Nithiyandran r thedalin thedal tamil blog..
பொதுவாக ஒரு ஜாதகத்தில் ஆண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது மனைவியும் பெண் ஜாதகத்தில் ஏழாம் பாவம் என்பது கணவனையும் குறிக்கும்
இந்த மாங்கல்ய தோஷம் முக்கியமாக நான்கு லக்னத்திற்கு மிகவும் அதிக பாதிப்பை தரக்கூடியது
அது உபய லக்னமான மீனம், மிதுனம் ,கன்னி, மற்றும் தனுசு இந்த நான்கு லக்னக்காரர்களுக்கும் முதல் தர பாதகாதிபதி குருவும் புதனும் ஆகும்
இந்த நான்கு லக்னகாரர்களுக்கு குரு புதன் இருவரும் மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்துவார்
இதுபோல சர ஸ்திர லக்கனங்களுக்கும் ஏழாம் பாவத்தில் இருக்கக்கூடிய கிரகம் எந்த அமைப்பில் உள்ளது என்பதை பார்த்து அதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும்
எல்லா லக்னங்களுக்கும் ஏழாம் பாதகாதிபதி அதாவது ஏழாம் பாவ அதிபதி பாவக்கோளாக அமைந்துவிட்டால் அதற்கு சுப பார்வை கிடைக்காவிடில் அது தோஷத்தை ஏற்படுத்தும்
ஒருவர் ஜாதகத்தில் கேது ஏழாம் இடத்தில் அமர்ந்தால் அவர் மாங்கல்ய தோசத்தை ஏற்படுத்திவிடும்
அதே ஏழாம் அதிபதி கேதுடனும் ராகுடனும் செவ்வாயுடனும் சேர்ந்தால் அதுவும் தோஷத்தை ஏற்படுத்தும்
இந்த மாங்கல்ய தோஷம் என்றால் என்ன மாங்கல்ய தோஷம் என்பது இருதார அமைப்பை கொண்டதாகும் அதாவது ஒன்று முதல் கணவர் இறக்க அதனால் இரண்டாவது திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு
இது ஒரு வகையான மாங்கல்யம் இன்னொன்று திருமணமே நடக்காத நிலையை உருவாக்கும் மூன்றாவது தாமதித்த திருமணத்தை ஏற்படுத்தும்
முதலில் ஏழாம் வீட்டு அதிபதி யார் என்று கணிக்க வேண்டும் வீட்டு அதிபதி யாருடைய நட்சத்திரத்தில் விழுந்து உள்ளார் என்பதையும் அந்த ஏழாவிட்ட அதிபதிக்கு எந்தெந்த கிரகத்தின் பார்வை கிடைக்கிறது என்பதையும் நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்
பிறகு ஏழாம் வீட்டு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதி ஆட்சி உச்ச நீச்சம் பகை எந்த நிலைமையில் உள்ளார் என்பதை அறிந்து நாம் பார்க்க வேண்டும்
சுப பார்வை அதாவது கோச்சாரத்தில் சுப பார்வை இருக்கும் பொழுது ஏழாம் பாவத்துக்கு சாதகமான திசா புத்தி இருப்பின் தாராளமாக திருமணம் செய்யலாம்
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் 28 அதாவது 30 வயதுக்கு முன்னால் மா திருமணம் செய்யலாமா என்றால் நிச்சயமாக அவர் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்
ஆனால் அவர்களுக்கு நடக்கக்கூடிய திசா புத்தியை கணிக்க வேண்டும் அது ஏழாம் பாவத்துக்கு அல்லது கணவனின் ஆயுளான எட்டாம் பாவத்துக்கு மாறகம் செய்யக்கூடிய அமைப்பில் இருக்கக் கூடாது
அவ்வாறு இருந்தால் மாங்கல்ய தோஷம் கணவனை பாதிக்கும் மாறாக அவ்வாறு இருப்பின் அதற்கு உண்டான பரிகாரத்தை செய்து பின்பு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்
மாங்கல்ய தோஷத்தில் அதற்கு உண்டான தசா புத்தி நடந்தால் மட்டுமே அந்த தோஷம் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர மற்றபடி அந்த தோஷம் எப்பொழுதும் பாதிப்பை ஏற்படுத்தாது
ஆதலால் உங்களுடைய சுய ஜாதகததை ஆராய்ந்து அதில் தோஷம் இருப்பின் அந்த பரிகாரத்தை செய்து கொண்டு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்......
By Nithiyandran r
No comments:
Post a Comment
thanks for reading