அவர் உண்மையில் அழிக்க நினைத்தது கௌரவர்களை தானே தவிர பாண்டவர்களை அல்ல.......
ஏன் அவ்வாறு நினைத்தார் அதற்கான காரணம் என்ன?
திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரியின் சகோதரரே இந்த சகுனியாவார் பீஷ்மர் காந்தாரியை திருதராஷ்டிரனனுக்கு மனம் முடிக்க விரும்பினார் ஆனால் இதை சகுனியின் பெற்றோர்கள் ஏற்கவில்லை இருந்தாலும் பீஷ்மரை எதிர்க்க முடியாது என்பதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர்
ஆனால் காந்தாரியின் ஜாதகத்தில் முதற்கனவர் இறக்க நேரிடும் என்ற அமைப்பு இருந்ததால் அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியை முதலாவதாக திருமணம் செய்ய வைத்து அதை பலி கொடுத்து விட்டனர்
இதை சற்றும் அறியாத பீஷ்மர் திருமணத்திற்கு பிறகு தெரிந்து கொண்டார் இதனால் கடங் கோபம் கொண்ட பீஷ்மர் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பரதநாட்டின் மானம் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்து அவர்களை சிறையில் அடைக்கிறார்
அவர்கள் உண்மையை யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக அனைவரையும் சிறையில் அடைத்து அவர்கள் உண்பதற்காக ஒரு வேலை உணவை மட்டும் வழங்குகிறார்
இதை பார்த்த சகுனியின் தந்தை சகுனியிடம் சில வார்த்தைகளை உரைக்கிறார் அதில் முக்கியமானது நீ உன்னுடைய பலத்தால் பீஷ்மரை வெல்வது என்பது இயலாத காரியம் அவர்கள் எப்படி நம் குலத்தை அழித்தார்களோ அதுபோல் நீயும் அவர்களது குலத்தை அழிக்க வேண்டும்
அதற்கு நீ உனது புத்தியை பயன்படுத்த வேண்டும் உனது புத்தி மூலமாகவே நீ அவர்களை அழிக்க நேரிடும் ஆதலால் நாங்கள் அனைவரும் எங்களது உணவை உனக்குத் தருகிறோம் நீ உணவை உண்டு உயிர் வாழ வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்
இதை காரணமாக கொண்டு தனது தந்தையின் விரல்கள் மூலமாக தாயக்கட்டைகளை உருவாக்கிக் கொள்கிறார் அதன் பிறகு நீ எப்போதும் அவர்களை அழிக்க வேண்டும் என்றஎன்னம் உன் மனதில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கால் உணம் ஆக்கப்படுகிறது
காலை பார்க்கும் போதெல்லாம் நீ அவர்களை அழிக்கும் எண்ணமே உனக்கு மேலோக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு செய்கிறேன் என்று அவர் தந்தை கூறுகிறார்
சகுனியின் சூழ்ச்சி எவ்வாறு அமைந்தது என்றார் பாண்டவர்களை கௌரவர்களுக்கு பகையாக மாற்றி பாண்டவர்களை அழிக்க வேண்டும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கௌரவர்களுக்கு ஊட்டி அவர் பாண்டவர்கள் மூலம் கவுரவர்களை அழித்தார்
இவ்வாறு கௌரவர்கள் மூலமாக பாண்டவர்கள் குலத்தையும
பாண்டவர்கள் மூலம் அந்த கௌரவ குலம் முழுவதையும் அளித்தார்.
பீஷ்மர் எந்த குலத்தை காக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டு இக்காரியத்தை செய்தாரோ
அவர் கண் முன்னாலே அக்குலம் முழுவதும் அழிந்து போனது
நாம் செய்யும் பாவத்தின் தண்டனை எதற்காக அந்த பாவத்தை செய்கிறோமோ அதற்காக அதுவே அழிந்து போகும்......
No comments:
Post a Comment
thanks for reading