jothidam in tamil லக்கின அதிபதி ஆறில் இருந்தால் .........

லக்கின அதிபதி ஆறாம் பாவத்தில் இருந்தால் ஆறாம் பாவம் என்பது பொதுவாக பகைவர் வியாதி வம்பு வழக்கு எதிரிகள் போன்றவற்றை குறிக்கும் ஸ்தானமாகும்
 இந்த லக்கின அதிபதி ஆறில் இருக்கும் போது என்ன பிரச்சனைகள் வரும் என்றால் தங்களுக்கு தாங்களே பகைவர் அதாவது நீங்கள் உங்களுக்கே பகைமை தேடிக் கொள்ளுங்கள் அதேபோல் வம்பு வழக்கு போன்றவற்றை தாங்கள் தங்களாலே ஏற்படுத்திக் கொள்வீர்கள் 

இந்த லக்னதிபதி ஆறில் இருக்கும் பொழுது அதனுடன் சூரியன் சந்திரன், குரு சுக்கிரன் போன்ற கிரகங்கள் கூடினால் எதிரிகளால் துன்பம் அதிகமாக ஏற்படுத்துவார் ஒரு மனிதனின் ஏழாம் பாவம் என்பது திருமண வாழ்க்கையை குறிக்க கூடிய அமைப்பு .

பிற மகளிர் உறவு இதன் மூலமாக அறியலாம் சரி இப்பொழுது இந்த ஏழாம் பாவத்திற்கு பன்னிரண்டாம் பாவமான ஆறாம் பாவத்தில் இலக்கண அதிபதி இருக்கும் பொழுது உங்கள் ஏழாம் பாவத்தை முழுமையாக அவர் பாதிப்பை ஏற்படுத்துவார் இருந்தாலும் ஆறாம் பாவ அதிபதி எந்த நட்சத்திரத்தில் உள்ளார் என்பதை பொறுத்து சற்று பலன்கள் மாறுபடும்

 ஏழாம் பாவம் மனைவி ஸ்தானம் என்பதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும் தான் செய்யும் தவறால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகளை உண்டு பண்ணுவார் 

அதாவது ஜாதகரே இந்த பிரச்சனைக்கு முழுமையான காரணமாக அமைவார் கூட்டுத் தொழில் செய்யும் பொழுது  ஜாதகர் அவராலேயே அந்த தொழில் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்
11ஆம் பாவத்திற்கு எட்டாம் பாவமாக வருவதால் 11 ஆம் பாவம் என்பது பொதுவாக மூத்த சகோதரர் மற்றும் லாப ஸ்தானத்தையும் குறிக்கக்கூடிய அமைப்பு .

 இதற்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒரு கிரகம் திசை புத்தி நடத்தும் பொழுது அது லக்னாதிபதியாக அமைந்தால் அவர்களுக்கு வருமான குறைவு ஏற்படும் வருமானத்தில் தடை ஏற்படுத்தும் ஒரு வேலையில் அவர்களுக்கு போனஸ் அதாவது இன்கிரிமெண்ட் அல்லது ஊதிய உயர்வு என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து அவருக்கு வழங்கப்படும் ஆனால் அந்த ஊதிய உயர்வு இவரால் கெட்டுப் போக அதிக வாய்ப்பு உண்டு. 

வேலை செய்யும் இடத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் ஊதிய உயர்வு  ஏற்படாது
அதேபோல் மூத்த சகோதரர்கள் அடிக்கடி சண்டைகள் ஏற்படும் ம் இரண்டாவது மனைவி இருந்தால் அவர்களுடனும் அடிக்கடி சண்டைகள் ஏற்படும்

 நீங்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாடு இல்லை என்றால் நிச்சயமாக உங்களுக்கு நோய் அதிகமாக ஏற்படும்
உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் அல்லது தங்கள் குழந்தைகள் மூலம் வருமானங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

பூர்வீக சொத்துக்கள் இருக்கும் அந்த சொத்துக்கள் மூலம் இவர்களுக்கு நிச்சயம் வருமானம் வந்தே தீரும் அதாவது ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கு நிச்சயம் வருமானம் வரும்........BY Astro nithiyandran


No comments:

Post a Comment

thanks for reading