கிரகங்களின் பிடியிலிருந்து தப்பிக்க என்ன வழிகள்
ஒருவர் ஜாதகத்தில் நவ கிரகத்தின் ஆதிக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் இந்த நவ கிரகங்கள் தாங்கள் அடைந்த துன்பத்தை அதன் திசா புத்தியில் ஜாதகக்காரர்களுக்கு பலனாக வழங்குகிறது
இந்த பிடியிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் நமது திசா புத்தியை ஆராய வேண்டும் இந்த திசா புத்தியில் நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த தவறுகள் அனைத்தும் சுட்டிக்காட்டப்படும்
இந்த திசா புக்தி நடத்தும் கிரகங்களின் அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அந்த கிரகத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அந்த கிரகத்தின் தன்மையை பொறுத்து நாம் புண்ணியங்களை செய்ய வேண்டும்
உதாரணமாக ஒரு சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டால் சனியின் தன்மையான உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் ,இயற்கையில் உடல் நிலையில் குறைகள் உள்ளவர் ஆகியோர்களுக்கு நீங்கள் முடிந்த அளவு உதவிகளை செய்தால் உங்களுக்கு சனீஸ்வரன் பிடியிலிருந்து சிறிது தப்பித்துக் கொள்ளலாம்
அதுபோல ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு தன்மையை கொண்டிருக்கும் குரு பகவானை பொறுத்தவரை தன்னைவிட வயதில் மூத்தவர்கள் ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் உள்ளவர்கள் அதாவது நமக்கு சொல்லிக் கொடுக்கும் குரு ஸ்தானத்தில் உள்ளார்கள் நமக்கு போதனைகளை வழங்குவது போன்றவர்களுக்கு நாம் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்
அதேபோல் சூரியனைப் பொறுத்தவரை தந்தை ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு அதாவது அந்த வயதில் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்
சந்திரனை பொறுத்தவரை அம்மா ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்
சகோதர ஸ்தானத்தை குறிக்கக்கூடிய செவ்வாய் பகவான் பிடியில் இருந்தால் நீங்கள் உங்கள் சகோதரஸ்தானத்தில் உள்ளவர்களுக்கும் அதுபோல் பழகுபவர்களுக்கும் அல்லது இயற்கையில் உழைக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
இதேபோல் ராகு என்பது வயதானவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளும்
கேது பொருத்தவரை நீங்கள் உங்களால் முடிந்த உதவியை அனைவருக்கும் செய்யலாம்
இதேபோல் மற்ற கிரகங்கள் குறிக்கக்கூடிய காரகத்தை பொறுத்து அது அமைந்துள்ள பாவத்தை பொறுத்து பரிகாரமாக உதவி செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் கிரகங்கள் பிடியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்
Subscribe to:
Comments (Atom)