jothidam in tamil எட்டாம் வீட்டில் லக்ன அதிபதி இருந்தால்....


லக்கின அதிபதி எட்டில் இருந்தால்
ஜாதகத்தில் எட்டாம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம். அது போல எட்டாம் இடம் என்பது ஒரு மறைவு ஸ்தானம் இந்த மறைவு ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் அவர்களுக்கு கஷ்டங்களை அதிகமாக தருவார் தான் செய்யும் செயலால் கஷ்டங்கள் அதிகமாக வரும்.

ஒன்பதாம் இடத்திற்கு 12ஆம் இடமாக இந்த எட்டாம் இடம் என்பதால் உங்களுக்கு ஆன்மீக வழி பிரச்சனைகள் ஏற்படும் 

தந்தை வழியில் பிரச்சனைகளை உருவாக்குவார் 

தான் வளர வளர தந்தை  செல்வாக்கை இழப்பார் 

 தூர பயணங்களில் கஷ்டங்கள் அனுபவிக்க நேரும் மேற்படிப்பில் பிரச்சனைகள் உண்டாகும்
லக்னத்திற்கு எட்டாம் இடமாக வருவதால் தான் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளையும் ஏதோ ஒரு முட்டுக்கட்டை இருந்து கொண்டே இருக்கும்.

மூன்றாம் இடத்திற்கு ஆறாம் இடமாக வருவதால் இளைய சகோதரரிடம் பிரச்சனைகள் உருவாக்கும் யாரிடமாவது நீங்கள் அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டிருந்தால் அது உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்கும் 

ஆதலாம் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம் யாருக்கெல்லாம் லக்கின அதிபதி எட்டில் இருக்கிறதோ கவனமாக இருப்பது நல்லது 

நெடுந்தூர பயணமாக இருந்தாலும் சரி சிறுதூரப் பயணமாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது

 லக்னாதிபதி எட்டாம் இடத்தில் இருந்து திசை புத்தி நடத்தும் பொழுது  தாயின் பூர்விக சொத்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் 

அல்லது அவர்கள் இறப்பிற்கு பிறகு அவர்களுக்கு சொத்துக்கள் வந்து சேரும்

விரைய செலவுகள் அதிகமாக அவர்களுக்கு ஏற்படும் 

இவர்களுக்கு தொழில் மூலமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனை அதிகமாக இருக்கும் 

லக்ன அதிபதி எந்த கிரகம் என்பதை பொறுத்து அதனுடைய பலன்கள் அதிகமாகவும் குறைவாகவோ நடக்கும் 

அவர்களுக்கு கண்டிப்பாக கூட்டுத் தொழில் மூலமாக வருமானம் வரும் யாருக்கெல்லாம் எட்டாம் வீட்டில் லக்கின அதிபதி இருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் தொழில் மூலமாக வருமானங்கள் வந்து கொண்டே இருக்கும் மனைவி மூலமாக இவர்களுக்கும் வருமானங்கள் வந்து கொண்டிருக்கும்....astro nithiyandran

No comments:

Post a Comment

thanks for reading