பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று இந்த லக்னமே நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தார் போல் அமையுள்ளது
அப்படிப்பட்ட இந்த லக்னம் நமக்கு உயிர் காரணமாக வருகிறது இந்த லக்ன அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் நாம் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பயனை அதிகமாக அனுபவிப்போம்
அதே லக்னாதிபதி நல்ல நிலைமையில் இல்லாமல் இருந்தால் போன ஜென்மத்தில் நாம் செய்த பாவத்தின் பலனை அதிகமாக அனுபவிப்போம்
அப்படிப்பட்ட இந்த லக்கின அதிபதி நாலாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் 4-ம் பாவம் என்பது பொதுவாக வண்டி வாகனம் தாய் ஆரம்பக் கல்வி போன்றவற்றை குறிக்க கூடியது
நான்கில் இருக்கும் பொழுது தாயின் மீது அதிக அன்பு உடையவராக இருப்பார் இருக்கும் வீட்டை நேசிப்பார் வண்டி வாகனம் மீது அதிகமாக பற்று இருக்கும் ஆரம்பக் கல்வி நன்றாக படிப்பார் போன்ற பலன்களை ஏற்படுத்துவார்
இந்த லக்னாதிபதி மூன்றுக்கு இரண்டாம் இடமாக வருவதால் கமிஷன் தொழில் போன்றவற்றில் அதிக லாபத்தை ஏற்படுத்துவார் பயணங்களை மேற்கொண்டு அதன் மூலம் வருமானத்தை ஏற்படுத்துவார்
ஐந்தாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் அதேபோல் குழந்தைகள் விஷயத்தில் பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் குழந்தைகள் வளர வளர தங்களின் பேச்சை அவர்கள் கேட்க மாட்டார்கள்
குழந்தைகள் வழியில் பிரச்சனைகளை உருவாக்கும் அதேபோல் திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை இவர் தடை செய்வார் வரவேண்டிய அதிர்ஷ்டம் தள்ளி போகும் 9-ம் இடத்திற்கு எட்டாம் இடமாக வருவதால் ஆன்மீக வழியில் கிடைக்கக்கூடிய அனைத்தும் தடை செய்யும்
தன் தந்தை உடல்நிலை பாதிக்கப்படும் உயர் கல்வியில் பிரச்சனைகளை உருவாக்குவார் அதாவது ஆரம்ப கல்வியை நன்றாக படித்து விட்டு உயர்கல்வி கோட்டை விட்டுவிடுவார்
ஒன்பதாம் வீடு என்பது பூவ ஜென்மத்தை குறிப்பதால் இதற்கு எட்டாம் இடத்தில் இருந்து லக்னாதிபதி திசை புத்தி நடத்தும் பொழுது ஒன்பதாம் பாவத்தை முழுமையாக தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்
11ஆம் பாவத்துக்கு ஆறாம் பாவமாக வருவதால் லாபத்தை தடை செய்யக்கூடிய அமைப்பை ஏற்படுத்துவார் மூத்த சகோதரர்கள் பிரச்சனை உருவாக்குவோம்
அதே நேரம் மூத்த சகோதரஸ்தானம் மூலமாக இவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்
கூட்டுத் தொழில் லாபத்தை ஏற்படுத்துவார்
மனைவி மூலமாக இவர்கள் தொழில் அமைய அதிகமாக
வாய்ப்புண்டு இவர்கள் கடன் கேட்கும் இடத்தில் கடன் உங்களுக்கு சுலபமாக கிடைக்கும் எதிரிகள் மூலமாக இவர்கள் லாபத்தை அடைவார்கள் வம்பு வழக்கு போன்றவற்றின் மூலமாக இவர்கள் லாபத்தை அடைய வாய்ப்பு உண்டு மீண்டும் அடுத்த பதிவில்.......astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading