லக்னாதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன்
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இந்த லக்ன அதிபதி எந்த நிலைமையில் உள்ளார் என்பதை பொறுத்து அவரது வாழ்க்கை அமையும்
லக்னாதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் எந்த ஒரு காரியமும் விரைவில் நடந்தேறும் அதே சமயம் லக்னாதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு எந்த காரியமும் தடைப்பட்டு பிறகு நடைபெறும்
அப்படிப்பட்ட லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் சகோதர அதாவது அவரது இளைய சகோதரர் இவரால் பாதிக்கப்படுவார் அது மட்டுமல்லாமல் கமிஷன் தொழில் இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறு தூர பயணத்தில் இவர்களுக்கு பிரச்சனை உண்டாகும் மனதில் ஏதோ ஒரு வித பயம் இவர்களை ஆட்கொள்ளும்.
ஏழாம் இடத்திற்கு எட்டாம் பாவமாக இது வருவதால் ஒருவருக்கு கூட்டுத்தொழில் பிரச்சனை ஏற்படுத்தும் அதே போல் திருமண வாழ்க்கையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்படும் ஏழாம் பாவம் என்பது முக்கியமாக மனைவி ஸ்தானம் மற்றும் கூட்டுத் தொழில் ஸ்தானமாகும் ஆகையால் எவ்விரு அமைப்பும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதேபோல் ஒன்பதாம் பாவத்திற்கு ஆறாம் பாவமா வருவதால் ஒன்பதாம் பாவத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை இது ஏற்படுத்தும் ஒன்பதாம் பாவம் என்பது முக்கியமாக உயர்கல்வி மற்றும் ஆன்மீகம் மற்றும் தந்தை பற்றி குறிக்கக்கூடிய பாவம் தந்தையுடன் கருத்து வேறுபாடு உயர் கல்வி கற்பதில் தடை ஏற்படுவதல் ஆன்மீக செயல்களில் தடை ஏற்படுவதல் போன்றவை ஏற்படும்
பத்தாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமாக இரண்டாம் பாவம் வருவதால் இவர்களுக்கு தொழில் மூலம் வருமானம் கிடைக்கும் இரண்டாம் இடம் பொதுவாக வருமான ஸ்தானத்தை குறிப்பதால் இவர்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும்
ஆறாம் பாவத்திற்கு 9 ஆம் பாவமாக இரண்டாம் பாவம் வருவதால் உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் அடிமைத்தொழில் அமையும் உடம்பில் ஒருவித நோய் உண்டாக்கும் எதிரிகளை அதிகமாக சம்பாதித்து தரும்
இதுபோன்ற அமைப்புகள் இந்த லக்னாதிபதி இரண்டாம் இடத்தில் இருக்கும் போது உங்களுக்கு நடைபெறும்
ஆனால் இந்த லக்னாதிபதி திசை புத்தி அந்தரம் வரும்பொழுது உங்களுக்கு இப்பலங்கள் நடைபெறும் அதேபோல் கோச்சாரத்தில் எங்கு உள்ளார் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபடும் இரண்டாம் பாவத்தை பார்க்க கூடிய கிரகம் அல்லது இரண்டாம் அதிபதி எங்கு உள்ளார் என்பதை பொருத்தும் பலன்கள் மாறுபட வாய்ப்புண்டு
இரண்டாம் பாவத்தை குரு பார்த்தால் இந்த பலன்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் இந்த பாவத்தை சனீஸ்வர பகவான் பார்த்தால் உங்களுக்கு வெவ்வேறு பலன்களை ஏற்படுத்துவார் ஆதலால் சுய ஜாதகத்தை பார்த்து முழு புலன் அறிய வேண்டும்....
By astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading