jothidam in tamil லக்ன அதிபதி ஏழில் இருந்தால்... let's see what are the results if Lagna lord is in seventh.

லக்ன அதிபதி ஏழில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் முதலில் ஏழாம் பாவம் என்பது எதைக் குறிக்கின்றது என்பதை பார்த்தால் திருமணம் கணவன் மனைவி ஸ்தானம் இருவரின் இல்லறம் ,வாதம் இனிய கனவு சுற்றம் மனைவி மூலம் வரும் சொத்துக்கள் தத்து புத்திரன் இரண்டாவது மனைவி மூலம் வரும் குழந்தை எழுத்தினால் வெற்றி பரிசுகள் இழந்த பொருட்களை மீட்டுதல் வெற்றி சுவையான விருந்து ஆடை ஆபரணம் கூட்டாளி அறக்கட்டளை கமிஷன் தொழில் வெற்றிலை தயிர் மனைவியின் தோற்றம் புனித தன்மை மகிழ்ச்சி அந்தரங்கம் குளிர்சாந்த நோய் போன்றவற்றை இன்று ஏழாம் பாவம் குறிக்கின்றது
 அப்படி என்றால் இந்த ஏழாம் பாவ அதிபதி யார் என்பதை பார்க்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் லக்கின அதிபதி ஏழாவது பாவத்தில் இருக்கும் பொழுது கணவன் மனைவி இடையே இருக்கின்ற ஒற்றுமை அதிகமாக இருக்கும் அவர்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும பிரிந்து போக மாட்டார்கள்

12ஆம் இடத்திற்கு எட்டாம் இடமாக அதாவது விரைய ஸ்தானத்திற்கு எட்டாம் இடமாக லக்னாதி வருவதால் விரயத்தை தடுக்க கூட அமைப்பை ஏற்படுத்துவார் அதாவது நீங்கள் அதிகமாக விரைய செலவை செய்ய மாட்டீர்கள் உங்களால் விரயம் ஏற்படுவது தடைப்படும்

 அயண சயன போகஸ்தானம் என்பதும் 12ஆம் இடத்தை குறிப்பதால் உங்களுடைய தூக்கம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு அதாவது அதிகமாக உழைப்பதால் உங்களுக்கு தூக்கம் இன்மை ஏற்படும்

ஆறாம் இடமாக வருவதால் இரண்டாம் இடம் பொதுவாக குடும்பஸ்தானம் வருமானம் போன்றவற்றை குறிப்பதால உங்களால் உங்கள் வருமானம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு அதாவது நாவடக்கம் வேண்டும் தங்கள் வாயால் தங்கள் பதவி போவதற்கு வாய்ப்புகள் உண்டு 

கூட்டத் தொழில் பொறுத்த வரை தாங்கள் தங்கள் மனைவியுடன் சேர்ந்து நடத்தும் தொழில் அனைத்தும் வெற்றியை பெரும் அதிகமாக கமிஷன் தொழில் செய்யும் பொழுது உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும் நீங்கள் எந்த ஒரு காரியத்திற்கும் கையெழுத்து போட்டால் அந்த காரணம் வெற்றியில் போய் முடியும் இந்த ஏழாம் பாவத்தில் மற்ற கிரகங்கள் சேரும்பொழுது இதனுடைய தன்மை மாறுபடும் 

எந்த கிரகம் எந்த பாவத்தின் அதிபதி கிரகம் சேருகிறது என்பதைப் பொறுத்து அதன் பலன்கள் சற்று மாறுபடும் இது இதே இடத்தில் சந்திரன் இருப்பவர்கள் ஆனால் உங்கள் மனைவி அழகானவளாக அழகான பெண்ணாக இருப்பார் அதேபோல் சுக்கிரன் இருந்தாலும் அழகான பெண்ணாக இருப்பார் 

இப்படி ஏழாம் பாவத்தில் லக்னம் இருக்கும் பொழுது எட்டாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமாக வருவதால் எட்டாம் பாவம் அழிக்கக்கூடிய அமைப்பை  ஏற்படுத்துவார் 

அதாவது உங்களுக்கு கண்டங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை இவர் தடுத்து நிறுத்துவார் அதாவது உங்கள் கண்டங்களை நீங்களே தடுத்து நிறுத்துவீர்கள் எட்டாம் பாவம் பொதுவாக நிரந்தர கடன் நிரந்தர நோய் மரியாதை இழத்தல் அனுமதி போன்றவற்றை ஏற்படுத்தும் பணவிரயம் வீண் அழைச்சல் கண்டம் இதுபோன்ற பிரச்சனைகளை இவர் ஏற்படுத்துவார் அப்படி இருக்கக்கூடிய இந்த பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவத்திலிருந்து லக்ன அதிபதி திசையை நடத்தும் பொழுது உங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனைகளை அனைத்தையும் அவர் தீர்த்து வைப்பார் 

அப்படி என்றால் உங்களுக்கு நிரந்தர கடன் இருக்காது நிரந்தர கடன் தீருவதற்கான அமைப்பை ஏற்படுத்துவார் மரியாதை அதிகமாக இருக்கும் வீண் அழைச்சல் இருக்காது நிரந்தர நோயும் இருக்காது

மூன்றாம் பாவத்திற்கு ஐந்தாம் பாவமாக வருவதால் சிறு தூற பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு மாமனாருடன் நட்பாக இருப்பார் ஒப்பந்தம் டாக்குமெண்ட் கணிதம் தகவல் தொடர்பு போன்றவற்றின் மூலம் இவர்களுக்கு பணங்கள் வந்து சேரும் ,சொத்துக்களை இழப்பதற்க்கான அமைப்புகள் உண்டு அதை விற்பதன் மூலம் பணம் பெறுவார்கள்

லாபம் ஸ்தானம் எண்ணக்கூடிய 11 ஆம் பாவத்திற்கு ஒன்பதாம் பாவத்திலிருந்து லக்னம் திசை நடத்தினால் மூத்த உடன்பிறப்புகளுடன் நட்பு பாராட்டப்படும் கால்நடை வளர்ப்பு நான்கு கால் விலங்குகள் வளர்ப்பதன் மூலம் இவர்கள் ஆபத்தை பெறலாம் இழந்த செல்வத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு சுய முயற்சி செய்யும்போது கிடைக்கும்

 சமையல் கலை சிறந்து விளங்குவார் ஆடை ஆபரணம் அனைத்தும் பெறுவார் சுவையான உணவுகளை சுவைத்து மகிழ்வார் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும் உயர் அதிகாரியுடன் தொடர்புகள் ஏற்படும் விரும்பிய உயர்கல்வி போன்றவற்றை இவர் பெறுவார் இப்படி லக்ன அதிபதி எந்தெந்த பாவத்தில் இருக்கும் பொழுது என்ன பலன் என்பதை நாம் தொடர்ச்சியாக பார்க்கலாம் நன்றி வணக்கம்.....astro nithiyandran 

No comments:

Post a Comment

thanks for reading