How to check vehicle repair using KP Astrology?- nithiyandran r thedalin thedal tamil blog

thedalin thedal tamil blog.................

பொதுவாக வாகனத்தை குறிக்கும் பாவம்எந்த லக்னகமாக இருந்தாலும் அந்த லக்னத்தில் இருந்து நாலாம் பாவமாகும் இந்த நாலாம் பாவத்தை பொறுத்து ஒருவருடைய வாகன யோகம் எப்படி உள்ளது என்பதை தீர்மானிக்கப்படுகிறது
 இந்த நாலாம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்து சுப பார்வை பெற்றிருந்தால் உங்களுக்கு வாகனம் சுலபமாக அமையும் அதே பாவ கிரகங்கள் இருந்து சுப பார்வை பெறவில்லை என்றால் அந்த வாகனம் second hand வண்டி அமையும். 

 சரி வாகனத்திற்கு முக்கியமான கிரகங்கள் பார்த்தால் முதல் தர வாகனம் அதாவது புது வாகனம் வாங்குபவர்களுக்கு செவ்வாயே காரகன் அதே செகனண்ட் வண்டி வாங்குபவர்களுக்கு காரகன் சனி ஆகும்

 ஒருவர் புது வண்டியை வாங்க வேண்டும் என்றால் அவர் செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரத்தில் வாங்க வேண்டும் அதை செகண்ட் வண்டி வாங்குபவர்கள் என்றால் சனியின் ஆதிகத்தில் வாங்க வேண்டும்

 கே பி ஜோதிடத்தில் உங்களுக்கு வாகனங்களை குறிக்க கூடிய குறிகாட்டி நாலாம் பாவத்தின் உப நட்சத்திர அதிபதி எதை குறிகாட்டுகிறதோ அதன்படியே செயல் அமையும்

கே பி ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு பாவத்தில் உள்ள கிரகத்தின் நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அதுவே வலிமை பொருந்திய கிரகமாக அந்தப் பாவத்திற்கு கருதப்படுகிறது

 அப்படி என்றால் நாலாம் பாவத்தில் ஏதாவது கிரகம் இருப்பின் அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகமே வாகனத்திற்குரிய கிரகம் இப்பொழுது நாலாம் பாவத்தை குறிக்கக்கூடிய குறிகாட்டியல் 3,11 ,12 ஆகிய பாவத்தை குறி காட்டினாள் நீங்கள் வாங்கிய வண்டி விற்கப் போகிறீர்கள் என்று அர்த்தம் 

அதே புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு 4,3,6,11 குறிக்கடிகளாக வந்தால் அவர்கள் புதிய வாகனத்தை வாங்குபவர்கள் என்று அர்த்தம் பழைய வாகனம் வாங்குபவர்களுக்கு 4,9,6,11 குறிகாட்டியாக வந்தால் அவர்கள் நிச்சயம் பழைய வாகனத்தை வாங்குவார்கள்

 சரி வாகனத்திற்கு பொதுவாக சுக்கிரனும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் இப்பொழுது வண்டி எப்பொழுது அடிக்கடி பழுது ஏற்படும் என்று பார்த்தால் நாலாம் பாவத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரக நட்சத்திரத்தில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரகம் எந்த பாவத்தை குறி காட்டுகிறது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்

 4 க்கு கெடுதல் செய்யக்கூடிய பாவங்கள் என்று பார்த்தால் நாலாம் இடத்தை வைத்து நீங்கள் எண்ணினால் ஒன்பதாம் இடம் அதாவது 4ஆம் பாவக் குறி காட்டி ஒன்பதாம் இடத்தை உங்களுக்கு டச் பண்ணா அந்த வண்டி அடிக்கடி பழுது ஏற்படும் 

அது நாளுக்கு எட்டாம் இடமாக வருவதால் அந்த குறி காட்டி வரும் பொழுது அந்த வண்டியை விற்க நேரிடும் நாலாம் பாவத்துக்கு பன்னிரண்டாம் பாவமா மூன்றாம் பாவம் வருவதால் நாலாம் பாவம் 3 குறி காட்டினால் உங்களுக்கு கண்டிப்பாக வண்டி விற்க நேரிடும்

 இப்படி கேபி ஜோதிடத்தில் குறிக்காட்டி பொறுத்து வண்டி வாகனம் விற்பது வாங்குவது பழுது பார்ப்பது என்பது குறிக்கப்படுகிறது 

அது பாரம்பரிய ஜோதிடத்தில் பார்த்தோமேயானால் நாலாம் பாவம் ஒருவர் லக்னத்திற்கு நாலாம் பாவம் என்பது வாகன யோகத்தை குறிக்கக்கூடிய பாவம் இந்த நாலாம் பாவத் தொழில் செய்பவர்கள் அவர்களுடைய தசா புத்தி எது நடக்குது என்பதை பார்க்க வேண்டும் 

இப்பொழுது நாலாம் பாவத்துக்கு 11 ஆம் பாவமாய் இரண்டாம் பாவம் வருவதால் யார் யாருக்கெல்லாம் இரண்டாம் பாவத்தின் திசை நடக்கிறதோ அவர்கள் எல்லாம் இந்த வண்டி வாகன தொழில் ஈடுபட்டால் மிகுந்த லாபத்தை பெறலாம் 

யாருக்கெல்லாம் 9,11 மற்றும் மூன்றாம் பாவத்தின் திசை புத்திகள் நடைபெறுகிறதோ அவர்கள் எல்லாம் இந்த வண்டி வாகன தொழிலை செய்தால் நிச்சயமாக அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அவர்கள் எதிர்பார்த்த லாபத்தை நிச்சயம் அடைய முடியாது 

காரணம் நாலாம் பாவத்துக்கு ஆறு எட்டு பன்னிரண்டு பாவங்களாக இந்த 9 11 மூன்றாம் பாவம் வருவதால் உங்களால் வாகன தொழில் கண்டிப்பாக லாபத்தை பெற முடியாது 

அதேபோல் நீங்கள் வாங்கும் வண்டி முதல் தர வண்டியா அல்லது செகனண்ட் வண்டியா என்பதே கருத்தில் கொண்டு நீங்கள் இதனுடைய பலன்களை ஆராய வேண்டும் 

அப்படி என்றால் வாகனம் எப்போது பழுது ஏற்படும் என்று பார்த்தால் நாலாம் பாவத்திற்கு ஆறாம் பாவம் தொடர்பு கொள்ளும்பொழுது அதாவது  ஒன்பதாம் பாவத்தின் திசா புத்தி அன்று நடக்கும் பொழுது யார் வண்டி வாகனம் வைத்துள்ளார்களோ அவர்களுக்கு நிச்சயமாக செலவு அதாவது பழுது ஏற்படும்..... 

By Nithiyandran R..... 

No comments:

Post a Comment

thanks for reading