கடவுள் கருவறை மட்டும் உள்ளாரா அதற்கான பதில் இல்லை கடவுள் என்பதற்கான அர்த்தத்தை முதலில் பார்க்கலாம் கடவுள் அதாவது உன்னில் இருக்கும் கடவுள் குணத்தை நீங்கள் வெளி கொணர வேண்டும் என்பதே கடவுள்.
அப்படி என்றால் நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும்
ஒரு மனிதன் ஒரு செயலுக்கு பக்குவப்பட வேண்டும் என்றால் அவன் அதற்கு முன் அந்த செயலை செய்வதற்கான தகுதியை பெற வேண்டும் ஒரு வீட்டினில் நான்கு அறைகள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்வோம் அதில் படுக்கை அறை என்பது தூங்குவதற்கான இடம் அதாவது அந்த சூழ்நிலை உங்களை தூங்க வைக்கும் அதுபோல் சமையல் அறையில் உங்களுடைய சூழ்நிலை சமைப்பதற்கான எண்ணத்தை உருவாக்கும் இப்படி ஒவ்வொரு அறையும் நம் மனதை ஒவ்வொரு அறைக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளும் மனிதனின் மனமானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தி கொண்டது அப்படிப்பட்ட மனிதனின் மனது ஆலயம் செல்லும் பொழுது பக்திக்கான மார்க்கத்தை அவன் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதற்காக ஆலயம் செல்கின்றோம்
ஆலயம் சென்று வந்து நாம் அனைவரும் வெளிவந்த பின்பு நாம் உள்ளே செல்லும்போது கடவுள் குணத்தோடும் வெளிவந்த பிறகு அசுர குணத்தையும் வெளி கொண்டு வருகின்றோம் ஒரு மனிதன் ஆலயம் செல்லும் பொழுதும் ஆலயம் சென்று விட்டு வந்த பிறகும் கடவுள் குணத்தை தன்னகத்தை கொண்டுள்ளான் என்றால் அவனே கடவுள்
மனிதனின் குணமானது மூன்று குணங்களை உடையது மனித குணம் தெய்வ குணம் இரண்டுக்கும் இடைப்பட்ட குணம் ஆக மூன்று குணங்களை உடையது மனிதன் ஆலயம் செல்லும் பொழுது ஆலயத்திற்குள் தனக்கு என்ன வேண்டும் என்பதை மட்டுமே கேட்கிறான் ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள அவன் தயாராக இருப்பதில்லை எவன் ஒருவன் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளானோ அவனிடமே கடவுள் இருப்பார் அதாவது மனிதனின் மனம் எப்போது கருவறையாக உள்ளதோ அப்போது அங்கே கடவுள் இருப்பார் அப்படி மனிதன் கடவுளிடம் பக்குவப்பட வேண்டும்
அதற்காக அவன் ஆலயம் செல்ல வேண்டும் ஆலயம் சென்று மனித மனம் பக்குவப்பட்டு கடவுள் குணத்தை வெளி கொண்டு வந்த பின்பு அவன் ஆலயம் செல்ல தேவை இல்லை ஏனென்றால் அவன் இருக்கும் இடமே ஆலயம் அவனது மனமே கருவறை அப்பொழுது தெய்வமானவர் அவனது மனதில் நிறைந்து இருப்பார் அதனால் அவன் எந்தவித தவறும் செய்வதில்லை எந்த உயிர்களுக்கு தீங்கும் நினைப்பதில்லை அப்படிப்பட்ட குணம் ஒவ்வொரு உயிர்களிடத்தும் உள்ளது
அப்படிப்பட்ட குணத்தை எந்த உயிர் வெளிக்கொண்டு வருகிறது அந்த உயிரே என் பூமியில் கடவுளாக மதிக்கப்படுகிறது ஆதலால் மனிதன் ஆலய செல்வது கடவுளின் குணத்தை உள்வாங்க அதை தவிர வேறு எதற்காகவும் அல்ல கடவுள் அந்த கருவறையில் மட்டும் அல்ல எங்கும் உள்ளார் எதிலும் உள்ளார் அப்படிப்பட்ட கடவுளை நீங்கள் அடைய வேண்டும் என்றால் உங்கள் மனம் பக்குவட வேண்டும் பக்குவப்பட வேண்டும் என்றால் உங்களது சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும் சூழ்நிலை ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் ஆலயம் சென்று அந்த சூழ்நிலையை தன்னகத்தை மாற்றிக்கொண்டு தன்னூல் இருக்கும் கடவுள் குணத்தை வெளி கொண்டு வாருங்கள் கடவுளுக்கு கொடுத்து வாருங்கள்
ஆலயத்திற்குள் மட்டுமல்ல ஆலையத்தை விட்டு வெளி வந்த பின்பும் அந்த குணத்தை பின்பற்றுவர்களே ஆனால் நீங்களே கடவுள்
அனைத்தும் உலகத்தில் கடவுளையும் படைப்பே படைப்பில் அனைத்தும் கடவுளே நீங்கள் கடவுளா அல்லது அசுரனா என்பதை உங்கள் மனம் தான் தீர்மானிக்கிறது மனிதனின் மனமே கடவுள்........
மனிதனின் மனமே கடவுள்........
மனிதனின் மனமே கடவுள்........
மனிதன் இருக்கும் இடமே ஆலயம் மனிதனின் மனமே கடவுள் மனிதனின் உள்ளமே கருவறை இதை உணர்ந்து கொண்டால் நீங்கள் ஆலயத்தில் கடவுளை தேடத் தேவையில்லை உங்களுக்குள் தேடுங்கள் நீங்களே கடவுள்......
உணவு வேண்டி நிற்கும் மனிதனுக்கு உணவு அளித்தால் அம் மனிதனுக்கு நீங்களே கடவுள் உணர்ந்து கொள்ளுங்கள் கடவுளை உணர்ந்தால் தான் அறிய முடியும்....
No comments:
Post a Comment
thanks for reading