jothidam in tamil ஜாதகத்தில் ஒருவருக்கு தொழில் என்பதை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்... கோச்சாரத்தின் படி ராசிப்படி தொழில் மாற்றம் அமையுமா அல்லது லக்கனப்படி தொழில் மாற்றம் அமையுமா.......

தொழில் என்பதை எப்படி தீர்மானிக்க வேண்டும் .....

ஜாதக அமைப்பில் இரண்டாக பிரித்தால் ஒன்று கணிதம் மற்றொன்று பலன்கள் இந்தக் கணித அமைப்பிற்கு சூரியன் சந்திரன் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் பலன் சொல்லும் பொழுது இந்த சூரியன் சந்திரன் அமைப்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் நாம் பிரித்து தெரிந்து கொண்டோமே ஆனால் பலன்களை துல்லியமாக சொல்ல முடியும்

இப்படி இரண்டாகப் பிரித்துக் கொண்டால் உங்கள சரியாக பலன்களை சொல்ல முடியும் இந்த கோச்சாரம் மற்றும் உங்களது சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி போன்ற பலன்களையும் உங்களால் துல்லியமாக சொல்ல முடியும்

ராசி படி தொழில் அமையுமா அல்லது லக்கின படி தோழில் அமையுமா ?

முதலில் ராசி என்பது நம் சந்திரன் அடிப்படையாக வைத்து பார்க்கக் கூடிய ஒன்று அதேபோல் லக்னம் என்பது சூரியனின் மையப்படுத்தி கணிக்க கூடிய ஒரு அமைப்பு ஆகும்

 சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் ஜாதகத்தில் முக்கிய பங்கு வைக்கிறது சூரியன் என்கிற உயிரானது சந்திரன் என்ற உடல் மூலமாக பூமியில் பிறப்பு எடுக்கிறது அதாவது சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி சந்திரன் இப் பூமிக்கு பிரதிபலிப்பை அனுப்புகிறது

 சரி சூரியன் சந்திரன் இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன ஒரு ஜாதகத்தில் சூரியன் எந்த லக்னத்தில் குறிக்கின்றதோ அந்த லக்னம் அந்த ஜாதகருக்கு அமைகிறது

 ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் ஒரு லக்னம் இருக்கின்றது காலையில் ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு லக்னத்தில் உதிக்கின்றது உதாரணமாக மேசத்தில் சித்திரை மாதம் உதிக்கின்றது 

இப்படி ஒவ்வொரு மாதங்களாக 12 மாதங்களுக்கும் ஒவ்வொரு லக்னம் காலையில் பிறப்பெடுக்கிறது சராசரியாக 24 மணி நேரத்தில் 12 லக்னங்களும் கடந்து விடுகிறது

 ஆனால் கட்டத்தில் தனியாக சூரியன் என்ற ஒரு கிரகமும் குறிக்கப்பட்டு இருக்கும் அப்படி என்றால் என்ன

.... சூரியன் மையப்படுத்தி கனிக்ககூடிய லக்கினமே பிரதான ஒன்று சூரியன் அதில் கிரகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது அதுபோலத்தான் சந்திரன் என்பது திசா புத்தியை கணிக்க கூடிய ஒரு அமைப்பு ஆனால் கட்டத்தில் உள்ள சந்திரன் என்பது ஒரு கிரக அமைப்பு

 நீங்கள் லக்கினத்தையும் திசா புத்தியும் இரண்டையும் எடுத்துக் கொண்டால்தான் சரியான பலனை  சொல்ல முடியும். 

அதை விடுத்து சூரியன் அமைப்பு சந்திரன் அமைப்பு நீங்கள் ஜாதகத்தில் பார்த்தீர்களேயானால் அதனுடைய பலன்களை சரியாக சொல்ல இயலாது ஆதலால் சூரியனை மையப்படுத்தி சந்திரனை மையப்படுத்தி நீங்கள் பொதுவா பலன்கள் வேண்டாம்.

 இந்த கோச்சாரம் அனைத்துமே நீங்கள் லக்னபடி எங்கு அமைந்துள்ளது என்பதையும் ராசிப்படி மனோகரன் அதாவது சந்திரன் என்பது மனோகரன் சந்திரனுக்கு எந்த இடத்தில் அமைந்துள்ளது  இருக்கக்கூடிய அனைத்து ஸ்தானங்களுக்கும் எந்த பாவமாக வருகிறது என்பதை பொருத்தும் அதில் உங்களுடைய மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த சந்திரன் மூலம் உங்களால் தீர்மானிக்க இயலும்

 சந்திரனை தசா புத்தியும் கணிக்கக் கூடிய கிரகம் என்பதால் கோச்சாரத்தையும் நீங்கள் சந்திரன் மூலமாக கணிக்க வேண்டும் லக்கினத்தை தவிர உங்களுக்கு மத்த ஒன்பது கிரகங்களும் கிரக அமைப்பு  வைத்துத்தான் சொல்ல வேண்டும் 

லக்னம் தனியாக இருக்கும் மத்த ஒன்பது கிரகமும் கட்டத்தில் இருக்கும் அப்படி என்றால் லக்னம் லக்னம் என்பது இரண்டு மணி நேரம் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அதை நீங்கள் இன்னும் குருக்கினால்  லக்னத்தை உங்களால் துல்லியமாக எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கு என்பது உங்களால் அறிய முடியும்

 30 டிகிரி யில் எந்த டிகிரியில் அமைந்துள்ளது என்பதை ஒரு நட்சத்திர அமைப்பு அங்கு காட்டும் அந்த நட்சத்திரத்தில் பொதுவான குணங்கள் உங்களுடைய குணங்களாக நிச்சயம் வெளிப்படும்

 அப்படி என்றால் பொதுவான குணங்கள் எது என்பதை நீங்கள் லக்ன ரீதியாக பார்க்கும் பொழுது அந்த லக்னம் இருந்த நட்சத்திர அதிபதியை எது என்பதை பொறுத்து நீங்கள் இவ்வுலகில் பிறக்கும் போது என்ன கர்மாக்களை கொண்டு வந்தீர்கள் என்று இந்த லக்கனம் காட்டு 

சரி சந்திரன் என்பது உங்களது மனதை குறிக்கப்படுகிறது அப்படிப்பட்ட சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதை பார்த்துத்தான் உங்களது சார்புத்தியை கணிக்கப்படுகிறது

 அந்த நட்சத்திர அதிபதி உங்களுக்கு எந்த பாவத்தின் அறிகுறியாக வருகிறாரோ அதை பொறுத்து அன்று பலம் நடைபெறும் அப்படி என்றால் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றார்களோ அந்த பயணம் செய்யக் கூடிய நட்சத்திர  எந்த பாவங்களுக்கு அதிபதியாக வருகிறதோ அந்த பாவங்களின் பலன்களை தரக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும்

  திசை புத்தி அந்தரங்கம் மூன்று அமைப்பு நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்தரம் என்பதை குறுகிய காலத்தில் நடைபெறுகிறது கொஞ்சம் ஒரு மாதமாக இடைவெளி கூடிய அமைப்பை குறிக்கும். 

புத்தி என்பது சில ஒரு இரு வருடங்கள் நடைபெறும்அதேபோன்று திசை என்று நீண்ட காலம் நடைபெறும் இப்படி என்றால் தசாவின் வாயிலாக தான் புத்தியும் அந்தரமும் செயல்படும் திசா வழிவிடவில்லை என்றால் உங்களுக்கு புத்தியும் அந்திரம் வேலை செய்யாது... இப்படி ஒவ்வொரு கிரகமும் தான் நட்சத்திர அதிபதி மூலமாக பலன்களை வழங்குகின்ற.......by astro nithiyandran 

No comments:

Post a Comment

thanks for reading