jothidam in tamil லக்கின அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்

லக்கின அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் 

இந்தப் பதிவிற்கு போவதற்கு முன்னால் சில பொதுவான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

ஒருவர் ஜாதகத்தில் ஒரு கிரகம் என்பது தான் எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கிறது அதை பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும் காரணம் கிரகங்களுக்கு தனி ஒளி என்பது கிடையாது

 ஆதலால் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் வழியாகத்தான் தன்னுடைய கதிர்வீச்சுகளை செலுத்துகின்றன அப்படி இருக்கும் பொழுது அந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு என்ன பெயர் உள்ளது அதற்கு எந்த அதிபதி வருகிறாரோ அதை பொறுத்து உங்களுடைய பலன்கள் மாறுபடும
 அதாவது ஒரு ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் அது விஷமாக மாறுவது போல் நல்ல கிரகமாக இருந்தாலும் அந்த கிரகத்தின் மீது படும் ஒளி ஆனது உங்கள் ஜாதகத்தில் தீய பலன்களை தரக்கூடிய அமைப்பில் இருந்தால் அதன் நன்மை அடிபட்டு தீமை பலன்கள் நடைபெறும் அதாவது 20% மட்டுமே நன்மை நடைபெறும் மீதி தீய பண்பு நடைபெறும்

 அந்த நட்சத்திர அதிபதி உங்க ஜாதகத்திலும் உங்களுடைய லக்னத்திற்கும் எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறார் அது உங்கள் லக்கன அதிபதியை பாதிப்பாரா பாதிக்க மாட்டாரா என்பதை பொறுத்து உங்களுடைய பலன்கள் அமையும்

 ஒரு ஜாதகத்தை ஆராயும் பொழுது  கிரகம் எடுத்துக் கொண்ட பாவம் கிரகம் விழுந்த நட்சத்திரம் எடுத்துக்கொண்ட பாவம் கிரகத்தின் மீது விழுகின்ற பார்வை கிரகம் எந்தெந்த பாவத்திற்கு எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்தே பலன்கள் அமையும் இவை அனைத்தும் பொதுவான பலன்கள்

 அவருடைய சுயசாதகத்தில் லக்னாதிபதி ஐந்தில் இருந்தால் இந்த பலன்கள் நிச்சயம் நடத்துவார் இதில் கூடவோ குறையவோ அவர்களது ஜாதகத்தை பொறுத்து நடைபெறும் ஆனால் கண்டிப்பாக இந்த விஷயங்கள் நடந்திடும்

பொதுவாக ஐந்தாம்  இடம் என்பது புண்ணிய ஸ்தானமாகும் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் குழந்தைகள் தாய் மாமன் போன்றவற்றை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும்  லக்னமும் ஐந்தாம் இடமும் சம்பந்தப்படும்போது குழந்தைகளிடம் அன்பாக இருப்பார் அதேபோல் தாய் மாமனிடம் அன்பாக இருப்பார் இந்த இரண்டு உறவில்  தொடர்பு இருந்து கொண்டு இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் உறவு அறுந்து போகாது எப்பொழுதும் இறுதிவரை இவர்களுக்கு உறவு இருக்கும்

 சரி இந்த ஐந்தாம் இடம் என்பது பத்துக்கு எட்டாம் இடமாக வருவதால் பத்தாம் இடம்  தொழிற் ஸ்தான ம் அப்படி தொழிற் ஸ்தானத்திற்கு எட்டாம் இடத்தில் இருந்து லக்னாதிபதி நடத்தினால் தொழில் தன்னாலே  கெட்டுப் போகும் அமைப்பை ஏற்படுத்துவார் 

அதாவது உங்களுடைய வேலை உங்களாலே பறிபோகும் அல்லது  நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனை உண்டு பண்ணும் தொழிற் ஸ்தானத்திற்கு இது எட்டாம் இடமாக வருவதால் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அவர் உருவாக்குவார் 

அதேபோல் ஆறுக்கு 12ஆம் இடமாக வருவதாக ஆறாம் இடம் என்பது எதிரி வம்பு வழக்கு நோய் கடன் போன்றவற்றை குறிக்கும் இப்பொழுது ஆறாம் இடத்தை அழிக்கக்கூடிய தன்மையை இவர் ஏற்படுத்துவார் அப்படி என்றால் தங்களின் எதிரிகள் அழிந்து போவார்கள் தங்களின் வழக்குகள் வெற்றி கிட்டும் தாங்கள் கடனை அடைக்க கூடிய அமைப்பை ஏற்படுத்துவார் தங்களது நோயிலிருந்து விடுபட கூடிய அமைப்பை ஏற்படுத்துவார்

 எப்பொழுது என்றால் திசா புத்தி அந்திரம் நடக்க வேண்டும் அதாவது லக்ன அதிபதியுடன் திசை புத்தி அந்திரம் நடக்கும் போது நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும் அதேபோல் ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி ஐந்தாம் இடத்தில் இருக்கும் போது ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் இடமாக லக்னத்திற்கு ஐந்தாம் இடமாக வருவதால் இது ஒரு தர்ம திரிகோண அதிபதி ஆகும் 

இந்த தர்ம தரிகோண அதிபதி என்பது நீங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த தர்மத்தின் பலனாக இப்பூமியில் பலன்களை அனுபவிப்பீர்கள் அப்படி என்றால் லக்னாதியை ஐந்தில் இருக்கும் போது உங்களுக்கு ஒன்பதாம் இடம் தந்தை ஸ்தானம் உயர் கல்வி ஆன்மீகம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் நீங்கள் எப்போதும் ஆன்மீகத்தை கடைபிடிப்பீர்கள் திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனாக திடீர் அஷ்டங்கள் உங்களைத் தேடி வரும்

லக்ன அதிபதி ஐந்தில் இருப்பதால் இந்த அதிர்ஷ்டம் உங்களாலேயே உங்களுக்கு கிடைக்கும் அதாவது இந்த இஷ்டத்திற்கு முக்கிய காரணமாக நீங்களே இருப்பீர்கள் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் செய்யும் பொழுது அது வெற்றியில் போய் நிற்கும் இதே போல் ஐந்தாம் இடத்திற்கு மற்ற பாவங்கள் எந்தெந்த அதிபதியாக வருகிறது எந்தெந்த பாவமாக வருகிறது என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்....astro nithiyandran 

No comments:

Post a Comment

thanks for reading