புத்திர தடை, புத்திர தோசம் - nithiyandran r thedalin thedal tamil blog....

Nithiyandran R Thesalin thedal tamil blog......

ஒருவர் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் என்பது ஐந்தாம் பாவத்தை குறிக்கும் ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் அவர்களின் ஐந்தாம் பாவம் புத்திர ஸ்தானத்தை குறிக்கிறது

 சரி புத்திர தோஷம் புத்திர தடை ஐந்தாம் பாவத்தில் அசுப கிரகமான சனி கேது சூரியன் செவ்வாய் போன்ற கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு புத்திர தடை ஏற்படும் 

 தோஷம் என்பது குழந்தைகள் பிறக்கும் பிறந்த குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்துவிடும் இது புத்திர தோஷம் புத்திரதடை என்பது குழந்தை பிறப்பதற்கு முன்னால் ஏற்படும் அபார்ஷன்  அதாவது கருக்கலைப்பு ஏற்படும்

 புத்திர தோஷம் என்பது குழந்தைகள் பிறந்து இறப்பார்கள் புத்திர தடை என்பது குழந்தை பிறப்பதற்கான தடையை ஏற்படுத்தும் 

சரி இந்த புத்திர தோஷம் தடை 

முதலில் புத்திர பேரு உண்டா என்பதை ஒருவர் ஜாதகத்தில் ஆராய வேண்டும் அதன் பின்பு அவர்களுக்கு புத்திரத்தடை புத்திர தோஷம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும்

 முதலில் லக்னத்தில் இருந்து கைவைத்து எண்ணினால் ஐந்தாம் பாவம்  ஐந்தாம் பாவத்தின் அதிபதி ஆட்சி உச்சம் சமம் போன்ற நிலைகளில் இருக்க வேண்டும் அதாவது ஐந்தாம் பாவத்தின் அதிபதி நல்ல நிலைமையில் இருந்தால் ஐந்தாம் பாவத்தில் அசுப கோள்கள் இருந்தாலும் புத்திர பேர் நிச்சயமாக கிடைக்கும் 

ஆனால் சிறிது தாமதமாக கிடைக்கும் அதே ஐந்தாம் வீட்டு அதிபதி உள்ள நட்சத்திர அதிபதி ஏதோ ஒரு வகையில் ஐந்தாம் வீட்டை தொடர்பு கொண்டாலும் அல்லது அந்த நட்சத்திர அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு ஆனால் சிறு தடையாகும் 

 இப்பொழுது முக்கியமான விஷயம் என்னவென்றால் ஐந்தாம் பாவத்தை எடுத்துக்கொண்டு அதில் இருக்கக்கூடிய கிரகங்களை அறிய வேண்டும் சரி ஐந்தாம் பாவத்துக்கு சுப பார்வை கிடைத்தால் நிச்சயமாக குழந்தைகள் பிறக்கும். 

கோச்சாரத்தில் வருகின்ற குரு எப்பொழுது ஐந்தாம் பாவத்தை பார்க்கிறதோ அப்பொழுது குழந்தை பாக்கியம் ஏற்படும் உங்களுடைய தசாபுத்தையும் ஐந்தாம் பாவத்திற்கு சாதகமான சூழ்நிலை அமைந்து விட்டால் நிச்சயமாக அந்த மாதத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும் 

இந்த குழந்தை பாக்கியத்தை கொடுக்க கூடிய கிரகங்கள் எதுவென்று கண்டறிந்து அந்த கிரகத்திற்கு உண்டான தெய்வத்தை நாம் வழிபட்டால் நிச்சயமாக குழந்தை பெறுவதில் இருக்கும் தாமதத்தை குறைத்துக் கொள்ளலாம்

 குழந்தை பெற வேண்டி இருப்பவர்கள் நிச்சயம்  திருச்செந்தூர் சென்று முருக பெருமானை வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும்

ஐந்தாம் பாவ அதிபதி எந்த எந்த பாவத்துடன் தொடர்பு கொண்டுள்ளதோ அதனைப் பொறுத்து அந்த குழந்தையின் தன்மை இருக்கும்

 அதுமட்டுமில்லாமல் ஐந்தாம் வீட்டின் அதிபதி விழுந்த நட்சத்திரம் பொறுத்து அதனுடைய குணநலன்கள் இருக்கும் ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதை முழுமையாக பார்க்க வேண்டும்

 ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது சுக்கிரன் இருந்த நட்சத்திர அதிபதி ஆட்சியும் பெற்று இருந்தாலும் சமம் பெற்று இருந்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு

 இது போல் பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்திருந்தால் நிச்சயமா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

 பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை இருவர் ஜாதகத்தை வைத்து ஆராய்ந்து எந்த கோளின் பலம் அதிகமாக உள்ளது அதை பொருத்து ஆண் பெண் என்பதை நிலையம் செய்ய வேண்டும் 

ஆண்கள் ஜாதகத்தில் நானும் பெண்களை பெண் குழந்தையும் இருந்தால் இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது 

ஐந்தாம் பாவ அதிபதி ஆண் கிரகமாக இருந்து அதனுடன் கேது இருந்தால் நிச்சயமாக முதலில் கருச்சிதைவு நடக்கும்.... 

ஐந்தாம் பாவ அதிபதி நவ அம்சத்தில் எந்த இடத்தில் உள்ளார் என்பதையும் ஆராய்ந்து அதன் பலனை தீர்மானிக்க வேண்டும் 

குழந்தை அதற்கு காரணமான கிரகம் குரு இந்த குரு பகவான் எந்த நிலைமையில் உள்ளார் என்பதையும் ஆராய வேண்டும் 

அதாவது முதல் தர காரகமான குரு நல்ல நிலைமையில் இருந்தால் ஐந்தாம் பாவம் கெட்டிருந்தாலும் உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தும் 

அதே ஐந்தாம் பாவம் நல்ல நிலையில் இருந்து குருவும் நல்ல நிலையில் இருந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் ஏற்படும் 

ஐந்தாம் பாவம் கெட்டு குரு நலமாக இருந்தால் சிறிது தாமதத்தில் ஏற்படும் குரு கெட்டு ஐந்தாம் பாவம் நல்லபடியாக இருந்தாலும் சிறிய தாமதத்தில் குழந்தை பிறக்கும்

 எப்பொழுது கோச்சார குரு ஐந்தாம் பாவத்தை பார்க்கிறாரோ அப்பொழுது குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது

 அப்பொழுது ஐந்தாம் பாவத்திற்கு சாதகமான திசா புத்தி நடந்து விட்டால் நிச்சயமாக எப்பேர்பட்ட தடை இருந்தாலும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக இருக்கும்..... 

By Nithiyandran R


No comments:

Post a Comment

thanks for reading