முதலில் வீட்டில் ஏன் கோலம் போட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம் நம் முன்னோர்கள் வீட்டில் அதாவது வீட்டின் வாசலில் கோலம் இடுவதை ஒரு வழக்கமாக செயல்பாட்டில் வைத்திருந்தனர் இதற்கான காரணம் என்னவென்றால் பச்சரிசி அதாவது வீட்டின் வாசலில் கோலமிடும் பொருளானது கற்களால் செய்யப்பட்ட வெள்ளை துகள்கள் அல்ல பச்சை அரிசி மாவினை அரைத்து அதனை சலித்து அந்த மாவினை கொண்டு தான் வீட்டின் வாசலில் கோலம் இட வேண்டும்
ஏனென்றால் பச்சரிசி மாவிற்கு தெய்வீக குணங்கள் உண்டு அது மட்டுமல்ல சிறு உயிரான எறும்புக்கு காலை வேலையில் நாம் உணவு அளிக்கின்றோம் எறும்புக்கு அளிக்கப்படும் உணவானது நமது பாவத்தை போக்கக்கூடிய தன்மை உண்டு. அது அல்லாமல் பாவங்கள் நம்மை அண்டாமல் இருக்க எறும்பிற்கு சிறு உணவளிக்கும் அடிப்படையில் நாம் பச்சரிசி மாவினைக் கொண்டு கோலமிட வேண்டும்
இந்த தெய்வீக சக்தி கொண்ட பச்சரிசி மாவு ஆனது துஷ்ட சத்திகளை நம் வாசலில் அனுமதிக்காது ஆதலால் வாசலை தாண்டி எந்த ஒரு தீயசக்தியாலும் உள்ளே வர முடியாது ஆதலால் பச்சரிசிமாவினை கொண்டு கோலம் இடுவது சிறந்தது
ஆனால் இந்த அமாவாசை அன்று ஏன் நம் கோலம் போடக்கூடாது என்பதை பார்த்தால் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் கற்களினால் ஆன மாவினால் கோலம் போட்டால் அதற்கு எந்தப் பதிவு பொருந்தாது நீங்கள் பச்சரிசி மாவினை பயன்படுத்தி கோலமிடுவதற்கு மட்டுமே இப்பதிவு பொருந்தும் சரி
நமது முன்னோர்கள் அம்மாவாசை தினத்தன்று நம்மளுடைய பித்துருக்கள் உணவு அருந்த காக வடிவினிலோ ஏதோ ஒரு வடிவினில் நம் வீட்டிற்கு வருவார்கள் அப்பொழுது அவர்கள் அருவ ரூபமாக இருப்பதால் அவரால் பச்சரிசி மாவு தாண்டி உள்ளே வர இயலாது
ஆதலால் அவர்கள் நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வந்து செல்வதற்கு சுலபமாக இருக்க இந்த பச்சரிசியினால் ஆன மாவினை கொண்டு கோலம் போடாமல் இருக்க வேண்டும் முன்னோர்கள் பித்துருக்கள் நம் வீட்டிற்கு வந்து நாம் அளிக்கும் உணவினை அவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் அறுந்திவிட்டு செல்வார்கள் அப்போது முன்னோர்களின் பூரண அருள் நமக்கு கிடைக்கும் முன்னோர்களின் அருள் கிடைத்துவிட்டால் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை ஏதோ ஒரு வகையில் நிச்சயம் அவர்கள் உணர்த்துவார்கள்
நமக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் ஆதலால் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்பது நமக்கு கிடைக்க வேண்டும் முன்னோர்கள் சாபம் பெற்றால் நம்மால் எதையும் எந்தவிதமான பயனையும் அனுபவிப்பதற்கு தடை ஏற்படும் ஆதலால் முன்னோர்களின் வரம் பெறவே அமாவாசை தினத்தன்று வீட்டினில் பச்சரிசி மாவினால் ஆன பொடியை கொண்டு கோலமிடக்கூடாது மாறாக அமாவாசை அன்று முன்னோர்களை பித்துக்களை வரவேற்று அவர்களுக்கு உணவளித்து அதாவது தங்களால் முடிந்த ஒரு கைப்பிடி சோற்றை நீங்கள் எந்த உயிருக்காவது அதை அளித்தீர்களேயானால் அது நிச்சயமாக பித்ரு தேவதைகள் மூலமாக அந்த பித்ருகளுக்கு இப்போது எந்த ஜென்மத்தில் எந்த பிறப்பிடத்தில் உள்ளாரோ அந்த பிறப்பிற்கு அந்த உணவு சென்றுவிடும் இதன் காரணமாகவே அமாவாசை அன்று வீட்டின் வாசலில் கோலம் போடக்கூடாது
No comments:
Post a Comment
thanks for reading