மேஷம்
இந்த ராசியில் சந்திரன் இருக்க பிறந்தவன் உருண்ட சிவப்ப கண்களை உடையவன் காய்கறிகளையும் சூடான ஆகாரத்தையும் மிதமாக புசிப்பவன் காமத்தில் இச்சையும், சஞ்சாரம் செய்வதில் பிரியமும் உள்ளவன்.
தனம் இல்லாதவன் முழங்கால் பலவீனமாக உள்ளவன் .ஸ்திரீகள் பேரில் இச்சை உள்ளவனாகவும் இருப்பான் சிரசு காயம் உடையதாகவும் நகங்கள் கெட்டுப் போனதாகவும் இருக்கும்
பிறர் இடத்தில் பணி செய்வதில் திறமை உள்ளவன்.ஜலத்தை கண்டால் பயம் உடைவனாகவும் பயந்தாலியாகவும் இருப்பான். உள்ளங்கையில் சந்திர ரேகை இருக்கும்
ரிஷபம்
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் அழகான தேகமும் விசாலமான முகமும் பருத்த தொடைகளும் அழகான நடையும் உடையவன் முதுகு அல்லது முகம் பக்கங்களில் வடிவு உடையவன் கெடுதியை சளியாமல் அனுபவிக்க கூடியவன்.
அதிக அதிகாரமும் பறாக்ரமம் உடையவன் தயாள குணமுடையவன் பெண் குழந்தைகள் உள்ளவன் பிள்ளைகளையும் பந்துக்களையும் தனத்தையும் விட்டு நீங்கி இருப்பான்
சாந்தமான குணமடையவனாகவும் எல்லாராலும் விரும்பக்கூடியதாகவும் இருப்பான் வாலிபத்திலும் வயோகத்திலும் சுகமடையவன் ஸ்திரீ பெயரில் ஆசை உடையவன் சினேகிதரிடத்தில் பிரியமுள்ளவன்
நல்ல நடவடிக்கையும் புகழும் புத்திரர்களும் பெண்களும் உடையவன்
மிதுனம்
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் ஸ்ரீலோகனாகவும், லீலைகளை செய்வதில் மிகவும் வல்லவனாக இருப்பான் வேத சாஸ்திரங்களை அறிந்தவனாகவும் மிகவும் கூர்மையான புத்தி உடையவன்
பிறருடைய நோக்கங்களையும் எண்ணங்களையும் கண்டறியக்கூடியனாகவும் புத்தி சாதுர்யம் உள்ளவனாகவும் இருப்பான் அழகாகவும் உயர்ந்த மூக்குடையனாகவும் சிறந்த கண்களை உடையவனாகவும் சுருண்ட தலைமுடியை உடையவனாகவும் நயமான பேச்சுடையாகவும் இருப்பான்
சங்கீத பிரிவினனாகவும் ஆடல் பாடல் வேடிக்கைகளில் வல்லவனாகவும் இருப்பான் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் எப்போதும் சந்தோஷம் உள்ளனாவும் இருப்பான
கடகம்
இதில் சந்திரிருக்க பிறந்தவன் குள்ளமாகவும் தடிப்பான கழுத்தை உடையவனாகவும் உயர்ந்த இடுப்பு உடையவனாகவும் உடம்பை வளைத்துக் கொண்டு வேகமா நடப்பவனாக இருப்பான்
ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவன் ஸ்ரீக்கு அடங்கி நடப்பவன் அனேக வீடுகளையும் சந்திரன் போல சில காலம் வளரும் படியான செல்வத்தையும் சில காலம் குறையும்படியான செல்வத்தினுடையவன்
நல்ல சிநேகிதத்தில் விஷிவாசம் உடையவன் ஜலத்தையும் காட்டையும் கண்டால் சந்தோஷப்படுவனாகவும் நயப்பான வார்த்தைகளை பேசி மயக்கிவிடுபவனாக இருப்பான் தேச சஞ்சாரமும் விரைவாக பேசக்கூடியதாகவும் இருப்பான்
சிம்மம்
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் விசாலமான மிகவும் பெரிய கன்னங்களும் பழுப்பு நிறமான கண்களும் கோபம் உடையவனாகவும் இருப்பான்
சண்டை செஞய்வதில் சமர்த்தானகவும் நிலையான குணங்கள் உடையனாகவும் தான தர்மம் செய்வதில் தாராளமாக தாயிடத்தில் அன்புடன் இருப்பான்
ஸ்ரீகள் மேல் வெறுப்புள்ளவன் அற்ப புத்திரர்களுடையவன் சிறிய விஷயங்களிலும் அதிக கோபத்தைக் காட்டுவான் மலைகளையும் காதுகளையும் கண்டால் சந்தோஷம் அடைவனாகவும் மாமிசம் புசிப்பான் பல்நோய் பசி தாங்காமல் துன்பப்படுவான்
கன்னி
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் அந்தரமான கண்களையும் குறுகிய புஜங்களையும் கைகளையும் மிதமான தேகத்தையும் உடையவன் அடக்கத்தினால் மிகவும் மெதுவாக நடப்பவன் சுகமாய் வாழ்பவன்
உண்மையை பேசுபவன் நயமாக பேசுபவன் வேத சாஸ்திரங்களையும் சங்கீத ஆடல் பாடல் சிற்ப சாஸ்திரங்களிலும் வல்லவன் சன்மார்க்கமும் புத்தி கூர்மையையும் உடையவன் ஸ்ரீலோகன் அந்நிய தேசத்தில் வசிப்பான் பிறருடைய சொத்து அனுபவிப்பான் அர்ப்பபுத்திரர்களையும் உடையவன்
துலாம்
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் உயரமாகவும் மெலிந்து தேகம் உடையவனாகவும் உயரமான மூக்கு உடையவனாகவும் அங்க வீனனாகவும் இருப்பான் வேத சாஸ்திரங்களை அறிந்தவனாகவும் தேவர் பிராமணர் யோகிகளை அடுத்து அன்பு மரியாதை உள்ளவனாகவும் புத்தி கூர்மையிலும் இருப்பான்.
அனேக ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்பெயர் உடையவன் வர்த்தகனாகவும் தனவந்தனாகவும் பிறருடைய சொத்தில் ஆசையில்லாதனாகவும் குடும்பத்தாரை ரச்சிப்பவனாகவும் நோயாளியாகவும் தன்னுடைய பந்து ஜனங்கள் அவமதிப்புப்பட்டு விலக்கப்பட்டவனாக இருப்பான்
விருச்சகம்
இதில் சந்திரன் இருக்கு பிறந்தவன் பரந்த கண்களும் அகன்ற மார்பும் திரண்ட உருண்டு தொடைகளும் முழங்கால்களும் கொஞ்சம் சிவப்பு நிறமுடைய தேகம் உடையவனாகவும் இருப்பான்
கள்ளன் கபடமான அபாயம் உள்ளவன் வாலிபத்தில் நோயாளி தாய் தகப்பனையும் குருவையும் விட்டு பிரிந்து இருப்பான் அரசு வம்சத்தால் மதிக்க பட்டவன் உள்ளங்கை பாதங்களில் மச்ச ரேகை அல்லது பட்சி ரேகை உடையவன்
தான் செய்த பாவமான காரியங்களை மறைத்து வைப்பவன் ஜாக்கிரதையாகவும் பேராசை உடையனாகவும் தேச சஞ்சாரியாகவும் இருப்பான்
தனுசு
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் நீண்ட முகமும் நீண்ட கழுத்தும் கருத்த தந்தங்களும் பிடித்த உதடும் காதுகளும் நாசியும் நீண்ட கைகளும் கெட்டுப்போன நகங்களும் குறுகிய புஜங்களும் உடையவன் மிகவும் சூட்சமான புத்தியும் சாமர்த்தியமாக பேசும் திறனும் எல்லாவற்றையும் சுலபத்தில் அறிந்து கொள்ளும் தன்மை உடையவன்
தான தர்மம் செய்வதில் தாராள குணம் சகல காரியங்களையும் செய்பவர் கிரந்த கர்த்தாவாகவும் இருப்பான் சங்கீதம் சித்திரம் முதலியவற்றில் வல்லவன் பிதுர் சொத்து உள்ளவன் பந்துக்களை வெறுத்தவன் நயப்பான் வார்த்தைகளால் உபயமாக வசப்படும் பேசுவான் பிரகாசமான கண்களை உடையவன்
மகரம்
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் நல்ல கண்களையும் மெலிந்த இடுப்பையும் மெலிந்த கால்களையும் உடையவன் இரக்கமில்லாதவன் மானம் இல்லாதவன்
கௌரவத்திற்காக நற்காரியங்களை செய்பவன் மனைவி மக்கள் இடத்தில் பிரியமாக இருப்பான் எல்லாருளும் விரும்பக்கூடியவன் சோம்பேறி குளிர் சீதனம் பொறுக்காதவன் எப்போதும் திரிந்து கொண்டிருப்பவன் பிறர் சொல்வதை சீக்கிரம் அறிந்து கொள்ளும் சக்தி உடையவன் சென்ற இடம் சினேகிதம் செய்பவன் சங்கீதம் அறிந்தவன் பெருத்தலைவன்
கும்பம்
இதில் சந்திரன் இருக்க பிறந்தவன் உயரமாகவும் நீண்ட முகமும் கழுத்தும் அடிவயிரும் புட்டமும் தொடைகளும் பாதங்களும் உடையவனாகவும் உடம்பில் நரம்பும் சதைகளும் அதிகமாகவும் ரோமம் அதிகமாகவும் பிறருடைய மனைவியை மனைகளின் பேரிலும் சொத்துக்களிலும் ஆசை உடையவன்
வாசனை திரவங்களிலும் புஷ்பங்களிலும் ஆசை உள்ளவன் பாவக்காரிகளை செய்பவன் இடத்தில் பிரியமுள்ளவன் சலியாடல் நடப்பவன் சில காலம் தனமுடையவனாகவும் சில காலம் தனமில்லாதவனாகவும் இருப்பான்
மீனம்
இதில் ஜனக காலத்தில் சந்திரன் இருக்க பிறந்தவன் பெருத்த தலையும் நீண்ட மூக்கும் அழகான கண்களும் உடையவன் ஆகவும் அங்கவீனம் இல்லாதவனாகவும் இருப்பான். தனவந்தனாகவும் கல்வி மனாகவும் இருப்பான்
ஜலத்தில் உண்டாகும் படியான வாஸ்துக்களாகிய உப்பு சங்கு பவளம் சிற்பி முத்து, மீன் முதலிய வியாபாரம் செய்பவன் நல்ல வஸ்திரங்களை தரிக்க பிரியமுள்ளவன் செல்லுமிடத்தில் அடங்கி இருப்பான் புதையில் கண்டெடுப்பான் எதிரிகளை அவமானப்படுத்துவான் பல மனைவிகளுடையவன்
குறிப்பு
ஜனக காலத்தில் சந்திரனோ சந்திரன் இருக்கின்ற அதிபதியும் வலிமையாய் இருக்கும்போது தான் மேல் சொல்லி பலன் பூரணமாகவும் வலிமையாக இருந்தால் பலன்கள் மத்தியம் நடக்கும் இவ்விதமே சந்திரன் நீங்களாக மற்ற கிரகங்களின் பலத்தையும் அறிந்து அவர்களுக்கு பெரிய பலன்களை சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment
thanks for reading