தனுராசி மற்றும் மூல நட்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெண் பிறந்தால் திருமண பலன் என்ன?
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அவரின் திருமண வாழ்க்கையை அறிய வேண்டும் என்றால் அவரின் ஏழாம் பாவத்தை ஆராய வேண்டும் அதில் கிரகம் இருப்பின் கிரகத்தின் தன்மையை ஆராய வேண்டும் அதில் கிரகம் இல்லாத போது அதன் அதிபதியை ஆராய வேண்டும் அது மட்டும் இல்லாமல் அதனை பார்வை செய்யக்கூடிய கிரகத்தையும் ஆராய வேண்டும் மூல நட்சத்திரம் பொதுவாக மாமனாருக்கு ஆகாது என்று சொல்வார்கள் ஆனால் அது உண்மை அல்ல துலாம் லக்னத்திற்கு மாமனார் ஸ்தானம் மூன்றாம் இடத்திற்கு அதிபதி யாரோ அவரே மாமனார் ஸ்தானமாக அமையும் ஒருவர் ஜாதகத்தில் ஆயுட்காலம் அவரின் ஆயுள் தனிப்பட்ட ஜாதகத்தை பொருத்தது அதை விடுத்து மற்றொருவரின் ஜாதகத்தில் ஆயுள் காலம் நிர்ணயம் செய்ய முடியாது ஆகையால் பாவ பலன்களை ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் வரன் அமைக்க வேண்டும் அதைவிடத்து பொதுவாக மூல நட்சத்திரம் மாமனார் ஆகாது என்று சொல்வது உகந்தது அல்ல மூன்றாம் பாவத்துக்கு துலாம் 11ஆம் பாவமாக வருவதால் உங்களுக்கு அந்த பெண் மூலமாக லாபம் தரும் அமைப்பில் உள்ளது இருந்தாலும் அவரவர் ஜனன ஜாதகமே சிறந்தது அந்த ஜாதகத்தை வைத்து ஒருவரின் ஆயுள் திருமணம் மற்றும் பழவையான நன்மை தீமைகளை ஆராய்ந்து சொல்ல வேண்டும் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும் அதனால் பொதுவாக சொல்லும் பலன்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்
No comments:
Post a Comment
thanks for reading