ஜோதிடம் என்பது உண்மையா பொய்யா..........


                #மனிதனின் வாழ்க்கை என்பது குழந்தை பருவம், இளமைப் பருவம் ,முதுமை பருவம் என்ற மூன்றுக்குள் அடங்கிவிடும் மனிதன் இன்பம் துன்பம் அனைத்தும் பொதுவான ஒன்றாக உள்ளது.

         அனைத்து மனிதனும் இளமையில் கல்வி என்பது இன்றியமையாதது அதுபோல் திருமணம் குழந்தை பாக்கியம் மற்றும் தொழில் போன்ற அனைத்தும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒன்று`

         எண்களை பொறுத்தவரை 0 மற்றும் 9 ஆகிய எண்ணுக்குள் அனைத்து எண்களையும் கொண்டு வர முடியும் அது போல மனிதனின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பொதுவான பலன்களை அவர் அவர் லக்ன படி எவ்வாறு அமையும் எவ்வாறு அமையாது என்பதை 12 கட்டங்கள் பொருள் வைத்து அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து இவ்வாறு ஏற்படலாம் அல்லது இவ்வாறு ஏற்படாமல் இருக்கும் என்பதை ஒரு குறிப்பிட்ட கிரகங்களின் பலனை வைத்து நம்மால் 80% சொல்ல முடியும்.

         நன்றாக ஆராய்ந்து பார்த்தாலும்  மீதி 20% நம்மால் கணிக்க இயலாது காரணம் சரியான பிறந்த நேரத்தை நம்மால் கணிக்க இயலாது.

     ஆனால் உத்தேசமான நேரத்தை வைத்து நம்மால் 80% ஜாதகத்தை ஆராய்ந்து சொல்ல முடியும்.

         மனிதனின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இயங்குகிறது அதை வைத்து பார்க்கும் பொழுது ஜோதிடமும் எவ்வாறு மனிதனின் வாழ்க்கை இயங்குகிறது என்பதை எடுத்து சொல்கிறது.

         ஜோதிடத்தை வைத்து தங்களது பலன்களை தங்களால் ஓரளவு கூற முடியும் இதை ஊன்றுகோலாக எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையில் நடக்கும் இன்பத் துன்பங்களை தெரிந்து அதற்கு தகுந்தார் போல் தங்களது மனதை  நிலை நிறுத்த முடியும் அதற்காகவே முடியும் அதற்கு ஜோதிடம் பயன்படுகிறது.

https://sivsnithi.blogspot.com/

https://youtu.be/HMkRLHCqC2Y

No comments:

Post a Comment

thanks for reading