எல்லாம் விதிப்படிதான் நடக்க வேண்டும் என்றால் நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்..... ?


எல்லாம் விதிப்படிதான் நடக்க வேண்டும் என்றால் நான் ஏன் கடவுளை வணங்க வேண்டும் இதற்கான பதிலை பார்ப்போம் முதலில் விதிப்படி எல்லாம் நடக்கும் அப்படி என்றால் நமக்கு கஷ்டங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். 

அப்படி இருக்கும் பொழுது நாம் ஏன் வணங்க வேண்டும் என்றால் அதற்கான முதல் காரணம் உங்களின் மனம் என்பது கடவுளின் ஆலயத்திற்கு செல்லும் பொழுது சாந்தமாக மாறுகின்றது உங்களுக்கு ஒரு லட்சம் இன்று கொள்ளை போக வேண்டும் என்று விதி இருந்தால் அது  போயே தீரும் ஆனால் நாம் கடவுளை தரிசிக்கும் பொழுது அதை தாங்க கூடிய மனநிலையும் அல்லது வேறு வழியில் அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வழியையும் கடவுள் நமக்கு அனுகிரகம் செய்வார

நம் வீட்டில் நான்கு அறைகள் இருந்தாலும் சமைப்பதற்கு என்று ஒருகூடா அரை தூங்குவதற்கு ஒரு அறை உள்ளது அனைவரும் சமையல் அறையில் தூங்க மாட்டார்கள் ஆனால் படுக்கை அறையில் நிம்மதியாக உறங்குவார்கள் தானாக உறக்கம் வந்துவிடும் காரணம் படுக்கையறையும் சுற்றுச்சூழல் அவ்வாறு அமைந்திருக்கும் அதுபோலத்தான் ஆலயத்தில் நான் சுற்றுச்சூழல் நம் மனதை மாற்றக்கூடிய அமைப்பில் இருக்கும் உங்களுக்கு மனம் கஷ்டப்படும் பொழுது அங்கு சென்றால் அங்கு நமக்காக ஒருவர் நம் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள இருக்கிறார் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றும் அவ்வாறு நம் மனதில் தோன்றும் பொழுது நம் கஷ்டங்களை எல்லாம் அவரிடம் ஒப்படைத்துவிட்டு மண  நிம்மதியோடு நாம் இருப்போம். 

ஆதலால் கடவுளை ஏன் கும்பிட வேண்டும் என்றால் நீங்கள் அதாவது உங்களுடைய மன கஷ்டத்தை தாங்க கூடிய சக்தியையும் அல்லது அந்த மன கஷ்டத்திற்கு ஈடான வேறு ஒரு நன்மையும் கடவுள் நிச்சயம் செய்வார் உங்கள் மனம் சஞ்சலப்படாமல் கஷ்டப்படாமல் இருந்தால் உங்களால் கண்டிப்பாக அதிகமான விஷயங்களை சாதிக்க முடியும்

No comments:

Post a Comment

thanks for reading