jothidam in tamil ஜோதிடத்தில் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்....astro nithiyandran

ஜோதிடத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் பாவம் என்பது ஒருவரது நோயை குறிக்கக்கூடிய பாவமாகும் 

இந்த ஆறாம் பாவ அதிபதி மற்றும் ஆறாம் பாவத்தை பார்க்க கூடிய கிரகங்கள் மற்றும் ஆறாம் பாவ அதிபதி விழுந்த நட்சத்திர அதிபதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்

 ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த கிரகமாக இருக்கிறது அந்த கிரகத்தை குறித்து அவருக்கு நோய் ஏற்படும் 

கோச்சாரத்தில் ஆறாம் பாவ அதிபதியுடன் கிரகங்கள் தொடர்பு கொள்ளும்போது நோய்கள் ஏற்படும்

 ஆறாம் பாவ அதிபதி எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது அந்த பாவம் உடம்பில் எந்த பாகத்தைக் குறிக்கின்றதோ அந்த வகையில் அந்த நோயினை ஏற்படுத்தும் 

அதே போல் விபத்து என்பது குறிக்கக்கூடிய கிரகம் செவ்வாய் ஆகும் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாயின் தன்மையை பொருத்தும் கோச்சாரத்தில் செவ்வாயின் அமைப்பை பொருத்தும் அவர்களுக்கு விபத்து ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பதை நம்மால் சொல்ல முடியும்

 அதேபோல் சனி கிரகமானது ஒருவரை காலில் அடிபடுவதை குறிக்கக்கூடிய கிரகமாகும் ஒருவர் காலில் அடிப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு சனியின் ஆதிக்கம் நிச்சயமாக இருக்கும்
 
கிரகத்தின் பொது பலன்களை பொறுத்து கிரக காரத்துவங்களை பொறுத்து ஒருவரது நோய் தீர்மானிக்கப்படுகிறது 

சூரியனின் காரகத்துவத்தை பொறுத்து அவரது நோய் தீர்மானிக்கப்படும் சூரியன் பொதுவாக நமக்கு இதயத்தை குறிக்கக்கூடிய கிரகம் ஆதலால் சூரியன் பாதிப்பு ஏற்படும் போது உங்களுக்கு இதய நோய்களை கண்டிப்பாக உருவாக்கும்

 அதேபோல் சந்திரன் நீர் சம்பந்தப்பட்டதால் உங்களுக்கு கண்டிப்பாக நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளை அது உருவாக்கும்

 விபத்துக்கு காரணமான செவ்வாய் ரத்தத்துக்கும் காரணமாக வருவதால் உங்களுக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது ரத்தம் வடிதல் போன்ற அமைப்பை ஏற்படுத்தும்

 புதன் நரம்பு மன்றத்துக்கு காரணமாக வருவதால் உங்களுக்கு நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்துவார் 

அதேபோல் குரு பகவானே பொருத்தவரை உங்களுக்கு முகத்தில் ஏதாவது ஒரு காயங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார் 

சனியை பொருத்தவரை உங்களுக்கு அடிபடுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்

 ராகு கேது பொருளை அறுவை சிகிச்சை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார் இது பொதுவான பலன்கள்

 இன்னும் பாவக காரத்துவங்கள் அதிகமாக உள்ளன அந்தப் பாவக காரணங்களை முழுமையாக ஆராய்ந்து உங்களின்ம சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால் உறுதியாக உங்களுக்கு ஏற்படக்கூடிய நோயினை கண்டிப்பாக கண்டுபிடிக்க இயலும்

 அந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்தந்த காலகட்டத்தில் எற்படக்கூடிய பெயற்சி கிரகங்களின் தன்மையைப் பொறுத்து நாம் அதற்குண்டான வழிபாடுகளை அந்த கிரகத்தின் கதிர்வீச்சு எப்பொழுது பூமியில் அதிகமாக விழுகின்றதோ அப்பொழுது இந்த வழிபாடும் மேற்கொண்டுமே ஆனால்  இந்த கிரகத்தின் பாதிப்பில் இருந்து கொஞ்சம் வெளி வர முடியும்.

ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சு பூமியில் அதிகமாக விழுகின்றது  பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்பது கிரகத்தின் கதிர்வீச்சு சூரியன் உதித்த பிறகு 6 மணிக்கு மேல் உங்களுக்கு சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக பூமியில் விழும்

 ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு திருச்சி அதிகமாக பூமி மீது விழும் அதை பொறுத்து நாம் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்

jothidam in tamil இரண்டாம் பாவ காரகத்துவங்கள்...astro nithiyandran

குடும்பம் தனம் கல்வி வாக்கு சாதனை பேசும் திறன் சாஸ்திரம் கலைகள் கற்கும் ஆர்வம் நிலையான கொள்கை உணவு முகம் நாக்கு உண்மை பேசுதல் பொய் சொல்லுதல் முன்கோபம் வலது கண் வஞ்சக நெஞ்சம் இழந்த பொருளை மீண்டும் பெறுதல் சுவை சுகம் செல்வம் குடும்ப உறுப்பினர்கள் மணிகள் மரணம் வலது கண் உணவு உடைகள் வாய் மூக்கு நகம் சேமிப்பு இளமை வாலிப பருவம் ஆரம்பக் கல்வி அழகு ஊமை திக்குவாய் திருடு சன்யாசி யோகம் தத்துப் போகும் யோகம் அரசாலும் யோகம் திருமணம் இளவயது திருமணம்  ஆதாயம் இசை விலை உயர்ந்த பொருட்கள்  தானம் அன்பளிப்பு நிகழ்வுகளை யோசிப்பது ஊதாரித்தனர் வாக்கு பொருட்கள் பல்நோய் தாயுடன் பிறந்த மூத்த உடன்பிறப்புகள் பைனான்ஸ் வட்டி வியாபாரம் பிச்சை விஷ மருந்துகள் சுய சிந்தனையை பணமாக்குதல் பணம் மூலமாக எண்ணம் உடலின் இயக்கங்கள் விரைந்து செயல்படுதல்  நினைத்ததை சொல்லுதல் சுயட்சியான வருவாய்  செல்வாக்கு வழிகாட்டல் உடல் எதையும் ஏற்றுக்கொள்ளதல் அறிவுபூர்வமான பேச்சு எழுத்தாற்றல் மூலம் லாபம் சொந்த கருத்துக்கள் மூலம் லாபம் தைரியமிக்க செயலாள் லாபம் புத்துக்கூர்மையான வாதங்களால் லாபம் மனோபலம். லாபகரமான தகவல் தபால் மூலம் காசோலைகள் பெறுதல் இடம் மாறுதல் மூலமாக மூலப்பணம் பெறுதல் மனசார்புடைய காரியங்கள் மூலம் லாபம் ஆர்வமுடன் சம்பாதித்தல் பணத்திற்காக தன்னையே மாற்றிக்கொள்ளுதல் பணம் மூலமாக தன்னம்பிக்கை உடலில் அதிக சக்தி  கல்வி மூலம் லாபம் பழங்கள் மூலம் லாபம் காய்கறிகள் மூலம் லாபம் தானியங்கள் மூலம் லாபம் பண்ணைகள் மூலம் லாபம் கல்வி மையங்கள் மூலம் லாபம் நூல் நிலையங்களும் மூலம் லாபம் மரியாதை மிக்க செயல்கள் மூலம் லாபம் ஒழுக்கமிக்க தெய்வ பணியில் லாபம் கலைகளில் லாபம் விளையாட்டில் லாபம் சமய ஜனங்கள் மூலமாக போட்டியில் வெற்றி மூலம் லாபம் மருத்துவ உதவி உணவுப் பொருள் மூலமாக வைத்தியம் செய்தல் மூலம் லாபம் உடலுறுப்பு மூலம் லாபம் கடன் கொடுக்கல் மூலம் வழக்குகள் மூலமாகவும் சம்பளம் வாங்குதல் வீட்டு வாடகை பணம் வாடகை பத்திரமூலம் லாபம்  அரசு அங்கீகாரம் மூலம் லாபம் பிற உதவிகள் மூலம் லாபம் பார்ட்னர் மூலமாகவும் கொள்ளையடித்தல் மூலம் பழைய பொருட்கள் மூலம் லாபம் தரகர் மூலம் லாபம் திருடுதல் மூலம் லாபம் ஏமாற்றுதல் மூலம் மேஜிக் மூலம் சட்ட முரண்பாடுகள் செய்தல் மூலம் லாபம் காட்டிக் கொடுப்பதன் மூலம் லாபம் நம்பிக்கையான பூர்வீக கடமைகள் மூலமாக புகழ் மூலம்  கல்வி மூலமாகவும் தலைமை பதிவு மூலமாகவும் ஆராய்ச்சி செய்வதன் மூலமாகவும் அன்னியருடன் நெருங்கி பழகுதல் ஆகும் மாற்று உறுப்புகள் மூலம் லாபம் வெளிநாட்டு வாழ்க்கை மூலம் லாபம் பதவிகள் மூலமாக பொறுப்பு மிக்க ஆலோசனைகள் மூலமாக நிர்வாகத்தின் மூலம் லாபம் உயர் அதிகாரி யாவது மூலம் லாபம் பெரும்புகார் மூலமாகவும் சந்தோசமாக லாபம் பெறுதல் சங்கங்கள் மூலம் லாபம் பெறுதல்  விரும்பியவற்றில் லாபம் பெறுதல் அதிசயத்தின் உச்சநிலையில் லாபம் பெறுதல் வெற்றியின் மூலம் லாபம் பெறுதல் சாதனை படைத்தல் மூலம் லாபம் பெறுதல்  மகிழ்ச்சி எழுத்தறிந்து பேசுதல் கோபமாக பேசுதல் ஆன்மீகம் பேசுதல் கவனமாகப் பேசுதல் மௌனம் அதிகமாக பேசுதல் அளவாக பேசுதல் நகைச்சுவையாக பேசுதல் ஏட்டிக்கு போட்டியாக பேசுதல் பேசுதலின் அனைத்து முறையும் உணவு உண்பதில் அணைத்தும் பொருளாதாரத்தின் அனைத்து நிலைகளும்....by astro nithiyandran 

பாவத்தின் காரத்துவங்கள் அதில் இருக்கும் கிரகத்தின் தன்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது

jothidam in tamil பாவக காரத்துவங்கள்.....astro nithiyandran

லக்ன பாவம்
உடல்வாகு, உன்னிடம் கவர்ந்திடும் சக்தி,அழகு ,செல்வம் ரத்தத்தின் தன்மை, தலைப்பகுதி, புகழ், வாழ்வில் அனைத்தும்,  மகிழ்ச்சியாக இருந்தால் ,ஆயில், உடல் நலம்,உயரம் பருமன் உழைப்பின் மூலம் முன்னேறக் கூடியவர்கள், சோம்பல் அதிகம் உள்ளவரா, சுகவீனமானவர், செல்வாக்கு ,பகைவரை வெல்லக் கூடிய திறமை , திருப்தி வாழ்வில் அடைய , தாய் வழி தாத்தா, தந்தை வழி தாத்தா ,வாழ்வில் அடியில் துன்பம், தலைமுடி, தோல், பண நஷ்டம், வெற்றி தோல்வி, உணர்ச்சி, பழக்கவழக்கங்கள், நல்ல குணங்கள், நன்னடத்தை, பதவி, பெயரும், புகழும் பெறுதல், பெரிய ப்பாவின் சகோதரர், மூளை, யோசிக்கும் திறன், கம்பீரம், சொந்த முயற்சியுடையவரா, தோற்றம், குணம், செயல்பாடு ,குலதொழில், சுயதொழில், எண்ணம் சக்தியை வழிகாட்டுதல், வாக்கு, அறிவு, கனவு, மன நிம்மதி, ஆற்றல்,  தைரியம், புத்தி கூர்மை ,மனோபாவம் ,தகவல், செய்தி அனுப்புதல், இடம் மாற்றம், கல்வி, மதச்சார்பு, ஆர்வம், தன்னை மாற்றிக்கொள்ளுதல், உற்பத்தி,பெரிய பணம்,  பண்ணை அமைத்த, கல்வி நிலையங்கள் அமைத்தால் ,நூல் நிலையம், குளம், கண்மாய் ,மதிப்பு ஒழுக்கம், கலைகளில் ஆர்வம், காதல் உறவு, கற்பனை திறன்,  ஆண்மை, பெண்மை, உருவான வெற்றி, மருந்து வைத்தியம் செய்தல், சுய உழைப்பு ,சமூக உணர்வுகள், சமூக அங்கீகாரம், சட்டம் கட்டுப்பாடு பிறரைச் சார்ந்திருத்தல், வலி வேதனைகள், செயல் இழத்தல், அசிங்கம் ,அவமானம், மற்றும் தற்கொலை, கொலை, சேதமடித்தல் மனக்குழப்பம் ,புத்தி , தண்டிக்கப்படுதல், நம்பிக்கை, தலைவர், ஆராய்ச்சி, அன்னையுடன் இழிவு படுத்துதல் ,ஆராய்ச்சி கல்வி, தெய்வ நம்பிக்கை ,தர்மம் செய்பவர், மாறுதல், புதிய ஆள்நிலை,  உடல் மாற்றங்கள், தெய்வத்திற்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர், கௌரவம், அந்தஸ்து, தலைமை பொறுப்பு, கௌரவ பதவிகள், திருப்தியற்ற மனம் ,பொறுப்பு மிக்க அழகு சார் நிறுவனம், உயர் அதிகாரிகள், பெரும் புகழ் ,பேராசை, சுயநலம், உல்லாசம், சந்தோசம், சங்க ஆலோசகர் விருப்பங்கள், வெற்றிகள் ,சாதனை படைத்தல், ரகசிய செய்திகள், மறைந்து வாழ்ந்தல்,தன்னையே அர்ப்பணித்த துப்பறிதல், மறைமுக தொல்லைகள், எதிலும் தோல்வி, தடைபடுத்த கடன், விதி, சுயமாக சிந்தித்தல், சுயநோக்கி எதையும் உருவாக்குதல், உற்பத்தி திறன், முதன்மையாக இருத்தல், அங்க குறைபாடு, மதிப்பு ,மரியாதை பெறுவது மற்றும் கொடுப்பது, குணங்களின் அனைத்து நிலைகளும்
இவை அனைத்தும் லக்ன பாவத்தில் இருக்கின்ற காரகத்துவங்கள் காரணத்தொடங்கள்
By astro nithiyandran 

சனிப்பெயர்ச்சி 2023....sanipeyarchi 2023..astro nithiyandran

சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் நீங்கள் இருக்கிறது அதை பொறுத்து என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை விளக்கமாக அடுத்தடுத்த பதிவு நாம் காணலாம்

 முதலில் சனி எப்படிப்பட்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு கிரகம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே அந்த கிரகத்தின் பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் 

சனி இவர் தாங்கள் நிகழ்காலத்தில் செய்யும் பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் பலனை தர வல்லவர் முதலில் இதை கவனமாக தெரிந்து கொள்ளுங்கள் 9 நவகிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் 

என்ன காரணம் என்று கேட்டால் அவர் ஒருவர் தான் செய்யும் நிகழ்வாக பாவ புண்ணியத்திற்கு பலனை தருவதனால் தான் அவருக்கு ஈஸ்வர பட்டம் உண்டு ஈஸ்வரன் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது அவர்கள் செய்யும் பாவ புண்ணியத்திற்கு நிச்சயமாக பலனை அனுபவித்தே ஆக வேண்டும்

 அதை பொறுத்து உங்களது பூர்வ ஜென்ம பாவம் ஒரு பக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அதனுடைய பலன்களை தனது ஏழரை சனி காலத்தில் மற்றும் கண்டகச் சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி போன்ற  சனியின் பார்வையின் மூலமாக அவர் தனது பலன்களை தர வல்லவர் 

தாங்கள் நிகழ்காலத்தில் அதாவது உடலில் பாதிப்போடு பிறப்பவர்கள் அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தாங்கள் தன்னலமற்ற செய்தீர்களேயானால் சனீஸ்வர பகவானின் பார்வையோ சனீஸ்வர பகவானின் ஏழரை சனியோ உங்களுக்கு எந்தவித பாதிப்பையும் அதாவது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது 

காரணம் முதலில் பாவத்தின் பலனாகவும் பின்பு இந்த புண்ணியத்தின் பலனாகவும் அவர் தருவார் இந்த புண்ணியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர் தரும் பலன் உங்களுக்கு வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மையாக இருக்கும் 

ஆதலால் நீங்கள் சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உங்களால் இயன்ற அளவு உடலில் பாதிப்போடு பிறப்பவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் 

இதை செய்து வந்தீர்களேயானால் வரக்கூடிய சனி பெயர்ச்சி உங்களை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது சரி இந்த சனி என்னன்ன பாதிப்பை ஏற்படுத்தும் 

ஒரு சனீஸ்வர பகவான் தரக்கூடிய நோயானது நிரந்தரமான நோயாக மாறிவிடும் அதேபோல் சனீஸ்வர பகவான் தரக்கூடிய கஷ்டமும் நிரந்தர கஷ்டமாக மாறிவிடும் 

இதை  போக்க வேண்டும் என்றால் நாம் செய்த புண்ணியத்தின் வழியாகத்தான் போக்க முடியுமே தவிர நாம் செய்யும் யாகத்தின் வழியாக தீர்க்க முடியாது சனீஸ்வரன் பகவான் பிடியில் இருந்து  விடுபட வேண்டுமானால் நீங்கள் சனிக்கிழமை சனீஸ்வரனை வணங்க வேண்டும் அது மட்டுமல்லாமல் சனீஸ்வரனை வணங்கி உங்களால் முயன்ற உதவிகளை பிறருக்கு சனிக்கிழமை செய்ய வேண்டும் 

அப்படி செய்தால் மட்டுமே உங்களுக்கு பூர்ன பலன் கிடைக்கும் நீங்கள் அதைவிடுத்து வெறும் சனீஸ்வர பகவானை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தால் உங்களுக்கு பூர்ன பலன் கிடைக்காது 

ஆதலால் உங்களால் உதவிகளை செய்ய முடியவில்லை என்றால் முடிந்த அளவு ஒரு கைப்பிடி அன்னத்தை காகத்திற்கு வைத்து வழிபடுங்கள் அதுவும் ஒரு வகையான தானம் தான் 

இப்படி தானத்தின் அடிப்படையிலேயே உங்கள் பலன்களை நாம் மாற்ற முடியுமே தவிர யாகத்தின் அடிப்படையில் மாற்ற முடியாது

ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் இந்த சனீஸ்வர பகவான் என்னென்ன நன்மைகளை செய்வார் என்னென்ன தீமைகளை செய்வார் என்பதை நான் அடுத்தடுத்த பதிவில் பதிவிடுகிறேன் 

ஆனால் இவை அனைத்தும் ஒரு பொதுவான பலன்களே நான் முன்பு சொன்னது போல உங்களது நிகழ்கால பாவம் புண்ணியத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இதனுடைய பூர்ன பலனை நம்மளால் சொல்ல முடியும்

 உங்களது சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து முழு பலன்களை சொல்ல முடியும் தங்களது ஜாதகம் பற்றிய பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களது நேரம் பிறந்த இடம் பிறந்த தேதி போன்றவற்றை பதிவிடுங்கள் நான் இலவசமாக உங்களுக்கான பலன்களை தருகின்றேன்

Astro nithiyandran......

சனிப்பெயர்ச்சியின் முக்கியமான தகவல்கள் 2023.......astro nithiyandran

கிரகப் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது 

இதில் சனிப்பெயர்ச்சி என்பது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய ஒன்று  இந்த சனீஸ்வர பகவான் எந்த கிரகத்துடன் சேர்ந்து உள்ளாரோ அந்த கிரகத்தின் மீது அவரது ஆதிக்கத்தை செலுத்துவார் 

பொதுவாக சனீஸ்வர பகவான் கர்ம காரகன் அதாவது பத்தாம் பாவமான தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியாக வருகிறார் மற்றும் ஆறாம் பாவத்திற்கும் பன்னிரண்டாம் பாவத்திற்கும் அவரே முதல் தர அதிபதி ஆகிறார்

 அவர் கர்ம பலனை அளிப்பவர் கரும பலன் என்றால் என்ன கருமம் என்பது நாம் செய்யும்  செய்யும் செயலின் விளைவாக என்ன பலன் நமக்குத் தர வேண்டும் என்பதை சனீஸ்வர பகவான் தீர்மானித்து அதன்படியே அவரது ஏழரை சனி மற்றும் கண்டச் சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி போன்ற ஆதிக்கத்தின் மூலம் நமக்கு அந்த பலன்களை அவர் தருகின்றார்

 ஒருவர் நிகழ்காலத்தில் எவ்வளவு பாவம் புண்ணியங்கள் செய்துள்ளார் என்பதை கணக்கிட்டு நிகழ்காலத்திலேயே அவர்களுக்கு பாவ புண்ணிய பலன்களின் பலன்களை அளிக்கின்றார் 

அதன் விளைவாகத்தான் ஒருவர் 7 1/2 சனியில் மிகப்பெரிய செல்வந்தராகவும் ஒருவர் 7 1/2 சனியில் செல்வந்தராக இருந்த அவர் கீழ் நிலைக்கும் தள்ளப்படுகிறார்

 இந்த சனீஸ்வர பகவான் ஒவ்வொரு ராசிக்கும் இரண்டரை ஆண்டுகளும் வக்கிரகதி ஏற்படும் போது சில நேரங்களில் மூன்று வருடங்களுக்கும் அவர் அந்த பாவத்தில் நிலைபெற்று இருக்கிறார்

 சனீஸ்வர பகவானே பொருத்தவரை அவர் இருக்கும் பாவத்தை பாதிப்பது இல்லை அவருடன் சேர்க்கும் கிரகத்தை அவர் பாதிப்படையச் செய்வார். 

அதேபோல் அவரது பார்வை சிறப்பு பார்வையான 3,10 ஆகிய பார்வைகள் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியவை ஏழாம் பார்வை அதுவும் ஆபத்து விளைவிக்க கூடியவை.

 ஆனால் சிறப்பு பார்வைகள் அதிக ஆபத்து விளைவிக்கும் இந்த சிறப்பு பார்வை எந்த எந்த பாவத்தின் மீது விழுகிறதோ  அந்த பாவங்களின் காரகங்கள் அழிக்கப்படுகின்றன 

பொதுவாக  சனீஸ்வரர் பகவானின் பார்வை ஆனது ஒரு தொழிற் ஸ்தானத்தில் மீது விழுவது என்றால் அந்த தொழிலை அவர் அழிக்க கூடிய அமைப்பு ஏற்படுத்துவார் அப்படி என்றால் தொழில் பிரச்சனை ஏற்படும்.

இதே ஆறாம் பாவத்தில் விழுந்தால் ஆறாம் பாவத்தில் இரண்டு காரத்துவம்  உண்டு ஒன்று நோய் மற்றொன்று அதே தொழில் ஒருவர் அடிமை தொழில் செய்வாரா இல்லையா என்பதை ஆறாம் பாவத்தை கொண்டு அறிய முடியும்

 அதேபோல் நோயும் ஆறாம் பாத்தைக் கொண்டு அறிய முடியும் இந்த சனீஸ்வர பகவானின் பார்வை ஆறாம் பாவத்தில் இருந்து விட்டால் நோய் என்பது அழிக்கப்படும் கடன் என்பதும் அழிக்கப்படும் அதேபோல் அடிமை தொழில் என்பதும் அழிக்கப்படும் 

இப்படி நல்ல பாவங்களா இருந்தாலும் கெட்ட பாவங்களாக இருந்தாலும் அந்த இடத்தில் பார்வை விழுந்து விட்டால் அது அழிக்கப்படுகிறது அல்லது தாமதம் படுத்தப்படுகிறது

 இப்படிப்பட்ட சனீஸ்வர பகவான் ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்த எந்த பாவத்தில் இடம்பெற்று இருக்கிறார் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு அந்த விதி என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும் 

அதேபோல் ராசி மனோகாரகன் மனதை ஆளக்கூடிய சந்திர பகவானுக்கு அவர் எந்த பாவத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து மனம் எந்த அளவுக்கு சஞ்சல படும் என்பதை நாம் ஆராய்ந்து சொல்ல வேண்டும் 

நீங்கள் ஒரு பெயர்ச்சி என்பதை ராசி ரீதியாகவும் பார்க்க வேண்டும் லக்ன ரீதியாகவும் பார்க்க வேண்டும் லக்னத்தை வைத்து நீங்கள் விதியை தீர்மானிக்க வேண்டும் ராசியை வைத்து மனதை தீர்மானிக்க வேண்டும்

 எனது அடுத்தடுத்த பதிவில் ஒவ்வொரு லக்னத்திற்கும் சனிப்பெயர்ச்சி என்னென்ன செய்யப் போகிறது என்பதையும் ஒவ்வொரு ராசி படி சனிப்பெயர்ச்சி என்னென்ன செய்யப் போகிறது என்பதை நான் விரிவாக எழுத உள்ளேன் நீங்கள் அதைப் பார்த்து அவரவர் ராசி லக்னத்திற்கு பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள் 

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லக்னத்துக்கும்  இரண்டிற்கும் வேறுபட்ட நிகழ்வுகள் நடக்கும் ஒன்று மனரீதியான போராட்டம் இன்னொன்றுடு வாழ்க்கை விதி ரீதியான போராட்டமாக இருக்கும்


 எனது youtube பக்கமான Astro nithiyandran என்பதை subscribe செய்து கொள்ளுங்கள்........ 

By Astro nithiyandran blog

short cut key for word

 

CTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
CTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
CTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
CTRL+ALT+V: சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
CTRL+SHIFT+<: எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+SHIFT+>: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+[: எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+]: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+HYPHEN: இடையே உடையாத ஹைபன் அமைக்க
CTRL+SPACEBAR: பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
CTRL+SHIFT+V:பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட 
CTRL+Y: இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
CTRL+SHIFT+G: சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
CTRL+L: திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த 
CTRL+E: திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த 
CTRL+R: திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+M: பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
CTRL +1: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
CTRL +5: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
CTRL +2: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
F7: : ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
SHIFT+F7: தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
CTRL+SPACE: ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்
CTRL+SHIFT+8: ஸ்பேஸ், கேரேஜ் ரிட்டர்ன் போன்றவற்றினைக் காட்டும் அடையாளங்களைக் காணவும் மறைக்கவும்.

 

ஜனன ராசி பலன் - nithiyandran astrology

மேஷம்
 இந்த ராசியில் சந்திரன் இருக்க பிறந்தவன் உருண்ட சிவப்ப கண்களை உடையவன் காய்கறிகளையும் சூடான ஆகாரத்தையும் மிதமாக புசிப்பவன் காமத்தில் இச்சையும், சஞ்சாரம் செய்வதில் பிரியமும் உள்ளவன். 

தனம் இல்லாதவன் முழங்கால் பலவீனமாக உள்ளவன் .ஸ்திரீகள் பேரில் இச்சை உள்ளவனாகவும் இருப்பான் சிரசு காயம் உடையதாகவும் நகங்கள் கெட்டுப் போனதாகவும் இருக்கும்

 பிறர் இடத்தில் பணி செய்வதில் திறமை உள்ளவன்.ஜலத்தை கண்டால் பயம் உடைவனாகவும் பயந்தாலியாகவும் இருப்பான். உள்ளங்கையில் சந்திர ரேகை இருக்கும்

 ரிஷபம்

 இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் அழகான தேகமும் விசாலமான முகமும் பருத்த தொடைகளும் அழகான நடையும் உடையவன் முதுகு அல்லது முகம் பக்கங்களில் வடிவு உடையவன் கெடுதியை சளியாமல் அனுபவிக்க கூடியவன். 

அதிக அதிகாரமும் பறாக்ரமம் உடையவன் தயாள குணமுடையவன் பெண் குழந்தைகள் உள்ளவன் பிள்ளைகளையும் பந்துக்களையும் தனத்தையும் விட்டு நீங்கி இருப்பான்

 சாந்தமான குணமடையவனாகவும் எல்லாராலும் விரும்பக்கூடியதாகவும் இருப்பான் வாலிபத்திலும் வயோகத்திலும் சுகமடையவன் ஸ்திரீ பெயரில் ஆசை உடையவன் சினேகிதரிடத்தில் பிரியமுள்ளவன் 

நல்ல நடவடிக்கையும் புகழும் புத்திரர்களும் பெண்களும் உடையவன்

 மிதுனம் 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் ஸ்ரீலோகனாகவும், லீலைகளை செய்வதில் மிகவும் வல்லவனாக இருப்பான் வேத சாஸ்திரங்களை அறிந்தவனாகவும் மிகவும் கூர்மையான புத்தி உடையவன்

 பிறருடைய நோக்கங்களையும் எண்ணங்களையும் கண்டறியக்கூடியனாகவும் புத்தி சாதுர்யம் உள்ளவனாகவும் இருப்பான் அழகாகவும் உயர்ந்த மூக்குடையனாகவும் சிறந்த கண்களை உடையவனாகவும் சுருண்ட தலைமுடியை உடையவனாகவும் நயமான பேச்சுடையாகவும் இருப்பான் 

சங்கீத பிரிவினனாகவும் ஆடல் பாடல் வேடிக்கைகளில் வல்லவனாகவும் இருப்பான் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் எப்போதும் சந்தோஷம் உள்ளனாவும் இருப்பான

 கடகம் 

இதில் சந்திரிருக்க பிறந்தவன் குள்ளமாகவும் தடிப்பான கழுத்தை உடையவனாகவும் உயர்ந்த இடுப்பு உடையவனாகவும் உடம்பை வளைத்துக் கொண்டு வேகமா நடப்பவனாக இருப்பான்

 ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவன் ஸ்ரீக்கு அடங்கி நடப்பவன் அனேக வீடுகளையும் சந்திரன் போல சில காலம் வளரும் படியான செல்வத்தையும் சில காலம் குறையும்படியான செல்வத்தினுடையவன்

 நல்ல சிநேகிதத்தில் விஷிவாசம் உடையவன் ஜலத்தையும் காட்டையும் கண்டால் சந்தோஷப்படுவனாகவும் நயப்பான வார்த்தைகளை பேசி மயக்கிவிடுபவனாக இருப்பான் தேச சஞ்சாரமும் விரைவாக பேசக்கூடியதாகவும் இருப்பான் 

சிம்மம் 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் விசாலமான மிகவும் பெரிய கன்னங்களும் பழுப்பு நிறமான கண்களும் கோபம் உடையவனாகவும் இருப்பான்

சண்டை செஞய்வதில் சமர்த்தானகவும் நிலையான குணங்கள் உடையனாகவும் தான தர்மம் செய்வதில் தாராளமாக தாயிடத்தில் அன்புடன் இருப்பான்

 ஸ்ரீகள் மேல் வெறுப்புள்ளவன் அற்ப புத்திரர்களுடையவன் சிறிய விஷயங்களிலும் அதிக கோபத்தைக் காட்டுவான் மலைகளையும் காதுகளையும் கண்டால் சந்தோஷம் அடைவனாகவும் மாமிசம் புசிப்பான் பல்நோய் பசி தாங்காமல் துன்பப்படுவான் 

கன்னி 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் அந்தரமான கண்களையும் குறுகிய புஜங்களையும் கைகளையும் மிதமான தேகத்தையும் உடையவன் அடக்கத்தினால் மிகவும் மெதுவாக நடப்பவன் சுகமாய் வாழ்பவன்

 உண்மையை பேசுபவன் நயமாக பேசுபவன் வேத சாஸ்திரங்களையும் சங்கீத ஆடல் பாடல் சிற்ப சாஸ்திரங்களிலும் வல்லவன் சன்மார்க்கமும் புத்தி கூர்மையையும் உடையவன் ஸ்ரீலோகன் அந்நிய தேசத்தில் வசிப்பான் பிறருடைய சொத்து அனுபவிப்பான்  அர்ப்பபுத்திரர்களையும் உடையவன்

துலாம்

 இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் உயரமாகவும் மெலிந்து தேகம் உடையவனாகவும் உயரமான மூக்கு உடையவனாகவும் அங்க வீனனாகவும் இருப்பான் வேத சாஸ்திரங்களை அறிந்தவனாகவும் தேவர் பிராமணர் யோகிகளை அடுத்து அன்பு மரியாதை உள்ளவனாகவும் புத்தி கூர்மையிலும் இருப்பான். 

அனேக ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்பெயர் உடையவன் வர்த்தகனாகவும் தனவந்தனாகவும் பிறருடைய சொத்தில் ஆசையில்லாதனாகவும் குடும்பத்தாரை ரச்சிப்பவனாகவும் நோயாளியாகவும் தன்னுடைய பந்து ஜனங்கள் அவமதிப்புப்பட்டு விலக்கப்பட்டவனாக இருப்பான்

 விருச்சகம்

 இதில் சந்திரன் இருக்கு பிறந்தவன் பரந்த கண்களும் அகன்ற மார்பும் திரண்ட உருண்டு தொடைகளும் முழங்கால்களும் கொஞ்சம் சிவப்பு நிறமுடைய தேகம் உடையவனாகவும் இருப்பான் 

கள்ளன் கபடமான அபாயம் உள்ளவன் வாலிபத்தில் நோயாளி தாய் தகப்பனையும் குருவையும் விட்டு பிரிந்து இருப்பான் அரசு வம்சத்தால் மதிக்க பட்டவன் உள்ளங்கை பாதங்களில் மச்ச ரேகை அல்லது பட்சி ரேகை உடையவன் 

தான் செய்த பாவமான காரியங்களை மறைத்து வைப்பவன் ஜாக்கிரதையாகவும் பேராசை உடையனாகவும் தேச சஞ்சாரியாகவும் இருப்பான் 

தனுசு 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் நீண்ட முகமும் நீண்ட கழுத்தும் கருத்த தந்தங்களும் பிடித்த உதடும் காதுகளும் நாசியும் நீண்ட கைகளும் கெட்டுப்போன நகங்களும் குறுகிய புஜங்களும் உடையவன் மிகவும் சூட்சமான புத்தியும் சாமர்த்தியமாக பேசும் திறனும் எல்லாவற்றையும் சுலபத்தில் அறிந்து கொள்ளும் தன்மை உடையவன் 

தான தர்மம் செய்வதில் தாராள குணம்  சகல காரியங்களையும் செய்பவர் கிரந்த கர்த்தாவாகவும் இருப்பான் சங்கீதம் சித்திரம் முதலியவற்றில் வல்லவன் பிதுர் சொத்து உள்ளவன் பந்துக்களை வெறுத்தவன் நயப்பான் வார்த்தைகளால் உபயமாக வசப்படும் பேசுவான் பிரகாசமான கண்களை உடையவன் 

மகரம் 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் நல்ல கண்களையும் மெலிந்த இடுப்பையும் மெலிந்த கால்களையும் உடையவன் இரக்கமில்லாதவன் மானம் இல்லாதவன் 

கௌரவத்திற்காக நற்காரியங்களை செய்பவன் மனைவி மக்கள் இடத்தில் பிரியமாக இருப்பான் எல்லாருளும் விரும்பக்கூடியவன் சோம்பேறி குளிர் சீதனம் பொறுக்காதவன் எப்போதும் திரிந்து கொண்டிருப்பவன் பிறர் சொல்வதை சீக்கிரம் அறிந்து கொள்ளும் சக்தி உடையவன் சென்ற இடம் சினேகிதம் செய்பவன்  சங்கீதம் அறிந்தவன் பெருத்தலைவன் 

கும்பம் 

இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் உயரமாகவும் நீண்ட முகமும் கழுத்தும் அடிவயிரும் புட்டமும் தொடைகளும் பாதங்களும் உடையவனாகவும் உடம்பில் நரம்பும் சதைகளும் அதிகமாகவும் ரோமம் அதிகமாகவும் பிறருடைய மனைவியை மனைகளின் பேரிலும் சொத்துக்களிலும் ஆசை உடையவன்

 வாசனை திரவங்களிலும் புஷ்பங்களிலும் ஆசை உள்ளவன் பாவக்காரிகளை செய்பவன் இடத்தில் பிரியமுள்ளவன் சலியாடல் நடப்பவன் சில காலம் தனமுடையவனாகவும் சில காலம் தனமில்லாதவனாகவும் இருப்பான்

மீனம்

 இதில் ஜனக காலத்தில் சந்திரன் இருக்க பிறந்தவன் பெருத்த தலையும் நீண்ட மூக்கும் அழகான கண்களும் உடையவன் ஆகவும் அங்கவீனம் இல்லாதவனாகவும் இருப்பான்.  தனவந்தனாகவும் கல்வி மனாகவும் இருப்பான் 

ஜலத்தில் உண்டாகும் படியான வாஸ்துக்களாகிய உப்பு சங்கு பவளம் சிற்பி முத்து, மீன் முதலிய வியாபாரம் செய்பவன் நல்ல வஸ்திரங்களை தரிக்க பிரியமுள்ளவன் செல்லுமிடத்தில் அடங்கி இருப்பான் புதையில் கண்டெடுப்பான் எதிரிகளை அவமானப்படுத்துவான் பல மனைவிகளுடையவன்

குறிப்பு

 ஜனக காலத்தில் சந்திரனோ சந்திரன் இருக்கின்ற அதிபதியும் வலிமையாய் இருக்கும்போது தான் மேல் சொல்லி  பலன் பூரணமாகவும் வலிமையாக இருந்தால் பலன்கள் மத்தியம்  நடக்கும் இவ்விதமே சந்திரன் நீங்களாக மற்ற கிரகங்களின் பலத்தையும் அறிந்து அவர்களுக்கு பெரிய பலன்களை சொல்ல வேண்டும். 

கிரகங்கள் உச்ச ,நீச வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்

Astro Nithiyandran

ஜனன ஜாதகத்தில்

 சூரியன் உச்சம் பெற்றால் செல்வந்தர்கள் மேன்மையான குணம் உடையவர் வீரமிக்கவராகவும் இருப்பார் 

சந்திரன் உச்சம் பெற்றால் நல்ல உணவு உடை ஆபரணம் உடையவராக இருப்பார் 

செவ்வாய் உச்சம் பெற்றால் பகட்டானவராகவும் வீரமிக்கவராகவும் வேறு ஊரில் வசிப்பவராகவும் இருப்பார்

 புதன் உச்சம் பெற்றால் அறிவாற்றல் உடையவராக இருப்பார்

குரு உச்சம் பெற்றால் கல்வி புகழ் செல்வம் உடையவராக இருப்பார்

 சுக்கிரன் உச்சம் பெற்றால் ஏல் இசை நாடகம் டிவி நடனம் இவற்றில் ஆர்வமும் தேர்ச்சும் உடைவதாக இருப்பார். விளையாட்டில் ஆர்வம் உடையவராக இருப்பார்

 சனி உச்சம் பெற்றால் அரசியலில் தலைமைப்பதவியும் அரசு கௌரவ பதிவையும் தொழிலாளர் தலைவராகவும் காட்டில் விளையும் பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் நன்மை பெறுவதாகவும் இருப்பார்

 நீச்ச வீட்டில்

 சூரியன் நீச்ச வீட்டில் இருந்தால் தன்னைச் சான்றவர்களாளே தாழ்நிலை பெறுவார் 

சந்திரன் நீச்சம் அடைந்தால் உடல்நலம் பாதிக்கும் மற்றும் ரோகம் உடையவராக இருப்பார்

 செவ்வாய் நீச்சமடைந்தால் மனம் பாதிக்கப்படும் மற்றும் பல தொல்லைகளை சமாளிக்க வேண்டி வரும் 

புதன் நீச்சம் பெற்றால் உறவினர்களால் பகை ஏற்படும்

 குருநீச்சம் பெற்றால் புகழ் இல்லாமல் ஏழ்மையை உடையவராக இருப்பார் 

சுக்கிரன் நீச்சம் பெற்றால் கெட்ட எண்ணமும் மற்றவரிடம் பணியாற்றும் நிலையும் கணவன் மனைவியின் பிரிவும் ஏற்படும்

 சனி நீச்சமாக இருந்தால் ஒழுக்க குறைவும் தாழ்நிலை அடைவதும் வறுமையால் வாடும் நிலையும் ஏற்படும்... 
Astro Nithiyandran..... 

astrological remedies......ஜோதிட பரிகாரங்கள்

ஜோதிட பரிகாரங்கள் ஒருவர் ஜாதகத்தில் பலதரப்பட்ட பாதிப்புகள் இருக்கக்கூடும் அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட பரிகாரங்கள் செய்ய வேண்டியது இருக்கும் 

அப்படி இருக்கும் பொழுது ஒரு பரிகாரத்திற்கும் மற்றொரு பரிகாரத்திற்கும் எத்தனை மாதங்கள் இடைவெளி வேண்டும் என்று பலர் குழப்பத்தில் கேட்கின்றனர்

 முதலில் பரிகாரம் என்றால் என்ன பரிகாரம் என்பது எந்த கிரகத்தின் அடிப்படையில் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமோ அந்த கிரகத்தை சரிவர இயங்க செய்வதை பரிகாரம் 

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் பாதிக்கப்படும் பொழுது அந்த கிரகத்தின் கதிர்வீச்சு எந்த ஆலயத்தின் மீது அதிகமாக விழுகிறதோ அந்த ஆலயத்தில் சென்று இறைவனை தரிசனம் செய்யும் பொழுது 

அதில் பிரசித்தி பெற்ற கற்களால் ஆன அந்த விக்கிரத்தின் மீது விழும் ஒளியானது நமது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்

 ஆதலாலே குறிப்பிட்ட பாதிப்புக்கு குறிப்பிட்ட ஆலயம் செல்ல வேண்டும் என்பது ஜோதிடத்தில் ஒரு விதி

 பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மட்டும பிரசித்தி பெற்ற கற்களில் ஆன சிலைகள் வைப்பதுண்டு

 ஆதலால் பிரசித்தி பெற்ற சிலைகளிலே படும் ஒளிகளுக்கு அந்த தன்மையும் அதில் படும் அபிஷேகப் பொருட்களுக்கு அபரிமிதமான தன்மையும் இருப்பதால் கோயில்களுக்குச் சென்று நீங்கள் அபிஷேகத்தையும் தரிசனத்தையும் கண்டு களிக்கும் பொழுது உங்களுக்குள் இருக்கும் பாதிப்பு சற்று விலகுவதற்கு வாய்ப்பு உண்டு 

ஒரு பரிகாரத்திற்கும் மற்றொரு பரிகாரத்திற்க்கும் நிச்சயமாக இடைவெளி எதுவும் தேவையில்லை ஆனால் எந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்ய வேண்டுமோ அந்தப் பரிகாரத்தை அந்த கிழமையில் செய்ய வேண்டும்

 அதனால் அந்த நாட்களில் இடைவெளி இருந்தால் போதும் அதாவது திதி நாட்கள் இது அனைத்தும் குறித்து, நீங்கள் சரியான முறையில் உங்களது பரிகாரத்தை செய்தால் போதும்

 சரியான நேரத்தில் நீங்கள் ஆலயம் சென்று வந்தால் போதும் இதற்கென்று தனிப்பட்ட இடைவெளி எதுவும் இல்லை ஆதலால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆலயம் செல்லலாம் எப்போது வேண்டுமானாலும் பரிகாரத்தை செய்து முடித்துக் கொள்ளலாம் அதற்கான நேரத்தையும் காலத்தையும் குறித்துக் கொண்டால் போதும் 
Astro Nithiyandran..... 

is astrology true..... ஜோதிடம் என்பது உண்மையா....

Astrology is true...... 

ஜோதிடம் என்பது உண்மையா அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம் 
முதலில் ஜோதிடம் என்பது 9 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள் 12 ராசிகளை கொண்டது

 ஒரு மனிதனது வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை இடையில் நடைபெறுகின்ற நிகழ்வை நாம் முன்கூட்டியே கணிப்பதுதான் ஜோதிடம் 

அதாவது மனிதனின் பிறப்பு இறப்பு என்பது நிச்சயமான ஒன்று மனிதனோட வாழ்க்கையில் மூன்று பருவங்கள் உண்டு எந்த மனிதனாக இருந்தாலும் குழந்தை பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் உண்டு

 குழந்தை பருவத்தில் கல்வி என்பது இன்றியமையாத ஒன்று அதுபோல் இளமைப் பருவத்தில் திருமணம் குழந்தை என்பது இன்றியமையாத ஒன்று அது போல் முதுமை பருவத்தில் நோய் ஓய்வு என்பன இன்றியமையாத ஒன்று 

அனைத்து மனிதனுடைய வாழ்க்கையும் இதற்குள் அடங்கிவிடும் சரி ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த நிகழ்வுகள் எப்படி நடைபெறுகின்றன என்பன அவர்கள் பிறக்கும்போது பூமியின் மீது எந்த கதிர்வீச்சுகள் விழுகின்றதோ அந்தக் கதிர்வீச்சின் பண்புகளை உள்வாங்கி மனிதன் பிறக்கின்றான்

 அவன் எப்பேர் பட்ட சூழ்நிலையில் இருக்கின்றானோ அதற்கு தகுந்தாற் போல் அந்த மனிதனின் என்ன ஓட்டங்கள் மாறுகின்றன ஒரு மனிதன் எந்த கதிரை உள்வாங்கின்றனோ அந்தக்கதிர்வீச்சின் தன்மையே அவன் வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்கின்றான்

 இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒரு மனிதன் இம்மூன்று பருவத்திலும் என்ன எண்ண ஓட்டங்களை  கொண்டிருப்பான் என்பதை நாம் சொல்ல முடியும் 

இந்த ஜோதிட கலையில் விதி அதாவது அவன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவுக்கு அனுகூலமாக சொல்ல முடியும்

 இறைவனின் பரிபூரண அருள் இருந்தால் ஒரு மனிதன் ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய முடியும் 

அப்படி இல்லை என்றால் அவனால் ஓரளவே ஆராய்ந்து சொல்ல முடியும் எப்படி 0 முதல் 9 வரை உள்ள எண்களை கொண்டு நம்மால் எத்தனை கோடி எண்களை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் 

அது போல தான் மனிதன் இந்த 12 ராசிகளை வைத்து எத்தனை கோடி பேர் உலகத்தில் இருந்தாலும் அத்தனை கோடி பேர்களுக்கும் ஒரு அமைப்பை சொல்ல முடியும் 

இப்படி அமைப்பு இருந்தால் அது என்னென்ன விளைவுகளை எடுத்துக் கூறும் என்பதை நம்மால் சொல்ல முடியும் தொடரும்....... 

By Astro Nithiyandran...... 

ஜோதிடப்படி திருமணம் - astrology

 ஒருவர் ஜாதகத்தில் திருமணம் என்பது அவரின் ஏழாம் பாவத்தை குறிக்கும் 

சரி பத்து பொருத்தம் கட்டங்கள் பொருத்தம் இவை அனைத்தும் பார்க்கப்பட்டு பின்பு நடைபெறுகிறது அப்படிப்பட்ட திருமணத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரிவு குழந்தையின்மை தற்கொலை எண்ணம் போன்றவை தோன்ற காரணம் என்ன 


அப்படி என்றால் இந்த பத்து பொருத்தம் கட்டப் பொருத்தம் எல்லாம் பொய்யா ...

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாம் இடம் எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பார்க்க வேண்டும்

 அந்த ஏழாம் இடத்தில் எந்த கிரகம் உள்ளது என்பதையும் அது எந்த நட்சத்திரத்தில் விழுந்து உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும் 

அந்த ஏழாம் பாவம் அதிபதி எந்த  பாவத்துடன் தொடர்பு கொண்டு உள்ளார் என்பதை பார்க்க வேண்டும் 

ஏழாம் பாவ அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி எந்த பாவத்தில் உள்ளார் அவர் எப்படி உள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும் 


இப்படி எல்லாம் பாவங்களையும் கவனிக்க இப்படி ஏழாம் பாவத்தை அலசி ஆழ்ந்த பிறகு ஒரு திருமண நடைபெற்றாலும் அவர்களுக்கு பிரிவு ஏற்படுவதற்கான காரணம் ......

ஜாதகத்திலேயே அவர்களுக்கு திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் எப்படி இருக்கும் என்பது முன்வைக்கப்பட்ட ஒன்று.

 நீங்கள் எந்த பெண்ணை திருமணம் செய்கிறீர்களோ அதை விடுத்து வேறு பெண்ணை திருமணம் செய்திருந்தால் இதுதான் நடக்கும்

 நமக்கு விதியே இப்படித்தான் என்று அமைந்துவிட்டால் எந்த பொண்ணை எப்பேர்பட்ட இடத்தில் இருந்து  திருமணம் செய்தாலும் விதிப்படி தான் நடக்கும்

 இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் தாங்க தங்களின் தசா புத்தியே அலசி ஆராய்ந்து அது எப்பொழுது வருகிறது?

 எப்பொழுது பாதகமான திசை வருகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கு முன்னால் சில பரிகாரங்களையும் சில தெய்வ வழிபாடுகளையும் செய்தால்  இதிலிருந்து வெளிவர முடியும்


By Nithiyandran r thedalin thedal tamil blog.... 

மகாபாரதத்தில் யட்சன் கேட்ட கேள்விக்கு தர்மன் அளித்த பதில்கள்....

யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?

தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.

யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?

தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.

யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?

பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.

யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?

தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.

யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?

தருமர்: ஒரு தாயின் மனம்.

யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?

தருமர்: அவனுடைய தந்தை.

யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?

தருமர்: மனிதனின் மனம்.

யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?

தருமர்: கவலை.

யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?

தெருமர்: மீன்.

யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?

தருமர்: முட்டை.

யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?

தருமர்: நதி.

யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?

தருமர்: அவன் பெற்ற கல்வி.

யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?

தருமர்: அவன் மனைவி.

யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?

தருமர்: நல்ல வைத்தியன்.

யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?

தருமர்: அவன் செய்கிற தருமம்.

யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?

தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.

யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?

பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.

யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?

தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?

தருமர்: நோயின்மை.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?

தருமர்: மனத்திருப்தி.

யட்சன்: சிறந்த தருமம் எது?

தருமர்: அஹிம்சை

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?

தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?

தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.

யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?

தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.

யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?

தருமர்: தர்மத்திற்காக.

யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?

தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.

யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?

தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.

யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?

தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.

யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?

தருமர்: கோபம்.

யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?

தருமர்: பேராசை.

யட்சன்: எவன் சாது?

தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.

யட்சன்: எது தைரியம்?

தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்

யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?

தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.

யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?

தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.

யட்சன்: எது டம்பம்?

தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.

யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?

தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.

யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?

தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.

யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?

தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.

யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?

தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?

தருமர்: வெற்றியை ஆடைகிறான்.

யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?

தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.

யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?

தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.

யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?

தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.

யட்சன்: எது ஆச்சரியம்?

தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.

யட்சன்: எவன் புருஷன்?

தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.

யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?

தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன்....