மீண்டும் சனி பெயர்ச்சியா......சனி பெயர்ச்சி பலன்கள் 20-12-2023


பொதுவாக சனி பெயர்ச்சி என்பது ஒருவர் ஜாதகத்தில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு பெயற்சியாகும்
சனீஸ்வர பகவான் என்பவர் ஒருவர் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து அவரது பார்வை 3, 7 மற்றும் 9 ஆகிய இடங்களில் தனது பார்வையை செலுத்துவார் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் அப்படி என்றால் சனியின் பார்வை எவ்வாறு இருக்கும் என்றால் அவரின் பார்வை கோர பார்வையாக அமையும் அதாவது குரு பார்வைக்கு உண்டான பலன்களுக்கு நேர் எதிரான பலன்களை தரக்கூடியவர் இந்த சனி ஈஸ்வர பகவான் ஒருவர் தான் செய்யும் நிகழ் காலத்தில் பாவ புண்ணிய பலன்களை தரக்கூடிய வல்லமை பெற்றவர் இந்த சனீஸ்வர பகவான் அவர் தாங்கள் செய்த பாவ புண்ணியங்களை தனது பார்வையின் மூலம் வழங்குவார் குரு இருக்கும் இடத்தை அழிப்பார் என்பதை போல சனீஸ்வர பகவான் தான் இருக்கும் இடத்தை வளரச் செய்வார் இரண்டும் எதிர் எதிர் தன்மையை க் கொண்ட கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் தீய ஸ்தானங்களில் சனீஸ்வர பகவான் பார்வை செய்கின்றார் என்றால் உங்களுக்கு தீய பலன்கள் அடிபட்டு நல்ல பலன்களை வழங்குவார் எதையும் தான் பார்வையின் மூலம் கட்டுப்படுத்தும் தன்மை இந்த சனீஸ்வர பகவானுக்கு உண்டு தனது பார்வையை ஒரு பாவத்திற்கு செலுத்தி தாங்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தார் போல் அந்த பாவத்தை கட்டுப்படுத்தி எந்த பலன்களை தர வேண்டுமோ அந்த பலன்களை தந்து தடுக்க வேண்டிய  பலன்களை தடுத்து தனது பலாப்பலன்களை வழங்குவார் பலருக்கு பல சந்தேகங்கள் வரக்கூடும் அதாவது திருக்கணித பஞ்சாங்கத்தை பொறுத்தவரை சனி பெயர்ச்சி என்பது முன்னதாகவே நிகழ்ந்துவிட்டது அப்படி என்றால் இது என்ன மற்றொரு பயிற்சி இன்று தங்களுக்கு சந்தேகம் வரும் கோயில்களில் பயன்படுத்தக்கூடிய பஞ்சாங்கம் என்பது வாக்கிய பஞ்சாங்கம் அதாவது கிரகங்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி முன்னோக்கி செல்வதும் பின்னோக்கி செல்வதும் கணிக்கப்பட்டு அதற்கு தகுந்த பலன்கள் சொல்லப்படுகிறது
ஆனால் பாக்கிய பஞ்சாங்கத்தில் அவ்வாறு இல்லாமல் சித்தர்கள் உருவாக்கிய விதிமுறைகளின் பின்பற்று கணிக்கப்படுவதால் முன்னோக்கி பின்னோக்கி போவதை தவிர்த்து ஒரு கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து அதன் பலாபலன்கள் சொல்லப்படுகிறது......
தொடரும் 

jothidam in tamil பன்னிரண்டாம் பாவத்தின் பலன்கள்

லக்ன அதிபதி பனிரெண்டில் இருந்தால் எதிலும் கூச்ச சுபாவம் இருக்கும்

சில விஷயங்களை அவர் மறைப்பார்

இரண்டாம் அதிபதி பனிரெண்டில் இருந்தார் அவருக்கு வரக்கூடிய வருமானத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வைப்பார் அவரிடம் கள்ளப்பணம் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்

மூன்றாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் எப்போதும் கைக்குட்டை வைத்திருப்பார் நிறுவனத்தில் வேலை செய்யும் இடத்தில் கோப்புகளை மறைத்து வைப்பார் போன் பேசும் பொழுது மறைமுகமாக நின்று கொண்டு பேசுவார்

நான்காம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தார் மறைமுகமாக ஒரு வீட்டை வைத்திருப்பார்
தொலைதூரக் கல்வி பயின்று இருப்பார் தாய் அன்பு உறவு கிடைக்காமல் போகலாம் இவரது வாகனம் திருடு போவதற்கு வாய்ப்புகள் உண்டு அல்லது இவர்களது செல்ல பிராணிகள் திருடு போவதற்கான வாய்ப்புகள் உண்டு

ஐந்தாம் அதிபதி 12ல் இருந்தால் இவர்களுக்கு இல்லீகல் செயல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
மறைமுகமாக காதலை வைத்திருப்பார்

ஆறாம் அதிபதி 12 இருந்தால் இவர்களுக்கு மறைமுகமாக கடன் இருக்கும் வீட்டிற்கு தெரியாமல் இவர் கடன் வாங்குவார் 
இல்லீகள் தொழில் இவர்களுக்கு அமைவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது

ஏழாம் அதிபதி 12ல் இருந்தால் மனைவிக்கு தெரியாமல் சில விஷயங்களை மறைத்து வைப்பார் கூட்டு தொழில் செய்யும்போது தனுடன் வேலை செய்யும் நபர்களிடமிருந்து பணத்தை மறைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு

எட்டாம் அதிபதி 12 இருந்தால் இது ஒரு யோகமான அமைப்பு இவர் நிச்சியமாக இவர் மீது இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருப்பார் இவர்கள் மறைமுக செய்திகள் ஈடுபட்டு அதன் மூலம் பணத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு

ஒன்பதாம் அதிபதி 12ல் இருந்தால் தந்தையுடன் கருத்து வேறுபாடு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு
இவர்கள் அடிக்கடி குகைப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று வருவார்

பத்தாம் அதிபதி இருந்தால் தைரியமாக ஒரு தொழிலை செய்வார் தொழில் மூலம் வரக்கூடிய வருமானத்தை இவர் மறைப்பார் அதாவது யாரிடமும் உண்மையான வருமானத்தை சொல்ல மாட்டார்

பதினொன்றாம் அதிபதி 12 இருந்தால் மூத்த சகோதரர்கள் பல உண்மைகளை நம் மறைப்பார் வரக்கூடிய வருமானத்தை கள்ளப் பணமாக சேர்த்து வைப்பார்

பன்னிரண்டாம் அதிபதி விறைவு செலவு ஏற்படும் 
இவர்கள் சிறைவாசம் செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு

jothidam in tamil நட்சத்திரங்களின் தன்மைகள்

ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த நட்சத்திரம் ஏனென்றால் ஒரு கிரகம் தன்னிச்சையாக எந்த கதிர்வீச்சையும் வழங்குவதில்லை மாறாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து பெற்ற ஒளியை பிரதிபலிக்கின்றன
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை உண்டு ஒரு கிரகம் உதாரணமாக சந்திரனை எடுத்துக் கொண்டால் அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் விழுந்து இருக்கிறதோ அந்த நட்சத்திரமே அவர்களுக்கு திசையாக அமையும் அந்த நட்சத்திர அதிபதி யார் என்பதை கண்டு அவரே முதல் திசை அதிபதியாக வருவார் அப்படி என்றால் இந்த நட்சத்திரத்தின் வாயிலாகத்தான் நமக்கு நம் ஜாதகத்தில் பலன்களை தர போகின்றார் ஒவ்வொரு நட்சத்திரத்தின் கூட்டத்தையும் கண்காணித்து 360 டிகிரிக்குள் நட்சத்திர கூட்டங்களை இணைத்து ஒவ்வொரு முப்பது டிகிரிக்கும் ஒரு ராசி என்று பெயரிட்டு அந்தந்த ராசியில் எந்தெந்த கிரகம் இருக்கிறதோ அதை பொறுத்து பாருங்கள் சொல்லப்படுகிறது இந்த நட்சத்திரம் எவ்வளவு முக்கியம் என்றால் உங்களின் தசையை தீர்மானிப்பது இன் நட்சத்திரம் தான்
ஒரு ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திசை புத்தி அந்தரம்
இதை வைத்தே பெரும்பாலும் பலன்கள் சொல்லப்படுகிறது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கிரக அதிபதியாக வருகிறது இந்த கிரகமே முதல் தர பலனை தரக்கூடியது ஒருவர் திசை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவரது செயல்பாடுகள் அமையும்
எந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து கிரகங்கள் ஒளியை பெறுகின்றன அந்த நட்சத்திரக் கூட்டங்களை இக்கிரகம் ஆட்சி செய்கிறது அப்படி என்றால் நட்சத்திரத்தை ஒளியை வாங்கக்கூடிய கிரகங்கள் எதுவோ அந்த கிரகமே அந்த நட்சத்திரக் கூட்டங்களையும் கட்டுப்படுத்துகிறது
உதாரணமாக சனி நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் சந்திரன் பயணம் செய்யும் ஆனால் மனது ஆளக்கூடிய சந்திரன் அணியின் நட்சத்திரத்தில் விழும் பொழுது எந்த ஒரு விஷயத்திலும் மனம் சஞ்சலப்படும் அதாவது சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறும்....

ஒரு ஜாதகத்தை ஆராய வேண்டுமென்றால் முதலில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்தார் என்பதை அறிந்து அவருடைய மனதை அறிய வேண்டும்

இன்றைய தின பலன் 9-8-2023

9 8 2023 இன்றைய லக்கின பலன்கள் 

முதலில் பொது  பலன்களை பார்க்கலாம் 

இன்றைய நாள் குரு ஆதிகத்தில் இருப்பதால் குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் விழுவதால் சுக்கிரன் பொதுவாக காமத்திற்கு அதிபதியாக வருவார்

 சுகபோக வாழ்க்கைக்கு அதிபதியாக வருவார் 

அப்படி என்றால்  மனிதன் பெரும்பாலும் இன்று கடவுளிடம் சுக போக வாழ்க்கைக்காகவும் திருமணத்திற்காகவும் வேண்டிக்கொள்வார்கள் 

ஆலயம் சென்று வழிபட்டால் அவர்களுக்கு  திருமண வாழ்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு

முதல் லக்னமான மேஷ லக்னத்தை பார்ப்போம்
மேஷ லக்னத்தை பொறுத்தவரை இன்று தந்தையின் மீது பாசம் அதிகமாக இருக்கும் 

சந்தை வழி சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்

 கண்டிப்பாக ஏதோ ஒரு ஆலயத்திற்கு சென்று அல்லது ஆலயத்திற்கு தங்களால் முடிந்த உதவி செய்வீர்கள் 

இன்று நீண்ட தூர பயணங்கள் செய்யலாம்

jothidam in tamil ....காதல் திருமணம் யாருக்கு........

 பொதுவாக ஒருவருக்கு திருமணம் என்பது பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்டு நடப்பது அல்லது காதலித்து திருமணம் செய்வது

 ஒருவர் ஜாதகத்தில் காதல் என்பது அவர்களது ஐந்தாம் பாவத்தைக் கொண்டு நாம் முடிவு செய்ய வேண்டும் காதல் உணர்வை தூண்டக்கூடிய சுக்கிரன் எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பொருத்து இந்த காதல் என்பதை தீர்மானிக்க வேண்டும் 

ஐந்துக்கு மூன்றாம் பாவம் என்பது ஏழாம் பாவமாக வரும் இந்த ஏழாம் பாவம் என்பது காதலின் வெற்றியை தீர்மானிக்க கூடிய பாவமாகும் 

ஒருவர் செய்யும் காதல் திருமணத்தில் சென்று முடியுமா அல்லது முடியாத என்பதை இந்த ஐந்துக்கு மூன்றாம் இடத்தை பார்க்க வேண்டும்

சரி ஒருவர் காதலை அவரது வீட்டில் சொல்வாரா சொல்ல மாட்டாரா என்பதை ஏழாம் பாவத்தை கொண்டு பார்க்க வேண்டும் 

 ஏழாம் பாவத்தில்  செவ்வாய் மற்றும் சூரியன் கிரகங்கள் இருக்குமேயானால் அவர் நிச்சயமாக தனது காதலை வீட்டில் சொல்வார் அல்லது ஏழாம் பாவ அதிபதி நீச்சம் அடைந்தால் தனது காதலியை அவர் வீட்டில் சொல்ல மாட்டார் இப்பொழுது ஐந்தாம் பாவத்திற்கும் ஏழாம் பாவம் சம்பந்தப்பட்டால் காதலித்து திருமணம் செய்து கொள்வார்.

ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் பாகம் நன்றாக இருந்து அவர்களுக்கு ஏழாம் பாவம் தொடர்பில்லாமல் ஆறாம் பாகம் ஏற்படுமேயானால் அவர்களது காதல் திருமணத்தில் முடியாமல் போகும்..

ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் பாவம் அதனுடைய அதிபதி பலமாக அமைந்து விட்டால் அவர்களுக்கு நிச்சயமாக காதலித்தாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும் 

அவர்கள் பெற்றோர் சம்பந்தமில்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் ஒருவேலை ஏழாம் பாவம் வலு விழுந்து காணப்பட்டாள் அவர்கள் நிச்சயமாக காதலித்து பெற்றோர்கள் சம்பந்தமில்லாமல் திருமணம் செய்து கொள்வார்கள் 

இப்படி ஒரு ஜாதகத்தில் ஏழாம் பாவ அதிபதியை வைத்து அவருடைய கணவன் அல்லது அவருடைய மனைவி பற்றி முழுவதும் சொல்லாம் ஒருவருக்கு.

ஏழாம் பாவத்திற்கு மூன்றாம் பாவத்தை வைத்து உங்களது திருமணம் முயற்சி வெற்றி அடையுமா அடையாதா என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்

ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் நன்றாக அமைந்தால் அவர் அவரின் திருமண முயற்சி வெற்றி அடையும் ஐந்து ஏழு ஒன்பது போன்ற பாவங்களில் தொடர்பு ஏற்பட்டால் ஒருவர் காதலித்து அந்த காதலை வீட்டில் தெரிவித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வார் நிச்சயமாக இவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும்



28- 5 -2023 இன்றைய 12 லக்னப் பலன்கள்

மேஷ லக்னம்
மேஷ லக்னத்தை பொருத்தவரை
இளைய சகோதரன் மூலமாக உங்களுக்கு இன்று வருமானம் கிடைக்கும் 
கமிஷன் தொழிலில் வருமானம் கிடைக்கும்
 திருமண பேச்சு வெற்றியைத் தரும் திருமணத்திற்காக முயற்சி எடுத்தால் நிச்சயமாக திருமணம் கைகூடிவரும்
இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கைகூடி வரும்
 பூர்விக சொத்துக்கள் மூலமாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்
உங்களுடைய சுய முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றியாக அமையும் 
எந்த காரியத்தையும் நீங்கள் சுயமாக செய்தால் வெற்றி நிச்சயம் உண்டு
எந்த விதமான கண்டங்களும் கிடையாது வண்டி வாகனம் வீடு போன்றவற்றில் நிறைய செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு அதாவது வண்டி பழுதாகும் வீட்டை ரிப்பேர் ஒர்க் செய்வீர்கள்
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன கஷ்டம் இன்று ஏற்படும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்தை பொறுத்தவரை உங்களது சுய முயற்சி இன்று உங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் 
நீங்கள் கடன் கேட்டுச் சென்றால் உங்களுக்கு நிச்சயமாக கடன் கிடைக்கும் 
நீங்கள் வரும் வருவாய் கொண்டு இன்று சிறிதளவு கடணை அடைப்பீர்கள்
வண்டி வாகனங்கள் வைத்து தொழில் செய்பவர் வீட்டை வாடகைக்கு விடுபவர் கல்வி நிறுவனங்களை வைத்து தொழில் செய்பவர் போன்றவற்றிற்கு இன்று லாபங்கள் கிடைக்கும்
இன்றைய பொழுது உங்களுக்கு தாய் வழி உறவுகளிடம் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு ஆன்மீக பயணத்தில் தடை ஏற்படும் மனைவி இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் இளைய சகோதர வழியில் பிரச்சனை உருவாக்கும் நீங்கள் எடுக்கும் முயற்சி இன்று வீணாகும் அதனால் பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்காதீர்கள்

மிதுன லக்னம் 

மிதுன லக்னத்தை பொருத்தவரை நீங்களாகவே விரயத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள் உங்களுக்கு திடீர் அதிஷ்டம் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்று பாசம் அதிகரிக்கும் பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கைகூடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களுக்கு கண்டங்கள் எதுவும் ஏற்படாது நோய் நொடி பிரச்சனைகள் உருவாகாது வரக்கூடிய வருமானத்தை நீங்கள் சரியாக சேமிக்கவில்லை என்றால் அது விரையம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு தாங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும் இல்லை என்றால் உங்கள் பேச்சால் உங்கள் பணம் விரையம் ஆகும்
தொழில் செய்வதற்கு இன்று நல்ல நாள் கமிஷன் தொழில் செய்பவர்கள் செய்தி தொடர்பு தொழில் செய்பவர்கள் தகவல் தொடர்பு தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இன்று லாபங்கள் அதிகமாக கிடைக்கும்

கடக லக்கனம்

 கடக லக்கனத்தை பொருத்தவரை  நீங்கள் வாகனங்கள் அல்லது வீடு வாங்குவதற்கான அமைப்புகள் இன்று நிச்சயமாக ஏற்படும் உங்களுக்கு மனைவியுடன் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை நீங்கள் சுய முயற்சியை எடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் மூத்த சகோதர மூலமாக உங்களுக்கு வருமானம் நிச்சயமாக வரும் வாக்குஸ்தானத்தை பயன்படுத்தி நீங்கள் பெரும் அளவு பணத்தை ஈட்டுவீர்கள்

சிம்ம லக்கனம் 

சிம்ம லக்னத்தை பொருத்தவரை செய் தொழில் மூலமாக உங்களுக்கு வருமானம் நிச்சயமாக கிடைக்கும் சிறுதூற பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு
 தொழில் நிமித்தமாக நீங்கள் பயணம் செய்வீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும் இன்று நோயிலிருந்து விடுதலை 
 வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் உங்கள் வாகனங்கள் ரிப்பேர் வொர்க் செய்வதற்கான காலம் இது எந்த விதமான விரையமும் இன்று உங்களுக்கு ஏற்படாது உங்களது சுய முயற்சியால் உங்களுக்கு நிச்சயமாக வருமானம் வந்து சேரும் ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்று உண்டு 

கன்னி லக்கனம்

கன்னி லக்னத்தை பொறுத்தவரை தந்தை வழி தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு தந்தை வழியில் தொழில் கிடைக்கும
 தொழில் மூலமாக வருமானங்கள் கண்டிப்பாக கிடைக்கும் தந்தை வழி சொத்துக்கள் மூலம் வருமானம் நிச்சயமாக உண்டு சுரங்கத் தொழில் செய்பவர்களுக்கு வருமான நிச்சயமாக உண்டு கால்நடை தொழில் செய்பவர்களுக்கு வருமானங்கள் உண்டு பிள்ளைகள் வழியில் உங்களுக்கு கவனம் தேவை இளைய சகோதரர்களிடம் உங்களுக்கு பிரச்சனை வரும் மூத்த சகோதரர்களிடம் பிரச்சனை வரும் மூத்த சகோதர மூலமாக உங்களுக்கு விரைவு செலவு ஏற்படுத்தலாம் கமிஷன் தொழில் செய்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும்

துலாம் லக்னம்

துலாம் லக்னத்தை பொறுத்தவரை இன்று  திருமண பேச்சு வெற்றியைத் தரும் காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக உங்களுக்கு லாபம் வரும் மூத்த சகோதரர்கள் மூலம் லாபத்தை எதிர்பார்க்கலாம் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும் நண்பர்கள் மூலமாக உங்களுக்கு வருமானங்கள் உண்டாகும் துன்பத்திலிருந்து விடுபடலாம்
வண்டி வாகனங்கள் இன்று வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களது வருமானத்தில் தடை ஏற்படும் நீங்கள்  தொழில் செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும்

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னத்தை பொறுத்தவரை திருமண பேச்சு தடை ஏற்படும் தூக்கம் இன்று உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு தூக்கமின்மை ஏற்படும் கடன் கேட்டு சென்றால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு பலகைகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு மனைவி வழி சொத்துக்கள் மூலமாக உங்களுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு லாபம் நிச்சயமாக உண்டு நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் கையெழுத்து போட்டு பணம் வாங்கி இருந்தால் பிரச்சினை உருவாக்கும் 
கமிஷன் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படும் உங்களது சுய முயற்சியை இன்று தடைப்படும் தந்தை வழி உறவுகளுடன் சமூக உறவு ஏற்படாது

தனுசு லக்னம்

தனுசு லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு கடன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு எதிரிகளிடம் இருந்து உங்களுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு கூட்டுத் தொழில் மூலமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும் உங்களது பேச்சு இன்று  திக்கி திக்கி பேச வேண்டிய அமைப்பு ஏற்படும் சுப விரயங்கள் ஏற்படும் கண்டங்கள் என்று உங்களுக்கு இல்லை எதிரிகள் மூலமாகவும் வழக்குகள் மூலமாக வருமானம் நிச்சயமாக உண்டு

மகர லக்னம் 

மகர லக்னத்தை பொறுத்த வரை குழந்தைகளுக்காக நீங்கள் கடன் வாங்க நேரிடும் தொழில் மூலமாகவும் கடன் வாங்க நேரிடும் திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு காப்பீட்டு நிறுவனத்தில் இளைஞர்களுக்கு இன்று பணப்புழக்கம் உண்டு இன்சூரன்ஸ் மூலமாக பணம் வருவதற்கான  வாய்ப்புகள் உண்டு உங்களது சுயமுயற்ச்சி இன்று அனைத்தும் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு மூத்த சகோதர மூலமாகவும் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் மனைவி உடன் கருத்து வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகம் வண்டி வாகனம் வாங்க வேண்டும் என் நினைப்பவர்கள் வீடு கட்டும் எண்ணம் கொண்டவர்களின் முயற்சி இன்று வெற்றி ஆகும்

கும்ப லக்னம் 

கும்ப லக்னத்தை பொறுத்தவரை வண்டி வாங்குவதற்கான நேரம் இது வீடு கட்டுவதற்கான நேரம் இது தந்தை வழி சுமுக உறவு ஏற்படுவதற்கான நேரம்
வண்டி வாகன தொழில் செய்பவர்கள் நிச்சயமாக லாபம் பெறுவீர்கள் பூர்வீக சொத்துக்கள் இன்று உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு இன்று வெற்றியை தேடி தரும்
உங்களுக்கு சிறிது தூக்கம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு  தொழில் செய்யும் இடத்தில் மன கஷ்டங்கள் ஏற்படும் உங்களுக்கு நோய் இன்று ஏற்படாது கடன் அடைப்பதற்கான வழியும் பிறக்கும்

மீன லக்னம் 

மீன லக்னத்தை பொருத்தவரை கமிஷன் தொழில் இன்று அதிகமான லாபத்தை உங்களுக்கு தரும் வீடு வாங்கி விற்பது வீடு கட்டி விற்பது போன்ற தொழில்களில் லாபத்தை இன்று எதிர்பார்க்கலாம் கையெழுத்து போட்டு செய்யக்கூடிய தொழிலில் லாபங்கள் நிச்சயமாக உண்டு எதிரிகள் மூலமாகவும் வழக்கு மூலமாகவும் உங்களுக்கு லாபங்கள் ஏற்படும் கடன் கேட்ட இடத்தில் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் மூத்த சகோதரர்களிடம் பிரச்சனைகளை ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு மனநிம்மதி இன்று கெட்டு போவதற்கான வாய்ப்புகள் உண்டு தந்தை வழி சொத்துக்களுடன் பிரச்சினைகள் ஏற்படும் குழந்தைகளின் உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை.....
By astro nithiyandran 

26-05-2023 இன்றைய 12 லக்ன பலன்




மேஷ லக்னம்

மேஷ லக்னத்தை பொருத்தவரை உங்களது சுய முயற்சி இன்று வெற்றி அடைய வாய்ப்புகள் மிக அதிகம் கடன் கேட்டுச் சென்றாள் உங்களுக்கு கடன் நிச்சயமாக கிடைக்கும்
இன்று உங்களுக்கு எதிர்பார்த்து அளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தந்தை வழி பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் குழந்தைகள் மன கஷ்டங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்
வண்டி வாகனங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான பேச்சுகள் இன்று நடைபெறும்
உங்களுக்கு முக்கியமாக இளைய சகோதரர்களிடம் கடன் கேட்டு சென்றால் நிச்சயமாக கிடைக்கும் சிறுதூற பயணங்கள் செய்வது ஆதலால் உங்களுக்கு சிறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
உங்களுடைய மனநிலை இன்று நிலையானதாக இருக்கும் எந்த ஒரு காரியத்திற்கான முடிவை தீர்க்கமாக எடுப்பீர்கள்

ரிஷப லக்கனம்

இன்று உங்களுக்கு வாய் மூலமாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் அதாவது உங்கள் பேச்சு மூலமாக உங்களுக்கு வருமானங்கள் வரும் . உங்களுடைய விடா முயற்சிகள் இன்று வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம் தொழிலில் சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தப்பட்ட வேண்டும்
நிலம் சம்பந்தப்பட்ட தொழில்கள் ரியல் எஸ்டேட் வீடு கட்டி விற்ப்பவர்கள் போன்ற தொழில்களை செய்பவர்கள் கல்வி நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு இன்று விரைய செலவுகள் ஏற்படும்

மிதுன லக்னம்

மிதுன லக்னத்தை பொறுத்தவரை இன்று உங்களது சுய முயற்சியால் உங்களுக்கு லாபம் வரும் வீடு வாகனம் விற்பவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை வைத்து தொழில் செய்பவர்கள் அவர்களுக்கு இன்று லாபங்கள் அதிகமாக கிடைக்கும் ஆன்மீக வழிபாட்டிற்கு தடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இளைய சகோதரர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கமிஷன் தொழிலில் பிரச்சனைகளை உருவாக்கும் சிறுதூறு பயணங்களில் பிரச்சனையை உருவாக்கும் நீங்கள் முயற்சி செய்யும் ஒரு சில விஷயங்கள் தடை படுவதற்கான வாய்ப்புகள் உண்டு

கடக லக்கனம்

கடக லக்னத்தை பொருத்தவரை இன்று கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் மறைமுக தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களுடைய முயற்சி இன்று வெற்றியை கொடுக்கும் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் அது வெற்றியில் கொண்டு போய் நிற்கும் உங்களுக்கு எந்தவித கண்டங்களும் கிடையாது உடல் உபாதைகளையும் தராது எந்த வித நோய்களையும் இன்று தராது மற்ற தொழில் வருமானம் எதிர்பார்த்த அளவு கிடைக்காது நீங்கள் சரியான முறையில் பேசவில்லை என்றால் உங்களுக்கு விரயத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்

சிம்ம லக்கனம் 

சிம்ம லக்னத்தை பொறுத்தவரை மூத்த சகோதரர்கள் மூலமாக உங்களுக்கு வருமானங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்
 நிச்சயமாக உங்களுக்கு லாபம் அதிகமாக இன்று கிடைக்கும் உங்களது வாக்கு ஸ்தானத்தை பயன்படுத்தி நீங்கள் அதிகமான லாபத்தை ஈட்ட முடியும் பேசும்போது கவனமாக பேசினால் உங்களால் நிச்சயமாக இந்த வருமானத்தை ஈட்ட முடியும்  மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் குழந்தைகள் விஷயத்திலும்  பிரச்சனைகளை ஏற்படுத்தும் நீங்கள் நீங்களாகவே விரயத்தை ஏற்படுத்துவீர்கள் ஆதலால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்று

கன்னி லக்னம்

கன்னி லக்னத்தை பொருத்தவரை நீங்கள் செய்கின்ற தொழில் மூலமாக உங்களுக்கு லாபம் அதிகமாக கிடைக்கும் உங்களுடைய சுய முயற்சியால் நீங்கள் லாபத்தை காண்பீர்கள் பணவரவு நிச்சயமாக உண்டு நோய் நொடிகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் நீங்கள் இருக்கும் வீட்டிலும் அல்லது படிக்கும் கல்வியோ இன்று நிச்சயமாக பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு வாகனங்கள் பழுது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு மறைமுகத் தொழில் அனைத்தும் இன்று விரயத்தை ஏற்படுத்தும் கடல் சார்ந்த தொழில்களில் உங்களுக்கு இன்று லாபங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்காது

துலாம் லக்னம்

துலாம் லக்னத்தை பொறுத்தவரை தந்தை வழி சொத்துக்கள் மூலம் இன்று ஆதாயம் கிடைக்கும் தந்தை வழி மூலம் உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும் உங்களுக்கு கடல் சார்ந்த தொழில் அகழ்வாராய்ச்சி செய்வார்கள் போன்றவற்றில் இன்று நிச்சயமாக லாபங்கள் கிடைக்கும் ஆன்மிகப் பேரருளால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாள் திடீர் அதிஷ்டத்தில் உங்களுக்கு சிறு தடைகள் ஏற்படும் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் அது மட்டுமல்லாமல் உங்களுக்கு சிறு பிரச்சனைகளை சிறுதூரப் பயணம் செய்யும்பொழுது ஏற்படும் இன்று யாரிடமும் அக்ரிமெண்டில் சைன் செய்தால் அது பிரச்சனை உருவாக்கும் மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உங்களுக்கு மற்ற தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது

விருச்சிக லக்னம்

விருச்சிக லக்னத்தை பொறுத்தவரை என்று உங்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் ஏதாவது ஒரு வகையில் நீங்கள் போட்டு வைத்திருக்கும் இன்சூரன்ஸ் போன்ற அமைப்புகளில் இருந்து உங்களுக்கு இன்று வருமானம் கிடைக்கும் 
மூத்த சகோதரர்களிடம் இருந்து உங்களுக்கு நிச்சயமாக லாபத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்
வண்டி வாகனங்களில் செல்லும்போது பார்த்து செல்வது மிக நன்று 
வண்டி வாகனங்கள் பழுது ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு இருக்கும் வீட்டில் பிரச்சனைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும் இல்லை என்றால் உங்கள் பேச்சு உங்களுக்கு பிரச்சனை உருவாக்கும் செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு வரக்கூடிய லாபம் விரயம் ஏற்ப்படுவதற்கான வாய்ப்புகள் இன்று மிக அதிகம்

தனுசு லக்னம்

தனுசு லக்னத்தை பொறுத்தவரை கூட்டுத் தொழிலில் அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம் மனைவி வழி சொத்துக்கள் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு லாபங்கள் இன்று நிச்சயமாக அதிகரிக்கும் எந்த தொழிலை செய்தாலும் லாபத்தை எதிர்பார்க்கலாம் உங்களது முயற்சி இன்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் ஏதாவது செய்வதாக நினைத்து செய்யும்போது அதில் சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு நீங்கள் செய்யும் செயலாலே உங்களுக்கு கண்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு ஆன்மீக பயணம் இன்று ஏற்படும் தந்தை மூலமாக  செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உயர் கல்வி மூலமாக மிக அதிக செலவுகள் செய்ய நேரிடும்

மகர லக்கனம்

மகர லக்கனத்தை பொறுத்தவரை எதிரிகள் மூலமாக உங்களுக்கு லாபத்தை இன்று கொண்டு வரும் வழக்கில் வெற்றி பெற்று அதன் மூலமாக உங்களுக்கு லாபங்கள் ஏற்படும் ஆனால் சிறு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு தந்தை வழி சொத்துக்கள் மூலம் லாபங்கள் ஏற்படும் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் ஆன்மிக மூலமாக உங்களுக்கு வருமானங்கள் ஏற்படும் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுபவர்கள் இன்று வருமானத்தை எதிர்பார்க்கலாம் குடும்பஸ்தானத்தை பொறுத்தவரை நீங்கள் சரியாக பேசவில்லை என்றால் தகராறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு இன்று விறைய செலவுகள் உங்களுக்கு ஏற்படாது கண்டங்கள் போன்றவற்றும் ஏற்படாது

கும்ப லக்னம்

இன்று உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம் காப்பீட்டு நிறுவனம் மூலமாக வருமான வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இன்சூரன்ஸ் வேலை செய்பவர்கள் இன்று லாபத்தை எதிர்பார்க்கலாம் நீங்கள் ஒரு வேலையை செய்ய நினைக்கும் பொழுது அதில் தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கடன் கிடைப்பது இன்று சிரமம்  மற்ற தொழில் செய்யும் போது லாபத்தை குறைக்க கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் மனைவி வழி பிரச்சனைகள் ஏற்படும் மனைவி மூலமாக  செலவுகள் ஏற்படும் கூட்டுத் தொழில் விறைய செலவுகள் ஏற்படும்

மீன லக்னம்

மீன லக்னத்தை பொருத்தவரை வண்டி வாகன தொழில் செய்பவர்கள் வீடு கட்டி விற்கும் தொழில் செய்பவர்கள் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் தொழில் செய்பவர்கள் இவர்களுக்கு இன்று அபரிமிதமான லாபத்தை ஈட்டி தரும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் இன்று லாபத்தை எதிர்பார்க்கலாம் மனைவி மூலமாக இன்று லாபங்கள் அதிகரிக்கும் இன்று விறைய செலவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு செய்யும் தொழில் மூலமாக உங்களுக்கு சிறு சிறு மன கஷ்டங்கள் ஏற்படும்  உடம்பில் ஏற்படக்கூடிய நோய்கள் தீருவதற்கான காலம் இது கடன் அடைப்பதற்கான  சிறந்த நாள் வழக்கு போன்றவற்றில் உங்களுக்கு விறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.........by astro nithiyandran 

இன்றைய லக்ன பலன்கள் 25-05-2023 by astro nithiyandran

மேஷ லக்ன 

மேஷ லக்னத்தை பொருத்தவரை மூத்த சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்படும் 
எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வராது ஆன்மீக பயணம் தடைபடும்
 தந்தை மற்றும் பெரியவர்களுடன் பிரச்சினைகளை உருவாக்கும்
 விரைய செலவுகள் அதிகமாக ஏற்படும் 

ரிஷப லக்னம்

வேலை செய்யும் இடத்தில் தங்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உண்டு.
வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்
உங்களுக்கு உடம்பில் அடிபடக்கூடிய அமைப்பு உண்டு
 இருக்கக்கூடிய வீட்டில் பிரச்சனை உருவாக்கும் 
தாயுடன் பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும

மிதுன லக்னம் 

நெடுந்தூர பயணம் செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படும் 
மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்படும் இளைய சகோதரர்கள் பிரச்சனைகள் உருவாகும் இன்றைய பொழுது நீங்கள் சிறு தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு அந்தப் பயணத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் இன்றைய நாள் நீங்கள் எந்தவித அக்ரிமெண்டில் அக்ரிமெண்டிலும் கையெழுத்து போடக்கூடாது அப்படி போட்டால் அது பிரச்சனை உருவாக்கும்

கடக லக்கனம்

கடக லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த வித கண்டங்களும் இன்று இல்லை எந்த ஒரு பிரச்சனையிலிருந்தும் நீங்கள் விடுபடலாம் கடன் பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட வாய்ப்புகள் அதிகமாக உண்டு எதிரிகளிடம் இருந்து நீங்கள் வெற்றிவாகை சுடலாம் உங்களது வாக்கு ஸ்தானம் மட்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது ஆதலால் தாங்கள் பேசும் பொழுது விபரம் அறிந்து பேச வேண்டும் குடும்பஸ்தானம் உங்களுக்கு இன்றைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அமைப்பில் உண்டு குடும்பத்தில் சரியான முறையில் பேச வேண்டும் வருமானம் சிறிது தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு அதாவது  வரக்கூடிய பணம் அனைத்தும் விரய செலவாக ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

சிம்ம லக்கனம்

சிம்ம லக்னத்தை பொறுத்தவரையில் உங்களுக்கு இன்று உங்கள் மனைவியுடன் பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உண்டு அதனால் கவனமாக இருக்க வேண்டும் சிறு சிறு பிரச்சனைகள் கூட்டுத் தொழில் ஏற்பட மன கசப்புகள் ஏற்படும் குழந்தைகள் வழியில் உங்களுக்கு மனக்கசப்புகள் ஏற்படும் வரக்கூடிய வாய்ப்பு இன்று இல்லை
உங்களுடைய சுய முயற்சி இன்று விரயத்தில் போய் நிற்க வாய்ப்புகள் அதிகமாக உண்டு அதனால் நீங்கள் எந்த ஒரு செயலும் செய்யும் முன் யோசிக்க வேண்டும் இல்லை என்றால் அது விரயத்தில் போய் நிற்கும்

கன்னி லக்கனம்

கன்னி லக்னத்தை பொருத்தவரை உங்களுக்கு நோய் நொடி இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் கடன் தொல்லை இருந்து விடுபடுவீர்கள் வழக்கு வெற்றி ஏற்படும் நீங்கள் இருக்கக்கூடிய வீட்டில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாகனங்கள் பழுது இருப்பதும் தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் விரைய செலவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு

துலாம் லக்னம்

துலாம் லக்னத்தை பொறுத்தவரையில் குழந்தைகள் விஷயத்தில் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம் பூர்வீக சொத்தில் பிரச்சனை உருவாக்கும் இளைய சகோதரர்களுடன் பிரச்சனை உருவாக்கும் மூத்த சகோதரர்களுடன் பிரச்சனை உருவாக்கும் வர வேண்டிய இடத்தில் கமிஷன் வராது லாபம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது

விருச்சிக லக்கனம்

விருச்சிக லக்னத்தைப் பொறுத்தவரை வண்டி  வாகனங்களில் பிரச்சனைகளை உருவாக்கும் வீட்டை ரிப்பேர் செய்யக்கூடிய அமைப்பு ஏற்படுத்தும் வரக்கூடிய வருமானம் சரியாக வராது குடும்பத்துடன் பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய அமைப்பு உண்டு 
செய்கின்ற தொழில் மூலமாக வரக்கூடிய வருமானம் குறைய வாய்ப்புகள் உண்டு வேலை செய்யும் இடத்தில் பார்த்து பேச வேண்டும் குடும்பத்துக்குள்ளும் பார்த்து பேச வேண்டும் இல்லை என்றால் பல பிரச்சனைகளை  உருவாக்கும்

தனுசு லக்கனம்

தனுசு லக்னத்தில் உங்களுக்கு இன்று பதிவுத்துறையில் ஏதாவது ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றால் அது தள்ளி போவதற்கான வாய்ப்புகள் உண்டு கமிஷன் தொழிலில் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த அளவு தூண்களுக்கு அந்த கமிஷன் கிடைக்காது உங்களாலேயே உங்களுக்கு பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இன்று உண்டு தாங்கள் உண்ணும் உணவு சரியாக உண்ண வேண்டும் இல்லை என்றால் உணவு மூலமாக உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன் பல தடவை யோசிக்க வேண்டும் இல்லை என்றால் அது உங்களுக்கு கண்டங்களை ஏற்படுத்தும் தந்தை வழி பிரச்சனை உருவாக்கும் தந்தை வழி சொத்துக்கள் விரயம் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு அதாவது விற்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டு கோயில்களுக்கு நற்காரியங்கள் செய்வதற்கான அமைப்புகள் இன்று உண்டு

மகர லக்கனம்

மகர லக்கனத்தைப் பொறுத்தவரை இன்று வரக்கூடிய வருமானம் தடை படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது 
குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் உணவு கட்டுப்பாடு மிக அவசியம் இல்லை என்றால் அது மூலமாக உங்களுக்கு நோய் பிரச்சனைகளை உருவாக்கும் உங்களுக்கு இன்று எந்த விரைய செலவும் ஏற்படாது உங்களுக்கு இன்று எந்த கண்டங்களும் கிடையாது இந்த நாள் உங்களுக்கு நலமாக இருக்கிறது ஒரே ஒரு பிரச்சனை உங்களுக்கு வருமானம்  குடும்பஸ்தானமும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

கும்ப லக்னம்

கும்ப லக்னத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு உங்களாலயே நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு
நீங்கள் செய்யும் செயலால் உங்களுக்கு இன்று பிரச்சனைகள்  ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் 
மூத்த சகோதரர்களிடம் பிரச்சனைகளை உருவாக்கும் அது மட்டுமில்லாமல் லாபங்கள் உங்களுக்கு தடைபடும் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
 கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் கூட்டுத் தொழில் விரையத்தை கொண்டு போய் சேர்க்கும் கூட்டத்தொழில் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

மீன் லக்கனம்

மீன லக்னத்தை பொருத்தவரை இன்று விரைய செலவுள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை
 நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இன்று அதிகம் உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களை மதிக்க மாட்டார்கள் ஆதலால் உங்களுக்கு மன கஷ்டங்கள் உண்டு
உங்களுக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய கடன்கள் இன்று அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு நோயிலிருந்து விடுபடலாம் எதிரில் இருந்து காப்பாற்றப்படலாம்  வழக்கில் வெற்றி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இந்த நாள் நல்ல நாளாக அமையட்டும்.....by astro nithiyandran 

jothidam in tamil லக்னாதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் என்ன பலன்....

ஒருவர் ஜாதகத்தில் லக்ன அதிபதி என்பது மிக முக்கியமான ஒன்று அப்படிப்பட்ட லக்ன அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் 

இவர்களுக்கு இவர்கள் மூலியமாகவே தொழில் அமையும் இவர்கள் செய்யக்கூடிய தொழிலில் சிறந்து விளங்குவர் தொழில் வளர்ச்சி மென்மேலும் அதிகமாக இருக்கும் பத்தாம் இடம் என்பது பொதுவாக தொழிலைக் குறிக்கும் ஸ்தானம் ஒருவர் எந்த தொழிலை செய்வார் என்பது இந்த பத்தாம் இடம் குறிக்கும்

அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் தலைமை பொறுப்புகள் செல்வாக்கு சுயமரியாதை மத வழிபாடு சொத்து சேர்க்கை அதிகார பதவி சொந்த நாட்டு வணிகம் தத்து புத்திரன்
பந்தங்களில் இருந்து விடுபடுதல்
இது போன்ற பல காரத்துவங்களை உள்ளடக்கியது இந்த பத்தாம் பாவம்

லக்ன அதிபதி பத்தாம் பாவத்தில் இருக்கும் பொழுது உங்களது சுயமரியாதை அதிகமாக இருக்கும் மதிப்பு மரியாதையுடன் சமூகத்தில் வாழ்வீர்கள் பத்தாம் இடத்திற்கு முன்னும் பின்னும் அதாவது 11ஆம் இடத்தில ஒன்பதாம் இடத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை இருந்தால் உங்களுக்கு மரியாதை குறைய வாய்ப்புகள் அதிகம்

 இந்த பத்தாம் பாவத்துடன் கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் அதாவது சூரியன் சேர்க்கை ஏற்பட்டால் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும் சந்திரன் ஏற்பட்டால் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்க வாய்ப்பு உண்டு செவ்வாய் ஏற்பட்டாலும் உங்களுக்கு அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும்

 சூரியன் சேர்க்கை இருந்தால் தலைமை பதிவை கிடைக்கும் சந்திரன் சேரும் பொழுது உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை கிடைக்கும் செவ்வாய் சேர்வது யூனிபார்ம் போட்டு செய்யக்கூடிய வேலைகள் கிடைக்கும் புதன் சேரும்பொழுது உங்களுக்கு கம்யூனிகேஷன் லைனில் வேலை கிடைக்கும் சனி சேரும்பொழுது அடிமைத்துறைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு அரசாங்கத்தில்  கீழ்நிலை  வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு 

அதேபோல் சுக்கிரன் இருக்கும் போது உங்களுக்கு கம்ப்யூட்டர் லைனில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் 

இது போன்ற பல கிரகங்களின்  சேர்க்கை பொறுத்து அவர்களுக்கு தொழில் மாற்றம் ஏற்படும்  ஒன்பதாம் இடத்தில் இருந்து ஒரு கிரகம் திசை புத்தி நடத்தினால் தொழில் மாற்றங்கள் நிச்சயமாக ஏற்படும் இருக்கும் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்வீர்கள்

இளைய சகோதர இடத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் உருவாகும் சிறு தூர பயணங்களில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் கமிஷன் தொழில் உங்களுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கும் கமிஷன் துறைகளில் நீங்கள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது மன நிம்மதி இருக்காது

 குழந்தைகளுக்கு நோய் உருவாக்கும் உங்கள் புத்திரர்களுக்கு அடிக்கடி நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு

ஆறாம் பாவத்துடன் பத்தாம் பாவங்கள் தொடர்பு ஏற்பட்டால
நீங்கள் கடன் வாங்கி தொழில் செய்வீர்கள் உங்கள் எதிரிகள் மூலம் உங்களுக்கு தொழில்கள் அமையும்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள் குடும்ப ஸ்தானம் நன்றாக அமையும் உங்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும் வரக்கூடிய லாபத்தில் வேண்டுமானால் குறைவு ஏற்படலாம் ஆனால் நிச்சயமாக வருமானம் இருந்து கொண்டே இருக்கும்.......astro nithiyandran 


jothidam in tamil லக்னாதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்....astro nithiyandran

ஒன்பதாம் வீடு என்பது ஜாதகரின் தந்தையையும் தர்ம சிந்தனையும் ஜாதகரின் மேற்படிப்புகள் புராணங்கள் ஆச்சாரம் கோவில் 
போன்றவற்றை குரியக்கூடிய ஸ்தானம் இந்த ஒன்பதாம் ஸ்தானமாகும்

 லக்கன அதிபதி உங்களுக்கு அமர்ந்தால் குடும்ப ஸ்தானத்திற்கு எட்டாம் பாவத்தில் இந்த லக்கனாதிபதி அமரும் பொழுது இரண்டாம் இடம் என்பது உங்களுக்கு வருமான  தரக்கூடிய ஸ்தானம் அதாவது உங்கள் பையில் இருக்கும் பணம் மற்றவருக்கு செல்லுதல் என்பதை குறிக்கும்

 அப்படி பார்க்கும் பொழுது உங்களுடைய பணம் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள் 

குடும்ப ஸ்தானத்திற்கு எட்டாம் இடமாக வருவதாலும் வாக்கு ஸ்தானத்திற்கு எட்டாம் இடமாக வருவதாலும் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம் 

அதுபோல உங்களால் குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாகலாம் நீங்கள் பேசும் பேச்சு மூலமாக பிரச்சனை அது உண்டு பண்ணும்

 நிச்சயமாக குடும்பத்தில் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது

 நாளுக்கு ஆறாம் இடமாக வருவதால்  பொதுவாக தாய் சார்ந்த
விஷயங்களை குறிக்கிறது அப்படி என்றால் தாயினுடைய நோயை குறிக்கும் ஸ்தானமாக இருக்கும்

 இந்த இடத்தில் லக்னாதிபதி இருக்கும்பொழுது  ஒன்பதாம் இடத்தில் இருந்து திசா புக்தி நடத்தும் பொழுது தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்படும் அது போல் உங்களது வீட்டில் ரிப்பேர் ஒர்க் செய்யப்படும் அதுபோல உங்களது வாகனங்கள்  பழுதாகும்

 அதுபோல படிப்பு ஸ்தானத்திற்கு ஆறாம் இடமாக வருவதால் அவங்களுடைய ஆரம்பக் கல்வி ஆரம்ப கல்வியில் பிரச்சனைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு 

முதலில் திசா புத்தி எந்த வயதில் வருகிறது என்பதை பார்த்து பலன் அறிய வேண்டும்

லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து திசை நடத்தினால் நீங்கள் கோவிலுக்கு அதிகமாக சொல்வீர்கள் இதுவரை கோவிலுக்கு செல்வது வழக்கமில்லை என்றாலும் இப்போது கோயிலுக்கு செல்வீர்கள்

 ஆன்மீக வழியில் உங்களுக்கு நாட்டம் அதிகமாக இருக்கும் தந்தை மீது பாசமாக இருப்பீர்கள் கோவில் திருப்பணிகளை செய்வதற்கான பாக்கியம் ஏற்படும் 

ஐந்துக்கு ஐந்தாம் இடமாக வருவதால் புத்திர வழியில் பிரச்சனைகள் ஏற்படாது உங்களுக்கு திடீர் அதிஷ்டம் கை கொடுக்கும் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இப்போது இருக்காது

 அல்சர் போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும் தகப்பனின் தகப்பன் நன்றாக இருப்பார் மனைவி மூலம் இவர்களுக்கு சொத்து வந்து சேரும் 

காதல் போன்றவற்றிலும் வெற்றி அடைவார்கள் பொழுதுபோக்கு போன்றவற்றை அனுபவிப்பீர் நாகரீக நடத்தை ஏற்படும் ஆழ்ந்த அறிவு ஞானம் ஏற்படும் அன்னதானம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்...astro nithiyandran 

jothidam in tamil எட்டாம் வீட்டில் லக்ன அதிபதி இருந்தால்....


லக்கின அதிபதி எட்டில் இருந்தால்
ஜாதகத்தில் எட்டாம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம். அது போல எட்டாம் இடம் என்பது ஒரு மறைவு ஸ்தானம் இந்த மறைவு ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் அவர்களுக்கு கஷ்டங்களை அதிகமாக தருவார் தான் செய்யும் செயலால் கஷ்டங்கள் அதிகமாக வரும்.

ஒன்பதாம் இடத்திற்கு 12ஆம் இடமாக இந்த எட்டாம் இடம் என்பதால் உங்களுக்கு ஆன்மீக வழி பிரச்சனைகள் ஏற்படும் 

தந்தை வழியில் பிரச்சனைகளை உருவாக்குவார் 

தான் வளர வளர தந்தை  செல்வாக்கை இழப்பார் 

 தூர பயணங்களில் கஷ்டங்கள் அனுபவிக்க நேரும் மேற்படிப்பில் பிரச்சனைகள் உண்டாகும்
லக்னத்திற்கு எட்டாம் இடமாக வருவதால் தான் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளையும் ஏதோ ஒரு முட்டுக்கட்டை இருந்து கொண்டே இருக்கும்.

மூன்றாம் இடத்திற்கு ஆறாம் இடமாக வருவதால் இளைய சகோதரரிடம் பிரச்சனைகள் உருவாக்கும் யாரிடமாவது நீங்கள் அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டிருந்தால் அது உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்கும் 

ஆதலாம் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம் யாருக்கெல்லாம் லக்கின அதிபதி எட்டில் இருக்கிறதோ கவனமாக இருப்பது நல்லது 

நெடுந்தூர பயணமாக இருந்தாலும் சரி சிறுதூரப் பயணமாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது

 லக்னாதிபதி எட்டாம் இடத்தில் இருந்து திசை புத்தி நடத்தும் பொழுது  தாயின் பூர்விக சொத்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் 

அல்லது அவர்கள் இறப்பிற்கு பிறகு அவர்களுக்கு சொத்துக்கள் வந்து சேரும்

விரைய செலவுகள் அதிகமாக அவர்களுக்கு ஏற்படும் 

இவர்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனை அதிகமாக இருக்கும் 

லக்ன அதிபதி எந்த கிரகம் என்பதை பொறுத்து அதனுடைய பலன்கள் அதிகமாகவும் குறைவாகவோ நடக்கும் 

அவர்களுக்கு கண்டிப்பாக கூட்டுத் தொழில் மூலமாக வருமானம் வரும் யாருக்கெல்லாம் எட்டாம் வீட்டில் லக்கின அதிபதி இருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் தொழில் மூலமாக வருமானங்கள் வந்து கொண்டே இருக்கும் மனைவி மூலமாக இவர்களுக்கும் வருமானங்கள் வந்து கொண்டிருக்கும்....astro nithiyandran

jothidam in tamil லக்ன அதிபதி ஏழில் இருந்தால்... let's see what are the results if Lagna lord is in seventh.

லக்ன அதிபதி ஏழில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் முதலில் ஏழாம் பாவம் என்பது எதைக் குறிக்கின்றது என்பதை பார்த்தால் திருமணம் கணவன் மனைவி ஸ்தானம் இருவரின் இல்லறம் ,வாதம் இனிய கனவு சுற்றம் மனைவி மூலம் வரும் சொத்துக்கள் தத்து புத்திரன் இரண்டாவது மனைவி மூலம் வரும் குழந்தை எழுத்தினால் வெற்றி பரிசுகள் இழந்த பொருட்களை மீட்டுதல் வெற்றி சுவையான விருந்து ஆடை ஆபரணம் கூட்டாளி அறக்கட்டளை கமிஷன் தொழில் வெற்றிலை தயிர் மனைவியின் தோற்றம் புனித தன்மை மகிழ்ச்சி அந்தரங்கம் குளிர்சாந்த நோய் போன்றவற்றை இன்று ஏழாம் பாவம் குறிக்கின்றது
 அப்படி என்றால் இந்த ஏழாம் பாவ அதிபதி யார் என்பதை பார்க்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் லக்கின அதிபதி ஏழாவது பாவத்தில் இருக்கும் பொழுது கணவன் மனைவி இடையே இருக்கின்ற ஒற்றுமை அதிகமாக இருக்கும் அவர்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும பிரிந்து போக மாட்டார்கள்

12ஆம் இடத்திற்கு எட்டாம் இடமாக அதாவது விரைய ஸ்தானத்திற்கு எட்டாம் இடமாக லக்னாதி வருவதால் விரயத்தை தடுக்க கூட அமைப்பை ஏற்படுத்துவார் அதாவது நீங்கள் அதிகமாக விரைய செலவை செய்ய மாட்டீர்கள் உங்களால் விரயம் ஏற்படுவது தடைப்படும்

 அயண சயன போகஸ்தானம் என்பதும் 12ஆம் இடத்தை குறிப்பதால் உங்களுடைய தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு அதாவது அதிகமாக உழைப்பதால் உங்களுக்கு தூக்கம் இன்மை ஏற்படும்

ஆறாம் இடமாக வருவதால் இரண்டாம் இடம் பொதுவாக குடும்பஸ்தானம் வருமானம் போன்றவற்றை குறிப்பதால உங்களால் உங்கள் வருமானம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு அதாவது நாவடக்கம் வேண்டும் தங்கள் வாயால் தங்கள் பதவி போவதற்கு வாய்ப்புகள் உண்டு 

கூட்டத் தொழில் பொறுத்த வரை தாங்கள் தங்கள் மனைவியுடன் சேர்ந்து நடத்தும் தொழில் அனைத்தும் வெற்றியை பெரும் அதிகமாக கமிஷன் தொழில் செய்யும் பொழுது உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும் நீங்கள் எந்த ஒரு காரியத்திற்கும் கையெழுத்து போட்டால் அந்த காரணம் வெற்றியில் போய் முடியும் இந்த ஏழாம் பாவத்தில் மற்ற கிரகங்கள் சேரும்பொழுது இதனுடைய தன்மை மாறுபடும் 

எந்த கிரகம் எந்த பாவத்தின் அதிபதி கிரகம் சேருகிறது என்பதைப் பொறுத்து அதன் பலன்கள் சற்று மாறுபடும் இது இதே இடத்தில் சந்திரன் இருப்பவர்கள் ஆனால் உங்கள் மனைவி அழகானவளாக அழகான பெண்ணாக இருப்பார் அதேபோல் சுக்கிரன் இருந்தாலும் அழகான பெண்ணாக இருப்பார் 

இப்படி ஏழாம் பாவத்தில் லக்னம் இருக்கும் பொழுது எட்டாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் எட்டாம் பாவம் அழிக்கக்கூடிய அமைப்பை  ஏற்படுத்துவார் 

அதாவது உங்களுக்கு கண்டங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை இவர் தடுத்து நிறுத்துவார் அதாவது உங்கள் கண்டங்களை நீங்களே தடுத்து நிறுத்துவீர்கள் எட்டாம் பாவம் பொதுவாக நிரந்தர கடன் நிரந்தர நோய் மரியாதை இழத்தல் அனுமதி போன்றவற்றை ஏற்படுத்தும் பணவிரயம் வீண் அழைச்சல் கண்டம் இதுபோன்ற பிரச்சனைகளை இவர் ஏற்படுத்துவார் அப்படி இருக்கக்கூடிய இந்த பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவத்திலிருந்து லக்ன அதிபதி திசையை நடத்தும் பொழுது உங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகளை அனைத்தையும் அவர் தீர்த்து வைப்பார் 

அப்படி என்றால் உங்களுக்கு நிரந்தர கடன் இருக்காது நிரந்தர கடன் தீருவதற்கான அமைப்பை ஏற்படுத்துவார் மரியாதை அதிகமாக இருக்கும் வீண் அழைச்சல் இருக்காது நிரந்தர நோயும் இருக்காது

மூன்றாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமாக வருவதால் சிறு தூற பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு மாமனாருடன் நட்பாக இருப்பார் ஒப்பந்தம் டாக்குமெண்ட் கணிதம் தகவல் தொடர்பு போன்றவற்றின் மூலம் இவர்களுக்கு பணங்கள் வந்து சேரும் ,சொத்துக்களை இழப்பதற்க்கான அமைப்புகள் உண்டு அதை விற்பதன் மூலம் பணம் பெறுவார்கள்

லாபம் ஸ்தானம் எண்ணக்கூடிய 11 ஆம் பாவத்திற்கு ஒன்பதாம் பாவத்திலிருந்து லக்னம் திசை நடத்தினால் மூத்த உடன்பிறப்புகளுடன் நட்பு பாராட்டப்படும் கால்நடை வளர்ப்பு நான்கு கால் விலங்குகள் வளர்ப்பதன் மூலம் இவர்கள் ஆபத்தை பெறலாம் இழந்த செல்வத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு சுய முயற்சி செய்யும்போது கிடைக்கும்

 சமையல் கலை சிறந்து விளங்குவார் ஆடை ஆபரணம் அனைத்தும் பெறுவார் சுவையான உணவுகளை சுவைத்து மகிழ்வார் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும் உயர் அதிகாரியுடன் தொடர்புகள் ஏற்படும் விரும்பிய உயர்கல்வி போன்றவற்றை இவர் பெறுவார் இப்படி லக்ன அதிபதி எந்தெந்த பாவத்தில் இருக்கும் பொழுது என்ன பலன் என்பதை நாம் தொடர்ச்சியாக பார்க்கலாம் நன்றி வணக்கம்.....astro nithiyandran 

jothidam in tamil லக்கின அதிபதி ஆறில் இருந்தால் .........

லக்கின அதிபதி ஆறாம் பாவத்தில் இருந்தால் ஆறாம் பாவம் என்பது பொதுவாக பகைவர் வியாதி வம்பு வழக்கு எதிரிகள் போன்றவற்றை குறிக்கும் ஸ்தானமாகும்
 இந்த லக்கின அதிபதி ஆறில் இருக்கும் போது என்ன பிரச்சனைகள் வரும் என்றால் தங்களுக்கு தாங்களே பகைவர் அதாவது நீங்கள் உங்களுக்கே பகைமை தேடிக் கொள்ளுங்கள் அதேபோல் வம்பு வழக்கு போன்றவற்றை தாங்கள் தங்களாலே ஏற்படுத்திக் கொள்வீர்கள் 

இந்த லக்னதிபதி ஆறில் இருக்கும் பொழுது அதனுடன் சூரியன் சந்திரன், குரு சுக்கிரன் போன்ற கிரகங்கள் கூடினால் எதிரிகளால் துன்பம் அதிகமாக ஏற்படுத்துவார் ஒரு மனிதனின் ஏழாம் பாவம் என்பது திருமண வாழ்க்கையை குறிக்க கூடிய அமைப்பு .

பிற மகளிர் உறவு இதன் மூலமாக அறியலாம் சரி இப்பொழுது இந்த ஏழாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமான ஆறாம் பாவத்தில் இலக்கண அதிபதி இருக்கும் பொழுது உங்கள் ஏழாம் பாவத்தை முழுமையாக அவர் பாதிப்பை ஏற்படுத்துவார் இருந்தாலும் ஆறாம் பாவ அதிபதி எந்த நட்சத்திரத்தில் உள்ளார் என்பதை பொறுத்து சற்று பலன்கள் மாறுபடும்

 ஏழாம் பாவம் மனைவி ஸ்தானம் என்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும் தான் செய்யும் தவறால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் 

அதாவது ஜாதகரே இந்த பிரச்சனைக்கு முழுமையான காரணமாக அமைவார் கூட்டுத் தொழில் செய்யும் பொழுது  ஜாதகர் அவராலேயே அந்த தொழில் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்
11ஆம் பாவத்திற்கு எட்டாம் பாவமாக வருவதால் 11 ஆம் பாவம் என்பது பொதுவாக மூத்த சகோதரர் மற்றும் லாப ஸ்தானத்தையும் குறிக்கக்கூடிய அமைப்பு .

 இதற்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒரு கிரகம் திசை புத்தி நடத்தும் பொழுது அது லக்னாதிபதியாக அமைந்தால் அவர்களுக்கு வருமான குறைவு ஏற்படும் வருமானத்தில் தடை ஏற்படுத்தும் ஒரு வேலையில் அவர்களுக்கு போனஸ் அதாவது இன்கிரிமெண்ட் அல்லது ஊதிய உயர்வு என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து அவருக்கு வழங்கப்படும் ஆனால் அந்த ஊதிய உயர்வு இவரால் கெட்டுப் போக அதிக வாய்ப்பு உண்டு. 

வேலை செய்யும் இடத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் ஊதிய உயர்வு  ஏற்படாது
அதேபோல் மூத்த சகோதரர்கள் அடிக்கடி சண்டைகள் ஏற்படும் ம் இரண்டாவது மனைவி இருந்தால் அவர்களுடனும் அடிக்கடி சண்டைகள் ஏற்படும்

 நீங்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லை என்றால் நிச்சயமாக உங்களுக்கு நோய் அதிகமாக ஏற்படும்
உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அல்லது தங்கள் குழந்தைகள் மூலம் வருமானங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

பூர்வீக சொத்துக்கள் இருக்கும் அந்த சொத்துக்கள் மூலம் இவர்களுக்கு நிச்சயம் வருமானம் வந்தே தீரும் அதாவது ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கு நிச்சயம் வருமானம் வரும்........BY Astro nithiyandran


jothidam in tamil லக்கின அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்

லக்கின அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் 

இந்தப் பதிவிற்கு போவதற்கு முன்னால் சில பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் என்பது தான் எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கிறது அதை பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும் காரணம் கிரகங்களுக்கு தனி ஒளி என்பது கிடையாது

 ஆதலால் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் வழியாகத்தான் தன்னுடைய கதிர்வீச்சுகளை செலுத்துகின்றன அப்படி இருக்கும் பொழுது அந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு என்ன பெயர் உள்ளது அதற்கு எந்த அதிபதி வருகிறாரோ அதை பொறுத்து உங்களுடைய பலன்கள் மாறுபடும
 அதாவது ஒரு ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அது விஷமாக மாறுவது போல் நல்ல கிரகமாக இருந்தாலும் அந்த கிரகத்தின் மீது படும் ஒளி ஆனது உங்கள் ஜாதகத்தில் தீய பலன்களை தரக்கூடிய அமைப்பில் இருந்தால் அதன் நன்மை அடிபட்டு தீமை பலன்கள் நடைபெறும் அதாவது 20% மட்டுமே நன்மை நடைபெறும் மீதி தீய பண்பு நடைபெறும்

 அந்த நட்சத்திர அதிபதி உங்க ஜாதகத்திலும் உங்களுடைய லக்னத்திற்கும் எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறார் அது உங்கள் லக்கன அதிபதியை பாதிப்பாரா பாதிக்க மாட்டாரா என்பதை பொறுத்து உங்களுடைய பலன்கள் அமையும்

 ஒரு ஜாதகத்தை ஆராயும் பொழுது  கிரகம் எடுத்துக் கொண்ட பாவம் கிரகம் விழுந்த நட்சத்திரம் எடுத்துக்கொண்ட பாவம் கிரகத்தின் மீது விழுகின்ற பார்வை கிரகம் எந்தெந்த பாவத்திற்கு எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்தே பலன்கள் அமையும் இவை அனைத்தும் பொதுவான பலன்கள்

 அவருடைய சுயசாதகத்தில் லக்னாதிபதி ஐந்தில் இருந்தால் இந்த பலன்கள் நிச்சயம் நடத்துவார் இதில் கூடவோ குறையவோ அவர்களது ஜாதகத்தை பொறுத்து நடைபெறும் ஆனால் கண்டிப்பாக இந்த விஷயங்கள் நடந்திடும்

பொதுவாக ஐந்தாம்  இடம் என்பது புண்ணிய ஸ்தானமாகும் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் குழந்தைகள் தாய் மாமன் போன்றவற்றை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும்  லக்னமும் ஐந்தாம் இடமும் சம்பந்தப்படும்போது குழந்தைகளிடம் அன்பாக இருப்பார் அதேபோல் தாய் மாமனிடம் அன்பாக இருப்பார் இந்த இரண்டு உறவில்  தொடர்பு இருந்து கொண்டு இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் உறவு அறுந்து போகாது எப்பொழுதும் இறுதிவரை இவர்களுக்கு உறவு இருக்கும்

 சரி இந்த ஐந்தாம் இடம் என்பது பத்துக்கு எட்டாம் இடமாக வருவதால் பத்தாம் இடம்  தொழிற் ஸ்தான ம் அப்படி தொழிற் ஸ்தானத்திற்கு எட்டாம் இடத்தில் இருந்து லக்னாதிபதி நடத்தினால் தொழில் தன்னாலே  கெட்டுப் போகும் அமைப்பை ஏற்படுத்துவார் 

அதாவது உங்களுடைய வேலை உங்களாலே பறிபோகும் அல்லது  நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனை உண்டு பண்ணும் தொழிற் ஸ்தானத்திற்கு இது எட்டாம் இடமாக வருவதால் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அவர் உருவாக்குவார் 

அதேபோல் ஆறுக்கு 12ஆம் இடமாக வருவதாக ஆறாம் இடம் என்பது எதிரி வம்பு வழக்கு நோய் கடன் போன்றவற்றை குறிக்கும் இப்பொழுது ஆறாம் இடத்தை அழிக்கக்கூடிய தன்மையை இவர் ஏற்படுத்துவார் அப்படி என்றால் தங்களின் எதிரிகள் அழிந்து போவார்கள் தங்களின் வழக்குகள் வெற்றி கிட்டும் தாங்கள் கடனை அடைக்க கூடிய அமைப்பை ஏற்படுத்துவார் தங்களது நோயிலிருந்து விடுபட கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்

 எப்பொழுது என்றால் திசா புத்தி அந்திரம் நடக்க வேண்டும் அதாவது லக்ன அதிபதியுடன் திசை புத்தி அந்திரம் நடக்கும் போது நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் அதேபோல் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி ஐந்தாம் இடத்தில் இருக்கும் போது ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமாக லக்னத்திற்கு ஐந்தாம் இடமாக வருவதால் இது ஒரு தர்ம திரிகோண அதிபதி ஆகும் 

இந்த தர்ம தரிகோண அதிபதி என்பது நீங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த தர்மத்தின் பலனாக இப்பூமியில் பலன்களை அனுபவிப்பீர்கள் அப்படி என்றால் லக்னாதியை ஐந்தில் இருக்கும் போது உங்களுக்கு ஒன்பதாம் இடம் தந்தை ஸ்தானம் உயர் கல்வி ஆன்மீகம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் நீங்கள் எப்போதும் ஆன்மீகத்தை கடைபிடிப்பீர்கள் திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக திடீர் அஷ்டங்கள் உங்களைத் தேடி வரும்

லக்ன அதிபதி ஐந்தில் இருப்பதால் இந்த அதிர்ஷ்டம் உங்களாலேயே உங்களுக்கு கிடைக்கும் அதாவது இந்த இஷ்டத்திற்கு முக்கிய காரணமாக நீங்களே இருப்பீர்கள் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் செய்யும் பொழுது அது வெற்றியில் போய் நிற்கும் இதே போல் ஐந்தாம் இடத்திற்கு மற்ற பாவங்கள் எந்தெந்த அதிபதியாக வருகிறது எந்தெந்த பாவமாக வருகிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்....astro nithiyandran 

jothidam in tamil லக்னாதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இந்த லக்னமே நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தார் போல் அமையுள்ளது
 அப்படிப்பட்ட இந்த லக்னம் நமக்கு உயிர் காரணமாக வருகிறது இந்த லக்ன அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் நாம் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பயனை அதிகமாக அனுபவிப்போம் 

அதே லக்னாதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் போன ஜென்மத்தில் நாம் செய்த பாவத்தின் பலனை அதிகமாக அனுபவிப்போம்

 அப்படிப்பட்ட இந்த லக்கின அதிபதி நாலாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் 4-ம் பாவம் என்பது பொதுவாக வண்டி வாகனம் தாய் ஆரம்பக் கல்வி போன்றவற்றை குறிக்க கூடியது

 நான்கில் இருக்கும் பொழுது தாயின் மீது அதிக அன்பு உடையவராக இருப்பார்   இருக்கும் வீட்டை நேசிப்பார் வண்டி வாகனம் மீது அதிகமாக பற்று இருக்கும் ஆரம்பக் கல்வி நன்றாக படிப்பார் போன்ற பலன்களை ஏற்படுத்துவார்

 இந்த லக்னாதிபதி மூன்றுக்கு இரண்டாம் இடமாக வருவதால் கமிஷன் தொழில் போன்றவற்றில் அதிக லாபத்தை ஏற்படுத்துவார் பயணங்களை மேற்கொண்டு அதன் மூலம் வருமானத்தை ஏற்படுத்துவார் 

ஐந்தாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் அதேபோல் குழந்தைகள் விஷயத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் குழந்தைகள் வளர வளர  தங்களின் பேச்சை அவர்கள் கேட்க மாட்டார்கள்

 குழந்தைகள் வழியில் பிரச்சனைகளை உருவாக்கும் அதேபோல் திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை இவர் தடை செய்வார் வரவேண்டிய அதிர்ஷ்டம் தள்ளி போகும் 9-ம் இடத்திற்கு எட்டாம் இடமாக வருவதால் ஆன்மீக வழியில் கிடைக்கக்கூடிய அனைத்தும் தடை செய்யும்

 தன் தந்தை உடல்நிலை பாதிக்கப்படும் உயர் கல்வியில் பிரச்சனைகளை உருவாக்குவார் அதாவது ஆரம்ப கல்வியை நன்றாக படித்து விட்டு உயர்கல்வி கோட்டை விட்டுவிடுவார்

 ஒன்பதாம் வீடு என்பது பூவ ஜென்மத்தை குறிப்பதால் இதற்கு எட்டாம் இடத்தில் இருந்து லக்னாதிபதி திசை புத்தி நடத்தும் பொழுது ஒன்பதாம் பாவத்தை முழுமையாக தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்

11ஆம் பாவத்துக்கு  ஆறாம் பாவமாக வருவதால் லாபத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார் மூத்த சகோதரர்கள் பிரச்சனை உருவாக்குவோம்
அதே நேரம் மூத்த சகோதரஸ்தானம் மூலமாக இவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்
கூட்டுத் தொழில் லாபத்தை ஏற்படுத்துவார்
மனைவி மூலமாக இவர்கள் தொழில் அமைய அதிகமாக
வாய்ப்புண்டு இவர்கள் கடன் கேட்கும் இடத்தில் கடன் உங்களுக்கு சுலபமாக கிடைக்கும் எதிரிகள் மூலமாக இவர்கள் லாபத்தை அடைவார்கள் வம்பு வழக்கு போன்றவற்றின் மூலமாக இவர்கள் லாபத்தை அடைய வாய்ப்பு உண்டு மீண்டும் அடுத்த பதிவில்.......astro nithiyandran 

jothidam in tamil லக்னாதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும்...astro nithiyandran

லக்னாதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன்.

 ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அப்படிப்பட்ட இந்த லக்ன அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம் இந்த லக்ன அதிபதி மூன்றாம் பாவத்தில் இருக்கும் பொழுது இந்தப் பாவம் நாலாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் .

அதாவது மூன்றாம் பாவத்தில் இருக்கும் லக்கின அதிபதியின் திசை புத்தி அந்தரம் சூட்சும பிராணம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நடக்கும் பொழுது இந்த நிகழ்வு நடைபெறும்

 அதேபோல் நாலாம் பாவம் என்பது பொதுவாக  வண்டி வாகனம் மற்றும் வீடு போன்றவற்றைக் குறிக்கும் அப்படிப்பட்ட இந்த பாவத்தில்  குழந்தைகளின் ஆரம்ப கல்வி என்பது இதில் உள்ளது 

இப்படி இருக்கும் பொழுது இந்த மூன்றாம் பாவத்திலிருந்து லக்னாதிபதி திசையை நடத்தினால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் இருக்கும் வீட்டில் பிரச்சனைகளை உண்டு பண்ணும் வண்டி வாகனங்களில் வீண் செலவு ஏற்படும் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும் 

இது போன்ற பொதுவான பலன்கள் நடைபெறும் அதேபோல் மூன்றாம் இடம் என்பது எட்டுக்கு எட்டாம் இடமாக வருவதால் உங்களுக்கு ஆயில் விருத்தி ஏற்படும் அதாவது உங்களுக்கு அடிபடக்கூடிய அமைப்பை தடுத்து நிறுத்தும் கண்டங்களை தடுத்து நிறுத்தும் அவமானங்களை தடுத்து நிறுத்தும் யாராவது மரணத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தை தடுத்து நிறுத்தும் 

இந்த நிகழ்வுகள் நடைபெறும் அதேபோல் பத்தாம் பாவத்துக்கு ஆறாம் பாவமாக வருவதால் தொழில் முடக்கம் ஏற்படும் பத்தாம் பாவம் பொதுவாக தொழிலைக் குறிப்பதால் தொழில் முடக்கம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு தொழில் நிலையங்களில் உங்களுக்கு மனது பாதிக்கப்படுகிற அமைப்பை ஏற்படுத்தும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம் 

இந்த மாதிரி பிரச்சனைகளை இந்த லக்னாதிபதி ஏற்படுத்துவார் ஆனால் உங்களுக்கு எதிர்பார்த்த பண வரவு மனைவி வழியில் உங்களுக்கெல்லாம் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் உண்டு

 ஏழாம் பாவத்தை அதாவது மனைவி ஸ்தானத்தை இது நல்ல அமைப்பை ஏற்படுத்தும் கூட்டுத் தொழில் நன்றாக அமையும் ஏழாம் இடம் பொதுவாக மனைவி ஸ்தானத்தை குறிப்பதால் இந்த அமைப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு வரன் நன்றாக  அமையும் 

இதேபோல் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் ஒவ்வொரு பலன்களை ஏற்படுத்தும் அடுத்த பதிவில் லக்னாதிபதி நான்காம் இடத்தில் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்

jothidam in tamil லக்னாதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன்..... astro nithiyandran

லக்னாதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன்
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இந்த லக்ன அதிபதி எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பொறுத்து அவரது வாழ்க்கை அமையும்

 லக்னாதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் எந்த ஒரு காரியமும் விரைவில் நடந்தேறும் அதே சமயம் லக்னாதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு எந்த காரியமும் தடைப்பட்டு பிறகு நடைபெறும் 

அப்படிப்பட்ட லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் சகோதர அதாவது அவரது இளைய சகோதரர் இவரால் பாதிக்கப்படுவார் அது மட்டுமல்லாமல் கமிஷன் தொழில் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறு தூர பயணத்தில் இவர்களுக்கு பிரச்சனை உண்டாகும் மனதில் ஏதோ  ஒரு வித பயம் இவர்களை ஆட்கொள்ளும்.

ஏழாம் இடத்திற்கு எட்டாம் பாவமாக இது வருவதால் ஒருவருக்கு கூட்டுத்தொழில் பிரச்சனை ஏற்படுத்தும் அதே போல் திருமண வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படும் ஏழாம் பாவம் என்பது முக்கியமாக மனைவி ஸ்தானம் மற்றும் கூட்டுத் தொழில் ஸ்தானமாகும் ஆகையால் எவ்விரு அமைப்பும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் ஒன்பதாம் பாவத்திற்கு ஆறாம் பாவமா வருவதால் ஒன்பதாம் பாவத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை இது ஏற்படுத்தும் ஒன்பதாம் பாவம் என்பது முக்கியமாக உயர்கல்வி மற்றும் ஆன்மீகம் மற்றும் தந்தை பற்றி குறிக்கக்கூடிய பாவம் தந்தையுடன் கருத்து வேறுபாடு உயர் கல்வி கற்பதில் தடை ஏற்படுவதல் ஆன்மீக செயல்களில் தடை ஏற்படுவதல் போன்றவை ஏற்படும்

பத்தாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமாக இரண்டாம் பாவம் வருவதால் இவர்களுக்கு தொழில் மூலம் வருமானம் கிடைக்கும் இரண்டாம் இடம் பொதுவாக வருமான  ஸ்தானத்தை குறிப்பதால் இவர்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும்

ஆறாம் பாவத்திற்கு 9 ஆம் பாவமாக இரண்டாம் பாவம் வருவதால் உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் அடிமைத்தொழில் அமையும் உடம்பில் ஒருவித நோய் உண்டாக்கும் எதிரிகளை அதிகமாக சம்பாதித்து தரும்
இதுபோன்ற அமைப்புகள் இந்த லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு நடைபெறும் 

ஆனால் இந்த லக்னாதிபதி திசை புத்தி அந்தரம் வரும்பொழுது உங்களுக்கு இப்பலங்கள் நடைபெறும் அதேபோல் கோச்சாரத்தில் எங்கு உள்ளார் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபடும் இரண்டாம் பாவத்தை பார்க்க கூடிய கிரகம் அல்லது இரண்டாம் அதிபதி எங்கு உள்ளார் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபட வாய்ப்புண்டு 

இரண்டாம் பாவத்தை குரு பார்த்தால் இந்த பலன்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் இந்த பாவத்தை சனீஸ்வர பகவான் பார்த்தால் உங்களுக்கு வெவ்வேறு பலன்களை ஏற்படுத்துவார் ஆதலால் சுய ஜாதகத்தை பார்த்து முழு புலன் அறிய வேண்டும்....

By astro nithiyandran 

லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்.....astro nithiyandran


லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்
ஜாதகருக்கு நீண்ட ஆயுள், புகழ், அந்தஸ்து இருக்கும். சுய முயற்சி உடையவர்.கௌரவத்திற்க்கு முக்கியத்துவம் தருபவர் தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பார்

உங்களுக்கு இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் உங்களுக்கு லக்கின அதிபதியுடன் திசை புத்தி நடைபெறும் பொழுது இரண்டாம் இடம் என்பது குடும்பஸ்தானம் தன விருத்தி பண கையிருப்பு வாக்கு ஸ்தானம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆறாம் பாவத்திற்கு எட்டாம் பாவமாக கூறுவதால் ஆறாம் பாவகம் என்பது நோய் ஸ்தானமாகும், அதேபோல் கடன் வழக்கு ,எதிரி ,அடிமைத்தொழில் போன்றவற்றை குறிக்க கூடிய ஸ்தானம் அதற்கு எட்டாம் இடமான லக்னத்தில் இருந்து ஒரு கிரகம் தனது தசை புத்தி நடத்தும் ஆனால் ஆறாம் பாவத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும் அப்படி என்றால் ஒருவருக்கு கடன் என்பது சுலபமாக கிடைக்காது கடன் கேட்டால் கடன் கிடைப்பது அரிது அதுபோல் ஒருவருடைய நோய் தாக்கத்தை மட்டுப்படுத்தும் எதிரிகளை வெல்லக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும் வம்பு வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும்.

இதேபோல் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு ஆறாம் பாவம் என்பது ஒருவருடைய ஆயுளைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் எட்டாம் பாவம். அதேபோல் ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமும் எட்டாமிடம் இந்த எட்டாம் இடத்துக்கு ஆறாம் இடத்திலிருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் ஆனால் அப்பொழுது அவர்களுக்கு ஆயிலில் விருத்தி ஏற்படும் அவமானம் ஏற்படாமல் காக்கும் ஆதலால் லக்னத்தில் இருந்தால் உங்களுக்கு நற்பலன்களை ஏற்படுத்துவார்.

அதேபோல் கலக்கினத்திற்கு ஐந்தாம் இடம் என்பது உங்களுக்கு ஒன்பதாம் பாவமாக ஒன்பதாவது ஸ்தானமாக வருவதால் ஐந்தாம் இடம் என்பது அதாவது ஒன்பதாம் இடத்தில் புத்தி நடத்தும் பொழுது ஐந்தாம் இடம் பொதுவாக பூர்வ புண்ணியம்  குழந்தைகளுக்கான இடம் திடிர் அதிஷ்டம் போன்றவற்றை குறிக்கும் இதில் முன்னேற்றங்கள் ஏற்படும்

இதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருந்து திசை புத்தி லக்னாதிபதி நடத்துவதால் நீண்ட தூரப் பயணம் கல்வி அதாவது உயர் கல்வி ஆன்மீகம் தந்தை போன்றவற்றைத் குறிக்கும் அப்படி என்றால் தந்தை மூலமா வரக்கூடிய கௌரவம் போன்றவை தரக்கூடிய ஸ்தானம் ஆதலால் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து திசை நடத்தும் போது ஒவ்வொருவருடைய கௌரவம் போன்றவை உயர்ந்து காணப்படும் ஆன்மீக வழியில் நாட்டம் அதிகமாக இருக்கும் தந்தைக்கு உடல்நிலை நன்றாக இருக்கும் 

இதேபோல் மத்த பாவங்களை வைத்து பார்க்கும் பொழுது  ஒவ்வொரு பலன்களை ஏற்படுத்தும் ஆதலால் லக்னதிபதி எந்த பாவத்தில் உள்ளார் என்பதை பொறுத்து அவருடைய பலன்கள் பலன்கள் மாறுபட்டு நடக்கும்


jothidam in tamil ஜாதகத்தில் ஒருவருக்கு தொழில் என்பதை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்... கோச்சாரத்தின் படி ராசிப்படி தொழில் மாற்றம் அமையுமா அல்லது லக்கனப்படி தொழில் மாற்றம் அமையுமா.......

தொழில் என்பதை எப்படி தீர்மானிக்க வேண்டும் .....

ஜாதக அமைப்பில் இரண்டாக பிரித்தால் ஒன்று கணிதம் மற்றொன்று பலன்கள் இந்தக் கணித அமைப்பிற்கு சூரியன் சந்திரன் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் பலன் சொல்லும் பொழுது இந்த சூரியன் சந்திரன் அமைப்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் நாம் பிரித்து தெரிந்து கொண்டோமே ஆனால் பலன்களை துல்லியமாக சொல்ல முடியும்

இப்படி இரண்டாகப் பிரித்துக் கொண்டால் உங்கள சரியாக பலன்களை சொல்ல முடியும் இந்த கோச்சாரம் மற்றும் உங்களது சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி போன்ற பலன்களையும் உங்களால் துல்லியமாக சொல்ல முடியும்

ராசி படி தொழில் அமையுமா அல்லது லக்கின படி தோழில் அமையுமா ?

முதலில் ராசி என்பது நம் சந்திரன் அடிப்படையாக வைத்து பார்க்கக் கூடிய ஒன்று அதேபோல் லக்னம் என்பது சூரியனின் மையப்படுத்தி கணிக்க கூடிய ஒரு அமைப்பு ஆகும்

 சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் ஜாதகத்தில் முக்கிய பங்கு வைக்கிறது சூரியன் என்கிற உயிரானது சந்திரன் என்ற உடல் மூலமாக பூமியில் பிறப்பு எடுக்கிறது அதாவது சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி சந்திரன் இப் பூமிக்கு பிரதிபலிப்பை அனுப்புகிறது

 சரி சூரியன் சந்திரன் இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன ஒரு ஜாதகத்தில் சூரியன் எந்த லக்னத்தில் குறிக்கின்றதோ அந்த லக்னம் அந்த ஜாதகருக்கு அமைகிறது

 ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் ஒரு லக்னம் இருக்கின்றது காலையில் ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு லக்னத்தில் உதிக்கின்றது உதாரணமாக மேசத்தில் சித்திரை மாதம் உதிக்கின்றது 

இப்படி ஒவ்வொரு மாதங்களாக 12 மாதங்களுக்கும் ஒவ்வொரு லக்னம் காலையில் பிறப்பெடுக்கிறது சராசரியாக 24 மணி நேரத்தில் 12 லக்னங்களும் கடந்து விடுகிறது

 ஆனால் கட்டத்தில் தனியாக சூரியன் என்ற ஒரு கிரகமும் குறிக்கப்பட்டு இருக்கும் அப்படி என்றால் என்ன

.... சூரியன் மையப்படுத்தி கனிக்ககூடிய லக்கினமே பிரதான ஒன்று சூரியன் அதில் கிரகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அதுபோலத்தான் சந்திரன் என்பது திசா புத்தியை கணிக்க கூடிய ஒரு அமைப்பு ஆனால் கட்டத்தில் உள்ள சந்திரன் என்பது ஒரு கிரக அமைப்பு

 நீங்கள் லக்கினத்தையும் திசா புத்தியும் இரண்டையும் எடுத்துக் கொண்டால்தான் சரியான பலனை  சொல்ல முடியும். 

அதை விடுத்து சூரியன் அமைப்பு சந்திரன் அமைப்பு நீங்கள் ஜாதகத்தில் பார்த்தீர்களேயானால் அதனுடைய பலன்களை சரியாக சொல்ல இயலாது ஆதலால் சூரியனை மையப்படுத்தி சந்திரனை மையப்படுத்தி நீங்கள் பொதுவா பலன்கள் வேண்டாம்.

 இந்த கோச்சாரம் அனைத்துமே நீங்கள் லக்னபடி எங்கு அமைந்துள்ளது என்பதையும் ராசிப்படி மனோகரன் அதாவது சந்திரன் என்பது மனோகரன் சந்திரனுக்கு எந்த இடத்தில் அமைந்துள்ளது  இருக்கக்கூடிய அனைத்து ஸ்தானங்களுக்கும் எந்த பாவமாக வருகிறது என்பதை பொருத்தும் அதில் உங்களுடைய மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த சந்திரன் மூலம் உங்களால் தீர்மானிக்க இயலும்

 சந்திரனை தசா புத்தியும் கணிக்கக் கூடிய கிரகம் என்பதால் கோச்சாரத்தையும் நீங்கள் சந்திரன் மூலமாக கணிக்க வேண்டும் லக்கினத்தை தவிர உங்களுக்கு மத்த ஒன்பது கிரகங்களும் கிரக அமைப்பு  வைத்துத்தான் சொல்ல வேண்டும் 

லக்னம் தனியாக இருக்கும் மத்த ஒன்பது கிரகமும் கட்டத்தில் இருக்கும் அப்படி என்றால் லக்னம் லக்னம் என்பது இரண்டு மணி நேரம் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அதை நீங்கள் இன்னும் குருக்கினால்  லக்னத்தை உங்களால் துல்லியமாக எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கு என்பது உங்களால் அறிய முடியும்

 30 டிகிரி யில் எந்த டிகிரியில் அமைந்துள்ளது என்பதை ஒரு நட்சத்திர அமைப்பு அங்கு காட்டும் அந்த நட்சத்திரத்தில் பொதுவான குணங்கள் உங்களுடைய குணங்களாக நிச்சயம் வெளிப்படும்

 அப்படி என்றால் பொதுவான குணங்கள் எது என்பதை நீங்கள் லக்ன ரீதியாக பார்க்கும் பொழுது அந்த லக்னம் இருந்த நட்சத்திர அதிபதியை எது என்பதை பொறுத்து நீங்கள் இவ்வுலகில் பிறக்கும் போது என்ன கர்மாக்களை கொண்டு வந்தீர்கள் என்று இந்த லக்கனம் காட்டு 

சரி சந்திரன் என்பது உங்களது மனதை குறிக்கப்படுகிறது அப்படிப்பட்ட சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதை பார்த்துத்தான் உங்களது சார்புத்தியை கணிக்கப்படுகிறது

 அந்த நட்சத்திர அதிபதி உங்களுக்கு எந்த பாவத்தின் அறிகுறியாக வருகிறாரோ அதை பொறுத்து அன்று பலம் நடைபெறும் அப்படி என்றால் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றார்களோ அந்த பயணம் செய்யக் கூடிய நட்சத்திர  எந்த பாவங்களுக்கு அதிபதியாக வருகிறதோ அந்த பாவங்களின் பலன்களை தரக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும்

  திசை புத்தி அந்தரங்கம் மூன்று அமைப்பு நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்தரம் என்பதை குறுகிய காலத்தில் நடைபெறுகிறது கொஞ்சம் ஒரு மாதமாக இடைவெளி கூடிய அமைப்பை குறிக்கும். 

புத்தி என்பது சில ஒரு இரு வருடங்கள் நடைபெறும்அதேபோன்று திசை என்று நீண்ட காலம் நடைபெறும் இப்படி என்றால் தசாவின் வாயிலாக தான் புத்தியும் அந்தரமும் செயல்படும் திசா வழிவிடவில்லை என்றால் உங்களுக்கு புத்தியும் அந்திரம் வேலை செய்யாது... இப்படி ஒவ்வொரு கிரகமும் தான் நட்சத்திர அதிபதி மூலமாக பலன்களை வழங்குகின்ற.......by astro nithiyandran 

jothidam in tamil காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம்

காரகத்துவம் பஞ்ச பூதங்களைப் போன்று ஒன்பது கிரகங்களும் தனித்தனி அவர்களுக்கென்று ஒரு அதிகாரம் நிறைவு நாள் வழங்கப்பட்டுள்ளது காரகத்துவம் என்பது குறிப்பிட்ட கோள்களின் உரிமை அதாவது அதனுடைய அதிகாரத்தை குறிக்கும் காரகத்துவம் என்பது கிரகத்துவம் என்ற வார்த்தையில் இருந்து வந்தது கிருத்திகை அதாவது கார்த்திகை என்று மாறியது போல் காரகத்துவம் வந்தது பிறந்த லக்னத்தை பொறுத்து மாறுபடும் காரகத்துவம் எல்லாம் ராசிகளுக்கும் பொதுவான ஒன்று
ஜாதருடைய தந்தையின் நிலையும் ஜாதகரின் அரசாங்க வேலையையும் நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்த சூரியனுக்கு உண்டு அதாவது ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் சூரியன் ஆட்சி பெற்றால் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு இருந்தாலும் சே ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும் 

இதுபோல் சந்திரன் என்பவர் மாதுர் காரகன் மனகாரகன் யார் எந்த லக்னமாக இருந்தாலும் அவர்களுக்கு மாதுர்காரகன் மனக்கரனாக சந்திரனே வருவார் அதாவது தாயாரின் ஜாதகரின் தாயார் உடைய உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும்
குறிக்கும் .
செவ்வாய்
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சகோதர காரகன் பூமி காரகன் ஆவார் செவ்வாயின் நிலைய அறிந்து சகோதரனையும் பூமி லாபத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 புதன் 

புதன் என்பவர் வித்யா கரனாகவும் தாய் வழி மாமா குறிக்கிறது 

குரு பகவான்

ஒருவருடைய புத்திர பாக்கியம் பொன் சேர்க்கை பற்றி விவரங்கள் குரு அமைப்பை குறித்து நாம் அறியலாம்

 சனி
 சனி என்பவர் ஆயுட்காரன் ஆவார் 

சுக்கிரன் 

என்பவர் கலைஞர் ராகு என்பவர் பிதாமகர் காரகன் நோய்க்காரகன் இசைக்கருவனாக வருகின்றார்

 கேது என்பவர் மாதாமகர் அம்மாவுடைய அப்பா அம்மா மருத்துவ கார்களாக  வருகின்றார்

ஆதிபத்தியம் தொடரும்....... By astro nithiyandran....

jothidam in tamil தனலாபம்-.......astro nithiyandran..

ஒருவர் ஜாதகத்தில் தன பாவம் என்பது அவரவர் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தை குறிக்கின்றது பொதுவாக இரண்டு மற்றும் 11 ஆம் அதிபதிகளின் மூலம் ஒருவருக்கு எதன் மூலம் தானம் வரும் என்பதை காண இயலும் 

பொதுவாக இரண்டு 11 ஆம் அதிபதியாக சூரியன் அல்லது இரண்டாம் 11 அதிபதிக்கு சூரியன் பார்வை கிடைத்தாலும் அல்லது இரண்டு 11 ஆம் வீட்டின் அதிபதிகள் சூரியனுடன் சேர்ந்து இருந்தாலும் அவர்களுக்கு தந்தை, அரசாங்கத்தோடு அதிகாரமிக்க நபர்கள், இவர்கள் மூலம் வருமானம்

 வரும் நிச்சயமாக அரசாங்க பட்ட தொழில் நிறுவனங்களில் இருந்து இவர்களுக்கு வருமானம் வரும் அல்லது பெரிய கம்பெனிகளில் இருந்து இவர்களுக்கு வருமானங்கள் வரும் 

இவர்கள் அன்பு மிகுதியால் ஊதாரித்தனமாக செலவழிப்பதனை குறைத்துக் கொண்டால் சேமிக்க இயலும் 

இதே போல் சந்திரன் இருந்தால் தாய் திரவ அன்றாட பயன்பாட்டு பொருட்கள் மூலமாக ஒருவருக்கு தனம் வரும் சந்திரன் என்பது வளர்பிறை தேய்பிறைகளைக் கொண்டது ஆதலால் ஒரு சமயம் வளர்பிறைப் போல உங்களது பண வரவு இருக்கும் அதேபோல் தேய்பிறை போல் சில நாட்களில் உங்களுக்கு பண விரயம் ஏற்படும்

 இதேபோல் செவ்வாய் இருந்தால் இயந்திரம் ஆயுதம்  பண்படுத்துதல் பிராணிகள் நெருப்பு விரைந்து செயல்படுதல் மூலமாக ஒருவருக்கு தன வரவு ஏற்படும்

 மிகவும் சீக்கிரமாக சம்பாதித்து அதிகமாக செலவு செய்பவர் இவர்களை தனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இவர்கள் எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

 புதன் 

பொதுவாக புதன் என்பது நண்பர்கள் விளம்பரம் போக்குவரத்து துறை பத்திரிகைகள் புத்தகங்கள் ,முகவர், நுணுக்கம் உத்தேசித்தல் மூலமாக தன வரவு ஏற்படும் திடீரென பணம் வரும் திடீரென பணம் போகும் பொதுவாக இவர்கள் உடலை விட மனதை அதிகம் பயன்படுத்தி சம்பாதிக்க கூடியவர்கள்

 எனினும் பிறர் இவரை ஏமாற்றி விட வாய்ப்புகள் உண்டு பொருள்கள் பொருட்கள் திருடு போக வாய்ப்பு உண்டு 

அன்றாட பயன்படுத்தக்கூடிய பொருட்களின் மீது இவருக்கு அதிக மதிப்பு இருக்கும்

 இந்த இடத்தில் குரு இருந்தால் பொதுவாக உடை உணவு வெளிநாட்டு பயணம் பரிசு பொருள்கள் பிறருக்கு நலம் தரும் பொருட்கள் மதம் மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் மூலம் இவர்களுக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும்

 பிறரை பயன்படுத்தி இவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதை இவர்கள் தவிர்க்க வேண்டும் 

பொதுவாக சுக்கிரன் இருந்தால் திருமணம், பெண்கள் கலை நகைகள் யூடியூப் மூலமாக தன வரவு ஏற்படும் 

பொருளாதாரத்தில் பொதுவாக அதிர்ஷ்டம் உடையவர்கள் இவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களே எப்பொழுதும் சார்ந்திருப்பார்

பொதுவாக சனி அந்த இடத்தில் இருந்தால் ரியல் எஸ்டேட் சில முடிவுகள் முதலீடுகள் தொழிற்சாலை தொன்மையான பொருட்கள் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் மூலமாக வருமானம் இவர்களுக்கு ஏற்படும்

 பொதுவாக நம்பிக்கை குறைவானவர்கள், பேரம் பேசுபவர்கள், உதவாத பொருட்களை வாங்குவது இவர்களே

பொதுவாக ராகு வழக்கத்திற்கு மராணப் பொருட்கள் மின்சாரம், தனிப்பட்ட ஆர்வம், தொல்பொருள், காற்றினில் இயங்கும் பொருட்கள், போன்றவற்றின் மூலம் தன வரவு ஏற்படும் 

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு திடீர் திடீரென்று லாபமும் நஷ்டமும் ஏற்படும்

 பொதுவாக கேது வாடகை ஒப்பந்தம் மருத்துவமனை வணிகம் திரைப்படம் பறப்பன மிதப்பண மருந்து ,எண்ணெய், சாராயம் தர்மம் செய்தல் ஏமாற்றுதல் மூலம் தனம் வரும் 

நிதி நிலையில் கவலையையும் விரக்தியும் தரும் பொருளாதார நஷ்டத்தையும் பிறரால் ஏமாற்றப்படுதலையும் சந்திக்க வேண்டி வரும் எந்த முதலீடும் திடீர்னு வீழ்ச்சியடையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

 இவர்களுக்கு வித்தியாசமான பொருளியினால் லாபம் கிடைக்கும் சில நேரங்களில் சில கனவு வித்தியாசமான காட்சி அல்லது சில விசித்திர நண்பர்கள் தொடர்பு ஏற்படும்

பொருளாதாரத்தில் கிரகச் சேர்க்கை மூலம் பணவரவு அதிகமாக ஏற்படும் அதாவது 
சூரியன் குருவுடன் இணைந்திருந்தால் அரசு சம்பந்தப்பட்டது அல்லது பரம்பரை சொத்துக்கள் இருக்கும்

 குரு சந்திரனை இருந்தால் மறைமுகமான செல்வம் ஏற்படும் 

குரு செவ்வாயுடன் இணைந்தால் நேர்மையான செல்வம் உண்டாகும்

 குரு புதனுடன் இருந்தால் பல முதலீடுகள் செய்ய வேண்டி வரும் ஆனால் லாபம் குறைவாக கிடைக்கும் 

குரு சுக்கிரன் இணைவு ஏற்பட்டால் செல்வம் இல்லை என்றாலும் அவர்கள் செல்வம் இருப்பது போல் காட்டிக் கொள்வர் 

குரு சனி இணைப்பு ஏற்பட்டால் தன்னிடம் ஒன்றுமில்லாத போல் காண்பித்துக் கொள்வார்கள் ஆனால் அவர்களிடம் அதிகப்படியான செல்வம் இருக்கும்

 சூரியன் சந்திரன் இணைவு இருந்தால் மென்மையான வேலை ஏற்படும் 

சூரியன் செவ்வாய் இணைந்தால் உங்களுக்கு அதிகப்படியான நிலங்கள் இருக்கும் சூரியன் புதனுடன் இருந்தால் எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு கிடைக்கும் 

சந்திரன் செவ்வாய் இணைவு ஏற்பட்டால் மதிப்பிற்குரிய சேர்த்த செல்வம் அவரிடம் இருக்கும்

 சந்திரன் சனி ஏற்பட்டால் பிறர் பலித்த செல்வங்களும் வந்து சேரும்

 செவ்வாய் புதன் இணைவு ஏற்பட்டால் ஏதோ ஒரு மரணத்திற்கான செல்வம் இவரிடம் வந்து சேரும்

 செவ்வாய் சுக்கிரன் இணைவு ஏற்பட்டால் பெண்களால் செல்வங்களிடம் வரும் கிடைக்கும்

 புதன் சுக்கிரன் இணைவு ஏற்பட்டால் வேலை பார்ப்பதனால் வரக்கூடிய செல்வம் கிடைக்கும்

 புதன் சனியுடன் இணைந்து காணப்பட்டால் வழி வழியாக செல்வம் இருக்கும் 

சுக்கிரன் சனி நினைவு ஏற்பட்டால் போலியான செல்வம் ஏற்படும் இப்படி எந்தெந்த கிரகங்கள் இரண்டு மற்றும் 11ஆம் இடத்தில் சம்பந்தப்படுகிறது அதன் மூலம் இவர்களுக்கு தன லாபம் ஏற்படும்.

By astro nithiyandran.....