கிரகங்கள் உச்ச ,நீச வீட்டில் இருந்தால் தரும் பலன்கள்
astrological remedies......ஜோதிட பரிகாரங்கள்
is astrology true..... ஜோதிடம் என்பது உண்மையா....
ஜோதிடப்படி திருமணம் - astrology
ஒருவர் ஜாதகத்தில் திருமணம் என்பது அவரின் ஏழாம் பாவத்தை குறிக்கும்
சரி பத்து பொருத்தம் கட்டங்கள் பொருத்தம் இவை அனைத்தும் பார்க்கப்பட்டு பின்பு நடைபெறுகிறது அப்படிப்பட்ட திருமணத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரிவு குழந்தையின்மை தற்கொலை எண்ணம் போன்றவை தோன்ற காரணம் என்ன
அப்படி என்றால் இந்த பத்து பொருத்தம் கட்டப் பொருத்தம் எல்லாம் பொய்யா ...
ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாம் இடம் எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பார்க்க வேண்டும்
அந்த ஏழாம் இடத்தில் எந்த கிரகம் உள்ளது என்பதையும் அது எந்த நட்சத்திரத்தில் விழுந்து உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்
அந்த ஏழாம் பாவம் அதிபதி எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டு உள்ளார் என்பதை பார்க்க வேண்டும்
ஏழாம் பாவ அதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி எந்த பாவத்தில் உள்ளார் அவர் எப்படி உள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்
இப்படி எல்லாம் பாவங்களையும் கவனிக்க இப்படி ஏழாம் பாவத்தை அலசி ஆழ்ந்த பிறகு ஒரு திருமண நடைபெற்றாலும் அவர்களுக்கு பிரிவு ஏற்படுவதற்கான காரணம் ......
ஜாதகத்திலேயே அவர்களுக்கு திருமண வாழ்க்கை எவ்வாறு அமையும் எப்படி இருக்கும் என்பது முன்வைக்கப்பட்ட ஒன்று.
நீங்கள் எந்த பெண்ணை திருமணம் செய்கிறீர்களோ அதை விடுத்து வேறு பெண்ணை திருமணம் செய்திருந்தால் இதுதான் நடக்கும்
நமக்கு விதியே இப்படித்தான் என்று அமைந்துவிட்டால் எந்த பொண்ணை எப்பேர்பட்ட இடத்தில் இருந்து திருமணம் செய்தாலும் விதிப்படி தான் நடக்கும்
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் தாங்க தங்களின் தசா புத்தியே அலசி ஆராய்ந்து அது எப்பொழுது வருகிறது?
எப்பொழுது பாதகமான திசை வருகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கு முன்னால் சில பரிகாரங்களையும் சில தெய்வ வழிபாடுகளையும் செய்தால் இதிலிருந்து வெளிவர முடியும்
By Nithiyandran r thedalin thedal tamil blog....
மகாபாரதத்தில் யட்சன் கேட்ட கேள்விக்கு தர்மன் அளித்த பதில்கள்....
As per Hindu astrology Can women marry a man who is younger to her.....
ஜோதிட சாஸ்திரப்படி பணம் கேட்கச் செல்லும் போது எத்தனை பூண்டு, கிராம்பு எடுத்துச் செல்ல வேண்டும்
மாங்கல்ய தோஷம்
Nithiyandran r thedalin thedal tamil blog..
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஆண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது மனைவியும் பெண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது கணவனையும் குறிக்கும்
இந்த மாங்கல்ய தோஷம் முக்கியமாக நான்கு லக்னத்திற்கு மிகவும் அதிக பாதிப்பை தரக்கூடியது
அது உபய லக்னமான மீனம், மிதுனம் ,கன்னி, மற்றும் தனுசு இந்த நான்கு லக்னக்காரர்களுக்கும் முதல் தர பாதகாதிபதி குருவும் புதனும் ஆகும்
இந்த நான்கு லக்னகாரர்களுக்கு குரு புதன் இருவரும் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துவார்
இதுபோல சர ஸ்திர லக்கனங்களுக்கும் ஏழாம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகம் எந்த அமைப்பில் உள்ளது என்பதை பார்த்து அதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும்
எல்லா லக்னங்களுக்கும் ஏழாம் பாதகாதிபதி அதாவது ஏழாம் பாவ அதிபதி பாவக்கோளாக அமைந்துவிட்டால் அதற்கு சுப பார்வை கிடைக்காவிடில் அது தோஷத்தை ஏற்படுத்தும்
ஒருவர் ஜாதகத்தில் கேது ஏழாம் இடத்தில் அமர்ந்தால் அவர் மாங்கல்ய தோசத்தை ஏற்படுத்திவிடும்
அதே ஏழாம் அதிபதி கேதுடனும் ராகுடனும் செவ்வாயுடனும் சேர்ந்தால் அதுவும் தோஷத்தை ஏற்படுத்தும்
இந்த மாங்கல்ய தோஷம் என்றால் என்ன மாங்கல்ய தோஷம் என்பது இருதார அமைப்பை கொண்டதாகும் அதாவது ஒன்று முதல் கணவர் இறக்க அதனால் இரண்டாவது திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு
இது ஒரு வகையான மாங்கல்யம் இன்னொன்று திருமணமே நடக்காத நிலையை உருவாக்கும் மூன்றாவது தாமதித்த திருமணத்தை ஏற்படுத்தும்
முதலில் ஏழாம் வீட்டு அதிபதி யார் என்று கணிக்க வேண்டும் வீட்டு அதிபதி யாருடைய நட்சத்திரத்தில் விழுந்து உள்ளார் என்பதையும் அந்த ஏழாவிட்ட அதிபதிக்கு எந்தெந்த கிரகத்தின் பார்வை கிடைக்கிறது என்பதையும் நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்
பிறகு ஏழாம் வீட்டு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதி ஆட்சி உச்ச நீச்சம் பகை எந்த நிலைமையில் உள்ளார் என்பதை அறிந்து நாம் பார்க்க வேண்டும்
சுப பார்வை அதாவது கோச்சாரத்தில் சுப பார்வை இருக்கும் பொழுது ஏழாம் பாவத்துக்கு சாதகமான திசா புத்தி இருப்பின் தாராளமாக திருமணம் செய்யலாம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் 28 அதாவது 30 வயதுக்கு முன்னால் மா திருமணம் செய்யலாமா என்றால் நிச்சயமாக அவர் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்
ஆனால் அவர்களுக்கு நடக்கக்கூடிய திசா புத்தியை கணிக்க வேண்டும் அது ஏழாம் பாவத்துக்கு அல்லது கணவனின் ஆயுளான எட்டாம் பாவத்துக்கு மாறகம் செய்யக்கூடிய அமைப்பில் இருக்கக் கூடாது
அவ்வாறு இருந்தால் மாங்கல்ய தோஷம் கணவனை பாதிக்கும் மாறாக அவ்வாறு இருப்பின் அதற்கு உண்டான பரிகாரத்தை செய்து பின்பு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்
மாங்கல்ய தோஷத்தில் அதற்கு உண்டான தசா புத்தி நடந்தால் மட்டுமே அந்த தோஷம் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர மற்றபடி அந்த தோஷம் எப்பொழுதும் பாதிப்பை ஏற்படுத்தாது
ஆதலால் உங்களுடைய சுய ஜாதகததை ஆராய்ந்து அதில் தோஷம் இருப்பின் அந்த பரிகாரத்தை செய்து கொண்டு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்......
By Nithiyandran r
5th house -5 ம் பாவம்
Nithiyandran r thedalin thedal tamil blog
ஐந்தாம் பாவம் என்பது ஜோதிடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும்
புத்திர ஸ்தானமாகவும் திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய ஸ்தானமாகவும் காதல் திருமணம் பற்றி கூறவும் இந்த ஸ்தானம் விலங்குகிறது
ஐந்தாம் பாவத்தில் எந்த கிரகம் உள்ளது அதற்கு தகுந்த அந்த பாவம் செயல்படும்
ஒவ்வொரு லக்னத்திற்கும் ஐந்தாம் இடத்தில் பாவ கோள்கள் இருந்தால் பூர்வீக புண்ணிய சொத்தில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும்
அதாவது உங்களுக்கு இரண்டு தலைமுறைக்கு முன்னால் வாங்கிய சொத்தை வழி வழியாக பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் நிச்சயமாக அந்த சொத்தில் பிரச்சனைகளை அது ஏற்படுத்தும்
ஒருவர் காதலித்து திருமணம் செய்பவர் என்றால் அவருக்கு ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக அது லவ் மேரேஜ்
அதே த்தில் சனி பகவான் இருந்தால் தன்னைவிட ஒரு படி கீழ் உள்ள பெண்ணை அதாவது பொருளாதாரத்தில் கீழ்தங்கிய பெண்ணை நிச்சியமாக காதல் செய்வார்
ஆனால் அது சனி பகவானால் நிறைபெறாமல் போய்விடும் அதே பாவத்தில் சூரியன் இருந்தால் அரசாங்க வேலையில் இருக்கும் பெண்ணை காதல் செய்வீர்கள்
குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஆன்மீக வழியில் இருக்கும் பெண்ணை காதல் செய்வீர்கள்
புதன் அந்த இடத்தில் இருந்தால் நீங்கள் ஒரு ஆசிரியரை காதல் செய்வீர்கள்
செவ்வாய் அந்த வீட்டிற்கு இருந்தால் யூனிபார்ம் தொழில் செய்யும் ஒருவரை காதல் செய்வீர்கள்
இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கு தகுந்தார் போல் உங்களது காதல் இருக்கும்
ஏழாம் இடத்தை வைத்து உங்களது திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை முடிவு செய்ய வேண்டும்
திருமணம் முடிந்த பிறகு குழந்தை பாக்கியம் என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்று
இந்த குழந்தை பாவத்திற்கு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய பாவம் ஐந்தாம் பாவம் ஐந்தாம் பாவத்தில் சுப கோள்கள் சுப பார்வை பெற்று இருந்தால் குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைக்கும்
அதே இடத்தில் பாவ கோள்களில் இருந்து சுப பார்வை பார்க்கவில்லை என்றால் குழந்தை பாக்கியம் என்பது சற்று கேள்விக்குறியான ஒன்று
ஒவ்வொரு ஜாதகத்திலும் திசா புத்தி என்பது இன்றி அமையாது ஒன்று. ஐந்தாம் பாவத்திற்குரிய கிரகம் திசை நடத்தும் பொழுது உங்களுக்கு இந்த பாவத்தின் பாவக்காரகங்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும்
ஐந்தாம் பாவத்தில் இருக்கும் கிரகம் விழுந்த நட்சத்திரத்தை குறித்து உங்களது குழந்தைகளின் என்ன ஓட்டங்களை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம்
எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கும் அந்த நட்சத்திர அதிபதி எந்த பாவத்து தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்தின்படியாக உங்களுக்கு இந்த ஐந்தாம் பாவத்தின் காரத்துவங்களை அவள் செயல்படுத்துவார்
ஐந்தாம் பாவத்திற்கு குருவின் பார்வை கிடைத்துவிட்டால் உங்களது குழந்தைகள் நல்லபடியாக வளரும்
மாறாக ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றிருந்தால் புத்திர தோஷமும் பூர்வ புண்ணிய தோசமும் ,காதல் தோல்வியும் ஏற்படும்
ஐந்தாம் பாவத்தில் நீச்சம் அடைந்த கிரகம் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவத்தின் அதிபதி ஆட்சி உச்சம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் அமர்ந்து விட்டால் உங்களுக்கு அது நீச்ச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து விடும்
அதாவது திடீர் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு எப்படி கொடுத்து விடும் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் திடீரென்று மிகப்பெரிய பணக்காரராக ஆகக்கூடிய அமைப்பு இந்த ராஜயோகத்திற்க்கு உண்டு
ஐந்தாம் வீட்டு அதிபதி 11ஆம் வீட்டு அதிபதியும் தொடர்பு கொண்டால் உங்களுக்கு குழந்தைகள் மூலமாக அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும் அதேபோல் பூர்வ புண்ணிய சொத்துக்களை விற்பதனமும் மூலமாக லாபத்தை பெறுவார்கள்....
By Nithiyandran r