அப்படிப்பட்ட சித்தர்கள் தங்களது தவ வலிமையை கொண்டு அஷ்டமா சித்திகளையும் அடைந்தவர்கள் அவர்களால் சாதிக்க முடியாது என்பது இவ்வுலகில் எதுவும் இல்லை அவர் பெற்ற அஸ்டமசித்துகளில் ஒரு சிறு பிரிவு தான் மாந்திரிகம் அதை அஷ்டகர்ம காரியம் என்னும் கூறலாம்
அதாவது அஷ்டமா சித்தி எனப்படுவது நாம் மனதால் நினைத்துக் கூட பார்க்க இயலாத ஒரு தெய்வீக செயலாகும் இதன் பிரிவு
அணிமா
மகிமா
கரிமா
லஹிமா
பிரார்த்தி
பிராகாமியம்
ஈசத்துவம்
வசித்துவம்
ஆகிய எட்டு விதமான சித்துக்கள் ஆகும்
அணிமா
இத்தகைய சித்திய ஆக்கப்பட்டது தனது தவவலுமையால் தன்னைத்தானே தன் உடலை ஒரு சிறு அனு அளவிற்கு சிறியதாக்கி கொள்ள முடியும்
மகிமா
இந்த சித்தியானது தனது உடலை உயர்ந்த மலையினும் பெரிதாக வடிவெடுத்துக் கொள்வதாகும் நாம் சில புராண திரைப்படங்கள் பார்த்துள்ளது போல்
கரிமா
இத்தகைய சித்தியானது தனது உடலை மாயத் தோற்றம் கொண்ட சூட்சும உடலாக்கி ஏதிலும் ஊடுருவிச் சென்று வெளியேறும்
இலகிமா
தன் உடம்பை கனமற்ற ஒரு பறவையின் சிறகை விட லேசாக ஆகி கொண்டு எங்கும் சஞ்சாரம் செய்யக் கூடியதாகும்
பிரார்த்தி
இத்தகைய செயலாகப்பட்டது தான் அடைய நினைக்கும் எத்தகைய பொருளையும் எங்கிருப்பினும் அடைந்து விடக் கூடிய சித்தியாகும்.
பிராகாமியம்
இது மாதிரியான சித்து விளையாட்டு ஆனது எதுக்கு எதிராக அதாவது புயல் பூகம்பம் கடல் கொந்தளிப்பு சூறாவளி போன்ற இயற்கையின் சீற்றங்களுக்கு இடையிலும் பஞ்சபூதங்களுக்கு விரோதமாக தாங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வருவது
ஈசத்துவம்
இந்த சித்தியாகப்பட்டது தன்னை இறைவடிவாக மாற்றிக் கொள்வது அதாவது எந்த ஒரு ஜட பொருட்களையும் உயிரூட்டி காக்கவும் அழிக்கவும் செய்யக்கூடிய செயல்
வசித்துவம்
இது அனைத்து உயிர்களையும் மட்டுமின்றி பஞ்சபூதங்களையும் வசியப்படுத்தி இயற்கையை தன் விருப்பத்திற்கேற்ப செயல்பட செய்யக்கூடிய சித்தியாகும்.
இவர்கள் தான் அஷ்டமா சித்திகள் எனப்படுகிறது அதாவது எட்டு விதமான மகா சக்தி இவைகளை தனது தவ வலிமையால் கற்று உணர் சித்தர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் ஆனால்
அஷ்ட கர்ம சித்திகள் அடுத்த பதிவில் தொடரும்.......
No comments:
Post a Comment
thanks for reading