பேய் இருக்கா... ஓரு உண்மை அனுபவம்
பேய் இருக்கா உண்மையிலேயே பேய் இருக்கா அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா மனிதனோட உடல் மற்றும் உயிர் இரண்டால் ஆனது தான் மனிதன். இப்ப மனிதனுக்கு பாத்தீங்கன்னா உயிர் தனி உடல் தனி உடலுக்கு தனி ஆயுள் உயிருக்கு தனி ஆயுள் இருக்கு ஒரு மனிதன் உடல் எப்போது வேண்டுமானாலும் அளிக்கப்படலாம். உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்துல ஒரு மனிதனுக்கு 90 வயது வரை ஆயுள் கணிக்கிறோம் 40 வயது அல்லது 50 வயதுக்குள் அந்த மனிதன் மரணிக்கிறான் என்றால் அந்த மனிதனுடைய உடலானது அந்த குறிப்பிட்ட வயதில் அழிக்கப்படும். ஆதலால் மனிதனுடைய உடல் அப்போது அளிக்கப்பட்டு ஆன்மாவானது உடலை விட்டு வெளியே செல்கிறது. இப்பொழுது அந்த ஆன்மா வெளியே சென்றவுடன் 12 நாட்கள் அந்த ஆன்மா வாழ்ந்த இடத்தில் வாசம் செய்யும். பிறகு அந்த ஆன்மா தனது 90 வயது முடியும் வரை இப்பூவுலகில் உடலற்ற ஆன்மாவாக அது அலையும். அதைத்தான் நாம் பேய் என்று சொல்கின்றோம் அந்த ஆன்மா நல்ல ஆன்மா அல்லது தீய ஆன்மா இரண்டும் இருக்கும். ஒரு நல்ல ஆன்மாவானது யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால் நிறைவேறாத ஆசையால் இறந்த இந்த துஷ்ட ஆத்மாக்கள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தேவையான உடலை தேடி அலையும் அப்படி அழையும் பொழுது அதற்கு கண்ணில்பட்ட அந்த உடலை தேர்ந்தெடுத்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும். இப்படித்தான் பேய் உருவாகிறது ஆத்மா அந்த வயதை அதாவது தனது குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பூவுலகை விட்டு வேறொரு உடலை அது சென்றடையும் அதன்பின் ஆன்மாவானது பிறகு எந்த உடலை எடுத்து உள்ளதோ அந்த உடலுக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றி கொள்ளும். ஆன்மா தனது உறக்க நிலையில் இருக்கும் பொழுது அதாவது உடல் உறக்க நிலையில் இருக்கும் பொழுது ஆன்மா எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும் அந்த ஆன்ம விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது தான் தங்களுக்கு கனவு வரும் அந்தக் கனவில் நல்ல ஆத்மாக்கள் அதாவத மூதாதையர் ஆத்மாக்கள் நமக்கு வரக்கூடிய துன்பத்தை முன்கூட்டியே எடுத்துரைப்பார்கள். அதனால்தான் நம் குல தெய்வத்தை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் நமக்கு வரக்கூடிய ஆபத்துகளை நாம் முன்கூட்டியே உணர முடியும் ஆதலால் பேய் இருக்கா என்றால் ஆத்மா தான் பேய் புனித ஆத்மா நிறைவேறாத ஆசைகள் திறிகின்ற ஆத்மாக்கள் இந்த இரண்டில் எந்த வகையில் இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல் அந்த ஆத்மாவின் செயல் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)

hi
ReplyDelete