5th house -5 ம் பாவம்

Nithiyandran r thedalin thedal tamil blog

ஐந்தாம் பாவம் என்பது ஜோதிடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும்

 புத்திர ஸ்தானமாகவும் திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடிய ஸ்தானமாகவும் காதல் திருமணம் பற்றி கூறவும் இந்த ஸ்தானம் விலங்குகிறது

 ஐந்தாம் பாவத்தில் எந்த கிரகம் உள்ளது அதற்கு தகுந்த அந்த பாவம் செயல்படும் 

ஒவ்வொரு லக்னத்திற்கும் ஐந்தாம் இடத்தில் பாவ கோள்கள் இருந்தால் பூர்வீக புண்ணிய சொத்தில் கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும்

 அதாவது உங்களுக்கு இரண்டு தலைமுறைக்கு முன்னால் வாங்கிய சொத்தை வழி வழியாக பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் நிச்சயமாக அந்த சொத்தில் பிரச்சனைகளை அது ஏற்படுத்தும்

 ஒருவர் காதலித்து திருமணம் செய்பவர் என்றால் அவருக்கு ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக அது லவ் மேரேஜ் 

அதே த்தில் சனி பகவான் இருந்தால் தன்னைவிட ஒரு படி கீழ் உள்ள பெண்ணை அதாவது  பொருளாதாரத்தில் கீழ்தங்கிய பெண்ணை நிச்சியமாக காதல் செய்வார்

 ஆனால் அது சனி பகவானால் நிறைபெறாமல் போய்விடும் அதே பாவத்தில் சூரியன் இருந்தால் அரசாங்க வேலையில் இருக்கும் பெண்ணை காதல் செய்வீர்கள்

 குரு பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஆன்மீக வழியில் இருக்கும் பெண்ணை காதல் செய்வீர்கள் 

புதன் அந்த இடத்தில் இருந்தால் நீங்கள் ஒரு ஆசிரியரை காதல் செய்வீர்கள்

 செவ்வாய் அந்த வீட்டிற்கு இருந்தால் யூனிபார்ம் தொழில் செய்யும் ஒருவரை காதல் செய்வீர்கள் 

இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கு தகுந்தார் போல் உங்களது காதல் இருக்கும்

 ஏழாம் இடத்தை வைத்து உங்களது திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை முடிவு செய்ய வேண்டும் 

திருமணம் முடிந்த பிறகு குழந்தை பாக்கியம் என்பது அனைவருக்கும் இன்றி அமையாத ஒன்று 

இந்த குழந்தை  பாவத்திற்கு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய பாவம் ஐந்தாம் பாவம் ஐந்தாம் பாவத்தில் சுப கோள்கள் சுப பார்வை பெற்று இருந்தால் குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைக்கும் 

அதே இடத்தில் பாவ கோள்களில் இருந்து சுப பார்வை பார்க்கவில்லை என்றால் குழந்தை பாக்கியம் என்பது சற்று கேள்விக்குறியான ஒன்று 

 ஒவ்வொரு ஜாதகத்திலும் திசா புத்தி என்பது இன்றி அமையாது ஒன்று. ஐந்தாம் பாவத்திற்குரிய  கிரகம் திசை நடத்தும் பொழுது உங்களுக்கு இந்த பாவத்தின் பாவக்காரகங்கள் அனைத்தும் செயல்பட ஆரம்பிக்கும்

 ஐந்தாம் பாவத்தில் இருக்கும் கிரகம் விழுந்த நட்சத்திரத்தை குறித்து உங்களது குழந்தைகளின் என்ன ஓட்டங்களை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம் 

எந்த நட்சத்திரத்தில் விழுந்திருக்கும் அந்த நட்சத்திர அதிபதி எந்த பாவத்து தொடர்பு கொள்கிறாரோ அந்த பாவத்தின்படியாக உங்களுக்கு இந்த ஐந்தாம் பாவத்தின் காரத்துவங்களை அவள் செயல்படுத்துவார் 

ஐந்தாம் பாவத்திற்கு குருவின் பார்வை கிடைத்துவிட்டால் உங்களது குழந்தைகள் நல்லபடியாக வளரும்

 மாறாக ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றிருந்தால் புத்திர தோஷமும் பூர்வ புண்ணிய தோசமும் ,காதல் தோல்வியும் ஏற்படும்

 ஐந்தாம் பாவத்தில் நீச்சம் அடைந்த கிரகம் எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவத்தின் அதிபதி ஆட்சி உச்சம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் அமர்ந்து விட்டால் உங்களுக்கு அது நீச்ச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்தி கொடுத்து விடும்

 அதாவது திடீர் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு எப்படி கொடுத்து விடும் சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் திடீரென்று மிகப்பெரிய பணக்காரராக ஆகக்கூடிய அமைப்பு இந்த  ராஜயோகத்திற்க்கு உண்டு

 ஐந்தாம் வீட்டு அதிபதி 11ஆம் வீட்டு அதிபதியும் தொடர்பு கொண்டால் உங்களுக்கு குழந்தைகள் மூலமாக அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடும் அதேபோல் பூர்வ புண்ணிய சொத்துக்களை விற்பதனமும்  மூலமாக லாபத்தை பெறுவார்கள்.... 

By Nithiyandran r

No comments:

Post a Comment

thanks for reading