jothidam in tamil நட்சத்திரங்களின் தன்மைகள்

ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த நட்சத்திரம் ஏனென்றால் ஒரு கிரகம் தன்னிச்சையாக எந்த கதிர்வீச்சையும் வழங்குவதில்லை மாறாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து பெற்ற ஒளியை பிரதிபலிக்கின்றன
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தன்மை உண்டு ஒரு கிரகம் உதாரணமாக சந்திரனை எடுத்துக் கொண்டால் அந்த கிரகம் எந்த நட்சத்திரத்தில் விழுந்து இருக்கிறதோ அந்த நட்சத்திரமே அவர்களுக்கு திசையாக அமையும் அந்த நட்சத்திர அதிபதி யார் என்பதை கண்டு அவரே முதல் திசை அதிபதியாக வருவார் அப்படி என்றால் இந்த நட்சத்திரத்தின் வாயிலாகத்தான் நமக்கு நம் ஜாதகத்தில் பலன்களை தர போகின்றார் ஒவ்வொரு நட்சத்திரத்தின் கூட்டத்தையும் கண்காணித்து 360 டிகிரிக்குள் நட்சத்திர கூட்டங்களை இணைத்து ஒவ்வொரு முப்பது டிகிரிக்கும் ஒரு ராசி என்று பெயரிட்டு அந்தந்த ராசியில் எந்தெந்த கிரகம் இருக்கிறதோ அதை பொறுத்து பாருங்கள் சொல்லப்படுகிறது இந்த நட்சத்திரம் எவ்வளவு முக்கியம் என்றால் உங்களின் தசையை தீர்மானிப்பது இன் நட்சத்திரம் தான்
ஒரு ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்று இந்த திசை புத்தி அந்தரம்
இதை வைத்தே பெரும்பாலும் பலன்கள் சொல்லப்படுகிறது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கிரக அதிபதியாக வருகிறது இந்த கிரகமே முதல் தர பலனை தரக்கூடியது ஒருவர் திசை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அவரது செயல்பாடுகள் அமையும்
எந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து கிரகங்கள் ஒளியை பெறுகின்றன அந்த நட்சத்திரக் கூட்டங்களை இக்கிரகம் ஆட்சி செய்கிறது அப்படி என்றால் நட்சத்திரத்தை ஒளியை வாங்கக்கூடிய கிரகங்கள் எதுவோ அந்த கிரகமே அந்த நட்சத்திரக் கூட்டங்களையும் கட்டுப்படுத்துகிறது
உதாரணமாக சனி நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் சந்திரன் பயணம் செய்யும் ஆனால் மனது ஆளக்கூடிய சந்திரன் அணியின் நட்சத்திரத்தில் விழும் பொழுது எந்த ஒரு விஷயத்திலும் மனம் சஞ்சலப்படும் அதாவது சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறும்....

ஒரு ஜாதகத்தை ஆராய வேண்டுமென்றால் முதலில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்தார் என்பதை அறிந்து அவருடைய மனதை அறிய வேண்டும்

No comments:

Post a Comment

thanks for reading