு சாதகமான அமைப்பை ஏற்படுத்தும் பொழுது அந்த நிலையில் அவர்களுக்கு கோச்சாரத்தின் குருவின் பார்வை கிடைத்துவிட்டால் திருமணம் என்பது எளிதாக நடக்கும் மாறாக சனியின் பார்வை அவர்கள் மீது  செலுத்துமேயானால் திருமண தடை ஏற்படும் திருமணம் தாமதம் ஏற்படும் ஏழாம் வீட்டு அதிபதிக்கு ஐந்தாம் வீடாக 11 வது அதிபதியானது நல்ல நிலைமையில் இருந்தால் ஏழாம் இடத்திற்கு பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் அவர்களுக்கு இரண்டாம் திருமணம் அமையும்  முதல் திருமணத்தை விட இரண்டாம் திருமணம் அவர்களுக்கு நல்ல அமைப்பில் இருக்கும் ஏழாம் இடத்தில் அதிபதியை நாம் ஆராய வேண்டும் அவர்களுக்கு ஒரு தரமா இரு தரமா என்பதை நாம் பார்க்க முடியும் திருமணத்தடை ஏற்பட்டுள்ள ஜாதகத்தில் ஆராய்ந்து அவர்களுக்கு எந்த கிரகத்தினால் அந்த அமைப்பு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கு உண்டான பரிகாரத்தை மேற்கொண்டால் திருமண தடை நீங்கும்........