ஒருவரின் ஜாதகத்தை நாம் ஆராய வேண்டும் என்றால் ராசி மற்றும் லக்னம் இரண்டும் வேண்டும.
இதில் எது முக்கியம் மற்றும் எதை வைத்து பலன் சொல்ல வேண்டும் என்று பார்த்தால் லக்னமே முக்கியம்.
காரணம் ஒரு மனிதன் பிறக்கும்போது அவனது லக்னமே உயிர் ஜென்மமான சூரியனே மையப்படுத்தி கணிக்கப்படுகிறது.
சூரியன் உயிர் அதுபோல் சந்திரன் உடல். உடல் என்பது அழியக் கூடிய ஒன்று ஆன்மா என்பது அழிவில்லாத ஒன்று ஆன்மா சூரியனை மையப்படுத்தி கணிக்கப்படுகிறது.
லக்னம் ஆன்மாவை மையப்படுத்தி கணிக்கப்படுவதால் ஒருவர் பிறக்கும்போது அவரது விதி என்னவென்று நிர்மாணிக்கப்படுகிறது அவரது விதிப்படியே அனைத்தும் நடக்கும் இந்த விதி லக்னத்தை வைத்துத்தான் நாம் கணக்கிட முடியும் .
சந்திரன் என்ற உடல் மூலம் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஆராய்ந்து சொல்ல முடியும் அப்படி என்றால் விதிப்படி வாங்கிய லக்னம் தசா புத்தி என்ற சந்திரனின் காலநிலையை மையப்படுத்தி இந்த உடல் இன்ப துன்பங்களை எவ்வாறு அனுபவிக்க வேண்டும் என்பதை நம்மால் கணிக்க இயலும்.
ஆகையால் உங்களது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ன நடக்காது என்பதை ஆணித்தரமாக லக்னத்தை மையப்படுத்திய சொல்ல முடியும் லக்னமே உங்களது வாழ்க்கையின் முடிவை தீர்மானிக்கும்.
அப்படி என்றால் ராசி எதற்கு ராசியை பொறுத்தவரை உங்களது உடல் நன்மை தீமை எதை அனுபவிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உதாரணமாக உங்களுக்கு பேங்க் மேனேஜரை சந்திக்க வேண்டும் என்றால் விதிப்படி அந்த நிகழ்வு இருந்தால் மட்டுமே நடைபெறும்.
சந்திக்கப் போகும் பொழுது ஏற்படுகின்ற தடை அல்லது தடையில்லாமல் போய் அவரை சந்திக்க முடியுமா என்று பார்த்தால் அது உங்களின் தசா புத்தி மற்றும் கோச்சாரத்தின் அடிப்படையில் அமையும்.
அதாவது உங்களது ராசி படி உங்களால் ஈசியாக அல்லது கஷ்டமாக போகிற வழி இருக்குமா என்பதை அறிய முடியும் விதிப்படி நீங்கள் லோன் வாங்க முடியும் என்றால் அந்த லோன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
ஆனால் அந்த லோன் கிடைக்க நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று உங்களது திசா புத்தி இருந்தால் நீங்கள கஷ்டப்பட்டு தான் அந்த லோனை பெற முடியும்.
அப்படி என்றால் லக்கனமே உங்களுக்கு முழு வாழ்க்கை பாதையை காட்ட முடியும் அதற்கு துணை நிற்பது உங்களது ராசி ஆதலால் லக்னம் இல்லாமல் வேறும் ராசியை வைத்து நம்மால் பலன் சொல்ல இயலாது ஆதலால் நான் ராசிபலனை விடுத்து எனது youtube பக்கத்தில் லக்ன பலன்களை மட்டுமே தருகிறேன்.
லக்கினபடியே ஒருவருக்கு இது நடக்கும் நடக்காது என்பதை சொல்ல முடியும் ராசியை வைத்து இது நடக்கும் நடக்காது என்பதை நம்மால் சொல்ல இயலாது இது எவ்வாறு நடக்கும் என்பதை மட்டுமே நம்மால் சொல்ல இயலும் ஆதலால் லக்னமே முக்கியம் லக்ன வைத்து பலன் பார்ப்பது சிறந்தது........ இது எனது தனிப்பட்ட கருத்து மட்டும்.....

No comments:
Post a Comment
thanks for reading