jothidam in tamil லக்னாதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இந்த லக்னமே நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தார் போல் அமையுள்ளது
 அப்படிப்பட்ட இந்த லக்னம் நமக்கு உயிர் காரணமாக வருகிறது இந்த லக்ன அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் நாம் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பயனை அதிகமாக அனுபவிப்போம் 

அதே லக்னாதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் போன ஜென்மத்தில் நாம் செய்த பாவத்தின் பலனை அதிகமாக அனுபவிப்போம்

 அப்படிப்பட்ட இந்த லக்கின அதிபதி நாலாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் 4-ம் பாவம் என்பது பொதுவாக வண்டி வாகனம் தாய் ஆரம்பக் கல்வி போன்றவற்றை குறிக்க கூடியது

 நான்கில் இருக்கும் பொழுது தாயின் மீது அதிக அன்பு உடையவராக இருப்பார்   இருக்கும் வீட்டை நேசிப்பார் வண்டி வாகனம் மீது அதிகமாக பற்று இருக்கும் ஆரம்பக் கல்வி நன்றாக படிப்பார் போன்ற பலன்களை ஏற்படுத்துவார்

 இந்த லக்னாதிபதி மூன்றுக்கு இரண்டாம் இடமாக வருவதால் கமிஷன் தொழில் போன்றவற்றில் அதிக லாபத்தை ஏற்படுத்துவார் பயணங்களை மேற்கொண்டு அதன் மூலம் வருமானத்தை ஏற்படுத்துவார் 

ஐந்தாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் அதேபோல் குழந்தைகள் விஷயத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் குழந்தைகள் வளர வளர  தங்களின் பேச்சை அவர்கள் கேட்க மாட்டார்கள்

 குழந்தைகள் வழியில் பிரச்சனைகளை உருவாக்கும் அதேபோல் திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை இவர் தடை செய்வார் வரவேண்டிய அதிர்ஷ்டம் தள்ளி போகும் 9-ம் இடத்திற்கு எட்டாம் இடமாக வருவதால் ஆன்மீக வழியில் கிடைக்கக்கூடிய அனைத்தும் தடை செய்யும்

 தன் தந்தை உடல்நிலை பாதிக்கப்படும் உயர் கல்வியில் பிரச்சனைகளை உருவாக்குவார் அதாவது ஆரம்ப கல்வியை நன்றாக படித்து விட்டு உயர்கல்வி கோட்டை விட்டுவிடுவார்

 ஒன்பதாம் வீடு என்பது பூவ ஜென்மத்தை குறிப்பதால் இதற்கு எட்டாம் இடத்தில் இருந்து லக்னாதிபதி திசை புத்தி நடத்தும் பொழுது ஒன்பதாம் பாவத்தை முழுமையாக தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்

11ஆம் பாவத்துக்கு  ஆறாம் பாவமாக வருவதால் லாபத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார் மூத்த சகோதரர்கள் பிரச்சனை உருவாக்குவோம்
அதே நேரம் மூத்த சகோதரஸ்தானம் மூலமாக இவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்
கூட்டுத் தொழில் லாபத்தை ஏற்படுத்துவார்
மனைவி மூலமாக இவர்கள் தொழில் அமைய அதிகமாக
வாய்ப்புண்டு இவர்கள் கடன் கேட்கும் இடத்தில் கடன் உங்களுக்கு சுலபமாக கிடைக்கும் எதிரிகள் மூலமாக இவர்கள் லாபத்தை அடைவார்கள் வம்பு வழக்கு போன்றவற்றின் மூலமாக இவர்கள் லாபத்தை அடைய வாய்ப்பு உண்டு மீண்டும் அடுத்த பதிவில்.......astro nithiyandran 

jothidam in tamil லக்னாதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும்...astro nithiyandran

லக்னாதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன்.

 ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அப்படிப்பட்ட இந்த லக்ன அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம் இந்த லக்ன அதிபதி மூன்றாம் பாவத்தில் இருக்கும் பொழுது இந்தப் பாவம் நாலாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் .

அதாவது மூன்றாம் பாவத்தில் இருக்கும் லக்கின அதிபதியின் திசை புத்தி அந்தரம் சூட்சும பிராணம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நடக்கும் பொழுது இந்த நிகழ்வு நடைபெறும்

 அதேபோல் நாலாம் பாவம் என்பது பொதுவாக  வண்டி வாகனம் மற்றும் வீடு போன்றவற்றைக் குறிக்கும் அப்படிப்பட்ட இந்த பாவத்தில்  குழந்தைகளின் ஆரம்ப கல்வி என்பது இதில் உள்ளது 

இப்படி இருக்கும் பொழுது இந்த மூன்றாம் பாவத்திலிருந்து லக்னாதிபதி திசையை நடத்தினால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் இருக்கும் வீட்டில் பிரச்சனைகளை உண்டு பண்ணும் வண்டி வாகனங்களில் வீண் செலவு ஏற்படும் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும் 

இது போன்ற பொதுவான பலன்கள் நடைபெறும் அதேபோல் மூன்றாம் இடம் என்பது எட்டுக்கு எட்டாம் இடமாக வருவதால் உங்களுக்கு ஆயில் விருத்தி ஏற்படும் அதாவது உங்களுக்கு அடிபடக்கூடிய அமைப்பை தடுத்து நிறுத்தும் கண்டங்களை தடுத்து நிறுத்தும் அவமானங்களை தடுத்து நிறுத்தும் யாராவது மரணத்தின் மூலமாக கிடைக்கும் பணத்தை தடுத்து நிறுத்தும் 

இந்த நிகழ்வுகள் நடைபெறும் அதேபோல் பத்தாம் பாவத்துக்கு ஆறாம் பாவமாக வருவதால் தொழில் முடக்கம் ஏற்படும் பத்தாம் பாவம் பொதுவாக தொழிலைக் குறிப்பதால் தொழில் முடக்கம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டு தொழில் நிலையங்களில் உங்களுக்கு மனது பாதிக்கப்படுகிற அமைப்பை ஏற்படுத்தும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம் 

இந்த மாதிரி பிரச்சனைகளை இந்த லக்னாதிபதி ஏற்படுத்துவார் ஆனால் உங்களுக்கு எதிர்பார்த்த பண வரவு மனைவி வழியில் உங்களுக்கெல்லாம் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் உண்டு

 ஏழாம் பாவத்தை அதாவது மனைவி ஸ்தானத்தை இது நல்ல அமைப்பை ஏற்படுத்தும் கூட்டுத் தொழில் நன்றாக அமையும் ஏழாம் இடம் பொதுவாக மனைவி ஸ்தானத்தை குறிப்பதால் இந்த அமைப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு வரன் நன்றாக  அமையும் 

இதேபோல் ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் ஒவ்வொரு பலன்களை ஏற்படுத்தும் அடுத்த பதிவில் லக்னாதிபதி நான்காம் இடத்தில் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்

jothidam in tamil லக்னாதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன்..... astro nithiyandran

லக்னாதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன்
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இந்த லக்ன அதிபதி எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பொறுத்து அவரது வாழ்க்கை அமையும்

 லக்னாதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் எந்த ஒரு காரியமும் விரைவில் நடந்தேறும் அதே சமயம் லக்னாதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு எந்த காரியமும் தடைப்பட்டு பிறகு நடைபெறும் 

அப்படிப்பட்ட லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் சகோதர அதாவது அவரது இளைய சகோதரர் இவரால் பாதிக்கப்படுவார் அது மட்டுமல்லாமல் கமிஷன் தொழில் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறு தூர பயணத்தில் இவர்களுக்கு பிரச்சனை உண்டாகும் மனதில் ஏதோ  ஒரு வித பயம் இவர்களை ஆட்கொள்ளும்.

ஏழாம் இடத்திற்கு எட்டாம் பாவமாக இது வருவதால் ஒருவருக்கு கூட்டுத்தொழில் பிரச்சனை ஏற்படுத்தும் அதே போல் திருமண வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படும் ஏழாம் பாவம் என்பது முக்கியமாக மனைவி ஸ்தானம் மற்றும் கூட்டுத் தொழில் ஸ்தானமாகும் ஆகையால் எவ்விரு அமைப்பும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் ஒன்பதாம் பாவத்திற்கு ஆறாம் பாவமா வருவதால் ஒன்பதாம் பாவத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை இது ஏற்படுத்தும் ஒன்பதாம் பாவம் என்பது முக்கியமாக உயர்கல்வி மற்றும் ஆன்மீகம் மற்றும் தந்தை பற்றி குறிக்கக்கூடிய பாவம் தந்தையுடன் கருத்து வேறுபாடு உயர் கல்வி கற்பதில் தடை ஏற்படுவதல் ஆன்மீக செயல்களில் தடை ஏற்படுவதல் போன்றவை ஏற்படும்

பத்தாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமாக இரண்டாம் பாவம் வருவதால் இவர்களுக்கு தொழில் மூலம் வருமானம் கிடைக்கும் இரண்டாம் இடம் பொதுவாக வருமான  ஸ்தானத்தை குறிப்பதால் இவர்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும்

ஆறாம் பாவத்திற்கு 9 ஆம் பாவமாக இரண்டாம் பாவம் வருவதால் உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் அடிமைத்தொழில் அமையும் உடம்பில் ஒருவித நோய் உண்டாக்கும் எதிரிகளை அதிகமாக சம்பாதித்து தரும்
இதுபோன்ற அமைப்புகள் இந்த லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு நடைபெறும் 

ஆனால் இந்த லக்னாதிபதி திசை புத்தி அந்தரம் வரும்பொழுது உங்களுக்கு இப்பலங்கள் நடைபெறும் அதேபோல் கோச்சாரத்தில் எங்கு உள்ளார் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபடும் இரண்டாம் பாவத்தை பார்க்க கூடிய கிரகம் அல்லது இரண்டாம் அதிபதி எங்கு உள்ளார் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபட வாய்ப்புண்டு 

இரண்டாம் பாவத்தை குரு பார்த்தால் இந்த பலன்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் இந்த பாவத்தை சனீஸ்வர பகவான் பார்த்தால் உங்களுக்கு வெவ்வேறு பலன்களை ஏற்படுத்துவார் ஆதலால் சுய ஜாதகத்தை பார்த்து முழு புலன் அறிய வேண்டும்....

By astro nithiyandran 

லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்.....astro nithiyandran


லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்
ஜாதகருக்கு நீண்ட ஆயுள், புகழ், அந்தஸ்து இருக்கும். சுய முயற்சி உடையவர்.கௌரவத்திற்க்கு முக்கியத்துவம் தருபவர் தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பார்

உங்களுக்கு இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் உங்களுக்கு லக்கின அதிபதியுடன் திசை புத்தி நடைபெறும் பொழுது இரண்டாம் இடம் என்பது குடும்பஸ்தானம் தன விருத்தி பண கையிருப்பு வாக்கு ஸ்தானம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஆறாம் பாவத்திற்கு எட்டாம் பாவமாக கூறுவதால் ஆறாம் பாவகம் என்பது நோய் ஸ்தானமாகும், அதேபோல் கடன் வழக்கு ,எதிரி ,அடிமைத்தொழில் போன்றவற்றை குறிக்க கூடிய ஸ்தானம் அதற்கு எட்டாம் இடமான லக்னத்தில் இருந்து ஒரு கிரகம் தனது தசை புத்தி நடத்தும் ஆனால் ஆறாம் பாவத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும் அப்படி என்றால் ஒருவருக்கு கடன் என்பது சுலபமாக கிடைக்காது கடன் கேட்டால் கடன் கிடைப்பது அரிது அதுபோல் ஒருவருடைய நோய் தாக்கத்தை மட்டுப்படுத்தும் எதிரிகளை வெல்லக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும் வம்பு வழக்கு போன்றவற்றில் வெற்றி உண்டாகும்.

இதேபோல் லக்கினத்திற்கு எட்டாம் இடத்திற்கு ஆறாம் பாவம் என்பது ஒருவருடைய ஆயுளைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் எட்டாம் பாவம். அதேபோல் ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமும் எட்டாமிடம் இந்த எட்டாம் இடத்துக்கு ஆறாம் இடத்திலிருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் ஆனால் அப்பொழுது அவர்களுக்கு ஆயிலில் விருத்தி ஏற்படும் அவமானம் ஏற்படாமல் காக்கும் ஆதலால் லக்னத்தில் இருந்தால் உங்களுக்கு நற்பலன்களை ஏற்படுத்துவார்.

அதேபோல் கலக்கினத்திற்கு ஐந்தாம் இடம் என்பது உங்களுக்கு ஒன்பதாம் பாவமாக ஒன்பதாவது ஸ்தானமாக வருவதால் ஐந்தாம் இடம் என்பது அதாவது ஒன்பதாம் இடத்தில் புத்தி நடத்தும் பொழுது ஐந்தாம் இடம் பொதுவாக பூர்வ புண்ணியம்  குழந்தைகளுக்கான இடம் திடிர் அதிஷ்டம் போன்றவற்றை குறிக்கும் இதில் முன்னேற்றங்கள் ஏற்படும்

இதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஐந்தாம் இடத்தில் இருந்து திசை புத்தி லக்னாதிபதி நடத்துவதால் நீண்ட தூரப் பயணம் கல்வி அதாவது உயர் கல்வி ஆன்மீகம் தந்தை போன்றவற்றைத் குறிக்கும் அப்படி என்றால் தந்தை மூலமா வரக்கூடிய கௌரவம் போன்றவை தரக்கூடிய ஸ்தானம் ஆதலால் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து திசை நடத்தும் போது ஒவ்வொருவருடைய கௌரவம் போன்றவை உயர்ந்து காணப்படும் ஆன்மீக வழியில் நாட்டம் அதிகமாக இருக்கும் தந்தைக்கு உடல்நிலை நன்றாக இருக்கும் 

இதேபோல் மத்த பாவங்களை வைத்து பார்க்கும் பொழுது  ஒவ்வொரு பலன்களை ஏற்படுத்தும் ஆதலால் லக்னதிபதி எந்த பாவத்தில் உள்ளார் என்பதை பொறுத்து அவருடைய பலன்கள் பலன்கள் மாறுபட்டு நடக்கும்