இந்த ஆறாம் பாவ அதிபதி மற்றும் ஆறாம் பாவத்தை பார்க்க கூடிய கிரகங்கள் மற்றும் ஆறாம் பாவ அதிபதி விழுந்த நட்சத்திர அதிபதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்
ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த கிரகமாக இருக்கிறது அந்த கிரகத்தை குறித்து அவருக்கு நோய் ஏற்படும்
கோச்சாரத்தில் ஆறாம் பாவ அதிபதியுடன் கிரகங்கள் தொடர்பு கொள்ளும்போது நோய்கள் ஏற்படும்
ஆறாம் பாவ அதிபதி எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது அந்த பாவம் உடம்பில் எந்த பாகத்தைக் குறிக்கின்றதோ அந்த வகையில் அந்த நோயினை ஏற்படுத்தும்
அதே போல் விபத்து என்பது குறிக்கக்கூடிய கிரகம் செவ்வாய் ஆகும் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாயின் தன்மையை பொருத்தும் கோச்சாரத்தில் செவ்வாயின் அமைப்பை பொருத்தும் அவர்களுக்கு விபத்து ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பதை நம்மால் சொல்ல முடியும்
அதேபோல் சனி கிரகமானது ஒருவரை காலில் அடிபடுவதை குறிக்கக்கூடிய கிரகமாகும் ஒருவர் காலில் அடிப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு சனியின் ஆதிக்கம் நிச்சயமாக இருக்கும்
கிரகத்தின் பொது பலன்களை பொறுத்து கிரக காரத்துவங்களை பொறுத்து ஒருவரது நோய் தீர்மானிக்கப்படுகிறது
சூரியனின் காரகத்துவத்தை பொறுத்து அவரது நோய் தீர்மானிக்கப்படும் சூரியன் பொதுவாக நமக்கு இதயத்தை குறிக்கக்கூடிய கிரகம் ஆதலால் சூரியன் பாதிப்பு ஏற்படும் போது உங்களுக்கு இதய நோய்களை கண்டிப்பாக உருவாக்கும்
அதேபோல் சந்திரன் நீர் சம்பந்தப்பட்டதால் உங்களுக்கு கண்டிப்பாக நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளை அது உருவாக்கும்
விபத்துக்கு காரணமான செவ்வாய் ரத்தத்துக்கும் காரணமாக வருவதால் உங்களுக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது ரத்தம் வடிதல் போன்ற அமைப்பை ஏற்படுத்தும்
புதன் நரம்பு மன்றத்துக்கு காரணமாக வருவதால் உங்களுக்கு நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்
அதேபோல் குரு பகவானே பொருத்தவரை உங்களுக்கு முகத்தில் ஏதாவது ஒரு காயங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்
சனியை பொருத்தவரை உங்களுக்கு அடிபடுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்
ராகு கேது பொருளை அறுவை சிகிச்சை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார் இது பொதுவான பலன்கள்
இன்னும் பாவக காரத்துவங்கள் அதிகமாக உள்ளன அந்தப் பாவக காரணங்களை முழுமையாக ஆராய்ந்து உங்களின்ம சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால் உறுதியாக உங்களுக்கு ஏற்படக்கூடிய நோயினை கண்டிப்பாக கண்டுபிடிக்க இயலும்
அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்தந்த காலகட்டத்தில் எற்படக்கூடிய பெயற்சி கிரகங்களின் தன்மையைப் பொறுத்து நாம் அதற்குண்டான வழிபாடுகளை அந்த கிரகத்தின் கதிர்வீச்சு எப்பொழுது பூமியில் அதிகமாக விழுகின்றதோ அப்பொழுது இந்த வழிபாடும் மேற்கொண்டுமே ஆனால் இந்த கிரகத்தின் பாதிப்பில் இருந்து கொஞ்சம் வெளி வர முடியும்.
ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சு பூமியில் அதிகமாக விழுகின்றது பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்பது கிரகத்தின் கதிர்வீச்சு சூரியன் உதித்த பிறகு 6 மணிக்கு மேல் உங்களுக்கு சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக பூமியில் விழும்
ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு திருச்சி அதிகமாக பூமி மீது விழும் அதை பொறுத்து நாம் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்