முதலில் சனி எப்படிப்பட்டவர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு கிரகம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே அந்த கிரகத்தின் பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்
சனி இவர் தாங்கள் நிகழ்காலத்தில் செய்யும் பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் பலனை தர வல்லவர் முதலில் இதை கவனமாக தெரிந்து கொள்ளுங்கள் 9 நவகிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம்
என்ன காரணம் என்று கேட்டால் அவர் ஒருவர் தான் செய்யும் நிகழ்வாக பாவ புண்ணியத்திற்கு பலனை தருவதனால் தான் அவருக்கு ஈஸ்வர பட்டம் உண்டு ஈஸ்வரன் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது அவர்கள் செய்யும் பாவ புண்ணியத்திற்கு நிச்சயமாக பலனை அனுபவித்தே ஆக வேண்டும்
அதை பொறுத்து உங்களது பூர்வ ஜென்ம பாவம் ஒரு பக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அதனுடைய பலன்களை தனது ஏழரை சனி காலத்தில் மற்றும் கண்டகச் சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி போன்ற சனியின் பார்வையின் மூலமாக அவர் தனது பலன்களை தர வல்லவர்
தாங்கள் நிகழ்காலத்தில் அதாவது உடலில் பாதிப்போடு பிறப்பவர்கள் அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தாங்கள் தன்னலமற்ற செய்தீர்களேயானால் சனீஸ்வர பகவானின் பார்வையோ சனீஸ்வர பகவானின் ஏழரை சனியோ உங்களுக்கு எந்தவித பாதிப்பையும் அதாவது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது
காரணம் முதலில் பாவத்தின் பலனாகவும் பின்பு இந்த புண்ணியத்தின் பலனாகவும் அவர் தருவார் இந்த புண்ணியம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர் தரும் பலன் உங்களுக்கு வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மையாக இருக்கும்
ஆதலால் நீங்கள் சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உங்களால் இயன்ற அளவு உடலில் பாதிப்போடு பிறப்பவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்
இதை செய்து வந்தீர்களேயானால் வரக்கூடிய சனி பெயர்ச்சி உங்களை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது சரி இந்த சனி என்னன்ன பாதிப்பை ஏற்படுத்தும்
ஒரு சனீஸ்வர பகவான் தரக்கூடிய நோயானது நிரந்தரமான நோயாக மாறிவிடும் அதேபோல் சனீஸ்வர பகவான் தரக்கூடிய கஷ்டமும் நிரந்தர கஷ்டமாக மாறிவிடும்
இதை போக்க வேண்டும் என்றால் நாம் செய்த புண்ணியத்தின் வழியாகத்தான் போக்க முடியுமே தவிர நாம் செய்யும் யாகத்தின் வழியாக தீர்க்க முடியாது சனீஸ்வரன் பகவான் பிடியில் இருந்து விடுபட வேண்டுமானால் நீங்கள் சனிக்கிழமை சனீஸ்வரனை வணங்க வேண்டும் அது மட்டுமல்லாமல் சனீஸ்வரனை வணங்கி உங்களால் முயன்ற உதவிகளை பிறருக்கு சனிக்கிழமை செய்ய வேண்டும்
அப்படி செய்தால் மட்டுமே உங்களுக்கு பூர்ன பலன் கிடைக்கும் நீங்கள் அதைவிடுத்து வெறும் சனீஸ்வர பகவானை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தால் உங்களுக்கு பூர்ன பலன் கிடைக்காது
ஆதலால் உங்களால் உதவிகளை செய்ய முடியவில்லை என்றால் முடிந்த அளவு ஒரு கைப்பிடி அன்னத்தை காகத்திற்கு வைத்து வழிபடுங்கள் அதுவும் ஒரு வகையான தானம் தான்
இப்படி தானத்தின் அடிப்படையிலேயே உங்கள் பலன்களை நாம் மாற்ற முடியுமே தவிர யாகத்தின் அடிப்படையில் மாற்ற முடியாது
ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் இந்த சனீஸ்வர பகவான் என்னென்ன நன்மைகளை செய்வார் என்னென்ன தீமைகளை செய்வார் என்பதை நான் அடுத்தடுத்த பதிவில் பதிவிடுகிறேன்
ஆனால் இவை அனைத்தும் ஒரு பொதுவான பலன்களே நான் முன்பு சொன்னது போல உங்களது நிகழ்கால பாவம் புண்ணியத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இதனுடைய பூர்ன பலனை நம்மளால் சொல்ல முடியும்
உங்களது சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து முழு பலன்களை சொல்ல முடியும் தங்களது ஜாதகம் பற்றிய பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களது நேரம் பிறந்த இடம் பிறந்த தேதி போன்றவற்றை பதிவிடுங்கள் நான் இலவசமாக உங்களுக்கான பலன்களை தருகின்றேன்
Astro nithiyandran......
No comments:
Post a Comment
thanks for reading