ஜோதிடத்தில் சந்திரன்


சந்திரன் 

நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகங்களில் ஒருவரான சந்திரனை பற்றியும் அவரின் காரகத்துவங்கள் பற்றியும் அவர் ஓவ்வொரு பாவகத்திலும் அமரும் பொழுது என்ன விதமான பலன்களை கொடுப்பார் என்பதை பற்றி பார்ப்போம் .

ஒரு மனிதனுக்கு ஜாதகம் கணிக்கும் பொழுது அவன் எந்த ராசியில் பிறந்திருக்கின்றான் என்பதை தெரிந்து கொள்ள அன்றைய தினம் சந்திரன் எந்த ராசியில் எங்கு நிற்கின்றாரோ அதுவே அவனின் அவனின் ஜென்ம ராசியாகும் ,

அது போல சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றாரோ அதுவே  அவனின் ஜென்ம நச்சத்திரம் ஆகும் . பொதுவாக வேத ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு நல்ல நாட்கள் ,விழா ,பண்டிகை ,போன்றவைகள் குறிக்கப்படுகின்றது. 

சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் இருப்பார் .பொதுவாக சந்திரன் சூரியன் உடன் நேர் கோட்டில் இருக்கும் பொழுது அம்மாவாசை ஆகும் .

,அவர் சூரியனிடம் இருந்து சுமார் பனிரெண்டு டிகிரி நகர்ந்து செல்வார் ,அப்படி நகரும் பொழுது சூரியனை விடுத்து விலகும் முதல் நாள் அன்று பிரதமை திதியாகும் ,

அதன் பின்னர் மறு நாள் பனிரெண்டு டிகிரி விலகும் பொழுது துதியை திதி ஆகும் .இப்படி ஒவ்வொரு  நாளும் விலகி பதினைந்தாவது நாள் அன்று சூரியன் நின்ற ராசியில் இருந்து 180 டிகிரியை அடையும் பொழுது  சூரியன் நின்ற ராசியில் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார் அப்படி ஏழாவது ராசியில் சந்திரன் நிற்கும் பொழுது ஏற்படும் திதி பெளர்ணமியாகும் ஆகும் . 

ஒரு மணிதனின் ஜாதகத்தில் அவனின் பிறப்பு ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து ஏழாவது ராசியை தாண்டி சந்திரன்  நிற்கும் பொழுது அந்த ஜாதகன் தேய் பிறையில் பிறந்தவன் என்றும் சூரியன் நின்ற ராசியில் இருந்து ஏழு ராசிக்குள் சந்திரன் நிற்கும் பொழுது அந்த மனிதன் வளர் பிறையில் பிறந்தவன் என்றும் அறிந்து கொள்ளலாம். 

ஒரு மணிதனின் ஜென்மராசியை  அதாவது ஜாதகன் பிறந்த ராசியை கோச்சரா சந்திரன் கடப்பதையே  ராசிக்குள் சந்திரன் என்று சொல்கிறோம் .
அது போல ஒரு ஜாதகன் பிறந்த ராசியில் இருந்து எட்டாவது ராசியை சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலமே சந்திராஷ்டமம் என்று அலைகின்றோம் .
பொதுவாக சந்திரன் சுயமாக தன்னிடம் இருந்து எந்த விதமான ஒளியையும் பூமிக்கு தருவதில்லை ,ஆனால் சூரியன் மற்றும் இதர நட்சத்திரங்களின் ஒளியை சந்திரன் தனக்குள்  உள்  வாங்கி இரவில் ஒளியை         பிரதி பளிக்கின்றது  . 

வளர் பிறை சந்திரன் நல்லவர் ,தேய்பிறை சந்திரன் கெட்டவர் , சந்திரனின் காரத்துவங்கள் என்று பார்க்கும் பொழுது , சலன புத்தி , கற்பனை ,ஏரி ,குளம் ,குட்டை ,புகழ் ,மன சஞ்சலம் ,சாந்தம் ,பொறுமை ,சகிப்புத்தன்மை .நிதானம் கலை உணர்வு,திருட்டுத்தனம்  , இவர் உருவத்தில் குட்டையானவர் ,இவரின் நிறம் வெண்மை ,

இவரின் தானியம் நெல் ,நவரெத்தினம் முத்து ,இவரின் சம்பத்து முருங்கை இவரின் அதி தேவதை பார்வதி .சுவை இனிப்பு ,ஸ்தலம் திங்களூர் ,இவரின் வாகனம் வெள்ளை குதிரை .வஸ்திரம் வெண்மை நிறம் .

மனித உறவுகளில் இவர் தாய் ,மாமியார் ,ஆவார் ,மனித உடல் உறுப்புக்களில் இடது கண்  ஆகும் .

சந்திரன் மனிதருக்கு மனோ பலத்தை, மனதிடத்தை  கொடுப்பவர் ஆவார். இவரை மாத்ருகாரகன் என்று அழைப்பர் உணவு , பயணம் ,வெளிநாடு இவையெல்லாம் சந்திரனின் கார்கங்கள் ஆகும் .இவரின் திசை தென் கிழக்கு ஆகும் . 

இவரின் வேறு  அம்புலி .சோமன் ,மதி ,தன சுடர் ,திங்கள் ஆகியவைகள் ஆகும் .இவர் கால புருஷ தத்துவப்படி நான்காம் இடமான கடகத்தில் ஆட்சியும் ,ரிஷபத்தில் உச்சமும் ,விருச்சிகத்தில் நீசமும் பெறுகிறார் ,இவரன் தசா வருடம் பத்து ஆண்டுகள் ஆகும் .வாரத்தில் இவரின் கிழமை திங்கள் ஆகும் .

இப்படிப்பட்ட குணமுடைய சந்திரன்ஜாதகத்தில்   உச்சம் அடையும் பொழுது தாய் ,வீடு ,வாகனம் ,மனோதிடம் அதிகமாகும் .

அதே நேரம் நீசம் அடையும் பொழுது மனோ திடம் குறையும் நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.

வளர்பிறை சந்திரனின் பார்வை நல்ல பலனை கொடுக்கும் .

இப்படிப்பட்ட குணங்களை கொண்ட சந்திரன் லக்கனத்தில் இருந்து ஒவ்வொரு பாவகத்தில் இருந்தால் என்ன விதமான பலன்களை கொடுப்பார் என்று பார்ப்போம் .

@
லக்கனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகர் கற்பனை வளம் நிரம்பியவராகவும் ,அழகான தோற்றம் உடையவராகவும் ,மன  சஞ்சலம் உடடையவராவும் இருப்பார் .அடிக்கடி சளி பிடிக்கும் ,குளிர்ச்சியை விரும்புபராகவும் .தாய் அன்பு நிரம்பியவராகவும் ,புகழுடையவனாகவும் ,பிரயாணத்தில் விருப்பம் உடையவனாகவும் இருப்பார் . சந்திரன் பலம் குறைந்தால் பலன் மாறுபடும் .

இலக்கணத்திற்கு இரண்டில் சந்திரன் இருந்தால்  பிரயாணங்களால் வருமானத்தை ஈட்டுபவனாகவும் ,நீர் ,உணவு ,சந்திரன் தொடர்புடைய துறைகளில் அவருக்கு வருவாய் இருக்கும் .தாயன்பு ஒழுக அனுசரணையாக பேசுவார் .ஆதரவாக பேசுவார் ,பேச்சில் இரக்கம் இருக்கும் ,தாய் வழி வருவாய் இருக்கும் ,உணவு பிரியனாக  இருப்பார் .

@

லக்கனத்திற்கு மூன்றில் சந்திரன் இருந்தால் மன சஞ்சலம் உடையவனாக ஜாதகன் இருப்பார் அடிக்கடி சிறு பயணம் செய்பவராக இருப்பார் .சொந்த இடத்தில் வசிக்க முடியாமல் இருப்பார் .ஜாதகனின் இளைய சகோதரம் நல்ல புகழ் உடையவனாக இருப்பான் .

@
இலக்கணத்திற்கு நான்கில் சந்திரன் இருந்தால் ஜாதனுக்கு வீடு வண்டி வாகன் அமைப்பு  உண்டு ,நல்ல உயர் கல்வி உண்டு காரணம் சந்திரன் ஆகப்பட்டவர் லக்னத்தில் இருந்து நான்காம் இடத்தில் திக் பலம் பெறுகிறார் .தாய் வழி சொத்து ஜாதகனுக்கு கிடைக்கும் .ஜாதகனுக்கு தாய் வழி சொத்து கிடைக்கும் ,நல்ல தாய் ஜாகனுக்கு அமைவார் .ஜாதகனின் தாயார் நல்ல உயர்ந்த நிலையில் இருப்பார் .

@

லக்னத்திற்கு ஐந்தில் சந்திரன் நின்றால் ஜாதகன் அதிஷ்டம் நிரம்பியவனாகவும் , நல்ல கற்பனை வளம் நிரம்பியவனாகவும் ,குழந்தை பாக்கியம் உண்டு ஆனால் பெண் குழந்தை அமையும் வாய்ப்பு உண்டு .கலை ஈடுபாடு நிறைந்திருக்கும் ,ஜாதகனின் குழந்தை மீது ஜாதகரின் தாயார் பாசம் வைத்திருப்பார் .

@
இலக்கணத்திற்கு ஆறாம் பாவகத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் நீர் சம்மந்தமான நோய் தாக்கம் இருக்கும். ஜாதகனின் தாய் ஜாதகனுக்கு எதிராக செயல் படுவார் ,தாயன்பு இருக்காது ,பெண்களால் வம்பு ,விரோதம் ஏற்படும் ,வீடு ,வாகனம் ,நிலம் ,போன்றவற்றில் பிரச்சனை இருக்கும் ,காரணம் கால புருஷ தத்துவப்படி நான்காம் பாவகத்திற்கு சந்திரனே அதிபதி ,அவர் ஆறாம் வீடு என்னும் மறைவு இடம் செல்வது நன்மை இல்லை .மனோ பலம் குறையும் .

@
இலக்கணத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரன் அமர்ந்தால் அழகான மனைவி அல்லது கணவன் அமைவார் ,அதே நேரம் அந்த மனைவி மனசஞ்சலம் உடையவராக இருப்பார் .அடிக்கடி ஜாதகன் உல்லாசப்பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு .ஜாதகருக்கு வரும் கணவன் அல்லது மனைவி தாயன்பு உடையவராக இருப்பார் .

@

லக்கனத்திற்கு எட்டில் சந்திரன் நின்றால் ஜாதகனின் தாயால் ஜாதகனுக்கு அவமானம் உண்டு , மனம் குழப்பம் நிறைந்து இருக்கும் .ஜாதகருக்கு நீரில் கண்டம் இருக்கும் .ஜாதகர் எதிர் மறையான சிந்தனை உள்ளவர் .ஜாதகனுக்கு மரணம் பற்றிய சிந்தனை இருக்கும் .அடிக்கடி நோய் வாய் படும் நிலை உண்டு .

@
லக்கனத்திற்கு ஒன்பதில் சந்திரன் நின்றால் ஜாதகன் நீண்ட தூர பயணம் செய்பவராக இருப்பார் .தந்தை புகழோடு இருப்பார் .ஒன்பதாம் பாவகம் தந்தையை குறிப்பதால் ,ஜாதகனின் தாய் ஜாதகனின் தந்தை மீது பியம் உடய்வராக் இருப்பார் .ஜாதகன் நீண்ட தூர தீர்க்கயாத்திரை செல்லும் பாக்கியம் உண்டு .வெயில் நாடு அமைப்பு இருக்கும் காரணம் ஒன்பதாம் பாவகம் நீண்ட தூர பயணத்தை  குறிக்கும் இடம் என்பதால் .

@
 இலக்கனத்திற்கு பத்தில் சந்திரன் நின்றால் உணவு சம்மந்தமான ,நீர் சம்மந்தமான துறை மற்றும் பயணம் மூலம் வருமானம் ஈட்டுபவனாக இருப்பான் தொழில் சார்ந்த பயணம் உண்டு .தலைமை பண்பு இருக்கும் .

@
இலக்கனத்திற்கு பதினொன்றில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு மூத்த சகோரம் மூலம் ஆதாயம் இருக்கும் .பெண் நண்பர்கள் அதிகம் இருக்கும் .பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் .பெண்களால் லாபம் உண்டு .ஜாதகனுக்கு தாய் வழி ஆதாயம் உண்டு .ஜாதகனின் மூத்த சகோதரம் அமிதியானவராக இருப்பார் .

@
பனிரெண்டில்  சந்திரன் நின்றால் தாயால் விரயம் உண்டு ,கண் பார்வை கோளாறு ஏற்படும் .மனதில் நிம்மதி இருக்காது .பெண்கள் மூலம் விரயம் இருக்கும் .

இப்படிப்பட்ட குணமுடைய சந்திரன்ஜாதகத்தில் உச்சம் அடையும் பொழுது தாய் ,வீடு ,வாகனம் ,மனோதிடம் அதிகமாகும் .

அதே நேரம் நீசம் அடையும் பொழுது மனோ திடம் குறையும் நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.

வளர்பிறை சந்திரனின் பார்வை நல்ல பலனை கொடுக்கும் .ரிஷபத்தில் முதல் மூன்று  பாகை பரம உச்சம்,மீதமுள்ள 27 பாகை மூல த்ரிகோண பலமும்  பெறுகிறது. விருச்சிக ராசியில் முதல் 3 பாகை பரம நீசம்.ஆகும் .

சிவன் சொத்து குல நாசம்

சிவன் சொத்து குல நாசம் இந்த பழமொழி அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த பழமொழியை எதற்காக சொல்லி வைத்தார்கள்.  பழமொழியை அனைவரும் தவறாக புரிந்து கொண்டனர் சிலபேர் சிவன் அவரது கோயில் இருக்கும் திருநீற்றை எடுத்துக்கண்டு வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்கின்றனர். ஏனென்றால் சிவனுடைய திருநீரு சிவன் சொத்து என்றும் அந்த திருநீற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள் அது வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்கின்றனர். இதன் உண்மை அர்த்தம் அதுவல்ல எந்த ஒரு தெய்வத்தின் திருநீரையும் தாங்கள் ஆலயத்திலிர நீங்கள் எந்த கோயில் இருந்தாலும் ந்து வீட்டிற்கு எடுத்து வரலாம் அது ஈஸ்வரன் ஆனாலும் சரி சனீஸ்வரன் ஆனாலும்  இறைவனுடைய அருள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும். நீங்கள் எந்த கோவிலில் இருந்தும் திருநீற்றை தாராளமாக வீட்டிற்கு கொண்டு வரலாம்,அதன் பிறகு அதை அனைவருக்கும் தரலாம். சரி அப்படி என்றால் இதன் அர்த்தம் என்ன சிவனாக பட்டவர் அதாவது சிவனை கும்பிடும் சிவனடியார் அவரே சிவனின் சொத்து எவரொருவர் சிவனை சொத்து என்று நினைத்து கும்பிடுகிறார் அவரே சிவனின் சொத்து அவரை மனதால் யாரொருவர் தீங்கு நினைத்தாலும் அவரது குல நாசம் ஆக்கப்படும் அதாவது சிவனால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் இதுவே இதன் உண்மையான அர்த்தம் சிவன் சொத்து குலநாசம் என்றால் இதுதான் உண்மையான அர்த்தம். காலப்போக்கில் அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு அனைவரும் சிவனின் திருநீற்றை கூட வீட்டிற்கு கொண்டு செல்லாமல் ஆலயத்திலேயே கொட்டி விடுகின்றனர். இனியாவது தாங்கள் எந்த தெய்வத்தைக் கும்பிட்டாலும் அதன் திருநீற்றை தாராளமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் சிவனடியார்களை தேவையில்லாமல் துன்புறுத்தாதீர்கள் அது நிச்சயம் நமக்கு அழிவை ஏற்படுத்தும் நன்றி
 ஓம் நமச்சிவாய
 ஓம் நமச்சிவாய 
 ஓம் நமச்சிவாய

பேய் இருக்கா... ஓரு உண்மை அனுபவம்

பேய் இருக்கா உண்மையிலேயே பேய் இருக்கா அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா மனிதனோட உடல் மற்றும் உயிர் இரண்டால் ஆனது தான்  மனிதன். இப்ப மனிதனுக்கு பாத்தீங்கன்னா உயிர் தனி உடல் தனி உடலுக்கு தனி ஆயுள் உயிருக்கு தனி ஆயுள் இருக்கு ஒரு மனிதன் உடல் எப்போது வேண்டுமானாலும் அளிக்கப்படலாம். உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்துல ஒரு மனிதனுக்கு 90 வயது வரை ஆயுள் கணிக்கிறோம் 40 வயது அல்லது 50 வயதுக்குள் அந்த மனிதன் மரணிக்கிறான் என்றால் அந்த மனிதனுடைய உடலானது அந்த குறிப்பிட்ட வயதில் அழிக்கப்படும். ஆதலால் மனிதனுடைய உடல் அப்போது அளிக்கப்பட்டு ஆன்மாவானது உடலை விட்டு வெளியே செல்கிறது. இப்பொழுது அந்த ஆன்மா வெளியே சென்றவுடன் 12 நாட்கள் அந்த ஆன்மா வாழ்ந்த இடத்தில் வாசம் செய்யும். பிறகு அந்த ஆன்மா தனது  90 வயது முடியும் வரை இப்பூவுலகில் உடலற்ற ஆன்மாவாக அது அலையும். அதைத்தான் நாம் பேய் என்று சொல்கின்றோம் அந்த ஆன்மா நல்ல ஆன்மா அல்லது தீய ஆன்மா இரண்டும் இருக்கும். ஒரு நல்ல ஆன்மாவானது யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால் நிறைவேறாத ஆசையால் இறந்த இந்த துஷ்ட ஆத்மாக்கள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தேவையான உடலை தேடி அலையும் அப்படி அழையும் பொழுது அதற்கு கண்ணில்பட்ட அந்த உடலை தேர்ந்தெடுத்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும். இப்படித்தான் பேய் உருவாகிறது ஆத்மா அந்த வயதை அதாவது தனது குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பூவுலகை விட்டு வேறொரு உடலை அது சென்றடையும் அதன்பின் ஆன்மாவானது பிறகு எந்த உடலை எடுத்து உள்ளதோ அந்த உடலுக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றி கொள்ளும். ஆன்மா தனது உறக்க நிலையில் இருக்கும் பொழுது அதாவது உடல் உறக்க நிலையில் இருக்கும் பொழுது ஆன்மா எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும் அந்த ஆன்ம விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது தான் தங்களுக்கு கனவு வரும் அந்தக் கனவில் நல்ல ஆத்மாக்கள் அதாவத மூதாதையர் ஆத்மாக்கள்  நமக்கு வரக்கூடிய துன்பத்தை முன்கூட்டியே எடுத்துரைப்பார்கள். அதனால்தான் நம் குல தெய்வத்தை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை நாம் முன்கூட்டியே உணர முடியும் ஆதலால் பேய் இருக்கா என்றால் ஆத்மா தான் பேய் புனித ஆத்மா நிறைவேறாத ஆசைகள் திறிகின்ற ஆத்மாக்கள் இந்த இரண்டில் எந்த வகையில் இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல் அந்த ஆத்மாவின் செயல் இருக்கும். 

குலதெய்வத்தை வணங்கினால் இவ்வளவு நன்மைகளா

முதலில் குலதெய்வம் என்றால் என்ன குலதெய்வம் என்பது அவரவர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாழ்ந்த மூதாதையர்களின் ஆத்மாவே குல தெய்வமாக கருதப்படுகிறது. அவரவர் குலதெய்வம் கோவிலில் அவரவர் குடும்பத்தில் பிறந்து அதாவது புனிதமாக வாழ்ந்த அவர்களின் ஆத்மா புனித ஆத்மாவானது குடியிருக்கும் தாங்கள் சென்று வழிபடும்போது அந்த புனித ஆத்மாக்கள் தங்களுக்கான நன்மையை செய்ய காத்திருக்கின்றன. 

உங்களுக்கு ஒரு தீமை நடைபெறும் போது அதை சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஆத்மா  உங்களுக்கு அடையாளம் காட்டும். நல்லது தீமை இவை இரண்டும் நடைபெறும் இந்த ஆத்மாவானது உங்களுக்கு நன்மை நடைபெறுகிறதா அல்லது தீமை நடைபெறப் போகின்றதா என்பதை முன்கூட்டியே உணர்த்துகின்ற சக்தி படைத்தது. இப்படி குலதெய்வக் கோயில் இருக்கும் புனித ஆத்மாவை நாம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் எவ்வாறு அழைப்பது அமாவாசை தினத்தன்று தங்களால் முடிந்த பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு உங்கள் குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் குலதெய்வம் கோவிலில் தங்களால் முடிந்த பூஜைகளை செய்துவிட்டு திரும்பி வரும்போது தாங்கள் என்ன கொண்டு வருகிறதோ அதை கொண்டு வந்து தனது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அப்போது புனித ஆத்மாவானது நமது வீட்டிற்கு வந்துவிடும் இப்பொழுது புனித ஆத்மா உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் இந்த ஆத்மா உங்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்யும் நீங்கள் தினமும் காகத்திற்கு சாப்பிட வைக்கும் போது அவர்களுக்கு அந்த உணவு கிடைக்கின்றது. அப்போது இந்த புனித ஆத்மாக்கள் நமக்கு வரங்களை அள்ளித் தரும். ஆதலால் தான் நாம் முன்னோர்களுக்கு திதி வைத்து வணங்க வேண்டும் தினமும் இப்படி முன்னோர்களுக்கு படைக்கும் உணவானது பித்ரு தேவதைகளின் மூலம் மூலம் அவர்களுக்கு சென்றடையும் இப்பொழுது அவர்கள் எந்த பிறப்பு எடுத்துள்ளார்கள் இந்த பிறப்புகளுக்கு  அந்த உணவானது அவர்களை சென்றடையும் இப்பொழுது அவர்கள் அதை பெற்றுக் கொண்டு நமக்கு வரங்களை அள்ளித் தருவார்கள்  அப்பொழுது அவர்கள் திருப்தி அடையும் போது நமக்கு பலன்களை அள்ளித் தருவார்கள் எப்படி அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தை தங்களது வீட்டிற்கு அழைத்து வாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள். இதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வத்தை அவசியம் வழிபடுமாறு சொல்லப்படுகிறது. தங்களுக்கு எந்த குலதெய்வமும் அந்த குலதெய்வத்தை மாதம் தவறாமல் கும்பிட்டு வந்தால் உங்களுக்கு நன்மை உண்டு. உங்கள் ஜாதகத்தில் சில தோஷங்கள் இருந்தாலும் இந்த குலதெய்வ வழிபாடு செய்தால் அந்த தோஷத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை உங்களுக்கு முன்கூட்டியே தெறியபடுத்தக் கூடிய அமைப்பு உண்டு அதன்படி நீங்கள் தெரிந்து கொண்டு நீங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 

ஜாதகத்தில் நவாம்சம் முக்கியம்

 ஜாதகத்தில் ராசி இருக்க நவாம்சம் எதற்கு  ஜாதகத்தில் நவாம்சம் முக்கியமானது.  நவாம்சத்தை வைத்துக்கொண்டுதான் ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் விழும் என்பதை நாம் அறிய முடியும்.  ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் விழுகிறதோ அந்த நட்சத்திரத்துக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்கிறது பூமியும் பூமியின் மேலே கோள்களும் கோள்களுக்கு மேலே பல்லாயிரக்கணக்கான தூரத்தில் நட்சத்திரங்களும் உள்ளன ஒரு கிரகம் அந்த நட்சத்திரத்திலிருந்து ஒளியை வாங்கி பின்புதான் பூமிக்கு பிரதிபலிக்கிறது அந்த நட்சத்திரம் தன்மையை தன்மையைப் பொருத்து அந்த கோளானது தனது பாதையை அதாவது தனது பண்பை மாற்றிக் கொள்கிறது ஒரு ஜாதகத்தில் ராசி நவாம்சம் ரொம்ப  ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் விழுந்து என்பதை நம்மால் அறிய முடியும்.